ஆரோக்கியம் பேணுவதற்குப் பொருத்தமான வழி, சரியான உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து உண்பதுதான். காய்கறிகள், பயறு வகைகள், பழங்கள், கீரைகள் எனப் பல்வேறு உணவுகளில் சத்துகள் நிறைந்துள்ளன. அவற்றை இனம் காண வேண்டியது நம்முடைய பணி. நமக்குப் பிடித்த விதத்தில் அவற்றை ருசியாகச் சமைத்துச் சாப்பிடலாம். அழகும் ஆரோக்கியமும் தரும் ஃப்ரெஷ்ஷான ருசி கியாரன்டி. அப்படிப்பட்ட பியூட்டி ரெசிப்பிகளை ஒவ்வோர் இதழிலும் சொல்லிவருகிறார், அழகுக் கலை நிபுணர் வசுந்தரா. இந்த இதழில் சாலட், சாண்ட்விச், பர்ஃபி என சுவையான, சத்தான ரெசிப்பிகளை வழங்குகிறார்.

தேவையானவை:

தேங்காய்ப்பால் - அரை கப்

பேரீச்சை - ஒரு கப்

ஓட்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன்

வெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன்

பாதாம் - அரை கப் (நறுக்கியது)

வால்நட்ஸ் - அரை கப் (நறுக்கியது)

உலர்திராட்சை (நறுக்கியது) - அரை கப்

ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

கடாயில் நெய் ஊற்றிக்கொண்டு அதில் கசகசா, ஓட்ஸ், வெள்ளை எள் ஆகியவற்றைப் போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பிறகு தேங்காய்ப்பால், பாதாம், வால்நட்ஸ், உலர் திராட்சை ஆகியவற்றைச் சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும். பின்னர், பேரீச்சை, ஏலக்காய்த்தூள் போட்டு அடுப்பை அணைத்துவிடவும். சூடு ஆறியதும் அதை அலுமினியப் ஃபாயிலில் போட்டு, ரோல் செய்து பத்து நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து கூல் செய்யலாம். குளிர்ந்து அவை இறுகியதும் எடுத்துப் பெரிதாக நறுக்கி வைத்துச் சாப்பிடலாம். சர்க்கரை சேர்க்காமல், நேச்சுரல் ஸ்வீட்னஸ் கிடைக்கிறது.

வால்நட்டில் உள்ள பயோட்டின் முடி உதிர்வை நிறுத்தும். இதில் ஒமேகா 3, ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட்ஸ் இருக்கிறது. புரோட்டீன், மெக்னீசியம் இருப்பதால் முடி வலுவின்மையைக் குறைக்கும். பாதாமில் பயோட்டின், ஒமேகா 3, ஒமேகா 6 இருக்கிறது. உடலுக்கு இவை மிகவும் நல்லது. பேரீச்சையில் இருக்கும் இரும்புச்சத்து முடி வளர்க்கும். வெள்ளை எள்ளில் ஒமேகா 3, ஒமேகா 6, ஒமேகா 9, புரோட்டீன், வைட்டமின் பி இருக்கிறது. இவை முடி வளர்ச்சிக்குத் துணை செய்யும். கசகசாவில் வைட்டமின் பி, கால்சியம் இருக்கிறது.

தேவையானவை:

சர்க்கரைவள்ளிக்கிழங்கு - ஒன்று

வேகவைத்த முளைப்பயறு - 4 டேபிள்ஸ்பூன்

வெள்ளரிக்காய் - பாதியளவு

வெங்காயம் - ஒன்று

கேரட் - பாதியளவு

செய்முறை:

சர்க்கரைவள்ளிக்கிழங்கை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அதையும் வெள்ளரி, வெங்காயம், கேரட் ஆகியவற்றையும் வட்டத் துண்டங்களாக நறுக்கிக்கொள்ளவும். இவற்றை தட்டில் பரவலாக அடுக்கி முளைப்பயற்றை மேலே வைக்கவும். புரொக்கோலியையும் நடுவில் வைத்துக்கொள்ளலாம். சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாண்ட்விச் சாலட் தயார்.

கேரட்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட், பீட்டா கரோட்டின் அதிகம். வெங்காயத்தில் கந்தகம், பயோட்டின் இருக்கிறது. தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, காப்பர், கொலாஜன் இருக்கிறது. சர்க்கரைவள்ளியில் இரும்புச்சத்து, பயோட்டின், வைட்டமின் ஏ, பொட்டாசியம், துத்தநாகம் ஆகியவை இருப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவும்.

தேவையானவை:

பனீர் (துருவியது) - ஒரு கப்

குடமிளகாய் - பாதியளவு (சிறிதாக நறுக்கவும்)

கார்ன் (வேகவைத்தது) - 2 டேபிள்ஸ்பூன்

கேரட் (துருவியது) - 2 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லித்தழை (சிறிதாக நறுக்கியது) - ஒரு டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்

சீரகத்தூள் - கால் டீஸ்பூன்

உப்பு - கால் டீஸ்பூன்

தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்

பிரெட் - 4 ஸ்லைஸ்

கிரீன் சட்னி - 2 டீஸ்பூன்

வெண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

பெரிய பாத்திரத்தில் பனீர், கேரட், குடமிளகாய், கார்ன், கொத்தமல்லித்தழை எல்லாம் சேர்த்துக்கொள்ளவும். அதனுடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு, சாஸ் கலந்துகொள்ளவும். ஒரு பிரெட் ஸ்லைஸை எடுத்து கிரீன் சட்னியை அதன் ஒரு புறத்தில் தடவ வேண்டும். பிறகு பனீர் மிக்ஸை பிரெட்டில் நிரப்பி இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி, கிரில் செய்துகொள்ளலாம். அல்லது தவாவில் வெண்ணெய்விட்டு டோஸ்ட் பண்ணலாம். பிறகு, பிரெட் ஸ்லைஸ்களை முக்கோணமாக வெட்டி வைத்து சூடாகச் சாப்பிடலாம். பிரெட்டுக்குத் தொட்டுக்கொள்ள சாஸ் நல்ல சாய்ஸ்.

கிரீன் சட்னி செய்ய: கைப்பிடி அளவு புதினா, கொத்தமல்லி இலைகள், சிறிதளவு ஆம்சூர் பவுடர், உப்பு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். புதினா, கொத்தமல்லி இலைகளை அரைத்துக்கொண்டு, ஆம்சூர் பவுடர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளவும்.

இந்த ரெசிப்பியில் கொழுப்பு குறைவாக இருப்பதால் உடலுக்கு ரொம்பவும் நல்லது. பனீரில் கால்சியம், புரோட்டீன் ஆகியவை நிறைந்திருப்பதால் முடி வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது.

தேவையானவை:

கேரட் - ஒன்று

தேங்காய் - ஒன்று

தேன் - சிறிதளவு

செய்முறை:

மிக்ஸியில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கேரட்டைப் போட்டு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு வடிகட்டிக்கொள்ளவும். தேங்காயைத் துருவி நன்கு அரைக்கவும். அதை 3 கப் சுடுநீரில் போட்டு, சிறிது நேரம் கழித்து வடிகட்டி ஆறவிடவும். இப்போது ரெடியாக வைத்திருக்கிற கேரட் ஜூஸ், தேங்காய்ப்பால் இரண்டையும் கலந்து கொஞ்சம் தேன் சேர்த்துக்கொள்ளலாம்.

கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ, முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. தாய்ப்பாலுக்கு அடுத்ததாகக் கொள்ளப்படுவது இந்த தேங்காய்ப் பால். வைட்டமின் பி1, வைட்டமின் பி3, வைட்டமின் பி5, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகியவை அடங்கியுள்ளன. இவை சருமத்துக்கும் கூந்தலுக்கும் மிகவும் நல்லது. தேங்காய்ப்பாலில் லாரிக் ஆசிட், புரோட்டீன் நிறைந்திருப்பதால் முடி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். உணவில் தொடர்ந்து தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட்டால் முடி உதிர்வதைத் தவிர்க்க முடியும்.