Published:Updated:

டெலிசியஸ்! பேக்கிங் வொர்க்‌ஷாப் - இது கேக் ஆர்வம்!

ஸ்ரீஜா

பிரீமியம் ஸ்டோரி

வள் ‘கிச்சன்’ மற்றும் ‘கேக் மால்’ இணைந்து நடத்தும் டெலிசியஸ் பேக்கரி வொர்க்‌ஷாப்பின் வரவேற்பு ஒவ்வொரு முறையும் அதிகரித்துவருவதை சென்னை, பல்லாவரத்தில் டிசம்பர் 15 அன்று சிறப்பாக நடந்த பயிற்சி வகுப்புகள் உணர்த்தின.

பேக்கிங் வொர்க்‌ஷாப்
பேக்கிங் வொர்க்‌ஷாப்

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்த எக்லெஸ் பேக்கிங் பயிற்சியில் ஸ்பாஞ்ச் கேக் பேக்கிங், கப் கேக்ஸ், குக்கீஸ், ஐஸிங் டெக்னிக்ஸ், சாக்லேட் கார்னிஷிங் என முதலில் பயிற்சிப் பட்டியலை அளித்த பயிற்சியாளர்கள் சரண்யாவும் உத்ராவும் பயிற்சியில் கலந்துகொண்ட வாசகியர் களுடன் இணைந்தனர்.

உத்ரா, ஆனந்த் வைத்தியநாதன், சரண்யா
உத்ரா, ஆனந்த் வைத்தியநாதன், சரண்யா

பேக்கிங் செய்வதற்குத் தேவையான பொருள்களைக் குறித்துக்கொள்ள சொன்ன பயிற்சியாளர்... “தேவையான பொருள்களைத் துல்லியமான அளவில், சரியாக விகிதத்தில் சேர்த்தால்தான் பேக்கிங்கும் சிறப்பாக இருக்கும்” என்றார். இடையிடையே “சரியாகக் குறித்துக்கொண்டீர்களா?” என்று கேட்டுவிட்டு மீண்டும் ஒருமுறை சொல்லி விட்டு செய்முறையைக் கூறினார். அவள் வாசகிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கெல்லாம் அவர்கள் அருகில் வந்து `எப்படி செய்யலாம் என்பதைவிட எப்படியெல்லாம் செய்யக் கூடாது’ என்பதை எளிமையாக விளக்கினார்.

இப்படி வாசகிகளின் ஆர்வத்துக்கேற்ப சுவையாகத் தொடர்ந்தது பயிற்சி. ஒவ்வொரு விஷயத்தையும் எளிமையாகவும் விளக்கமாக வும் தெரிந்து உணர்ந்துகொண்டதால் பயிற்சி நேரத்தைவிட கூடுதலாக ஒரு மணி நேரமானது. இருப்பினும், அவ்வளவு நேரமும் எனர்ஜி குறையாமல் இருந்தனர் அவள் வாசகிகளும் பயிற்சியாளர்களும்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு மதியம் மூன்று மணிக்குத் தொடங்கிய முட்டை சேர்த்து செய்யப்படும் கேக் பயிற்சி வகுப்பில் காலையில் பயிற்சி பெற்ற சில வாசகிகளும் கலந்துகொண்டது ஆச்சர்யம். அவள் வாசகிகளின் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட கேக் மாலின் பயிற்சியாளர்கள் இரண்டாம் பயிற்சியையும் வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேக் செய்யத் தேவையான பொருள்கள், உபகரணங்களுடன் குறைந்த கட்டணத்தில் நடத்தப்பட்ட இந்தப் பயிற்சியில் கலந்துகொண்ட வாசகிகள் அனைவருக் கும் கேக் மாலின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் வைத்தியநாதன் சான்றிதழ்களை வழங்கினார். பயிற்சியின் முடிவில் அவரவர்கள் செய்த கேக், குக்கீஸ் வகைகளை அவரவர்களே தங்கள் இல்லத்துக்கு எடுத்துச்செல்ல ‘கேக் மால்’ உதவியது நிகழ்ச்சியின் ஹைலைட்.

பேக்கிங் வொர்க்‌ஷாப்
பேக்கிங் வொர்க்‌ஷாப்

இந்தப் பயிற்சிக்காகவே கரூரிலிலிருந்து வந்திருந்தார் அவள் வாசகி புவனாஸ்ரீ என்பது ஆச்சர்யம்!

கேக் டிப்ஸ்...

 • கேக்கின் ஓரங்களில் பிரவுன் நிறம் வேண்டாதவர்கள் கேக் டிரேயில் மைதா மாவு தூவுவதற்குப் பதிலாக பட்டர் ஷீட் பயன் படுத்தலாம்.

 • மைதா மாவு, பேக்கிங் பவுடர் போன்ற உலர்ந்த பொருள்களுடன் எண்ணெய், வெண்ணெய் போன்ற ஈரப்பசை உள்ள பொருள்களைச் சேர்த்துக் கலந்த உடனேயே `பேக்’ செய்யவும். ஏனெனில், கலந்த உடனே அதன் வேதிவினை செயல்பட தொடங்கிவிடும். நீண்ட நேரம் வெளியே வைக்கக் கூடாது. அதேபோல உலர்ந்த பொருள்களுடன் ஈரப்பசை உள்ள பொருள்களைச் சேர்த்து கலக்கும்போது மிருதுவாகக் கலக்கவும். கலவையை நீண்ட நேரம் அடிக்கக் கூடாது.

 • செயற்கை கலர்களை கேக் கலவையுடன் இறுதியாகச் சேர்க்கவும்.

 • கேக் கலவையை கேக் டிரேயில் ஊற்றிய பிறகு அதை மீண்டும் கிளறவோ, கலக்கவோ கூடாது.

 • கேக் டிரேயில் முக்கால் பாகம் வரை மட்டுமே கேக் கலவையை நிரப்ப வேண்டும். அப்போது தான் கேக் கலவை நன்கு எழும்பி, மிருதுவாக வரும்.

 • சாக்லேட் கேக் செய்யும்போது நாம் கேக் செய்யப் பயன்படுத்தும் மாவில் 15 சதவிகிதம் மாவுக்குப் பதிலாக கோகோ பவுடரைச் சேர்க்க லாம் (இது பொதுவான அளவு. விருப்பத்துக் கேற்ப கூட்டாவோ, குறைக்கவோ செய்யலாம்).

 • பேக் செய்த கேக்குகளை ஆறிய பிறகு பயன்படுத்தவும்.

 • கேக் செய்வதற்கு முட்டைக் கலவையை அதிக நேரம் அடித்தால் கேக் ரப்பர் / எலாஸ்டிக் தன்மையுடன் இருக்கும்.

 • விப்பிங் க்ரீமை அடிக்கப் பயன்படுத்தும் பவுல், கரண்டியை ஃப்ரீசரில் வைத்து எடுத்து எடுத்துப் பயன்படுத்தவும். விப்பிங் ஃக்ரீமை ஃப்ரீசரில் இருந்து எடுத்த உடனே பயன் படுத்தாமல் சிறிது நேரம் உருகிய பிறகு பயன்படுத்தவும். விப்பிங் ஃக்ரீமுடன் வேறு எதையாவது சேர்த்தால் க்ரீம் நீர்த்துவிடும், க்ரீமை கெட்டியாக்க சிறிதளவு ஐசிங் சுகர் சேர்க்கலாம்.

 • விப்பிங் க்ரீம்மீது உலர்ந்த குளிர்காற்று படும்போது அதில் சிறிய படிகம் போன்ற துகள்கள் உருவாகும். அதை நன்கு அடிப்பதன் மூலம் அது திரும்ப தன் பழைய மிருதுவான நிலைக்கு வரும்.

 • கேக் மற்றும் மஃப்பின்கள் ஆறிய பிறகு உலர்தன்மை அடையக்கூடியவை என்பதால், அவற்றை தேவைக்கு அதிகமான நேரத்துக்கு `பேக்’ செய்யக் கூடாது.

 • கேக் கலவையை பிரீஹீட் செய்த அவனுள் வைத்த பிறகு பேக் செய்யக் கொடுக்கப் பட்டுள்ள குறிப்பிடப்பட்ட நேரத்துக்கு முன்னால் திறக்கக் கூடாது.

 • டூத்பிக்கால் கேக்கைக் குத்திப் பார்த்து வெந்துவிட்டதா என்று உறுதி செய்யவும். கேக் கலவை டூத் பிக்கில் ஒட்டினால் மீண்டும் சிறிது நேரம் வேகவிட்டு எடுக்கவும்.

 • `பேக்’ ஆன பிறகு நீண்ட நேரம் அவனுள் கேக்கை வைக்கக் கூடாது. நீண்ட நேரம் உள்ளேயே இருந்தால் கேக் தன் மிருதுவான தன்மையை இழந்து வறண்டுவிடும்.

 • அவனில் அதிகப்படியான பொருள்களைத் திணிக்கக் கூடாது.

 • கேக் கலவை மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிதளவு பால் அல்லது நீர்விட்டுக் கலந்து சரியான பதத்துக்குக் கொண்டுவரலாம்.

 • கேக் தயாரிக்கும்போது சுவைகூட்ட ஃப்ரூட் சிரப் அல்லது நசுக்கிய பழத்தைச் சேர்க்கலாம் அல்லது கேக் கலவையின் ஒவ்வொரு லேயரிலும் பழத்துண்டுகள் சேர்த்து இறுதியாகப் பழக்கூழை மேலே ஊற்றி அலங்கரிக்க... `ரிச்’சாகத் தெரியும்.

 • பெரும்பாலான கேக்குகளை குக்கரில் செய்து விடலாம். குக்கரின் அடியில் மணல் அல்லது உப்பு சேர்த்து கேக்குகளை பேக் செய்வது சிறந்தது. அலுமினிய குக்கர்களையே பயன்படுத்தவும். கேஸ்கெட், விசில் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. குக்கரை 10 நிமிடங்கள் பிரீஹீட் செய்த பிறகே பயன்படுத்தவும். பேக் செய்ய 20 நிமிடங்கள் முதல் அரைமணி நேரம் வரை ஆகும். அது தேர்ந்தெடுக்கும் ரெசிப்பி, தீயின் அளவு, எந்த குக்கர் என்பதைப் பொறுத்து மாறுபடும். குக்கரின் மூடியைத் திறக்கும்போது மெதுவாகக் கவனமாகத் திறக்கவும்.

 • வீட்டிலேயே ஐசிங் சுகர் செய்ய சர்க்கரையை அரைத்துச் சலிக்கவும். அதைச் சேமித்து வைப்பதானால், சிறிதளவு கார்ன்ஃப்ளார் சேர்த்துக் கலந்து வைக்கவும். இவ்வாறு செய்வது, ஐசிங் சுகர் கட்டித்தட்டாமல் இருக்க உதவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு