Published:Updated:

சத்தான தோசை... முத்தான ரெசிப்பி! - கிட்ஸ் ஸ்பெஷல்

சத்தான தோசை
பிரீமியம் ஸ்டோரி
News
சத்தான தோசை

ரெசிப்பிஸ் மற்றும் படங்கள்: கவிதா பாலமுருகன்

``என் சொந்த ஊர் சீர்காழி. வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளேன். திருமணத்துக்குப் பின் சென்னை வந்துவிட்டேன். சமையல் திறமையை என் புகுந்த வீட்டு உறவுகள் பாராட்டினார்கள். அதனால் எனது சமையல் திறமையை உலகறியச்செய்ய விரும்பி youtube.com/c/BALAKAVI என்ற யூடியூப் சேனலிலும் facebook.com/BALAKAVISAMAYAL என்ற ஃபேஸ்புக் பக்கத்திலும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறேன்.

சத்தான தோசை... முத்தான ரெசிப்பி! - கிட்ஸ் ஸ்பெஷல்

இதுவரை என் யூடியூப் சேனலில் ஒரு லட்சத்து 11 ஆயிரம் சந்தாதாரர்கள் உள்ளனர். 50 லட்சத்துக்கும் அதிகமானோர் எனது பதிவுகளைப் பார்வை யிட்டுள்ளனர். தென்னிந்திய சமையல்களிலேயே தோசை சிறந்த உணவு. இதில் நம் கற்பனைக்கேற்பவும் சத்துகளின் தேவைக்கேற்பவும் வகை வகையாகச் செய்து சாப்பிடலாம்’’ என்று கூறும் கவிதா பாலமுருகன், ஸ்டெப் பை ஸ்டெப் முறையில் வழங்கும் ருசிகரமான தோசை வகைகள் இங்கே!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
சத்தான தோசை
சத்தான தோசை

ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங் - 1

ஆளிவிதைப் பொடி தோசை

தேவையானவை:

  • தோசை மாவு - 5 கரண்டி

  • ஆளிவிதை - 100 கிராம்

  • பூண்டு - 5 பல்

  • காய்ந்த மிளகாய் - 2

  • சீரகம் - ஒரு டீஸ்பூன்

  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

சத்தான தோசை... முத்தான ரெசிப்பி! - கிட்ஸ் ஸ்பெஷல்
சத்தான தோசை... முத்தான ரெசிப்பி! - கிட்ஸ் ஸ்பெஷல்

அடுப்பில் வாணலியை வைத்து ஆளிவிதையைத் தனியாக வறுத்துக்கொள்ளவும். பூண்டு, காய்ந்த மிளகாய், சீரகத்தைத் தனியாக வறுத்து ஆறவிடவும். ஆறியவுடன் இவற்றை மிக்ஸியில் சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாகப் பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் தோசைக்கல்லில் எண்ணெய் அல்லது நெய் தடவி தோசை ஊற்றவும். ஊற்றிய தோசையின் மேல் அரைத்துவைத்துள்ள ஆளிவிதைப் பொடியைத் தூவவும். சிறிது எண்ணெயை மேலே ஊற்றவும். தோசையை மூடி போட்டு குறைந்த தீயில் வேகவைக்கவும். தோசையைப் புரட்டிப்போட்டு வேகவைக்க வேண்டாம். தோசை வெந்தவுடன் பரிமாறவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கறிவேப்பிலைப் பொடி தோசை

தேவையானவை:

  • தோசை மாவு - 5 கரண்டி

  • கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு

  • உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்

  • காய்ந்த மிளகாய் - 2

  • மிளகு - ஒரு டீஸ்பூன்

  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

சத்தான தோசை... முத்தான ரெசிப்பி! - கிட்ஸ் ஸ்பெஷல்
சத்தான தோசை... முத்தான ரெசிப்பி! - கிட்ஸ் ஸ்பெஷல்

அடுப்பில் வாணலியை வைத்து கறிவேப்பிலையைத் தனியாக வறுக்கவும். உளுத்தம்பருப்பு, மிளகு மற்றும் காய்ந்த மிளகாயைத் தனியாக வறுத்து ஆறவிடவும். ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாகப் பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் தோசைக்கல்லில் எண்ணெய் அல்லது நெய் தடவி தோசை ஊற்றவும். ஊற்றிய தோசையின் மேல் அரைத்துவைத்துள்ள கறிவேப்பிலைப் பொடியைத் தூவவும். சிறிது எண்ணெயை மேலே ஊற்றவும். தோசையை மூடி போட்டு குறைந்த தீயில் வேகவைக்கவும். தோசையைப் புரட்டிப்போட்டு வேகவைக்க வேண்டாம். தோசை வெந்தவுடன் பரிமாறவும்.

ராகி இனிப்பு தோசை

தேவையானவை:

  • ராகி மாவு (கேழ்வரகு மாவு) - ஒரு கப்

  • வெல்லம் - ஒரு கப்

  • தண்ணீர் - தேவையான அளவு

  • எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு

சத்தான தோசை... முத்தான ரெசிப்பி! - கிட்ஸ் ஸ்பெஷல்
சத்தான தோசை... முத்தான ரெசிப்பி! - கிட்ஸ் ஸ்பெஷல்

முதலில் வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். ராகி மாவை இதனுடன் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு மாவைத் தயார் செய்து கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் அல்லது நெய் தடவி தோசை ஊற்றவும்.

கொஞ்சம் தடிமனாக ஊற்றி குறைந்த தீயில் வேகவைக்க வேண்டும். இரண்டு பக்கமும் வெந்தவுடன் எடுக்கவும். நெய் அல்லது வெண்ணெய் தடவி குழந்தைகளுக்குப் பரிமாறலாம்.

ராகி கார தோசை

தேவையானவை:

  • ராகி மாவு (கேழ்வரகு மாவு) - ஒரு கப்

  • வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

  • பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)

  • கறிவேப்பிலை - சிறிதளவு

  • கொத்தமல்லித்தழை - சிறிதளவு

  • தண்ணீர் - தேவையான அளவு

  • கடுகு - ஒரு டீஸ்பூன்

  • உளுத்தம்பருப்பு - முக்கால் டீஸ்பூன்

  • எண்ணெய் அல்லது நெய், உப்பு - தேவையான அளவு

சத்தான தோசை... முத்தான ரெசிப்பி! - கிட்ஸ் ஸ்பெஷல்
சத்தான தோசை... முத்தான ரெசிப்பி! - கிட்ஸ் ஸ்பெஷல்

ராகி மாவுடன் பாதி வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, மீதி வெங்காயம் சேர்த்து வதக்கி மாவுடன் சேர்த்துக்கொள்ளவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் அல்லது நெய் தடவி தோசை ஊற்றவும். தோசை மாவைத் தண்ணீராகக் கரைத்துச்சுற்றி ஊற்றவும் (ரவா தோசை போல). தோசையை இரண்டு பக்கமும் புரட்டிப் போட்டு வேகவைக்கவும். மொறுமொறுவென்று இருக்க ஓரங்களில் எண்ணெய் ஊற்றவும். தோசை வெந்தவுடன் பரிமாறவும்.

ராகி முருங்கைக்கீரை அடை

தேவையானவை:

  • ராகி மாவு (கேழ்வரகு மாவு) - ஒரு கப்

  • முருங்கைக்கீரை - கைப்பிடி அளவு

  • வெங்காயம் - ஒன்று

  • தேங்காய் (துருவியது) - 2 டீஸ்பூன்

  • காய்ந்த மிளகாய் - 2

  • உப்பு - தேவையான அளவு

  • எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கேற்ப

  • தண்ணீர் - தேவையான அளவு

சத்தான தோசை... முத்தான ரெசிப்பி! - கிட்ஸ் ஸ்பெஷல்
சத்தான தோசை... முத்தான ரெசிப்பி! - கிட்ஸ் ஸ்பெஷல்

ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, நறுக்கிய வெங்காயம், தேங்காய்த் துருவல், கிள்ளிய காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறிக்கொள்ளவும். பின்பு முருங்கைக்கீரை சேர்த்து சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து மாவைக் கட்டியாக உருட்டும் பதத்தில் தயார் செய்துகொள்ளவும். சிறிய உருண்டை மாவை எடுத்து ஈரத் துணியில் வைத்து வட்டமாகக் கைகளால் தட்டியெடுக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லைக் காயவைத்து எண்ணெய் அல்லது நெய் தடவி தட்டிய அடையை வேகவைத்து எடுக்கவும். இரண்டு பக்கமும் வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.

ராகி சுரைக்காய் அடை

தேவையானவை:

  • ராகி மாவு (கேழ்வரகு மாவு) - ஒரு கப்

  • சுரைக்காய் - முக்கால் கப் (தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கியது)

  • வெங்காயம் - ஒன்று

  • காய்ந்த மிளகாய் - 2

  • கறிவேப்பிலை - சிறிதளவு

  • கொத்தமல்லித்தழை - சிறிதளவு

  • உப்பு - தேவையான அளவு

  • தண்ணீர் - தேவையான அளவு

  • எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு

சத்தான தோசை... முத்தான ரெசிப்பி! - கிட்ஸ் ஸ்பெஷல்
சத்தான தோசை... முத்தான ரெசிப்பி! - கிட்ஸ் ஸ்பெஷல்

ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, நறுக்கிய வெங்காயம், கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறிக்கொள்ளவும். பின்பு சுரைக்காய் சேர்த்து, சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து மாவைக் கட்டியாக உருட்டும் பதத்தில் தயார் செய்துகொள்ளவும். சிறு உருண்டை மாவை எடுத்து ஈரத்துணியில் வைத்து வட்டமாகக் கைகளால் தட்டியெடுக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் அல்லது நெய் தடவி, தட்டிய அடையை வேகவைத்து எடுக்கவும். இரண்டு பக்கமும் வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.

கேரட் தோசை

தேவையானவை:

  • தோசை மாவு - 5 கரண்டி

  • கேரட் - 2 (துருவிக்கொள்ளவும்)

  • வெங்காயம் - ஒன்று (நறுக்கிக்கொள்ளவும்)

  • கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

  • மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

  • மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

  • பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

  • கொத்தமல்லி இலை - சிறிதளவு

  • உப்பு - தேவையான அளவு

  • எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கேற்ப

சத்தான தோசை... முத்தான ரெசிப்பி! - கிட்ஸ் ஸ்பெஷல்
சத்தான தோசை... முத்தான ரெசிப்பி! - கிட்ஸ் ஸ்பெஷல்

துருவிய கேரட் உடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக எண்ணெயில் வதக்கி கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் அல்லது நெய் தடவி தோசை ஊற்றவும். ஊற்றிய தோசையின் மேல் வதக்கி வைத்துள்ள கேரட் மசாலாவைத் தடவவும். சிறிது எண்ணெயை மேலே ஊற்றவும். தோசையை மூடி போட்டு குறைந்த தீயில் வேகவைக்கவும். தோசையைப் புரட்டிப் போட்டு வேகவைக்க வேண்டாம். தோசை வெந்தவுடன் பரிமாறவும்.

பீட்ரூட் தோசை

தேவையானவை:

  • தோசை மாவு - 5 கரண்டி

  • பீட்ரூட் - 2

  • வெங்காயம் - ஒன்று (நறுக்கிக்கொள்ளவும்)

  • கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

  • மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

  • சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்

  • பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

  • மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

  • எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கேற்ப

சத்தான தோசை... முத்தான ரெசிப்பி! - கிட்ஸ் ஸ்பெஷல்
சத்தான தோசை... முத்தான ரெசிப்பி! - கிட்ஸ் ஸ்பெஷல்

சிறு பகுதி பீட்ரூட்டை அரைத்து தோசை மாவுடன் கலந்துகொள்ளவும். மீதி பகுதியைத் துருவி அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக எண்ணெயில் வதக்கி கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

அடுப்பில் தோசைக்கல்லில் எண்ணெய் அல்லது நெய் தடவி தோசை ஊற்றவும். ஊற்றிய தோசையின் மேல் வதக்கி வைத்துள்ள பீட்ரூட் மசாலாவைத் தடவவும்.

சிறிதளவு எண்ணெயை மேலே ஊற்றவும். தோசையை மூடி போட்டு குறைந்த தீயில் வேகவைக்கவும். தோசையைப் புரட்டிப் போட்டு வேகவைக்க வேண்டாம். தோசை வெந்தவுடன் பரிமாறவும்.

ஸ்வீட் கார்ன் தோசை

தேவையானவை:

  • தோசை மாவு - 5 கரண்டி

  • ஸ்வீட் கார்ன் - ஒன்று

  • வெண்ணெய் - 2 டீஸ்பூன்

  • சாட் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

  • மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

  • சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்

  • மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

சத்தான தோசை... முத்தான ரெசிப்பி! - கிட்ஸ் ஸ்பெஷல்
சத்தான தோசை... முத்தான ரெசிப்பி! - கிட்ஸ் ஸ்பெஷல்

ஸ்வீட் கார்ன் முத்துகளை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து எடுத்துக்கொள்ளவும். அதை ஐந்து நிமிடங்கள் வேகவைத்து தண்ணீரை முழுவதுமாக வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். அது சூடாக இருக்கும்போதே வெண்ணெய், சாட் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும்.

தோசைக்கல்லில் மாவை தோசையாக ஊற்றவும். அடுப்பைக் குறைவான தீயில் வைத்து தோசை மீது மசாலா கார்ன் தூவவும். மூடி போட்டு வேகவைக்கவும். தோசை வெந்தவுடன் பரிமாறவும்.

பீட்சா தோசை

தேவையானவை:

  • தோசை மாவு - 3 கரண்டி

  • சீஸ் - 50 கிராம்

  • ஸ்வீட் கார்ன் முத்துகள் - 2 டேபிள்ஸ்பூன்

  • துருவிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன்

  • வெங்காயம் - பாதியளவு (வட்டமாக நறுக்கவும்)

  • குடமிளகாய் (பச்சை, சிவப்பு) - பாதியளவு (நீளமாக நறுக்கவும்)

  • டொமேட்டோ கெட்சப் - 2 டேபிள்ஸ்பூன்

  • பீட்சா சீஸனிங் (Pizza seasoning) - ஒரு டீஸ்பூன்

சத்தான தோசை... முத்தான ரெசிப்பி! - கிட்ஸ் ஸ்பெஷல்
சத்தான தோசை... முத்தான ரெசிப்பி! - கிட்ஸ் ஸ்பெஷல்

தோசைக்கல்லில் மூன்று கரண்டி மாவு ஊற்றி தோசை ஊற்றவும். குறைவான தீயில் ஒரு நிமிடம் மூடியிட்டு வேகவைக்கவும். பிறகு மூடியைத் திறந்து தக்காளி கெட்சப் தடவவும். அதன் மீது சீஸ் துருவல், ஸ்வீட் கார்ன், கேரட், குடமிளகாய், வெங்காயம் ஆகியவற்றை அடுக்கவும். மீண்டும் ஒருமுறை சீஸ் துருவல் சேர்க்கவும்.

மூடியிட்டு மூன்று நிமிடங்கள் வரை குறைந்த தீயில் வேகவைக்கவும். இடையிடையே மூடியைத் திறந்து வெந்துவிட்டதா என சோதித்துக்கொள்ளவும். வெந்த பிறகு மேலே பீட்சா சீஸனிங் தூவவும். கல்லிலேயே வைத்து பீட்சா கட்டர் கொண்டு நமக்கு வேண்டிய அளவில் வெட்டிக்கொள்ளலாம்.