Published:Updated:

திடீர் சட்னிதான்... ஆனால், சம்திங் ஸ்பெஷல்!

சட்னி
பிரீமியம் ஸ்டோரி
News
சட்னி

ரெசிப்பிஸ் மற்றும் படங்கள்: மல்லிகா உதயகுமார்

கோவையில் வசிக்கிற மல்லிகா உதயகுமாருக்கு ஆரோக்கிய உணவுகள் மற்றும் புதிய ரெசிப்பிகளைச் சமைத்துப் பார்ப்பதில் ஆர்வம் அதிகம். இவர் Malli’s Kitchen முகநூல் பக்கத்தையும் (bit.ly/mallisk), My Easy Cooking என்ற யூடியூப் சேனலையும் (bit.ly/malliskitchen) நிர்வகிக்கிறார்.

திடீர் சட்னிதான்... ஆனால், சம்திங் ஸ்பெஷல்!

``என் குடும்பம் முழுக்கவே சமையற் கலைஞர்கள் நிரம்பியிருக்கிறார்கள். பாட்டி, அப்பா, சித்தப்பா ஆகியோர் உணவகம், பேக்கரி துறைகளில் அனுபவம்கொண்டவர்கள். நான் பி.எஸ்ஸி, இன்டீரியர் டிசைனிங் மற்றும் சைக்காலஜி பட்டதாரி. பள்ளியில் படிக்கும்போதிருந்தே சமையலறையில் உதவி செய்வேன். என் மாமியாரும் எனக்குச் சமைக்கும் முறைகளைக் கற்றுக்கொடுத்தார். திருமணத்துக்குப் பின்னர் கணவரும் குழந்தைகளும் எனது சமையலின் ரசிகர்கள் ஆனார்கள். இவர்களுக்கு நான் செய்யும் தக்காளி ஊத்தப்பம், உருளைக்கிழங்கு ரோஸ்ட், பிரியாணி வகைகள் ரொம்பவே பிடிக்கும்’’ என்று சொல்லும் மல்லிகா உதயகுமார், இன்ஸ்டன்ட் முறையில் வித்தியாசமான 10 வகை சட்னிகள் தயார் செய்ய இங்கு விளக்குகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
திடீர் சட்னிதான்... ஆனால், சம்திங் ஸ்பெஷல்!

வல்லாரைச் சட்னி

தேவையானவை:

 • கடலைப்பருப்பு - 60 கிராம்

 • கறுப்பு உளுந்து - 60 கிராம்

 • காய்ந்த மிளகாய் - 4 - 6

 • தேங்காய் - அரை மூடி (துருவவும்)

 • உப்பு - தேவையான அளவு

 • இஞ்சி - கால் இன்ச் துண்டு

 • கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு

 • எண்ணெய் - தேவையான அளவு

தாளிப்பதற்கு:

 • எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 • கடுகு - கால் டீஸ்பூன்

 • உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்

 • கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு

சட்னி செய்ய:

 • வல்லாரைக்கீரை - ஒரு கட்டு (நறுக்கவும்)

 • தக்காளி - ஒன்று (நறுக்கவும்)

திடீர் சட்னிதான்... ஆனால், சம்திங் ஸ்பெஷல்!

செய்முறை:

வாணலியில் சிறிது சிறிதாக எண்ணெய்விட்டு சூடானதும் மேலே குறிப்பிட்ட எல்லா தேவையான பொருள்களையும் தனித்தனியாக வதக்கி, பொன்னிறமாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு சூடு ஆறியதும், அவற்றைத் தண்ணீர்விடாமல், மிகவும் நைஸாக இல்லாமல்... அதாவது, சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையைத் தாளித்து, அரைத்துவைத்துள்ள இன்ஸ்டன்ட் சட்னி மிக்ஸில் சேர்த்துக்கலக்கவும். இதை ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு மூடி, ஃப்ரீசரில் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம்.

வல்லாரைச் சட்னி செய்முறை:

வல்லாரைக்கீரையையும் தக்காளியையும் சிறிதளவு எண்ணெயில் லேசாக வதக்கி இன்ஸ்டன்ட் மிக்ஸ் உடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். வல்லாரைச் சட்னி நிமிடங்களில் தயார்.

குறிப்பு:

வல்லாரைக்கீரையைச் சமைக்கும்போது புளி சேர்த்தால், அதன் பலன் முழுமையாகக் கிடைக்காது.

வல்லாரையில் இரும்பு, சுண்ணாம்புச் சத்துகளும், வைட்டமின் ஏ, சி மற்றும் தாது உப்புகளும் நிறைந்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேரட் சட்னி

தேவையானவை:

 • கடலைப்பருப்பு - 60 கிராம்

 • கறுப்பு உளுந்து - 60 கிராம்

 • காய்ந்த மிளகாய் - 4 - 6

 • தேங்காய் - அரை மூடி (துருவவும்)

 • உப்பு - தேவையான அளவு

 • இஞ்சி - கால் இன்ச் துண்டு

 • கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு

 • எண்ணெய் - தேவையான அளவு

தாளிப்பதற்கு:

 • எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 • கடுகு - கால் டீஸ்பூன்

 • உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்

 • கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு

சட்னி செய்ய:

 • கேரட் - 2 (தோல் சீவி நறுக்கவும்)

 • சின்ன வெங்காயம் - 5 (தோலுரிக்கவும்)

 • தக்காளி - ஒன்று (நறுக்கவும்)

திடீர் சட்னிதான்... ஆனால், சம்திங் ஸ்பெஷல்!

செய்முறை:

வாணலியில் சிறிது சிறிதாக எண்ணெய்விட்டு சூடானதும் மேலே குறிப்பிட்ட எல்லா தேவையான பொருள்களையும் தனித்தனியாக வதக்கி, பொன்னிறமாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு சூடு ஆறியதும், அவற்றைத் தண்ணீர்விடாமல், மிகவும் நைஸாக இல்லாமல்... அதாவது, சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையைத் தாளித்து, அரைத்து வைத்துள்ள இன்ஸ்டன்ட் சட்னி மிக்ஸில் சேர்த்துக் கலக்கவும். இதை ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு மூடி, ஃப்ரீசரில் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம்.

கேரட் சட்னி செய்முறை:

கேரட், சின்ன வெங்காயம், தக்காளியைச் சேர்த்து சிறிதளவு எண்ணெயில் வதக்கி, இந்த இன்ஸ்டன்ட் மிக்ஸ் உடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

பழங்காலத்தில் கேரட், இலைகளுக்காகவே பயிரிடப்பட்டது.

முள்ளங்கிச் சட்னி

தேவையானவை:

 • கடலைப்பருப்பு - 60 கிராம்

 • கறுப்பு உளுந்து - 60 கிராம்

 • காய்ந்த மிளகாய் - 4 - 6

 • தேங்காய் - அரை மூடி (துருவவும்)

 • உப்பு - தேவையான அளவு

 • இஞ்சி - கால் இன்ச் துண்டு

 • கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு

 • எண்ணெய் - தேவையான அளவு

தாளிப்பதற்கு:

 • எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 • கடுகு - கால் டீஸ்பூன்

 • உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்

 • கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு

சட்னி செய்ய:

 • முள்ளங்கி - ஒன்று (துருவவும்)

 • வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (நறுக்கவும்)

 • புளி, உப்பு - சிறிதளவு

திடீர் சட்னிதான்... ஆனால், சம்திங் ஸ்பெஷல்!

செய்முறை:

வாணலியில் சிறிது சிறிதாக எண்ணெய்விட்டு சூடானதும் மேலே குறிப்பிட்ட எல்லா தேவையான பொருள்களையும் தனித்தனியாக வதக்கி, பொன்னிறமாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு சூடு ஆறியதும், அவற்றைத் தண்ணீர்விடாமல், மிகவும் நைஸாக இல்லாமல்... அதாவது, சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையைத் தாளித்து, அரைத்துவைத்த இன்ஸ்டன்ட் சட்னி மிக்ஸில் சேர்த்துக் கலக்கவும். இதை ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு மூடி, ஃப்ரீசரில் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம்.

முள்ளங்கிச் சட்னி செய்முறை:

முள்ளங்கி, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சிறிதளவு எண்ணெயில் வதக்கி, அதனுடன் உப்பு, புளி மற்றும் இன்ஸ்டன்ட் சட்னி பொடி மிக்ஸ், சிறிதளவு நீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளிக்கவும். அரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்த்துக் கிளறி, சிறிது நேரம் கழித்து இறக்கிவிடவும். சுவையான, புது வகையான முள்ளங்கிச் சட்னி தயார். இதை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

குறிப்பு:

வேண்டுமென்றால், ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்க்கலாம்.

உடலில் ரத்த சுத்திகரிப்பைச் செய்யும் தன்மை முள்ளங்கிக்கு உண்டு.

பீட்ரூட் சட்னி

தேவையானவை:

 • கடலைப்பருப்பு - 60 கிராம்

 • கறுப்பு உளுந்து - 60 கிராம்

 • காய்ந்த மிளகாய் - 4 - 6

 • தேங்காய் - அரை மூடி (துருவவும்)

 • உப்பு - தேவையான அளவு

 • இஞ்சி - கால் இன்ச் துண்டு

 • கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு

 • எண்ணெய் - தேவையான அளவு

தாளிப்பதற்கு:

 • எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 • கடுகு - கால் டீஸ்பூன்

 • உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்

 • கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு

சட்னி செய்ய:

 • பீட்ரூட் - 2 (தோல் சீவி, நறுக்கவும்)

 • புளி - சிறிய அளவு

திடீர் சட்னிதான்... ஆனால், சம்திங் ஸ்பெஷல்!

செய்முறை:

வாணலியில் சிறிது சிறிதாக எண்ணெய்விட்டு சூடானதும் மேலே குறிப்பிட்ட எல்லா தேவையான பொருள்களையும் தனித்தனியாக வதக்கி, பொன்னிற மாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு சூடு ஆறியதும், அவற்றைத் தண்ணீர்விடாமல், மிகவும் நைஸாக இல்லாமல்... அதாவது, சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையைத் தாளித்து, அரைத்துவைத்த இன்ஸ்டன்ட் சட்னி மிக்ஸில் சேர்த்துக் கலக்கவும். இதை ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு மூடி, ஃப்ரீசரில் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம்.

பீட்ரூட் சட்னி செய்முறை:

பீட்ரூட்டைச் சிறிதளவு எண்ணெயில் வதக்கவும். இதனுடன் புளி, இன்ஸ்டன்ட் சட்னி பொடி மிக்ஸ் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்தால், அருமையான பீட்ரூட் சட்னி தயார்.

குறிப்பு:

பீட்ரூட்டில் இரும்பு, தாமிரம், கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் உள்ளதால் உங்கள் உடலை வலுவாக்கி, சருமத்தைப் பொலிவாக்கும்.

பீட்ரூட்டுக்குத் தமிழில் செங்கிழங்கு, அக்காரக்கிழங்கு ஆகிய பெயர்களும் உண்டு.

பீர்க்கங்காய்ச் சட்னி

தேவையானவை:

 • கடலைப்பருப்பு - 60 கிராம்

 • கறுப்பு உளுந்து - 60 கிராம்

 • காய்ந்த மிளகாய் - 4 - 6

 • தேங்காய் - அரை மூடி (துருவவும்)

 • உப்பு - தேவையான அளவு

 • இஞ்சி - கால் இன்ச் துண்டு

 • கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு

 • எண்ணெய் - தேவையான அளவு

தாளிப்பதற்கு:

 • எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 • கடுகு - கால் டீஸ்பூன்

 • உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்

 • கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு

சட்னி செய்ய:

 • பீர்க்கங்காய் - ஒன்று (தோல் சீவி, நறுக்கவும்)

 • புளி - சிறிதளவு

 • உப்பு - தேவைக்கேற்ப

திடீர் சட்னிதான்... ஆனால், சம்திங் ஸ்பெஷல்!

செய்முறை:

வாணலியில் சிறிது சிறிதாக எண்ணெய்விட்டு சூடானதும் மேலே குறிப்பிட்ட எல்லா தேவையான பொருள்களையும் தனித்தனியாக வதக்கி, பொன்னிறமாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு சூடு ஆறியதும், அவற்றைத் தண்ணீர்விடாமல், மிகவும் நைஸாக இல்லாமல்... அதாவது, சற்று கொரகொரப்பாக எடுத்துக்கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையைத் தாளித்து, அரைத்து வைத்துள்ள இன்ஸ்டன்ட் சட்னி மிக்ஸில் சேர்த்துக் கலக்கவும். இதை ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு மூடி, ஃப்ரீசரில் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம்.

பீர்க்கங்காய்ச் சட்னி செய்முறை:

சிறிதளவு எண்ணெயைச் சூடாக்கி நறுக்கி வைத்திருக்கும் பீர்க்கங்காயை சேர்த்து, புளியையும் போட்டு சிறிது நேரம் வதக்கவும். இதை மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து இன்ஸ்டன்ட் சட்னி பொடி மிக்ஸ் சேர்த்து அரைக்கவும். சுவையான பீர்க்கங்காய்ச் சட்னி ரெடி. இதை தோசை, இட்லி மற்றும் சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

குறிப்பு:

நார்ச்சத்து, நீர்ச்சத்து நிறைந்த பீர்க்கங்காய் நாம் கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய அவசியமான ஒன்று.

பீர்க்கங்காயின் தாயகம் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவே.

பிரண்டைச் சட்னி

தேவையானவை:

 • கடலைப்பருப்பு - 60 கிராம்

 • கறுப்பு உளுந்து - 60 கிராம்

 • காய்ந்த மிளகாய் - 4 - 6

 • தேங்காய் - அரை மூடி (துருவவும்)

 • உப்பு - தேவையான அளவு

 • இஞ்சி - கால் இன்ச் துண்டு

 • கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு

 • எண்ணெய் - தேவையான அளவு

தாளிப்பதற்கு:

 • எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 • கடுகு - கால் டீஸ்பூன்

 • உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்

 • கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு

சட்னி செய்ய:

 • பிரண்டை - ஒரு கைப்பிடி அளவு

 • உப்பு - சிறிதளவு

திடீர் சட்னிதான்... ஆனால், சம்திங் ஸ்பெஷல்!

செய்முறை:

வாணலியில் சிறிது சிறிதாக எண்ணெய்விட்டு சூடானதும் மேலே குறிப்பிட்ட எல்லா தேவையான பொருள்

களையும் தனித்தனியாக வதக்கி, பொன்னிறமாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு சூடு ஆறியதும், அவற்றைத் தண்ணீர்விடாமல், மிகவும் நைஸாக இல்லாமல்... அதாவது, சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையைத் தாளித்து, அரைத்து வைத்துள்ள இன்ஸ்டன்ட் சட்னி மிக்ஸில் சேர்த்துக் கலக்கவும். இதை ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு மூடி, ஃப்ரீசரில் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம்.

பிரண்டைச் சட்னி செய்முறை:

முதலில் பிரண்டையை நன்கு கழுவி, அதன் மேலுள்ள தோலை உரித்து சுத்தம் செய்து உள்ளிருக்கும் தண்டுப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். சிறிதளவு எண்ணெயில் பிரண்டையைச் சற்று வறுத்துக்கொள்ளவும். சூடு ஆறியதும், சிறிதளவு உப்பு, தண்ணீர் மற்றும் இன்ஸ்டன்ட் சட்னி பொடி மிக்ஸ் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக்கொள்ளவும். பிரண்டைச் சட்னி நிமிடங்களில் ரெடி. இந்தச் சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

குறிப்பு:

பிரண்டை அரிக்கும் தன்மையுடையது. அதை வதக்கும்போது நன்கு வதக்க வேண்டும். பிரண்டையைத் தோல் உரித்து சுத்தம் செய்யும்போது, கையில் சிறிதளவு நல்லெண்ணெயைத் தடவிக்கொள்ளவும்

* இதில் பெரிய வெங்காயம், முழு வர மல்லி வறுத்து சேர்த்து அரைத்தாலும், சுவை மிகவும் நன்றாக இருக்கும்.

பிரண்டையில் ஓலை, உருள், இனிப்பு, புளிப்பு மற்றும் முப்பிரண்டை எனப் பல வகைகள் உள்ளன.

கறிவேப்பிலைச் சட்னி

தேவையானவை:

 • கடலைப்பருப்பு - 60 கிராம்

 • கறுப்பு உளுந்து - 60 கிராம்

 • காய்ந்த மிளகாய் - 4 - 6

 • தேங்காய் - அரை மூடி (துருவவும்)

 • உப்பு - தேவையான அளவு

 • இஞ்சி - கால் இன்ச் துண்டு

 • கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு

 • எண்ணெய் - தேவையான அளவு

தாளிப்பதற்கு:

 • எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 • கடுகு - கால் டீஸ்பூன்

 • உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்

 • கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு

சட்னிக்கு:

 • கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு

 • புளி - சிறிதளவு

 • வெங்காயம், தக்காளி தலா ஒன்று (நறுக்கவும்)

 • பூண்டு - 4 பல்

திடீர் சட்னிதான்... ஆனால், சம்திங் ஸ்பெஷல்!

செய்முறை:

வாணலியில் சிறிது சிறிதாக எண்ணெய் விட்டு சூடானதும் மேலே குறிப்பிட்ட எல்லா தேவையான பொருள்களையும் தனித்தனியாக வதக்கி, பொன்னிறமாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு சூடு ஆறியதும், அவற்றைத் தண்ணீர்விடாமல், மிகவும் நைஸாக இல்லாமல்... அதாவது, சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையைத் தாளித்து, அரைத்து வைத்துள்ள இன்ஸ்டன்ட் சட்னி மிக்ஸில் சேர்த்துக் கலக்கவும். இதை ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு மூடி, ஃப்ரீசரில் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம்.

கறிவேப்பிலைச் சட்னி செய்முறை:

கறிவேப்பிலை, புளி, வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை சிறிதளவு எண்ணெயில் வதக்கி, இன்ஸ்டன்ட் சட்னி பொடி மிக்ஸ் உடன் சேர்த்துச் சட்னியாக அரைத்துக்கொள்ளவும். கறிவேப்பிலைச் சட்னியுடன் சூடான நெய் ஊற்றி இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.

குறிப்பு :

கறிவேப்பிலையை ரொம்ப வதக்க வேண்டாம். சிறிது பச்சை நிறம் போக வதக்கினாலே போதுமானது. வேண்டுமானால், இந்தச் சட்னிக்கு காய்ந்த மிளகாய்க்குப் பதிலாகப் பச்சை மிளகாய் சேர்த்தும் செய்யலாம். இதுவும் வித்தியாசமான சுவையைக் கொடுக்கும்.

உலகில் இந்தியா, இலங்கை நாடுகளிலேயே கறிவேப்பிலை அதிக அளவில் உணவில் பயன்படுத்தப் படுகிறது.

மாங்காய்ச் சட்னி

தேவையானவை:

 • கடலைப்பருப்பு - 60 கிராம்

 • கறுப்பு உளுந்து - 60 கிராம்

 • காய்ந்த மிளகாய் - 4 - 6

 • தேங்காய் - அரை மூடி (துருவவும்)

 • உப்பு - தேவையான அளவு

 • இஞ்சி - கால் இன்ச் துண்டு

 • கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு

 • எண்ணெய் - தேவையான அளவு

தாளிப்பதற்கு:

 • எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 • கடுகு - கால் டீஸ்பூன்

 • உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்

 • கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு

சட்னி செய்ய:

 • மாங்காய் - ஒன்று (துருவவும்)

 • பச்சை மிளகாய் - 2

 • சின்ன வெங்காயம் - 4 (தோலுரிக்கவும்)

 • பூண்டு - ஒரு பல்

திடீர் சட்னிதான்... ஆனால், சம்திங் ஸ்பெஷல்!

செய்முறை:

வாணலியில் சிறிது சிறிதாக எண்ணெய்விட்டு சூடானதும் மேலே குறிப்பிட்ட எல்லா தேவையான பொருள்களையும் தனித்தனியாக வதக்கி, பொன்னிறமாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு சூடு ஆறியதும், அவற்றைத் தண்ணீர்விடாமல், மிகவும் நைஸாக இல்லாமல்... அதாவது, சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையைத் தாளித்து, அரைத்துவைத்துள்ள இன்ஸ்டன்ட் சட்னி மிக்ஸில் சேர்த்துக் கலக்கவும். இதை ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு மூடி, ஃப்ரீசரில் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம்.

மாங்காய்ச் சட்னி செய்முறை:

முதலில் மாங்காய்த் துருவலுடன் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டுப் பல் ஆகியவற்றைச் சேர்த்து சிறிதளவு எண்ணெயில் வதக்கவும். இதை இன்ஸ்டன்ட் சட்னி பொடி மிக்ஸில் சேர்த்துச் சட்னியாக அரைத்துக்கொள்ளவும்.

மருத்துவக் குணம் நிறைந்த மாங்காய்ச் சட்னியை வாரம் ஒருமுறை எடுத்துக்கொள்வது நல்லது.

குறிப்பு:

இதில் சிறிது வெல்லம் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

இந்தியா, வங்காளம், தென்கிழக்கு ஆசியப் பகுதிகளே மாங்காயின் பூர்வீகம்.

ஆளிவிதைச் சட்னி

தேவையானவை:

 • கடலைப்பருப்பு - 60 கிராம்

 • கறுப்பு உளுந்து - 60 கிராம்

 • காய்ந்த மிளகாய் - 4 - 6

 • தேங்காய் - அரை மூடி (துருவவும்)

 • உப்பு - தேவையான அளவு

 • இஞ்சி - கால் இன்ச் துண்டு

 • கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு

 • எண்ணெய் - தேவையான அளவு

தாளிப்பதற்கு:

 • எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 • கடுகு - கால் டீஸ்பூன்

 • உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்

 • கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு

சட்னிக்கு:

 • ஆளிவிதை - 2 டேபிள்ஸ்பூன்

 • புளி - கால் துண்டு அளவு

 • மல்லி (தனியா) - தலா ஒரு டேபிள்ஸ்பூன்

 • மிளகு - ஒரு டீஸ்பூன்

 • பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

திடீர் சட்னிதான்... ஆனால், சம்திங் ஸ்பெஷல்!

செய்முறை:

வாணலியில் சிறிது சிறிதாக எண்ணெய்விட்டு சூடானதும் மேலே குறிப்பிட்ட எல்லா தேவையான பொருள்களையும் தனித்தனியாக வதக்கி, பொன்னிறமாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு சூடு ஆறியதும், அவற்றைத் தண்ணீர்விடாமல், மிகவும் நைஸாக இல்லாமல்... அதாவது, சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

ஆளிவிதைச் சட்னி செய்முறை:

ஆளி விதை, புளி, தனியா, மிளகு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சிறிதளவு எண்ணெயில் வறுத்து, அரைத்து வைத்ததைச் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி அரைக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து சேர்க்கவும்.

ஆளிவிதையில் நார்ச்சத்து அளவு அதிகம்.

வறுத்த பருப்புச் சட்னி

தேவையானவை:

 • கடலைப்பருப்பு - 60 கிராம்

 • கறுப்பு உளுந்து - 60 கிராம்

 • காய்ந்த மிளகாய் - 4 - 6

 • தேங்காய் - அரை மூடி (துருவவும்)

 • உப்பு - தேவையான அளவு

 • இஞ்சி - கால் இன்ச் துண்டு

 • கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு

 • எண்ணெய் - தேவையான அளவு

தாளிப்பதற்கு:

 • எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 • கடுகு - கால் டீஸ்பூன்

 • உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்

 • கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு

சட்னிக்கு:

 • புளி - சிறிதளவு

வறுத்த பருப்புச் சட்னி
வறுத்த பருப்புச் சட்னி

செய்முறை:

வாணலியில் சிறிது சிறிதாக எண்ணெய்விட்டு சூடானதும் மேலே குறிப்பிட்ட எல்லா தேவையான பொருள்களையும் தனித்தனியாக வதக்கி, பொன்னிறமாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு சூடு ஆறியதும், அவற்றைத் தண்ணீர்விடாமல், மிகவும் நைஸாக இல்லாமல்... அதாவது, சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையைத் தாளித்து, அரைத்து வைத்துள்ள இன்ஸ்டன்ட் சட்னி மிக்ஸில் சேர்த்துக் கலக்கவும். இதை ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு மூடி, ஃப்ரீசரில் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம். சட்னி தேவைப்படும்போது இந்த இன்ஸ்டன்ட் மிக்ஸில் சிறிதளவு புளி, தண்ணீர் சேர்த்து அரைத்தால் வறுத்த பருப்புச் சட்னி நிமிடங்களில் தயார்.

இந்தச் சட்னியுடன் சுடச்சுட நெய் ஊற்றி இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவார்கள்

குறிப்பு:

வெள்ளை (அ) கறுப்பு எள் வறுத்து சேர்த்தால், சுவை மிகவும் நன்றாக இருக்கும்.

உளுந்து சங்க இலக்கியங்களில் `உழுந்து’ என்று அழைக்கப் படுகிறது.