லைஃப்ஸ்டைல்
ஆசிரியர் பக்கம்
ஹெல்த்
என்டர்டெயின்மென்ட்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

2K kids: அந்த மந்தியும், பீஸும், பிரெட் அல்வாவும்... ஆஹா அடடா!

அந்த மந்தியும், பீஸும், பிரெட் அல்வாவும்
பிரீமியம் ஸ்டோரி
News
அந்த மந்தியும், பீஸும், பிரெட் அல்வாவும்

சாருகேஷ்வரன்.சௌ

‘மச்சான் வேன்ல கிளம்பியாச்சுடா... எல்லாரும் மெயின் ரோட்டுல ரெடியா இருங்க’னு கால் பண்ணி சொல்லிட்டு, கால் எடுக்காதவங் களுக்காக வாட்ஸ்அப் குரூப்ல ஒரு வாய்ஸ் மெசேஜ்ஜைப் போட்டோம். அப்படியே ‘தோனி மந்தி’க்கு கால் பண்ணி, நாலு ஃபுல் சிக்கன் மந்தி ஆர்டர் பண்ணிட்டு, கேபினும் (Cabin) புக் பண்ணிட்டு, வேன்ல ஏறினோம்.

2K kids: அந்த மந்தியும், பீஸும், பிரெட் அல்வாவும்... ஆஹா அடடா!

நாகப்பட்டினம் நெருங்கினதும் டிரைவர் அண்ணன், ‘`எங்க போகணும் தம்பிகளா..?’’னு கேட்டாங்க.

`` ‘தோனி மந்தி’ அண்ணே...’’னு சொன்னோம். அது என்ன கடை, எந்த வழின்னு எல்லாம் வேற கேள்வியே இல்ல. நேரா வண்டியை கடைக்கு முன்னாடி போய் நிப்பாட்டிட்டாரு. ஏன்னா, ‘தோனி மந்தி’ கடை எங்க ஏரியாவுல அவ்ளோ ஃபேமஸ்.

‘என்னங்கய்யா அது மந்தி, தோனினு..?’ புரியாம கேட்குறவங்களுக்கு... அது நாகப்பட்டினத்துல இருக்குற ஓர் அசைவ ஹோட்டல். நாகப்பட்டினம் பக்கத்துல இருக்குற வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வர்றவங்க பலர், தேடிப்பிடிச்சு வர்ற கடை இது.

பொதுவா மந்தி (Mandi) என்பது அரபு ஸ்டைல்ல சமைக்கப்படுற அசைவ சாதம். ‘அட பிரியாணியா..?’னு கேட்டா, அதான் இல்ல. இதுல கறியை முழுசா, தனியா சமைச்சு, ஸ்பைசி சாதத்துக்கு மேல வெச்சுக் கொடுப் பாங்க. ‘சரி அது என்ன தோனி?’னு கேட்குறீங்களா... அந்தக் கடை தோனியை தீமா வெச்சு இருக்கும் (Theme based). சரி... இப்போ கடைக்குப் போகலாங்களா?

2K kids: அந்த மந்தியும், பீஸும், பிரெட் அல்வாவும்... ஆஹா அடடா!

கடைக்கு உள்ளே போய் நாங்க புக் பண்ணிருந்த கேபின்ல உட்கார்ந்தோம். எங்கெங்கு காணினும் தல தோனிதான். மந்தி வர 15 நிமிஷம் ஆகும்னு சொன்னாங்க. அந்த கேப்ல, ‘தோனி மந்தி’ கடை கேப்டன்கள் (உரிமை யாளர்கள்) ரெண்டு பேர்கிட்டயும், இந்தக் கடையைப் பத்தி கேட்டோம்.

‘‘நாங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து நண்பர்கள்...’’னு பேச ஆரம்பிச்சாங்க செந்திலும் அவினாஷும். பட்டதாரிகள். ‘‘உங்க எல்லாரையும் மாதிரியே நாங்களும் தோனி ஃபேன்ஸ். நாங்க ஒண்ணு சேர்ந்து இந்த அரபு ஸ்டைல் ‘தோனி மந்தி’யை ஆரம்பிச்சோம். நம்ம கடையில சிக்கன் மந்தி, மட்டன் மந்தி, மீன் மந்தி எல்லாம் கிடைக்கும். சிக்கன்ல தந்தூரி, அல் ஃபஹம் சிக்கன், மட்டன்ல கப்ஸா செய்வோம். தந்தூரி மீன் நம்ம கடை ஸ்பெஷல். வஞ்சிரம், பாறை தந்தூரிதான் அதிகமா சமைப்போம். நம்ம கடையில 90 ரூபாயில இருந்து 1,300 ரூபாய் வரைக்கும் அயிட்டம்கள் கிடைக்கும்’’னு உற்சாகமா சொன்னாங்க ரெண்டு பேரும்.

2K kids: அந்த மந்தியும், பீஸும், பிரெட் அல்வாவும்... ஆஹா அடடா!

‘தோனி மந்தி’க்கு அதிகமா வர்றது கல்லூரி நண்பர்கள்தாம். ‘கேங் லஞ்ச்’னா இங்கதான் கேபின் புக் பண்றாங்க. இந்தக் கடை கிரிக்கெட் ஃபேன்ஸுக்கும் ஃபேவரைட் ஸ்பாட். கடையோட ‘கேப்டன்கள்’கிட்ட நாங்க பேசிட்டு இருக்கும்போதே ஆர்டர் பண்ணின மந்தி வர, சோறுதான் முக்கியம் பாஸுன்னு அவங் களுக்கு பை சொல்லிட்டு வேலையில இறங்கினோம்.

நாலு பேருக்கு ஒரு பிளேட் மந்தி வீதத்துல, நாலு மந்தி கொண்டு வந்தார் சர்வர் அண்ணன். பார்க்கவே நாக்குல எச்சில் ஊறிடுச்சு. அப்படியே மந்தி சோத்தைக் குமிச்சு வச்சு, அதுமேல அப்படியே முந்திரி, கிஸ்மிஸ் பழம், ஆனியன் டாப்பிங்னு போட்டு, செமயா இருந்தது. அதுல நாலு தந்தூரி பீஸ் வெச்சு, மயோனைஸ், மந்தி சாஸ், மின்ட், கூடவே ஒரு ஸ்வீட்னு தர்றாங்க.

2K kids: அந்த மந்தியும், பீஸும், பிரெட் அல்வாவும்... ஆஹா அடடா!
2K kids: அந்த மந்தியும், பீஸும், பிரெட் அல்வாவும்... ஆஹா அடடா!

மந்திய எடுத்து வாய்ல வெச்சா... டேஸ்ட்டுல சிக்ஸர்தான்.

தந்தூரி... அது இன்னும் டேஸ்ட்ங்க. கூடவே பிரெட் அல்வா இருந்துச்சு பாருங்க... அதான் ஹைலைட்.

கடைக்கு மந்தி சாப்பிட வர்ற வங்க, அந்த ஸ்வீட்டை எக்ஸ்ட்ரா கேட்டு வீட்டுக்கு வாங்கிட்டுப் போறாங்க.

நாங்கெல்லாம் லாக்டௌனுக்கு முன்னாடியே போயிட்டு வந்துட்டோம். உங்களுக்கும் ‘தோனி மந்தி’யில சாப்பிடணுமா...

லாக்டௌன் எல்லாம் முடிஞ்சதும் நாகப்பட்டினத்துக்கு ரைட் ரைட்!

குறிப்பு: நாங்க மந்தி சாப்பிட்டு அப்படியே நேரா நாகப்பட்டினம் கடற்கரைக்குப் போய் ஓர் ஆட்டத்தை போட்டுட்டு ஊருக்குத் திரும்பினதை சொல்லாமவிட்டா சாமிக் குத்தமாமே!