Published:Updated:

டிசம்பர் மாத பண்டிகைகள்... பலகாரங்கள்!

பலகாரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
பலகாரங்கள்

சமையல் சந்தேகங்கள்

கார்த்திகை மாதத்தின் பிற்பகுதியையும் மார்கழி மாதத்தின் முற்பகுதியையும் கொண்ட டிசம்பர் மாதத்தில் பல்வேறு பண்டிகைகள் வருகின்றன. அந்தப் பண்டிகைகளின் பாரம்பர்யம் மாறாமலும், அதேநேரம் சில புதுமைகளைப் புகுத்தியும் பிரசாதங்களைத் தயாரித்தால் ஆத்ம திருப்தியும் சந்தோஷமும் கிட்டும். இதோ... அந்தப் பிரசாதங்கள் தொடர்பான சந்தேகங் களுக்கான விளக்கங்களை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் எஸ்.ராஜகுமாரி.

டிசம்பர் மாத பண்டிகைகள்... பலகாரங்கள்!

கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கு உகந்த அரவணப் பாயசம் தயாரிப்பின் நுணுக்கம் என்ன?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அரிசியை நெய்யில் வறுத்து நீர் ஊற்றி வேகவைக்க வேண்டும். அரிசியை உடைக்கக் கூடாது. குழைய வேகவிடக் கூடாது; வெந்த முழு அரிசி தெரிய வேண்டும். நல்ல கலரான வெல்லம் சேர்க்க வேண்டும். இவைதாம் அரவணப் பாயசம் தயாரிப்பின் நுணுக்கங்கள்.

டிசம்பர் மாத பண்டிகைகள்... பலகாரங்கள்!

கார்த்திகை அப்பம் தயாரிப்பது எப்படி?

தேவையானவை: வெள்ளை ரவை - கால் கப், துருவிய வெல்லம், கோதுமை மாவு - தலா முக்கால் கப், பல்லு பல்லாகக் கீறிய தேங்காய் - 4 டேபிள்ஸ்பூன், மெலிதாகச் சீவிய பாதாம் - 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த் தூள் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன், மைதா மாவு - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, நெய் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் வெள்ளை ரவையைப் போட்டு மூழ்கும் வரை நீர் ஊற்றி 20 நிமிடங்கள் ஊறவிடவும் பிறகு மற்ற அனைத்துப் பொருள்களையும் (எண்ணெய், நெய் நீங்கலாக) அதில் சேர்த்துக் கலந்து இட்லி மாவு பதம் இருக்கு மாறு நீர் சேர்த்துக் கரைக்கவும். குழிப் பணியாரக்கல்லில் நெய் தடவி மாவை ஊற்றி ஓரங்களில் எண்ணெய் ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.

குறிப்பு: இதைக் குழிப்பணியாரக்கல்லில் ஊற்றாமல் எண்ணெயைக் காயவைத்து, காய்ந்ததும் கரண்டியால் ஊற்றி (ஒவ்வோர் அப்பமாக) ஒருபுறம் வெந்ததும் திருப்பிப்போட்டு மறுபுறமும் வெந்ததும் எடுக்கலாம்.

கார்த்திகை அப்பம் செய்யும்போது வெல்லம், சர்க்கரை இரண்டும் சேர்ப்பதாலும் நெய், எண்ணெய் இரண்டும் சேர்ப்பதாலும் சுவை கூடும். குழிப்பணியாரக்கல்லில் ஊற்றும்போது மட்டும் நெய் சேர்க்கவும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நெல் பொரி, அவல் பொரி உருண்டை இரண்டும் கார்த்திகை தீபத்துக்குப் படைப்பதற்குச் செய்யும்போது பாகு பதம் எப்படி இருக்க வேண்டும்? இரண்டுக்கும் என்னென்ன பொருள்கள் சேர்க்க வேண்டும்?

துருவிய வெல்லத்தைப் போட்டு மூழ்கும் வரை நீர் ஊற்றாமல், வெல்லத் துருவல் பாதியளவு மூழ்கும் வரை நீர் ஊற்றிப் பாகு வைக்கவும். கொதிக்கும் பாகில் சிறிதளவு எடுத்து நீரில் விட்டு அதை எடுத்து கைகளால் உருட்டினால் - அது நன்றாக உருட்டவந்தால் பாகு பொரிக்கு ஏற்ற பதம். அவல் பொரி, நெல் பொரி இரண்டுக்கும் ஏற்ற பாகு பதம் இதுதான்.

அவல் பொரி உருண்டைக்குப் பாகு வைக்கும்போது ஒரு கப் அவலுக்கு 2 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை, 3 டேபிள்ஸ்பூன் பல்லு பல்லாகக் கீறிய தேங்காய், 2 டேபிள்ஸ்பூன் வேர்க்கடலை, ஒரு டீஸ்பூன் கறுப்பு எள் சேர்க்க வேண்டும்.

டிசம்பர் மாத பண்டிகைகள்... பலகாரங்கள்!

நெல் பொரி உருண்டைக்குப் பாகு வைக்கும்போது தேங்காய் கீற்று, பொட்டுக்கடலை மட்டும் போதுமானது. எள், வேர்க்கடலை தேவையில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கார்த்திகை மாத சோமவார விரதத்துக்கு அரிசி உப்புமா செய்வது எப்படி? சிலர் மதியம் மட்டும் ஒருவேளை அரிசி உப்புமா சாப்பிட்டுவிட்டு காலை, இரவு ஒன்றும் சாப்பிட மாட்டார்கள். காய்கறி சேர்க்காமல் வெங்காயம் சேர்க்காமல் எப்படிச் செய்வது?

2 கப் அரிசி, 3 டேபிள்ஸ்பூன் துவரம்பருப்பு, மிளகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன் ஆகியவற்றை மிக்ஸியில் உப்புமா ரவை பதத்துக்கு உடைக்கவும். வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் ஒன்று, உளுத்தம்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், சிறிதளவு கறிவேப்பிலை தாளித்து மூன்றரை கப் நீர்விட்டு கொதிக்கவிட்டு, உப்பு சேர்த்து, உடைத்தவற்றைச் சேர்த்துக் கிளறி உப்புமா வெந்ததும் 3 டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

டிசம்பர் மாத பண்டிகைகள்... பலகாரங்கள்!

விரதம் என்பதால் அதிகம் எண்ணெய் சேர்க்கக் கூடாது. தொட்டுக்கொள்ள எதுவுமே தேவைப்படாத இந்த உப்புமாவைத் தான் கார்த்திகை மாத சோமவார விரதத் தன்று சாப்பிடுவார்கள்.

மார்கழி மாதத்தில் அதிகாலையில் செய்து படைக்கும் வெண்பொங்கல் ரொம்பவும் குழையாமல் கோயில்களில் செய்வது மாதிரி செய்வது எப்படி?

பொங்கலை குக்கரில் வைக்காமல் வெண்கல உருளையில் வைப்பது பொங்கலின் சுவையைக் கூட்டவும் அதிகம் குழையாமலும் இருப்பதற்கும் காரணம். வெண்கல உருளி வீட்டில் இல்லாதபோது வேறு ஏதாவது அடிகனமான பாத்திரத்தில் வைத்து (குக்கரில் வைக்காமல்) பொங்கல் வைக்கலாம். அரிசி, பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் வறுத்துவிட்டு பிறகு வேகவைக்கலாம். அப்போதுதான் அதிகம் குழையாது.

டிசம்பர் மாத பண்டிகைகள்... பலகாரங்கள்!

தோழியருக்கும் உறவினர்களுக்கும் கிறிஸ்துமஸ் கேக் செய்து கொடுக்க (முட்டை சேர்க்காத கேக்) சில டிப்ஸ் ப்ளீஸ்…

  • அளவுகள் மிகமிகத் துல்லியமாக இருக்க வேண்டும். அப்போதுதான் கேக் சரியாக வரும்.

  • கோதுமை மாவு, மைதா மாவை பேக்கிங் சோடா சேர்த்து சல்லடையில் குறைந்தபட்சம் 20 முறை சலித்தால் கேக் மிருதுவாக இருக்கும்.

  • அவனில் (oven) செய்யாமல் குக்கர் அல்லது சட்டியில் செய்யும்போது அகல மான பாத்திரமாக இருந்தால்தான் கேக்கின் நிறம் பிரவுன் (டார்க்) ஆகாமல் சரியான நிறத்தில் இருக்கும். குறுகலான பாத்திரம் வேண்டாம்.

டிசம்பர் மாத பண்டிகைகள்... பலகாரங்கள்!

அனுமன் ஜயந்தி அன்றும் மற்ற நாள்களிலும் அனுமனுக்குச் சாற்றப்படும் மிளகு வடை (அ) ஆஞ்சநேயர் வடை கொரகொரப்பாக செய்வது எப்படி?

உளுத்தம்பருப்பை மிக்ஸியில் அரைப்பதைவிட கிரைண்டரில் அரைத்து வடை செய்தால் நன்றாக வரும். உளுத்தம்பருப்பை (முழு வெள்ளை உளுந்து) தேவையான அளவு எடுத்துக் கழுவி, நீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊறவிடவும். ஊறியதும் நீரை வடிகட்டி உப்பு சேர்த்து கிரைண்டரில் ஆட்டவும். நீரைக் கைகளில் நனைத்துக்கொண்டு கிரைண்டரில் ஓடும் உளுந்தைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.

அரைத்த மாவில், மிளகைப் பொடித்துப் போட்டு, 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயை சூடு செய்து அரைத்த மாவில் சேர்த்துப் பிசைந்து, 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு சேர்த்துக் கலந்து வடைகளாகத் தட்டிப் பொரித்தெடுக்கவும். இந்த வடை குறைந்தபட்சம் நான்கு நாள்கள் வரை மொறுமொறுவென்று இருக்கும்.