Published:Updated:

பார்த்தால் பசி தீரும்...

ஃபுட்  ஸ்டைல்
பிரீமியம் ஸ்டோரி
ஃபுட் ஸ்டைல்

ஃபுட் ஸ்டைலிஸ்ட் தீபா ராஜ்பால்

பார்த்தால் பசி தீரும்...

ஃபுட் ஸ்டைலிஸ்ட் தீபா ராஜ்பால்

Published:Updated:
ஃபுட்  ஸ்டைல்
பிரீமியம் ஸ்டோரி
ஃபுட் ஸ்டைல்

நல் உணவுக்குச் சுவை மட்டுமல்ல... காட்சியும் அவசியம். சில உணவுகளைப் பார்த்ததுமே நாவில் நீர் சுரக்கும். வாயை முந்திக்கொண்டு விழியின் வழியே சுவையை உணர்வதன் வெளிப்பாடு அது. விளம்பரங் களிலும் உணவுக்கூடங்களில் கவனம் ஈர்க்கும் புகைப்படங்களிலும் இதைப் பலரும் அனுபவித்திருப்பார்கள்.

பார்த்தால் பசி தீரும்...

`ஃபுட் டெகரேஷன்’ எனப்படும் உணவு அலங்காரம் சமீப காலத்தில் டிரெண்டாகி வருகிற விஷயம். அதைச் செய்கிற ஃபுட் ஸ்டைலிஸ்ட்டுகளுக்கும் இன்று எக்கச்சக்க டிமாண்டு. அப்படி டிமாண்டில் இருக்கும் ஸ்டைலிஸ்ட்டு களில் ஒருவர் பெங்களூரைச் சேர்ந்த தீபா ராஜ்பால். ஹோட்டல்கள், விளம்பரங்கள், உணவுத்தயாரிப்பாளர்கள் எனப் பலரும் தேடும் இடத்திலிருக்கும் தீபா, உணவு எழுத்தாளரும்கூட. அவருடன் சுவையான ஓர் உரையாடல்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பார்த்தால் பசி தீரும்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தத் துறை சுவாரஸ்யமானது என்று தெரியும்... ஆனால், எந்த அளவுக்குச் சவாலானது?

நீங்க நினைச்சுப்பார்க்குறதைவிடவும், ரொம்பவே சவாலானதுதான் இது. காரணம், ரொம்ப கிரியேட்டிவ்வான ஆட்களால் மட்டும்தான், இங்கே ஆக்டிவ்வா இயங்க முடியும். கிரியேட்டிவிட்டி குறையும்போது, இங்கே அடுத்தடுத்து வளரவோ, மேற்கொண்டு இயங்கவோ முடியாது. அதனால இந்தத் துறையில் இருக்கிறவங்க, எப்பவும் புதுப்புது விஷயங்களைக் கத்துக்கிட்டே இருக்கணும். `இப்போ - இன்னிக்கு’ என்ன டிரெண்டுன்னு தெரிஞ்சு வெச்சிருக்கணும்.

பார்த்தால் பசி தீரும்...
பார்த்தால் பசி தீரும்...

ரொம்ப கலர்ஃபுல்லான துறை என்பதால் மட்டுமே இந்தத் துறையை சுவாரஸ்யமானதுன்னு சொல்லிவிட முடியாது. இங்கே நாம எவ்வளவு வித்தியாசமா வேணும் னாலும் யோசிக்கலாம், இயங்கலாம்... முழு சுதந்திரத்தோடு செயல்படலாம். யாரும் நம்மைத் தடுக்க மாட்டாங்க. அதுக்கு இணையா நம்ம கிரியேட்டிவிட்டியும் கவனிக்கப் படும். அதுக்குத் தயாராகிட்டே இருக்கணும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உணவுகளை டெகரேட் பண்றதுல தொடங்கி, அவற்றை அழகா போட்டோ எடுக்கிறதுவரைக்கும் எல்லாத்தையும் நீங்களே செஞ்சுடுறீங்க! உங்களுடைய இந்த ஆல்-இன்-ஆல் பயணம் பற்றிச் சொல்லுங்க...

பார்த்தால் பசி தீரும்...
பார்த்தால் பசி தீரும்...
பார்த்தால் பசி தீரும்...

வேலைனு வந்துட்டா, கூட்டத்தோட இயங்குறதைவிடவும் தனியா செயல்படும்போது கூடுதல் வேகமாகவும் கிரியேட்டி வாகவும் என்னால இயங்க முடியும். அது என் இயல்பு. நான் தனித்து இயங்க முக்கியமான இன்னொரு காரணம், என் குடும்பம். என் எல்லா வேலைகளுக்கும் அவங்கதான் முதல் ரிவ்யூவர்! அந்த வகையில, என்னோட பெரிய சப்போர்ட்டும் அவங்கதான். என்னோட டீம், என் ஃபேமிலி!

ஃபுட் ஸ்டைலிங் துறையில் மாறவே மாறாத ஒரு விஷயமென்றால், எது?

(சிரித்தபடியே) ஃபுட் ஸ்டைல் செய்து முடிக்கிற நேரத்துக்கும் - அதை போட்டோ எடுத்து முடிக்கும் நேரத்துக்கும் இடைப்பட்ட நேரத்துல, சுற்றியிருக்கும் பலரும் அதை எப்ப சாப்பிடலாம்னு குறுகுறுன்னு பார்த்துட்டே இருப்பாங்க. இந்த நிலைமை, நான் ஃபுட் ஸ்டைல் செய்யத் தொடங்கின நாள் முதல் இன்னிக்கு வரைக்கும் அப்படியேதான் இருக்கு. எல்லார் கண்ணும் அந்தச் சாப்பாட்டுமேலயே இருக்கும்! சொல்லப் போனா, `எப்படா இதை இவங்க சாப்பிடக் கொடுப் பாங்க’ன்னு பார்ப்பாங்க. அதைப் பார்த்தாலே, எனக்கு சிரிப்புதான் வரும். பல வருஷங்களா இது மாறவே இல்லை.

பார்த்தால் பசி தீரும்...
பார்த்தால் பசி தீரும்...

உங்களைப் பொறுத்தவரை ரொம்ப சவாலான ஃபுட் ஸ்டைலிங் எது? எந்த உணவுக் காக மெனக்கெடுவது சிரமமான காரியம்?

சாக்லேட்ஸ்... காரணம், சாக்லேட்டை டெகரேட் செய்யும்போது ரொம்ப நுணுக்கமா வேலை செய்யணும். இல்லைனா, டிசைன் மொத்தமா சொதப்பிடும். தேர்ந்த கலை ஞர்களால் மட்டும்தான் சாக்லேட் உணவுகளை, அழகா வடிவமைக்க முடியும். அனுபவமே சிறந்த ஆசான் என்பதால், இப்போ நான் அதுல தேர்ந்துட்டேன். ரொம்ப ஈஸியா சாக்லேட்ஸை டிசைன் பண்ணிடுவேன். அந்த வகையில, என்னோட ஈஸி - ஃபேவரைட் ஃபுட் ஸ்டைலிங் டிஷ்ஷும் சாக்லேட்தான்!

வருங்கால ஃபுட் ஸ்டைலிஸ்ட்ஸுக்கு உங்க டிப்ஸ்?

எந்த விஷயத்திலும் எடுத்தவுடனே தேர்ச்சி வந்துடாது. தினந்தோறும் பயிற்சி எடுக்கணும். நேச்சுரல் லைட்ல வெச்சு படம்பிடிச்சாகூட, உங்க ஸ்டைலிங் அழகா தெரியணும். ஸோ லைட்டிங்ல கவனம் செலுத்துங்க. வெளிச்சம் அதிகம் இல்லாத பகுதிகளிலும், நிழற்படங்களிலும்கூட உணவுகள் சூப்பரா தெரியும்படி ஸ்டைல் செய்து பழகுங்க. எப்பவுமே நிறைய அலங்காரப்பொருள்கள் உபயோகிக்காதீங்க. இயல்பான விஷயங்கள்தான் உணவுக்கும் அழகு சேர்க்கும்.

பார்த்தால் பசி தீரும்...
பார்த்தால் பசி தீரும்...

`இதுதான் என் லட்சியம்’னு இயங்குவதை விடவும், ஒவ்வொரு நாளும் உங்களோட பெஸ்ட்டைக் கொடுக்கணும்னு நினைச்சு வேலை பாருங்க. அதுதான் இந்தத் துறையில உங்களை உயிர்ப்போட வெச்சிருக்கும். எதையுமே சந்தோஷமா செய்யும்போது, கிரியேட்டிவாகவும் இயங்க முடியும். அதனால, நீங்க முதல்ல சந்தோஷமா இருந்து பழகுங்க!

ஃபுட் ஸ்டைலிங்கோட சேர்த்து, உணவுக்கான ப்ளாக் ஒன்றையும் நிர்வகிப்பதா சொன்னீங்க... உணவு எழுத்து மீதான ஆர்வம் எப்படி வந்தது?

நான் எழுத ஆரம்பித்தது தற்செயலா நிகழ்ந்த ஒன்றுதான். நான் என்ன சமைக்கிறேன்கிறதை எழுதணும்னு நினைச்சேன். 2007-ம் வருஷம் டிஜிட்டல் ப்ளாட்ஃபார்ம் பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். ப்ளாகிங்கும் ஆரம்பிச்சேன். டிஜிட்டலா எழுதறது, எனக்கு ரொம்ப ஈஸியா இருந்துச்சு. எழுத எழுத, அதுவே ஆர்வமாகவும் மாறிடுச்சு!

பார்த்தால் பசி தீரும்...
பார்த்தால் பசி தீரும்...

உணவுகளை டெகரேட் செய்வதென்பது, எந்தளவுக்கு முக்கியமான விஷயம்?

நாம எல்லோரும், சாப்பிடத்தானே வாழ்றோம்... அப்படிப்பட்ட சாப்பாட்டை ருசிச்சு மட்டுமல்ல... ரசிச்சும் சாப்பிட டெகரேஷன் ரொம்ப ரொம்ப முக்கியம்!

பார்த்தால் பசி தீரும்...

எந்த உணவையும் நாக்குக்கு முன்னாடி நம்ம கண்கள்தான் சுவைக்கும். கண்ணால பார்த்து, மூளையால் ஈர்க்கப்பட்டுதான் நாம எப்பவும் சாப்பிடத் தொடங்குவோம். அப்படி நாம ரசிச்சு சாப்பிடற ஒவ்வொரு வாய் உணவும் தேவாமிர்தம்! அதுக்கு மெனக்கெட வேண்டியது அவசியம்தானே? `வீட்லதானே சமைக்கிறோம்... நாமதானே சாப்பிடறோம்’னு நினைச்சு சிலர் சமைச்ச பாத்திரத்தோட பரிமாறத் தயாராகிடுவாங்க. ஒரே ஒருநாள் நீங்க சமைக்கிற சாப்பாட்டை அழகா டெகரேட் பண்ணி உங்க வீட்டு நபர்களுக்குப் பரிமாறிப் பாருங்க.... அதுக்குக் கிடைக்கிற ரியாக்‌ஷன் வேற லெவலா இருக்கும்.

ருசியாகச் சமைப்போம், அழகாகப் பரிமாறுவோம், ரசனையோடு வாழ்வோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism