சினிமாவானாலும் சரி, சமையலானாலும் சரி... ஆந்திராவின் பாணியே தனி. விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. தமிழகத்தில் முக்கிய நகரங்களில் எங்கு திரும்பினாலும், `ஆந்திரா மெஸ்’ என்று இருப்பது ஆந்திர சமையலுக்கான வரவேற்பின் அத்தாட்சி. சுவையில் அசத்துவது மட்டுமல்லாமல் விருந்து உபசரிப்பிலும் சிறந்து விளங்குபவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். நாவின் சுவை நரம்பை சுண்டியிழுக்கும் ஆந்திர சமையலில் வெரைட்டிகளும் ஏராளம். சுவைமிக்க ஆந்திர ரெசிப்பிகளில் சிலவற்வறை நமக்காக இங்கே தொகுத்து வழங்குகிறார் சமையற்கலையில் சிறந்து விளங்கும் பானுரேகா.

தேவையானவை:

கோவைக்காய் - 200 கிராம்

மிளகாய்த்தூள் - 2 மீடியம் ஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - 100 கிராம்

செய்முறை:

கோவைக்காயைச் சிறிய துண்டுகளாக நறுக்கி, எண்ணெய் நீங்கலாக மற்ற பொருள்களைச் சேர்த்துக் கலக்கி 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

நிறத்தையும் வடிவத்தையும் கொண்டு கோவைக்காயை மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை, கருங்கோவை என நான்கு வகைகளாகப் பிரிக்கிறார்கள்.

தேவையானவை:

சுரைக்காய் - கால் கிலோ

மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

சின்ன வெங்காயம் - 10

பூண்டு - 4 பல்

சீரகம் - ஒரு சிட்டிகை

புளி - ஒரு எலுமிச்சை அளவு

சிறிய தக்காளி - ஒன்று

நல்லெண்ணெய் - 200 கிராம்

வெந்தயம் - ஒரு சிட்டிகை

கடுகு - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சுரைக்காயைத் சிறிய துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் வறுக்கவும். வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், பூண்டு, சீரகம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். நல்லெண்ணெயில் வெந்தயத்தைச் சேர்த்துக் கிளறி, அரைத்த விழுதைப் போட்டு வதக்கவும். பின்பு சுரைக்காயை அதில் சேர்க்கவும். பின்பு ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு வேகவைக்கவும். காய் வெந்தபின் புளிக்கரைசலைச் சேர்த்துக் கலக்கவும். சிறிது நேரத்துக்குப் பிறகு கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து இறக்கவும்.

உலகில் மனிதனால் பயிரிடப்பட்ட முதல் தாவரங்களுள் சுரைக்காயும் ஒன்று.

தேவையானவை:

துவரம்பருப்பு - ஒரு கப்

காய்ந்த மிளகாய் - 6

புளி - எலுமிச்சை அளவு

மல்லி (தனியா) - ஒரு மீடியம் ஸ்பூன்

சீரகம் - ஒரு சிட்டிகை

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிதளவு

நல்லெண்ணெய் - உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

குக்கரில் எண்ணெய்விட்டு கொடுக்கப் பட்டுள்ள பொருள்கள் அனைத்தையும் (புளி நீங்கலாக) வறுத்து, டம்ளர் தண்ணீர்விட்டு நான்கு விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும். புளியைத் தனியாக வேகவைத்து சேர்த்து நன்கு கலக்கவும். கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும்.

உடலுக்குக் குளிர்ச்சியையும் வலுவையும் துவரை வழங்கும்.
.கேரளா ஃப்யூஷன் ரெசிப்பி.
தேவையானவை:

தோசைக்காய் (சிறியது - 150 கிராம்) - ஒன்று (தோல் சீவி நறுக்கவும்)

காய்ந்த மிளகாய் - 5

புளி - சிறிதளவு

தனியா - ஒரு மீடியம் ஸ்பூன்

சீரகம் - ஒரு சிட்டிகை

நல்லெண்ணெய் - 75 கிராம்

உப்பு - தேவைக்கேற்ப

கடுகு,உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு

செய்முறை

தோசைக்காயைத் தவிர மற்ற எல்லாப் பொருள்களையும் எண்ணெயில் வதக்கி, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அத்துடன் தோசைக்காயையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலையை எண்ணெயில் தாளித்து சேர்க்கவும்.

கோடைக் காலத்தில் தோசைக்காய் போன்ற நீர்க்காய்களைப் பாசிப்பருப்புடன் வேகவைத்துச் சாப்பிட்டால், வியர்வையினால் உடல் இழந்த தாது உப்புகளை மீண்டும் பெற முடியும்.

தேவையானவை:

முருங்கைக்காய் - 2

முந்திரிப்பருப்பு - 25 கிராம்

மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா ஒரு மீடியம் ஸ்பூன்

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

கரம் மசாலாத்தூள் - ஒரு சிட்டிகை

வெங்காயம் - ஒன்று

தக்காளி - ஒன்று

கடுகு - ஒரு சிட்டிகை

சீரகம் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

எண்ணெய் - 75 கிராம்

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

முந்திரிப்பருப்பை எண்ணெயில் வறுக்கவும். வாணெலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். இதனுடன் முருங்கைக்காய் சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, இஞ்சி - பூண்டு விழுதைப் போட்டுக் கிளறி, ஒரு டம்ளர் சேர்த்துக் கொதிக்கவிடவும். கிரேவி பதம் வந்ததும் முந்திரிப்பருப்பு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

முருங்கைக்காயில் நார்ச்சத்து, புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன.
.பெங்களூரு ஸ்பெஷல் ரெசிப்பி.
தேவையானவை:

உளுந்து - ஒரு கப்

சர்க்கரை - ஒரு கப்

ஏலக்காய் - 4

நெய் - 150 கிராம்

செய்முறை

உளுந்தை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். ஆறியபின் மிக்ஸியில் போட்டு பொடி செய்யவும். சர்க்கரை, ஏலக்காய் சேர்த்துப் பொடி செய்யவும். நெய்யை சூடு செய்து மாவுடன் சேர்த்து லட்டு பிடிக்கவும்.

சங்க இலக்கியத்தில் `உழுந்து’ எனக் குறிப்பிடப்படுவது உளுந்துதான். சங்க காலத்திலேயே தமிழகத்தில் பரவலாக உளுந்து பயிரிடப்பட்டதை இதன் மூலம் உணரலாம்.

தேவையானவை:

சோள மாவு - ஒரு கப்

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

சோள மாவையும், உப்பையும் வெந்நீர் சேர்த்துப் பிசையவும். சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும். வெறும் வாணலியில் அடை போல் தட்டி, தண்ணீரில் நனைத்துப் பிழிந்த துணியால் தொட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.

சோளத்தில் புரதம், இரும்பு, கால்சியம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்துகள் அடங்கியுள்ளன.

தேவையானவை:

இஞ்சி - 100 கிராம்

காய்ந்த மிளகாய் - 10

புளி - சிறிதளவு

வெல்லம் - சிறிய நெல்லிக்காய் அளவு

மல்லி (தனியா) - ஒரு மீடியம் டீஸ்பூன்

சீரகம் - ஒரு சிட்டிகை

நல்லெண்ணெய் - 50 கிராம்

உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க:

கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு மேலே கொடுக்கப்பட்டுள்ள எல்லாப் பொருள்களையும் (வெல்லம் நீங்கலாக) போட்டு வறுத்துக்கொள்ளவும். அவற்றுடன், வெல்லம் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலையைத் தாளித்து சேர்க்கவும்.

பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல் போன்ற பிரச்னைகளுக்கு இஞ்சி நிவாரணம் அளிக்கும்.

தேவையானவை:

பாலக்கீரை - ஒரு கட்டு (நறுக்கவும்)

மாங்காய் - பாதியளவு (நறுக்கவும்)

பச்சை மிளகாய் - 5 (நறுக்கவும்)

வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

துவரம்பருப்பு - ஒரு கப்

தக்காளி - ஒன்று (நறுக்கவும்)

காய்ந்த மிளகாய் - ஒன்று

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

சீரகம் - ஒரு சிட்டிகை

கடுகு - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிதளவு

உளுத்தம்பருப்பு - ஒரு சிறிய ஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

குக்கரில் துவரம்பருப்பு போட்டு பாலக்கீரை, நறுக்கிய மாங்காய், பச்சை மிளகாய், தக்காளி, வெங்காயம், சீரகம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு தேவையான நீர் சேர்த்து வேக வைக்கவும். நான்கு விசில் வந்தவுடன் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.

பாலக்கீரைக்கு ரத்த விருத்தி செய்யும் ஆற்றல் உண்டு. ரத்தச்சோகை பிரச்னை உள்ளோருக்கு இது அருமையான உணவு.