மீன், மட்டன் உணவுப் பிரியர்களைவிட கருவாடு, உப்பு கண்டம் விரும்பும் உணவுப் பிரியர்களின் நாக்கு இன்னும் சுள்ளென்று எதிர்பார்க்கும். அதிலும் கடல்புரத்துக் கருவாட்டுச் சமையல் நாசியையும் அடிமையாக்கிவிடும். உழைக்கும் மக்கள் மற்றும் எளிய மக்களின் உணவுகளில் கருவாட்டுக்குத் தனியிடம் உண்டு. சம்பல் முதல் தொக்குவரை... நான்கு மணமணக்கும் கருவாட்டு ரெசிப்பிகள் உங்களுக்காக!

தேவையானவை:

மாஸ் கருவாடு - 200 கிராம்

மிளகு - 10

துருவிய தேங்காய் - 50 கிராம்

பச்சை மிளகாய் - 2

சின்ன வெங்காயம் - 10 (தோலுரிக்கவும்)

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மாஸ் கருவாட்டை சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும். வெறும் கடாயில் உடைத்த துண்டுகளையும் முழு மிளகையும் சேர்த்து நன்றாக வாசனை வரும்வரை வறுக்கவும். பிறகு அதைக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாயைக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். இதனுடன் அரைத்த கருவாட்டு கலவை, தேவைக்கேற்ப சிறிதளவு உப்பு, துருவிய தேங்காய் சேர்த்து அவை அனைத்தும் நன்றாகக் கலக்கும்படி மிக்ஸியில் சிறிது நேரம் அரைத்தெடுத்தால் கும்பலமாஸ் ரெடி. இதை சாதத்தில் போட்டு சாப்பிடலாம். சைடிஷாகவும் சாப்பிடலாம்.

நாகை, காரைக்கால் பகுதி மக்களின் விசேஷ உணவாகும் இந்த கும்பலமாஸ்.

மிளகுக் கொடியின் பிறப்பிடமான தென்னிந்தியாவில் குறிப்பாக, கேரளாவில் பெருமளவு மிளகு பயிரிடப்படுகிறது.

மு.நறுமுகை ,படங்கள்: பா.பிரசன்ன வெங்கடேஷ்

தேவையானவை:

நெத்திலி கருவாடு - 100 கிராம் (சுத்தம் செய்யவும்)

பெரிய வெங்காயம் - 2 (நறுக்கவும்)

தக்காளி - 2 (நறுக்கவும்)

மஞ்சள்தூள், கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு

மிளகாய்த்தூள் அல்லது சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்

பூண்டு - 4 பல்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடான பின்னர் சிறிது எண்ணெய்விட்டு கடுகு தாளிக்கவும். கறிவேப்பிலை, பூண்டு சேர்க்கவும். பின்னர் நறுக்கிவைத்த பெரிய வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும். நறுக்கிவைத்த தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பின்னர் நன்கு கழுவி சுத்தம் செய்த கருவாட்டைச் சேர்த்துக்கொள்ளவும். தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் அல்லது சாம்பார் பொடி சேர்த்து பக்குவமாகக் கலந்துவிடவும். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு மூடியால் மூடி 15 நிமிடங்கள் வேக விடவும். வேகும்போது அடுப்பைக் குறைந்த தீயில் வைப்பது முக்கியம். நன்கு கொதித்து வந்த பின்னர் எண்ணெய் மேலாகப் பிரிந்து வரும். இந்த பக்குவத்தில் கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் கமகமவென கருவாடு தொக்கு தயார்.

மதுரை, திருநெல்வேலி, ராமேஸ்வரம் பகுதி மக்களின் விருப்ப உணவில் ஒன்றாக இது இடம்பெறுகிறது.

தக்காளி, கத்திரிக்காய், குடமிளகாய்... இவை மூன்றுமே ஒரே நிழற்சார் குடும்பத்தைச் சேர்ந்தவை.

ச.கிருத்திகா, படங்கள்: ரூத் ஜான் சு

தேவையானவை:

சின்ன வெங்காயம் - 100 கிராம்

தேங்காய் - அரை மூடி (துருவவும்)

நெத்திலி கருவாடு - 200 கிராம்

காய்ந்த மிளகாய் - 6

உப்பு - ஒரு டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

புளி - 10 கிராம் (கரைத்துக்கொள்ளவும்)

செய்முறை:

நெத்திலி கருவாட்டை நன்றாக சுத்தம் செய்து வாணலியில் நன்றாக வறுத்தெடுத்து அதை மிக்ஸியில் நன்கு பொடி செய்து கொள்ளவும். காய்ந்த மிளகாய், சீரகம், தோலுரித்த சின்ன வெங்காயம் ஆகியவற்றைப் பொடி செய்த கருவாட்டோடு சேர்க்கவும். அத்துடன் துருவிய தேங்காயைச் சேர்த்து சிறிது அரைத்துக்கொள்ளவும். அதோடு புளிக்கரைசலையும் உப்பையும் சேர்த்துக் கிளறினால் கருவாடு சம்பல் ரெடி.

இதை இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி ஆகியவற்றோடு சேர்த்துச் சாப்பிட லாம். தமிழ்நாட்டின் கடற்கரை பகுதி மக்களுக்குப் பிடித்த சைடிஷ் இது.

100 கிராம் தேங்காயில் 15.23 கார்போஹைட்ரேட் உள்ளது. இதிலுள்ள கொழுப்பின் அளவு 33.49 கிராம். புரதத்தின் அளவு 3.3 கிராம் மட்டுமே.

ரெசிப்பிஸ் & படங்கள்: ஜேன்

தேவையானவை:

அரிசி - அரை கிலோ

துவரம்பருப்பு - 150 கிராம்

தக்காளி - 2

கத்திரிக்காய் - 2

உருளைக்கிழங்கு - 2

கேரட் - 2

மாங்காய் - 3 துண்டு

முருங்கைக்காய் - ஒன்று

புளி - 10 கிராம்

மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

மீன் மசாலா - 50 கிராம்

முருங்கைக்கீரை - 100 கிராம்

பாறைத்துண்டு கருவாடு - கால் கிலோ

தேங்காய் எண்ணெய் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் - தாளிக்க தேவையான அளவு

செய்முறை:

காய்கறிகளை நன்றாகச் சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி அரிசி, பருப்போடு மஞ்சள்தூளையும் சேர்த்து, தேவையான நீர்விட்டு வேகவைக்கவும். சிறிது வெந்ததும் மஞ்சள்தூள், மீன் மசாலா மற்றும் புளிக் கரைசலை அதனோடு சேர்த்துக் கிளறவும். கருவாட்டுத் துண்டுகளை நன்றாகச் சுத்தம் செய்து அதோடு சேர்த்தபின் உதிர்த்த முருங்கைக்கீரை, உப்பு சேர்த்துக் கிளறவும். இவையனைத்தும் நன்றாக வெந்த பின்னர் ஒரு வாணலியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து அதோடு சேர்த்து கிளறி எடுத்தால், சூடான மொழவு சோறு ரெடி.

பொங்கினால் புளி, மங்கினால் மாங்காய் என்பதுண்டு. அதாவது மழை மிக அதிகமாகப் பெய்தால் புளி அதிகமாகக் காய்க்கும். வெயில் அதிகமாக இருந்தால் மாங்காய், மாம்பழ விளைச்சல் அதிகமாக இருக்கும்.