“ஐஸ்க்ரீம்... பெயரைச் சொன்னாலே போதும்... எல்லா வயதினரின் சுவைமொட்டுகளும் உடனே மலரும். எவ்வளவு பெரிய விருந்தாக இருந்தாலும் சரி... உண்டு முடித்தவுடன், எத்தனை இனிப்பு பதார்த்தங்கள் இருந்தாலும் சரி... ஐஸ்க்ரீம்தான் அங்கே ராஜா!

இனிமையான இந்தப் பனிக்கூழ், 16-ம் நூற்றாண்டில் முகலாயர் வாயிலாக இந்தியாவில் பரிச்சயமாக ஆரம்பித்தது. மண் பானையில் காய்ச்சிய பால், ஏலக்காய், குங்குமப்பூ, சர்க்கரை ஆகியவற்றைக் கலந்து, பனியில் உறையவைத்து உண்டு மகிழ்ந்தனர். இன்று உலகம் முழுவதும் ஆயிரம் வகையான சுவைகளில் ஐஸ்க்ரீம்கள் தயாரிக்கப்படுகின்றன’’ என்று கூறி கோடையைக் குளிர்விக்க அழைக்கிறார் ராஜபாளையத்தைச் சேர்ந்த சமையற்கலைஞர் அகிலா விமல். இதோ... ஐஸ்க்ரீம் மட்டுமல்ல; மற்ற நாடுகளில் புகழ்பெற்ற ஃப்ரோ-யோ, செமி ஃப்ரெட்டோ, ஜெலாட்டோ, ஐஸ்க்ரீம் சாண்ட்விச், மாறுபட்ட சுவைகளில் குல்ஃபி என வித்தியாசமான ஃப்ரோஸன் டெஸர்ட்ஸ் அணிவகுப்பை நடத்துகிறார் அவர்.

தேவையானவை:

முட்டை - 3

முட்டையின் மஞ்சள் கரு மட்டும் - 2

சர்க்கரை - ஒரு கப்

வெனிலா எசென்ஸ் - 2 டீஸ்பூன்

ஃபிரெஷ் க்ரீம் – அரை லிட்டர்

சாக்லேட் க்ரீம் குக்கீஸ் - 10

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க விடவும். அதற்கு மேல் பொருத்தமாக இன்னொரு பாத்திரத்தை வைத்து உடைத்த முட்டைகள், மஞ்சள் கரு மற்றும் சர்க்கரை ஆகியவற்றைச் சேர்க்கவும். அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து ஹாண்ட் பீட்டர் கொண்டு முட்டைக் கலவையை அதிவேகத்தில் அடிக்கவும். இப்படிச் செய்வதால் ஐந்து நிமிடங்களில் முட்டைகள் நன்றாக நுரைத்து மென்மையாகிவிடும். இதை அடுப்பிலிருந்து இறக்கி, இதனுடன் ஃபிரெஷ் க்ரீம், வெனிலா எசென்ஸ் சேர்த்து மறுபடியும் ஹாண்ட் பீட்டர் கொண்டு அடிக்கவும். பாதியளவு சாக்லேட் க்ரீம் குக்கீஸை உடைத்து இக்கலவையில் சேர்க்கவும். ஒரு லோஃப் பாத்திரத்தில் இக்கலவையை ஊற்றி நான்கு முதல் ஆறு மணி நேரம் ஃபிரீஸ் செய்யவும். பிறகு ஃபிரீஸ் செய்த இந்தக் கலவையை வில்லைகளாகத் துண்டு போட்டு அதன் மேலே மீதமிருக்கும் சாக்லேட் க்ரீம் குக்கீஸ்களை நொறுக்கிப் போட்டுப் பரிமாறவும். ‘செமி ஃப்ரெடொ’ என்றால் இத்தாலிய மொழியில் பாதியளவு உறையவைத்த கஸ்டர்ட் என்பதாகும்.

உலகின் ஒட்டுமொத்த வெனிலா தயாரிப்புகளில் 75 சதவிகிதம் ஐஸ்க்ரீம் மற்றும் சாக்லேட்டுகளுக்கே பயன்படுத்தப்படுகின்றன.

தேவையானவை:

நுங்கு - 10

தேன் – அரை கப்

செய்முறை:

நுங்கை மேல் தோல் எடுத்துவிட்டு, ஒரு மணி நேரம் ஃபிரீஸரில் வைக்கவும். பின்னர் நுங்கு, தேன் இரண்டையும் ஒன்றாக மிக்ஸியில் அடித்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி மூன்று முதல் நான்கு மணி நேரம் ஃபிரிட்ஜில் ஃபிரீஸ் செய்யவும். பிறகு இதை ஸ்கூப் செய்து பரிமாறவும்

நான்காம் நூற்றாண்டிலேயே விருந்துகளில் ஐஸ்க்ரீம் இடம்பெற்றிருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

தேவையானவை:

நன்கு பழுத்த சப்போட்டா – அரை கிலோ

தேன் – அரை கப்

செய்முறை:

சப்போட்டாவை நன்றாகக் கழுவி, உள்ளிருக்கும் விதைகளை நீக்கிவிட்டு துண்டுகளாக்கவும். பின்னர் இத்துண்டுகளைத் தேனுடன் சேர்த்து மிக்ஸியில் அடித்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி மூன்று முதல் நான்கு மணி நேரம் ஃபிரிட்ஜில் ஃபிரீஸ் செய்யவும். பின்னர் ஸ்கூப் செய்து பரிமாறவும்.

கி.பி 5-ம் நூற்றாண்டில், கிரேக்கர்கள் மற்றும் சீனர்கள் பனிக்கட்டிகளைப் பழங்களுடன் சேர்த்து ருசித்திருக்கின்றனர்.

தேவையானவை:

வெனிலா அல்லது சாக்லேட் ஐஸ்க்ரீம் – அரை லிட்டர்

சாக்லேட் சிப் குக்கீஸ் - 12

செய்முறை:

அடுத்த பக்கத்தில் கொடுத்துள்ள செய்முறையின்படி அரை லிட்டர் வெனிலா அல்லது சாக்லேட் ஐஸ்க்ரீம் செய்து கொள்ளவும். 12 சாக்லேட் சிப் குக்கீஸை எடுத்துக்கொள்ளவும். அதில் 6 குக்கீஸில் ஒவ்வொன்றின் மேலும் ஒரு ஸ்கூப் வெனிலா அல்லது சாக்லேட் ஐஸ்க்ரீம் வைத்து, அதை மற்றொரு குக்கீஸால் லேசாக அழுத்தி மூடவும். இதைக் குறைந்தது இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஃபிரிட்ஜில் ஃபிரீஸ் செய்து பின்னர் பரிமாறவும்.

13-ம் நூற்றாண்டில் இத்தாலியப் பயணி மார்க்கோ போலோ ஐரோப்பாவில் ஐஸ்க்ரீமை அறிமுகப்படுத்தினார்.

தேவையானவை:

பால் – அரை லிட்டர்

ஃபிரெஷ் க்ரீம் - 750 மில்லி

சர்க்கரை - 300 கிராம்

வெனிலா எசென்ஸ் - 2 டீஸ்பூன்

செய்முறை:

பாலோடு க்ரீமை சேர்த்து ஒன்றாகக் காய்ச்சவும். பால் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் சர்க்கரையைச் சேர்த்து மீண்டும் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின்னர் அடுப்பிலிருந்து கீழே இறக்கி வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு ஆறவிடவும். இதுவே வெனிலா ஐஸ்க்ரீம் பேஸ் ஆகும். இந்த பேஸ் வைத்து நீங்கள் பல ஃபிளேவர்கள் உருவாக்கி கொள்ளலாம்.

இந்த வெனிலா பேஸ் கலவையை ஹாண்ட் பீட்டர் கொண்டு ஐந்து முதல் ஆறு நிமிடங்கள் அடித்து அலுமினியப் பாத்திரத்தில் ஊற்றி இரவு முழுவதும் ஃபிரீசரில் வைத்தால் பேஸிக் வெனிலா ஐஸ்க்ரீம் தயார்.

சாக்லேட் ஃபிளேவர் ஐஸ்க்ரீம் செய்ய...

மூன்று டேபிள்ஸ்பூன் அளவுக்குக் குவியலாக கொக்கோ பவுடரை எடுத்து சிறிதளவு வெந்நீரில் கரைத்து அதை வெனிலா ஐஸ்க்ரீம் பேஸில் கலந்து சாக்லேட் ஃபிளேவர் ஐஸ்க்ரீம் செய்யலாம் அல்லது வெனிலா ஐஸ்க்ரீம் பேஸில் ஒரு டீஸ்பூன் சாக்லேட் எசென்ஸ் சேர்க்கலாம்.

ஸ்ட்ராபெரி ஃபிளேவர் ஐஸ்க்ரீம் செய்ய...

வெனிலா ஐஸ்க்ரீம் பேஸில் முக்கால் கப் அரைத்த ஸ்ட்ராபெரிப்பழ விழுதை சேர்த்தால் ஸ்ட்ராபெரி ஃபிளேவர் கிடைத்துவிடும். அப்படி இல்லையென்றால் நேரடியாக ஸ்ட்ராபெரி எசென்ஸும் சேர்க்கலாம்

காபி ஃபிளேவர் ஐஸ்க்ரீம் செய்ய...

இரண்டு டேபிள்ஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி பவுடரை கட்டியில்லாமல் வெனிலா ஐஸ்க்ரீம் பேஸில் கரைத்துவிட்டால் காபி ஃபிளேவர் வந்துவிடும்.

1700-களில் அமெரிக்காவில் ஐஸ்க்ரீம் பிரபலமானது. அங்கே ஐஸ்க்ரீம் தயாரிப்பில் முதலிடத்தில் இருப்பது கலிஃபோர்னியா மாகாணம்

தேவையானவை:

பிரெட் ஸ்லைஸ் - 8

பீனட் பட்டர் - 50 கிராம்

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் – அரை லிட்டர்

செய்முறை:

ஒவ்வொரு பிரெட் ஸ்லைஸ் மீதும் 2 டீஸ்பூன் பீனட் பட்டர் தடவி அதன்மீது ஒரு ஸ்கூப் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் வைத்து மற்றொரு பிரெட் ஸ்லைஸ் கொண்டு மூடவும். ஃபிரிட்ஜில் இரண்டு மணி நேரம் ஃபிரீஸ் செய்து பரிமாறவும்.

1776-ம் ஆண்டு, நியூயார்க் நகரில் முதல் ஐஸ்க்ரீம் பார்லர் திறக்கப்பட்டது

தேவையானவை:

கல்கண்டு சிறியது - 50 கிராம்

ஸ்பாஞ்ச் கேக் ஸ்லைஸ் - 250 கிராம்

வெனிலா ஐஸ்க்ரீம் – அரை லிட்டர்

சிவப்பு, பச்சை, மஞ்சள் ஃபுட் கலர் - தலா சில சொட்டுகள்

செய்முறை:

கல்கண்டை நான்கு பாகங்களாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு கலரை சொட்டு சொட்டாகச் சேர்த்து கலக்கவும். அதை ஒரு மணி நேரம் உலர்த்தவும். பின்னர் ஸ்பாஞ்ச் கேக் ஸ்லைஸ் உள்ளே வெனிலா ஐஸ்க்ரீமை வைத்து அதைக் கல்கண்டு கலவையில் நான்கு புரட்டவும். இப்படிச் செய்வதால் கல்கண்டு, ஐஸ்க்ரீமில் நன்கு ஒட்டிக்கொள்ளும். இதை ஃபிரிட்ஜில் இரண்டு மணி நேரம் ஃபிரீஸ் செய்து பரிமாறவும்.

1851-ம் ஆண்டு, அமெரிக்காவிலுள்ள பாஸ்டன் நகரில் முதன்முதலாகப் பெரிய ஐஸ்க்ரீம் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.

தேவையானவை:

ஸ்வீட் பன் - 4

காபி ஐஸ்க்ரீம் – அரை லிட்டர்

காபி கிளேஸ் செய்ய: ஐசிங் சுகர் கால் கப் + அரை டீஸ்பூன் காபி பவுடர் + ஒரு டேபிள்ஸ்பூன் வெந்நீர்

செய்முறை:

காபி கிளேஸ் செய்ய கொடுத்துள்ளவற்றை ஒன்றாகக் கலந்துக்கொள்ளவும். இதோ காபி கிளேஸ் ரெடி. அடுத்து ஸ்வீட் பன்னை இரண்டாக நறுக்கவும். நறுக்கிய இரண்டு பன்னின் மேலேயும் காபி கிளேஸைத் தடவவும். பிறகு ஒரு பன்னின் மேல் ஒரு ஸ்கூப் காபி ஐஸ்க்ரீம் வைத்து, மற்றொரு பன்னால் லேசாக அழுத்தி மூடவும். பின்னர் இதை ஒரு மணி நேரம் ஃபிரீஸ் செய்யவும்.

குறிப்பு: காபி ஐஸ்க்ரீம் செய்ய நேரம் இல்லையெனில் அரை லிட்டர் வெனிலா ஐஸ்க்ரீம் வாங்கி அதனுடன் 2 டீஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி பவுடர் கலந்து ஃபிரீஸ் செய்யலாம்.

1904-ம் ஆண்டு, செயின்ட் லூயிஸ் என்ற அமெரிக்கரால் ஐஸ்க்ரீம் கோன் உருவாக்கப்பட்டது. உலகிலேயே மிக உயரமான ஐஸ்க்ரீம் கோன் 13 அடி உயரத்தில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது.

தேவையானவை:

பால் – அரை லிட்டர்

சர்க்கரை – முக்கால் கப்

முட்டை மஞ்சள் கரு - 5

ஃபிரெஷ் க்ரீம் - 150 மில்லி

வெனிலா எசென்ஸ் – ஒரு டீஸ்பூன்

ரோஸ் மில்க் எசென்ஸ் – ஒரு டீஸ்பூன்

குல்கந்து – கால் கப்

செய்முறை:

பாலையும் க்ரீமையும் ஒன்றாகச் சேர்த்து காய்ச்சவும். பால் காய்ந்த பின் அடுப்பை அணைத்து காய்ச்சிய பாலில் குல்கந்தைச் சேர்க்கவும். முட்டையின் மஞ்சள் கருவோடு சர்க்கரை சேர்த்து நன்கு நுரைக்க அடிக்கவும். இரண்டு கரண்டி பால் கலவையை முட்டைக்கரைசலில் ஊற்றி இதை மீண்டும் பாலோடு சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் இதை அடுப்பில்வைத்து மிக மிகக் குறைந்த தணலில் கைவிடாமல் கிளறவும். இப்படி கிளறும்போது கலவையானது ஐந்து நிமிடங்களில் கஸ்டர்ட் போல கெட்டியாகி விடும்.

பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி வெனிலா எசென்ஸ் மற்றும் ரோஸ் மில்க் எசென்ஸ் சேர்த்து ஆறவிடவும். ஆறியபிறகு மிக்ஸியில் அல்லது ஹாண்ட் பீட்டர் கொண்டு இதை நன்றாக அடித்து அலுமினியம் பாத்திரத்தில் ஊற்றி ஃபிரீஸ் செய்யவும்.

90 சதவிகித அமெரிக்க வீடுகளிலுள்ள ஃபிரிட்ஜில் எப்போதும் ஐஸ்க்ரீம் இடம்பிடித்திருக்கிறது.

தேவையானவை:

பால் - அரை லிட்டர்

சர்க்கரை - ஒரு கப்

முட்டை மஞ்சள் கரு - 5

ஃபிரெஷ் க்ரீம் - 150 மில்லி

வெனிலா எசென்ஸ் - 2 டீஸ்பூன்

செய்முறை:

பாலையும் க்ரீமையும் ஒன்றாகச் சேர்த்து காய்ச்சவும். காய்ந்த பின் அடுப்பை அணைக்கவும். முட்டை மஞ்சள் கருவோடு சர்க்கரை சேர்த்து நன்கு நுரைக்க அடிக்கவும். இரண்டு கரண்டி பால் கலவையை முட்டைக் கரைசலில் ஊற்றி இதை மீண்டும் பாலோடு சேர்த்து நன்கு கலக்கவும். அடுப்பை பற்றவைத்து மிக மிக குறைந்த தணலில் கைவிடாமல் கிளறவும் ஐந்து நிமிடங்களில் கெட்டியாகிவிடும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி வெனிலா எசென்ஸ் சேர்த்து ஆறவிடவும். மிக்ஸியில் அல்லது ஹாண்ட் பீட்டர் கொண்டு நன்றாக அடித்து ஒரு அலுமினியம் பாத்திரத்தில் ஊற்றி ஃபிரீஸ் செய்யவும்.

குறிப்பு: முட்டையைப் பாலோடு சேர்த்த பின் எக்காரணத்தைக்கொண்டும் கொதிக்க விட்டுவிடக் கூடாது. அப்படி செய்தால் பால் திரிந்து விடும்.

ஜப்பான், மெக்ஸிகோ, கொரியா நாடுகளுக்கு அமெரிக்காவில் இருந்து அதிகளவில் ஐஸ்க்ரீம் ஏற்றுமதி ஆகிறது.

தேவையானவை:

வேகவைத்து அரைத்த பீட்ரூட் விழுது - ஒரு கப்

வடிகட்டிய கெட்டி தயிர் - 2 கப்

சர்க்கரை – அரை கப்

செய்முறை:

சர்க்கரையை பொடித்துக் கொள்ளவும். தயிரோடு சர்க்கரை, பீட்ரூட் விழுது சேர்த்து நன்றாகக் கலந்து சிறு கிண்ணங்களில் ஊற்றி ஃபிரீஸ் செய்து பரிமாறவும்.

அமெரிக்காவில் ஜூலை மாதம் முழுவதுமே ஐஸ்க்ரீம் மாதமாகக் கொண்டாடப்படுகிறது. ஐஸ்க்ரீம் பிரியராக இருந்த அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவரின் ஐடியா இது.

தேவையானவை:

கேரட் நடுத்தர அளவு - 4

சர்க்கரை - 6 டேபிள்ஸ்பூன்

ஏலக்காய் - 3

வடிகட்டிய கெட்டித்தயிர் – ஒன்றரை கப்

பாதாம் பருப்பு - அலங்கரிக்க

செய்முறை:

கேரட்டை வேகவைத்துக் கொள்ளவும். அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து மைய அரைத்து, தயிருடன் நன்கு கலந்து சிறு கிண்ணங்களில் ஊற்றி ஃபிரீஸ் செய்யவும். மேலே நறுக்கிய பாதாம் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

ஒரு ஐஸ்க்ரீம் ஸ்கூப் சராசரியாக 50 முறை நம் நாவினால் சுவைக்கப்படுகிறது.

தேவையானவை:

கண்டன்ஸ்டு மில்க் - 150 கிராம்

பால் – ஒன்றரை கப்

கார்ன்ஃப்ளார் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்

சர்க்கரை – நான்கரை டேபிள்ஸ்பூன்

ஆரஞ்சுப் பழங்கள் - 4 (பெரியது)

செய்முறை:

ஆரஞ்சுப் பழங்களைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். இதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கால்வாசியாக வற்றும் வரை காய்ச்சவும். பின்னர் கீழே இறக்கி நன்கு ஆறவிடவும். பிறகு பால், சர்க்கரை, கண்டன்ஸ்டு மில்க் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துக் காய்ச்சவும். பின்னர் கார்ன்ஃப்ளாரைச் சிறிது தண்ணீரில் கரைத்து இந்தப் பாலில் சேர்த்து கலவை கெட்டியாகும் வரை மிதமான தீயில் கிளறவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி இதனுடன் ஆரஞ்சுச்சாறு கலந்து குல்ஃபி மோல்டுகளில் ஊற்றவும்.

ஆறு முதல் எட்டு மணி நேரம் ஃபிரீஸ் செய்யவும். பரிமாறும் முன்னர் மோல்டை லேசாக வரும் குழாய் தண்ணீரில் காட்டி குல்பியை வெளியே எடுத்து உடனடியாகப் பரிமாறவும்.

குறிப்பு: ஆரஞ்சின் மேல் பகுதியை வட்டமாக நறுக்கி உள்ளிருக்கும் சுளைகளை கவனமாக எடுத்துவிட்டு, பின்னர் அதில் மேற்சொன்ன குல்பி கலவையை ஊற்றி ஃபிரீஸ் செய்தால் ஆரஞ்சு குல்பி,இன்னும் அதிக சுவை கொண்டதாகவும் பார்க்க அழகாகவும் இருக்கும்.

2007-ம் ஆண்டு, புதுடெல்லியில் ஐஸ்க்ரீமுக்காகவே தனி மியூசியம் ஒன்று நிறுவப்பட்டது.

தேவையானவை:

கண்டன்ஸ்டு மில்க் - 200 கிராம்

காய்ச்சிய பால் - 2 கப்

கார்ன்ஃப்ளார் - 2 டேபிள்ஸ்பூன்

சர்க்கரை - 6 டேபிள்ஸ்பூன்

காபி பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்

கொக்கோ பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பால், சர்க்கரை, கண்டன்ஸ்டு மில்க் எல்லாவற்றையும் ஒன்றாகக் காய்ச்சவும். காபி பவுடர், கோக்கோ பவுடர் இரண்டையும் சிறிதளவு கொதிநீரில் கரைத்து பாலில் சேர்க்கவும். கார்ன்ஃப்ளார் மாவையும் சிறிது தண்ணீரில் கரைத்து இந்தப் பாலில் சேர்த்து கலவை கெட்டியாகும் வரை மிதமான தீயில் கிளறவும். பின்னர் குல்ஃபி மோல்டுகளில் ஊற்றி ஃபிரீஸ் செய்து பரிமாறவும்.

உலகில் அதிக அளவில் ஐஸ்க்ரீம் தயாரிக்கும் நாடு சீனா. உலகில் அதிகம் விற்பனையாகும் ஐஸ்க்ரீம் ஃப்ளேவர் வெனிலா.

தேவையானவை:

வேகவைத்த மக்காச்சோள முத்துகள் – 1/3 கப்

கண்டன்ஸ்டு மில்க் - 100 கிராம்

பால் – முக்கால் கப்

சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்

கார்ன்ஃப்ளார் – ஒரு டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒரு சிட்டிகை

செய்முறை:

வேகவைத்த மக்காச்சோள முத்துகளை மிக்ஸியில் போட்டு, மைய அரைத்துக்கொள்ளவும். பால், சர்க்கரை, கண்டன்ஸ்டு மில்க் எல்லாவற்றையும் ஒன்றாகக் காய்ச்சவும். இதனுடன் சோள விழுதையும் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு கார்ன்ஃப்ளவரைச் சிறிது தண்ணீரில் கரைத்து இந்தப் பால் கலவையில் சேர்த்து, கலவை கெட்டியாகும் வரை மிதமான தீயில் கிளறி இறக்கவும். பின்னர் கலவையை குல்ஃபி மோல்டுகளில் ஊற்றி ஃபிரீஸ் செய்யவும். குல்பியைப் பரிமாறும் முன்பு அதன்மேலே மிளகாய்த்தூள் தூவி உடனே பரிமாறவும்.

1776-ம் ஆண்டு, ஐஸ்க்ரீம் என்ற பெயர் ‘ஐஸ்டு க்ரீம்’ ஆகிய வார்த்தைகளிலிருந்து உருவானது.

தேவையானவை:

இளநீர் வழுக்கை - ஒரு கப்

ஸ்ட்ராபெர்ரி பழங்கள் 4

பைனாப்பிள் துண்டுகள் - அரை கப்

ஆரஞ்சுச்சாறு - கால் கப்

சர்க்கரை - அரை கப்

செய்முறை:

இளநீர் வழுக்கையில் சர்க்கரை கலந்து மிக்ஸியில் கூழாக்கிக்கொள்ளவும். இதை மூன்று பங்காகப் பிரித்து தனித்தனி கிண்ணங்களில் வைக்கவும். ஸ்ட்ராபெரி பழங்களை நன்கு மசிக்கவும். பைனாப்பிள் துண்டுகளை அரைக்கவும். ஒவ்வொரு கிண்ணத்திலும் ஒவ்வொரு பழத்தைச் சேர்த்து இளநீர் வழுக்கையோடு நன்கு கலந்து வைக்கவும். ஐஸ்க்ரீம் மோல்டுகளில் முதலில் ஸ்ட்ராபெர்ரி கலவையை ஊற்றி 10 நிமிடங்கள் ஃபிரீஸரில் வைக்கவும். பின்னர் அதனை வெளியில் எடுத்து ஆரஞ்சுக் கலவையை ஊற்றி மீண்டும் 10 நிமிடங்கள் ஃபிரீஸரில் வைக்கவும். கடைசியாக பைனாப்பிள் கலவையை ஊற்றி ஐஸ்க்ரீம் குச்சிகளை கவனமாக செருகி ஃபிரீஸ் செய்யவும். பரிமாறும் முன்னர் மோல்டை லேசாக தண்ணீரில் காட்டி பாப்சிக்களை உடனே பரிமாறவும்.

குறிப்பு: ஸ்ட்ராபெர்ரிக்குப் பதில் மாதுளையும் பைனாப்பிளுக்குப் பதில் மாம்பழமும் உபயோகப்படுத்தலாம்.

உலகிலேயே மிக உயரமான ஐஸ்க்ரீம் செய்து கின்னஸ் சாதனை புரிந்தனர், நார்வே நாட்டிலுள்ள ஐஸ்க்ரீம் வியாபாரிகள். அதன் உயரம், 3.08 மீட்டர் (10.1 அடி)