சாட் உணவுகள் என்றாலே அவற்றுக்கென்றே இருக்கும் பிரத்யேகத் தெருக் கடைகள் மட்டும்தான் ஃபேமஸ். இனி ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே தெருக்கடை உணவுகளைத் தயாரிப்பதுதானே நல்லது... இது நடைமுறையில் சாத்தியமா என நினைக்கிறீர்களா? இன்று முதல் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு விடுங்கள். வட மாநிலங்களின் பிரபலமான பல சாட் உணவுகள் மற்றும் தெருக்கடை ஸ்பெஷல் உணவுகளின் எளிமையான செய்முறை விளக்கங்களை வழங்குகிறார் classicchettinaad.com இணையதள நிர்வாகியும், விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள ‘நீங்களும் செஃப் ஆகலாம்’ நூல் ஆசிரியருமான செஃப் லக்ஷ்மி வெங்கடேஷ். உடனே செய்து பார்த்து சுவைக்கத் தூண்டும் அழகிய படங்களையும் அவரே எடுத்திருக்கிறார். அப்புறமென்ன... லாக் டெளனில் அடைபட்டுக் கிடக்கும் குழந்தைகளை சாட் உணவுகளால் குஷிப்படுத்த நீங்கள் தயாரா?

தேவையானவை:

பாப்டி எனப்படும் மைதா தட்டைகள் அல்லது சாட் தட்டை – 18 (இவை பெரிய கடைகளில் கிடைக்கும்)

உருளைக்கிழங்கு - ஒன்று (தோல் உரித்து, வேகவைத்து சிறிய சதுரமாக நறுக்கிக்கொள்ளவும்)

வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)

தக்காளி - இரண்டு (பொடியாக நறுக்கியது)

மாங்காய் - பாதி (பொடியாக நறுக்கியது, விருப்பப்பட்டால்)

பூண்டுச் சட்னி - 2 டீஸ்பூன்

இனிப்புச் சட்னி - 2 டீஸ்பூன்

பச்சைச் சட்னி - 4 டீஸ்பூன்

சாட் மசாலாத்தூள் - அரை டேபிள்ஸ்பூன்

வறுத்த சீரகத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டேபிள்ஸ்பூன்

எலுமிச்சைச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்

ஓமப்பொடி (சேவ்) - அரை கப்

கொத்தமல்லி - சிறிதளவு (நறுக்கியது)

வறுத்த கடலைப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

ஒரு தட்டில் ஆறு தட்டைகளை வரிசையாக வைத்து அதன் மேல் சிறிது உருளைக்கிழங்கு துண்டுகளை லேசாக மசித்தவாறு போடவும். பிறகு அதன்மேல் நறுக்கிய வெங்காயத்தைத் தூவவும். பின்னர் இதில் பூண்டுச் சட்னி, இனிப்புச் சட்னி, பச்சைச் சட்னி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக ஊற்றவும். பிறகு சாட் மசாலா, வறுத்த சீரகத்தூள், மிளகாய்த்தூள், ஓமப்பொடி (சேவ்) மற்றும் கால் டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை பரவலாகச் சேர்க்கவும். இதன் மீது நறுக்கிய தக்காளி, மாங்காய், கொத்தமல்லி, வறுத்த கடலைப் பருப்பு தூவிப் பரிமாறவும். இதே போன்று மூன்று செட்டுகள் தயாரிக்கலாம்.

உருளைக்கிழங்கில் வைட்ட மின் சி, பொட்டாசியம் சத்துகள் உள்ளன. உருளையைத் தோலுடன் எடுத்துக்கொண்டால் நார்ச் சத்தையும் பெறலாம்.

உருளைக்கிழங்கு மசாலாவுக்கு தேவையானவை:

பாதி வேகவைத்த உருளைக்கிழங்கு - 500 கிராம் (தோலை நீக்கி சதுர வடிவில் நறுக்கவும்)

எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

மிளகாய்த்தூள் – அரை டேபிள்ஸ்பூன்

உலர்ந்த மாங்காய்ப்பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்

வறுத்த சீரகத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

தனியாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்

சாட் செய்ய தேவையானவை:

கெட்டி தயிர் - அரை கப் (அடித்து வைக்கவும்)

பூண்டுச் சட்னி - 2 டீஸ்பூன்

இனிப்புச் சட்னி - 2 டீஸ்பூன்

பச்சைச் சட்னி - 4 டீஸ்பூன்

சாட் மசாலா - அரை டேபிள்ஸ்பூன்

வறுத்து அரைத்த சீரகத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டேபிள்ஸ்பூன்

ஓமப்பொடி (சேவ்) - அரை கப்

நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:

உருளைக்கிழங்கைத் தவிர உருளைக்கிழங்கு மசாலா செய்வதற்குக் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப்பொருள்களுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிக்கலந்து கொள்ளவும். பிறகு இக்கலவையில் உருளைக்கிழங்கையும் சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெயைச் சூடாக்கி அதில் ஊறவைத்து இருக்கும் கலவையைச் சேர்த்து நான்கைந்து நிமிடங்கள் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

ஒரு தட்டில் சிறிது உருளைக்கிழங்கு கலவையை வைத்து அதன் மேல் சிறிது தயிர், பூண்டுச் சட்னி, இனிப்புச் சட்னி, பச்சைச் சட்னி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக ஊற்றவும். பிறகு அதன் மீது சாட் மசாலா, வறுத்த சீரகத்தூள், மிளகாய்த்தூள், ஓமப்பொடி (சேவ்), கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இதய நோயாளிகளுக்கும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது.

தேவையானவை:

கெட்டி வெள்ளை அவல் - ஒரு கப்

பச்சை மிளகாய் - 3 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

உருளைக்கிழங்கு - ஒன்று (தோல் உரித்து, வேக வைத்து சிறிய சதுரமாக வெட்டிக்கொள்ளவும்)

கடுகு - ஒரு டீஸ்பூன்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - தேவையான அளவு

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

வறுத்த வேர்க்கடலை - இரண்டு டேபிள்ஸ்பூன்

சர்க்கரை - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அவலை ஒரு வடி கூடையில் கொட்டி, கழுவி பத்து நிமிடங்கள் தண்ணீரை வடிய விடவும். கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள்தூள், பச்சை மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு இதனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். பின்னர் இக்கலவையில் ஊறிய அவல், வறுத்த வேர்க்கடலை, உப்பு, சர்க்கரை, எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறினால் ஆலூ போகா ரெடி.

உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிக அளவிலும், புரதச்சத்து ஓரளவும் உள்ளது.

தேவையானவை:

பச்சரிசி – ஒரு கப்

குடமிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது)

பச்சைப்பட்டாணி – கால் கப் (அல்லது கால் கப் காய்ந்த பட்டாணியை ஊறவைத்து, பின்னர் வேக வைத்துக்கொள்ளவும்)

காய்ந்த மிளகாய் - பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

பாவ் பாஜி மசாலா – 3 டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

வெண்ணெய் – 3 டீஸ்பூன்

எலுமிச்சைச்சாறு – அரை டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

அரிசியை உதிர் உதிராக வேகவைத்து ஆறவிடவும். பட்டாணியை வேகவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் வெண்ணெய் விட்டு சூடேற்றி சீரகம் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் காய்ந்த மிளகாய் - பூண்டு விழுது சேர்க்கவும். பிறகு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அடுத்து நறுக்கிய தக்காளி, குடமிளகாய், மிளகாய்த் தூள், மஞ்சள்தூள், உப்பு, பாவ் பாஜி தூள் ஆகியவற்றை சேர்க்கவும். இக்கலவையில் சிறிது தண்ணீர்விட்டு வதக்கி மிதமான தீயில் வேகவிடவும். மசாலா வெண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பிறகு வேகவைத்த பட்டாணி மற்றும் வடித்த சாதத்தை இதனுடன் சேர்த்து நன்கு கிளறி, எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

காய்ந்த மிளகாய் - பூண்டு விழுது செய்ய... ஐந்து காய்ந்த மிளகாய்களை கால் கப் வெந்நீரில் பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். ஊறிய மிளகாய், ஏழு பூண்டு பற்கள் சேர்த்து, தண்ணீர்விடாமல் மைய அரைத்துப்பயன்படுத்தவும்.

தக்காளி, குடமிளகாய், கத்திரிக்காய் ஆகியவை ஒரே குடும்பத்தைச் (நிழல்சேர் செடிகள்) சேர்ந்த காய்கறிகள்.

தேவையானவை:

ஜவ்வரிசி - ஒரு கப்

உருளைக்கிழங்கு - ஒன்று (தோலுரித்து, வேகவைத்து சிறிதாக வெட்டிக்கொள்ளவும்)

சீரகம் – அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)

ஒன்றிரண்டாக உடைத்த வேர்க்கடலை –

அரை கப்

சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்

எலுமிச்சைச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஜவ்வரிசியைச் சிறிது தண்ணீர்விட்டு கால் மணி நேரம் ஊறவைத்து தண்ணீரைக் கீழே ஊற்றிவிடவும். மீண்டும் ஜவ்வரிசி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி அதனை ஆறு மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து ஜவ்வரிசியை உதிர் உதிராக எடுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் இதில் ஜவ்வரிசி, உருளைக்கிழங்கு, உப்பு, எலுமிச்சைச்சாறு, சர்க்கரை, வேர்க்கடலை சேர்த்து நன்றாகக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

மருத்துவ மூலிகையான சீரகம் வட இந்திய மலைப்பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. தமிழகத்தின் மேட்டுப்பாங்கான இடங்களிலும் பயிரிடப்படுகிறது.

தேவையானவை:

பொரி - ஒரு கப்

நறுக்கிய வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன்

உருளைக்கிழங்கு - ஒன்று (தோலுரித்து வேகவைத்து நறுக்கிக்கொள்ளவும்)

தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கியது)

பச்சைச் சட்னி - இரண்டு டேபிள்ஸ்பூன்

இனிப்புச் சட்னி - கால் கப்

எலுமிச்சைச்சாறு - அரை டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் - கால் டேபிள்ஸ்பூன்

சாட் மசாலாத்தூள் - கால் டேபிள்ஸ்பூன்

வறுத்துப் பொடித்த சீரகத்தூள் - கால் டேபிள்ஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன்

ஓமப்பொடி - கால் கப்

பேல் பூரிக்கான பூரி அல்லது தட்டு வடை (நொறுக்கியது) - இரண்டு டேபிள்ஸ்பூன்

அலங்கரிக்க:

பேல் பூரிக்கான பூரி அல்லது தட்டு வடை- 8

வறுத்த வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்

எண்ணெயில் பொரித்த கடலைப்பருப்பு -

ஒரு டேபிள்ஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் பொரியைப் போட்டு, எலுமிச்சைச்சாறு தவிர தேவையான பொருள்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு எலுமிச்சைச் சாற்றினை இத்துடன் சேர்த்து மீண்டும் நன்கு கிளறிவைத்தால், மும்பை ஸ்டைல் பேல் பூரி ரெடி. ஒரு தட்டில் இந்தப் பேல் பூரியைப் பரப்பவும். பின்னர் அதன்மேலே அலங்கரிக்க கொடுத்துள்ள பொருள்களை வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

வங்கமொழியில் முரி, கன்னடத்தில் கள்ளெ புரி, தெலுங்கில் மரமரலு, மராத்தியில் சிர்முரே என அழைக்கப்படுவது பொரியே.

தேவையானவை:

மெல்லிய மைதா சப்பாத்தி - 4 (அரைவேக்காடாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்)

வடா பாவுக்குச் செய்த உருளைக்கிழங்கு ஸ்டப்பிங் - அரை கப் (பார்க்க அடுத்த பக்கம்)

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

சாட் மசாலா - அரை டீஸ்பூன் + இரண்டு டீஸ்பூன்

ஆம்சூர் பவுடர் - அரை டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)

பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் - கால் கப்

மயோனைஸ் - இரண்டு டீஸ்பூன்

தக்காளி கெட்சப் - இரண்டு டீஸ்பூன்

சில்லி சாஸ் - இரண்டு டீஸ்பூன்

வெண்ணெய் - 4 டீஸ்பூன்

செய்முறை:

வடா பாவுக்குச் செய்த உருளைக்கிழங்கு ஸ்டப்பிங்குடன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் சாட் மசாலா, ஆம்சூர் பவுடர், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கலந்து இக்கலவையை சிறிது சூடுபடுத்தி எடுத்துக்கொள்ளவும். ஒரு சிறிய பவுலில் மயோனைஸ், தக்காளி கெட்சப், சில்லி சாஸ் ஆகிய மூன்றையும் ஒன்று சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். மைதா சப்பாத்திகளின் இருபுறமும் வெண்ணெய் தடவி தவாவில் சுட்டு எடுக்கவும். சுட்ட சப்பாத்தியின் மேல், கெட்சப் கலவையை தடவவும். சப்பாத்தியின் நடுவில் இரண்டு டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு கலவையைவைத்து சிறிது அழுத்தி விடவும். பின்னர் அதன்மேலே நறுக்கிய வெங்காயம், முட்டைகோஸ், சாட் மசாலா தூவி இறுக்கமாக உருட்டவும். கீழ்பாகத்தைச் சிறிது மடித்து விட்டு, ஃப்ராங்கியை அலுமினியம் ஃபாயில் அல்லது சாண்ட்விச் பேப்பரில் சுருட்டிப் பரிமாறவும்.

ஆம்சூர் பவுடரை அவியல், சாம்பார் மற்றும் பிற குழம்புகளில் மாங்காய்க்குப் பதிலாகச் சேர்க்கலாம். ஆம்சூர் பொடி சேர்க்கும்போது புளி குறைவாகச் சேர்க்கவும்.

வடா செய்வதற்குத் தேவையானவை:

உருளைக்கிழங்கு - 3 (தோலுரித்து, வேகவைத்து மசித்துக்கொள்ளவும்)

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

பச்சை மிளகாய் - 3 அல்லது 4

கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

பூண்டு - ஒரு டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி - ஓர் அங்குலத் துண்டு (துருவிக்கொள்ளவும்)

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

மேல் மாவுக்குத் தேவையானவை:

கடலை மாவு - முக்கால் கப்

அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - 1/3 கப்

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு

பூண்டுச்சட்னி செய்யத் தேவையானவை:

பூண்டு - இரண்டு டேபிள்ஸ்பூன்

கொப்பறை தேங்காய் துருவியது - அரை கப்

உப்பு - தேவையான அளவு

மிளகாய்த்தூள் - இரண்டு டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

பரிமாறுவதற்கு:

எண்ணெயில் பொரித்த

பச்சை மிளகாய் - 6

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சித்துருவல் சேர்த்து வதக்கவும். இத்துடன் வேகவைத்த உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி பின்னர் கொத்தமல்லி தூவி இறக்கவும். கலவை ஆறியதும் இதை சிறிய தக்காளி அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். பின்னர் இதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து இட்லி மாவுப் பதத்துக்குக் கரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கவும். தயாரித்துவைத்திருக்கும் உருண்டைகளை இந்த மாவில் தோய்த்து அதிகம் சிவக்காமல் பொரித்து எடுத்து எண்ணெயை வடித்து எடுத்து வைக்கவும். வடா ரெடி.

மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பூண்டைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு அதில் தேங்காய் சேர்த்துக் கிளறவும். இத்துடன் பூண்டுச்சட்னி செய்யக் கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும் சேர்த்து தண்ணீர்விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும். காற்றுபுகா டப்பாவில் சேகரித்து, தேவைகேற்ப பயன் படுத்தவும்.

வடா பாவைப் பரிமாறும் விதம்

பாவை இரண்டாக பிளந்து, நடுவில் சிறிது பூண்டுச்சட்னி தடவவும். வடாவை லேசாக அழுத்தி இதை பாவுக்கு நடுவில் வைக்கவும். இத்துடன் ஒரு பொரித்த பச்சை மிளகாயையும் வைக்கவும். சூடாகப் பரிமாறவும்.

மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் புற்றுநோய் வராமல் பாதுகாக்கும்.

சோளே மசாலா செய்ய தேவையானவை:

வெள்ளைப்பட்டாணி - ஒரு கப் (4 மணி நேரம் ஊறவைக்கவும்)

வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)

தக்காளி - இரண்டு (பொடியாக நறுக்கியது)

சாட் மசாலாத்தூள் - அரை டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டேபிள்ஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - அரை டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2

எலுமிச்சைச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைகேற்ப

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

குல்ச்சா செய்ய தேவையானவை:

மைதா மாவு - ஒரு கப்

கோதுமை மாவு - ஒரு கப்

சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்

ஈஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

வெண்ணெய் - ஒரு துண்டு

கொத்தமல்லி – சிறிதளவு

சோளே மசாலா செய்முறை:

ஊறவைத்த வெள்ளைப் பட்டாணியை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு சாட் மசாலா, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து ஒரு தடவை கிளறி விடவும். பிறகு இத்துடன் வேகவைத்த பட்டாணியை தண்ணீருடன் சேர்த்துக் கிளறவும். மசாலா நன்கு சேர்ந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். பின்னர் இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

குல்ச்சா செய்முறை:

மிதமான வெந்நீரில் சர்க்கரையைச் சேர்த்துக்கரைக்கவும். இத்துடன் ஈஸ்ட் சேர்த்துக் கரைத்து ஒரு நிமிடம் மூடி வைக்கவும். ஈஸ்ட் நுரைத்துவந்ததும், அதனுடன் மைதா மாவு, கோதுமை மாவு, உப்பு, வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்க்கவும். பிறகு இவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் அல்லது பால் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். மெல்லிய ஈரத் துணியில் இதைச் சுற்றி ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு எடுத்து அதன் மீது லேசாக மைதா தூவி உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக வேண்டிய வடிவில் திரட்டிக்கொள்ளவும். பிறகு திரட்டிய சப்பாத்திகளை மீண்டும் ஈரத் துணியால் 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்னர் இந்தச் சப்பாத்திக்களை வெளியே எடுத்து அவற்றின் மீது கொத்தமல்லி தூவவும். சூடான தோசைக்கல்லில் சிறிது வெண்ணெய்விட்டு அதில் இந்தச் சப்பாத்திகளை இருபக்கமும் சுட்டெடுக்கவும். குல்ச்சா தயார். இந்த டேஸ்ட்டி குல்சாவைத் தயாரித்து வைத்துள்ள சோளேவுடன் பரிமாறவும்.

உலகில் பல நாடுகளில் பயிரிடப்படும் பட்டாணி ஓர் ஓராண்டு தாவரம். ஒரு பட்டாணி விதையின் எடை சுமார் 0.1 முதல் 0.36 கிராம் வரை இருக்கும்.

தேவையானவை:

ஹாக்கா நூடுல்ஸ் – ஒரு பாக்கெட் (சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்)

குடமிளகாய் – ஒன்று

முட்டைகோஸ் – கால் கிலோ

வெங்காயத்தாள் - ஒரு கட்டு

பொடியாக நறுக்கிய பூண்டு – 3 பற்கள்

செஷ்வான் சாஸ் - இரண்டு டேபிள்ஸ்பூன்

சில்லி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

தக்காளி சாஸ் - ஒரு டேபிள் ஸ்பூன்

சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்

வினிகர் - அரை டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

சில்லி ஃப்ளேக்ஸ் – அரை டீஸ்பூன்

எண்ணெய் - தேவைகேற்ப்ப

செய்முறை:

குடமிளகாய், முட்டைகோஸை மெலிதாக, நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ளவும். வெங்காயத்தாளை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அதிலுள்ள பச்சை பகுதியில் சிறிதளவை மட்டும் அலங்கரிப்பதற்காக தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அகன்ற பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீருடன் தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக்கலக்கவும். இதில் நூடுல்ஸைச் சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடிகட்டவும். பிறகு தண்ணீர் வடிக்கப்பட்ட நூடுல்ஸை சாதா தண்ணீரில் நன்கு கழுவி தண்ணீரை வடிக்கவும். பிறகு நூடுல்ஸை ஒரு சுத்தமான துணியில் போட்டு நன்கு விரவி விடவும்.

ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி வேகவைத்த நூடுல்ஸை அதில் சேர்த்து மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும். பூண்டு நிறம் மாறியதும், முட்டைகோஸ், குடமிளகாய் சேர்த்து ஓரிரு நிமிடம் வதக்கவும். பிறகு இத்துடன் நூடுல்ஸ் தவிர மீதமுள்ள மற்ற அனைத்துப் பொருள்களையும் சேர்த்து கலந்து இறக்கவும். கடைசியாக பொரித்த நூடுல்ஸை உடைத்து இக்கலவையுடன் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

சீனாவில் 4,000 ஆண்டுகளுக்கு முன் நூடுல்ஸ் பயன்பாடு பற்றிய சான்றுகள் உள்ளன.