`சமைக்க வேண்டாம்... அப்படியே சாப்பிடலாம்’ வகை உணவான சாலட் இப்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. ஹோட்டல்களிலும் பார்ட்டிகளிலும் சாலட் பரிமாறுவது வழக்கமாகிவிட்டது. காய்கறிகள், பழங்களின் சத்துகள் அப்படியே கிடைப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு சாலட்டுகள் மிகவும் உறுதுணை புரிகின்றன. டயட்டில் உள்ளவர்களுக்கு இவை வரப்பிரசாதமாக விளங்குகின்றன. மேலும் வாய்க்கு ருசியாகவும் வயிற்றுக்கு இதமாகவும் இருக்கும். குறிப்பாக, இளம் பருவத்தினர் இதை மிகவும் விரும்பி சாப்பிடுகின்றனர். வித்தியாசமான, சுவையான சில சாலட் வகைகளை இங்கே வழங்குகிறார் `மெனுராணி’ செல்லம்.

இது ஒரு இத்தாலியன் சாலட். இதற்கு பெஸ்தோ சாஸ் தேவை. டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்.

பெஸ்தோ சாஸ் செய்யும் முறை:

பேசில் இலைகள் - ஒரு கப் (துளசி இலைபோல் இருக்கும் - பெரிய மார்க்கெட்டுகளில் கட்டாயம் கிடைக்கும்)

அக்ரூட் (வால்நட்) - அரை கப்

உப்பு - தேவையான அளவு

பூண்டு - 10 பல்

வீட்டில் ஆலிவ் ஆயில் இருப்பின் - கால் கப் அல்லது கால் கப் ஏதேனும் சமையல் எண்ணெய்

இவை அனைத்தையும் சேர்த்து, மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளவும். ஃப்ரிட்ஜில் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

தேவையானவை:

புரொக்கோலி – 2 (பெரியது)

சிவப்பு, மஞ்சள், பச்சை குடமிளகாய் - தலா ஒன்று

தக்காளி - 2

வெங்காயம் - ஒன்று

வெள்ளரிக்காய் - ஒன்று

உப்பு - தேவையான அளவு

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்

மேலே தூவ:

வறுத்து வைத்த வேர்க்கடலை - ஒரு கைப்பிடி அளவு

செய்முறை:

புரொக்கோலியைச் சிறு சிறு பூக்களாக எடுத்துக்கொண்டு, கொதிக்கும் நீரில் ஒரு நிமிடம் போட்டு எடுத்து வடிய வைக்கவும். பின் குடமிளகாய் வகைகள், தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய் முதலியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கவும். பின்னர் தயாராகவைத்துள்ள பெஸ்தோ சாஸையும் கலந்து, கடைசியில் புரொக்கோலி பூவையும் கலந்து சில மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து வேர்க்கடலை தூவிப் பரிமாறினால், ருசி அதிகம்.

கரந்தை, துன்னூத்துப் பச்சிலை என்றெல்லாம் அழைக்கப்படும் திருநீற்றுப்பச்சை மூலிகையே `பேசில்’ என்ற பெயரில் உலகெங்கும் பிரபலமாகியுள்ளது.

தேவையானவை:

பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் - 2 கப்

நீளமாக துருவிய கேரட் - 2 கப்

நீளமாக உரித்த ஆரஞ்சு சுளைகள் - 2 கப்

க்ரீம் சீஸ் - 2 கப்

உப்பு - தேவையான அளவு

மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்

ஆரஞ்சு ஜூஸ் - அரை கப்

லெட்யூஸ் இலைகள் - 6

ஃப்ரெஷ் க்ரீம் – ஒரு கப்

செய்முறை:

முதலில் க்ரீம் சீஸ் தயாரித்துக்கொள்ளவும். க்ரீம் சீஸ் ரெடிமேடாகக் கிடைக்கும். இல்லா விட்டால் கீழ்க்கண்டபடி தயாரித்துக் கொள்ளலாம்.

கெட்டித் தயிர் - 250 கிராம் (சுமார் 2 கப்) இதை ஒரு மெல்லிய துணியில் (பனீர் வடிகட்டுவது போல்) வடிக்கட்டி கொள்ளவும். சிறிது நேரம் கழித்து, துணியிலிருந்து எடுத்து, ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நுரைக்க அடிக்கவும். பின்னர், உப்பு, மிளகுத்தூள், ஆரஞ்சு ஜூஸ், நறுக்கிய பேரீச்சம்பழம், துருவிய கேரட், ஃப்ரெஷ் க்ரீம் முதலியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு அடிக்கவும். நன்கு கலந்த பின், சாலட் தட்டில் பரப்பவும். முதலில் லெட்யூஸ் இலைகளை ஒரு தட்டில் வட்டமாக அடுக்கி அதன் நடுவில் நாம் தயாரித்த க்ரீம் சீஸ் கலவையைக் கொட்டி, மேலே ஆரஞ்சு சுளைகளைப் பரப்பவும். பேரீச்சம்பழம் கொண்டு அலங்கரிக்கவும். துருவிய கேரட் கொண்டு அலங்கரிக்கலாம். நான்கு நாள்கள் வரை கெடாது.

பேரீச்சையில் இரும்புச்சத்து மட்டுமல்ல... வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளன.

முதலில் சாலட் க்ரீம் தயாரிக்கலாம்.

தேவையானவை:

ஃபிரெஷ் க்ரீம் – 2 கப்

உப்பு - சிறிதளவு

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

கடுகுப் பொடி - ஒரு டீஸ்பூன்

வெள்ளை வினிகர் - ஒரு டேபிள்ஸ்பூன்

குளிர்ந்த பால் - ஒரு கப்

குளிர்ந்த பாலுடன், ஃபிரெஷ் க்ரீமை மெதுவாகக் கலந்துகொள்ளவும். பின், உப்பு, மிளகுத்தூள், கடுகுப் பொடி, வினிகர் ஆகியவற்றை ஒவ்வொன்றாகக் கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளவும்.

கேரட் - ஒன்று

வெங்காயம் - ஒன்று

குடமிளகாய் - ஒன்று

வெள்ளரிக்காய் - ஒன்று

இவை அனைத்தையும் மெல்லியதாக வட்ட வட்டமாக ஸ்லைஸ் செய்யவும். இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு...

உப்பு - தேவையான அளவு

மிளகுத்தூள் - ஒரு ஸ்பூன்

கடுகுப் பொடி - ஒரு டீஸ்பூன்

வினிகர் - ஒரு டேபிள்ஸ்பூன்

எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்

இவற்றைச் சேர்த்துக் கலந்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.

பழங்கள்:

பைனாப்பிள் (துண்டாக நறுக்கியது) - ஒரு கப்

ஆப்பிள் (நீளமாக நறுக்கியது) - ஒரு கப்

விதையில்லாத திராட்சை பழங்கள் (கறுப்பு, பச்சை) - அரை கப்

ஆரஞ்சு சுளைகள் - அரை கப்

வால்நட் - சிறிதளவு

கடைசி ஸ்டெப்:

ஊறவைத்த காய்கறிகள், ரெடியாக உள்ள சாலட் க்ரீம், பழங்கள் முதலியவற்றைக் கலந்து சாலட் பரிமாறும் வாயகன்ற தட்டில் (Salad Platter) பரப்பி, சிறிதளவு வால்நட், பழங்கள்கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.

பார்ட்டிகளுக்கு உகந்தது. பார்க்க அழகாகவும், சாப்பிட மிகவும் சுவையாகவும் இருக்கும். இந்த சாலட்டில் காய்கறிகள் வேக வைக்காமலும், பழங்கள் இருப்பதாலும் மிகவும் ஆரோக்கியமானது.

மிளகு மட்டுமல்ல... அதன் கொடி, இலை, வேர் ஆகியவையும் பயன் தரும் பாகங்களே.

தேவையானவை:

லீக்ஸ் (மெல்லியதாக நீளமாக நறுக்கியது) - ஒரு கப்

செலரி (மெல்லியதாக நீளமாக நறுக்கியது) - ஒரு கப்

வெள்ளரி (மெல்லியதாக நறுக்கியது) - ஒரு கப்

குடமிளகாய் (மெல்லியதாக நறுக்கியது) - ஒரு கப்

நறுக்கிய லெட்யூஸ் - ஒரு கப்

நறுக்கிய பார்ஸ்லி ஒரு கப்

உப்பு - தேவையான அளவு

எலுமிச்சைச்சாறு - கால் கப்

வெள்ளை வினிகர் - 2 டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

கடுகுப்பொடி - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

நறுக்கிய காய்கறிகள், கீரைகளுடன், உப்பு மற்றும், வினிகர், எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள், கடுகுப் பொடி கலந்து ஃப்ரிட்ஜில் சில மணி நேரம் வைத்து எடுத்துப் பரிமாறவும்

வெள்ளரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு சீனா.