தமிழர்களின் தினசரி காலை உணவில் இட்லிக்கு மிக முக்கியமான இடம் உண்டு. சாப்பிட்டவுடன் எளிதில் ஜீரணமாகி, உடலுக்கு நன்மை விளைவிக்கும் உணவு இது என்றாலும் தினமும் இட்லி என்றால் சாப்பிடுபவர்களுக்கு அது ஒருவித அலுப்பைத் தந்துவிடும். அந்தப் பிரச்னை இனி உங்களுக்கு வராது. இதோ... பனீர் இட்லி, ராமசேரி இட்லி, கடலைப்பருப்பு இட்லி, கர்நாடகா இட்லி என்று விதவிதமான இட்லி ரெசிப்பிகளை உங்களுக்காக அளித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் பிரியா. பிறகென்ன... தினம் ஒருவகை இட்லியைச் செய்துகொடுத்து குடும்பத்தை அசத்தலாம்தானே!

தேவையானவை:

பச்சரிசி - ஒரு கப்

இட்லி அரிசி - ஒரு கப்

உளுத்தம்பருப்பு - கால் கப்

வெந்தயம் - சிறிதளவு

சாதம் - அரை கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசி, இட்லி அரிசி இரண்டையும் மூன்று முதல் நான்கு மணி நேரம்வரை ஊறவைத்து அரைக்கவும். இதனுடன் சாதத்தையும் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். உளுத்தம்பருப்பு, வெந்தயம் இரண்டையும் ஒன்றாக ஊறவைத்து தனியாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் அரைத்துவைத்துள்ள அரிசி மாவு மற்றும் உளுந்து மாவு ஆகிய எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். பின்பு இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து முதல் நாள் இரவு ஊறவைக்கவும். பின்பு மறுநாள் இட்லிகளாக ஊற்றவும்.

இட்லி தயாரிக்கும் முறை:

வாய் அகன்ற சிறிய மண்பானை ஒன்றை எடுத்துக்கொள்ளவும். அதில் பாதியளவு நீர் நிரப்பி, பானையின் வாயில் ஈரப்படுத்திய இட்லி துணியைக் கட்டவும். பின்பு அதில் மாவை ஊற்றி அடுப்பில் வைத்து மூடி போட்டு வேகவைக்கவும். சிறிது நேரம் கழித்து கத்தியால் இட்லியை லேசாகக் குத்திப்பார்க்கவும். மாவு கத்தியில் ஒட்டாமல் இருந்தால் இட்லி வெந்துவிட்டது என்று அர்த்தம். இப்போது லேசாக நீர் தெளித்து துணியில் இருக்கும் இட்லியை எடுக்கவும். சட்னி, சாம்பாருடன் சூடாகப் பரிமாறவும்.

காலங்காலமாக நாம் இட்லியை பிரதான உணவாகச் சாப்பிட்டு வந்தாலும், அதன் பூர்விகம் இந்தியா கிடையாது!

தேவையானவை:

பச்சரிசி - ஒரு டம்ளர்

உளுத்தம்பருப்பு – கால் டம்ளர்

வெந்தயம் - சிறிதளவு

மிளகு - கால் டீஸ்பூன்

சீரகம் - கால் டீஸ்பூன்

சுக்குப்பொடி - சிறிதளவு அல்லது பொடியாக நறுக்கிய ஒரு இஞ்சித்துண்டு

பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதளவு

முந்திரி உடைத்தது - 3 டீஸ்பூன்

நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியைத் தனியாகவும், வெந்தயம், உளுத்தம்பருப்பைத் தனியாகவும் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு ஊறவைத்த உளுத்தம்பருப்பை நன்றாக அரைத்துக்கொள்ளவும். ஊறவைத்த பச்சரிசியை நான்கு மணி நேரம் கழித்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி அல்லது சுக்குப்பொடி, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இதை அரைத்துவைத்திருக்கும் மாவில் கலக்கவும் நீளமான டம்ளரின் உள்ளே எண்ணெய் அல்லது நெய் தடவிய வாழையிலையைச் சுற்றி வைக்கவும். பின்பு அரைத்துவைத்துள்ள மாவை அதில் ஊற்றவும். பின்பு முந்திரி பருப்பை அதன்மேல் தூவி விடவும். இட்லி பானை அல்லது குக்கரில் டம்ளரை வைத்து 15 நிமிடங்கள் வேகவைத்து பின்பு எடுக்கவும். காஞ்சிபுரம் இட்லி தயார்.

இந்தோனேசியாவில் இட்லியை `கெட்லி’ (Kedli) என்கிறார்கள். அதுதான், `இட்லி’ என மருவியது என்று கூறப்படுகிறது.

தேவையானவை:

இட்லி அரிசி - ஒரு கப்

சாமை - ஒரு கப்

திணை - ஒரு கப்

வரகு - ஒரு கப்

உளுத்தம்பருப்பு - முக்கால் கப்

வெந்தயம் - கால் டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இட்லி அரிசி, சாமை, திணை, வரகு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும். உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயம் ஆகிய இரண்டையும் தனியாக ஊற வைக்கவும். பின்பு இட்லி மாவுக்கு அரைப்பது போல் அரிசி,சாமை,திணை,வரகு ஆகியவற்றைத் தனியாகவும் உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைத் தனியாகவும் அரைக்கவும். இரண்டு மாவையும் ஒன்றாகச் சேர்த்து உப்புப் போட்டுக் கலக்கி எட்டு மணி நேரம் கழித்து இட்லிகளாக ஊற்றவும்.

கன்னட மக்கள் பயன்படுத்திய `இல்லாலிகே’ என்ற உணவுதான் ‘இட்லி’ என்று சொல்வோரும் உண்டு.

தேவையானவை:

கடலைப்பருப்பு - முக்கால் கப்

துவரம்பருப்பு - அரை கப்

இட்லி அரிசி - ஒரு கப்

பச்சரிசி - ஒரு கப்

உளுத்தம்பருப்பு - அரை கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பருப்பு வகைகளையும் அரிசியையும் உளுத்தம்பருப்பையும் தனித்தனியாக இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பை தேவையான தண்ணீர்விட்டு கொரகொரப்பாக அரைக்கவும். இட்லி அரிசி மற்றும் பச்சரிசியையும் மைய அரைத்துக்கொள்ளவும். ஊறவைத்த உளுத்தம்பருப்பையும் நன்றாக அரைத்து, அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து உப்பு போட்டு நன்றாகக் கலக்கவும். பின்னர் இட்லிகளாக ஊற்றவும்.

குறிப்பு:

விருப்பமெனில் மாவில் தாளிப்பு சேர்த்தும் இட்லிகளாக ஊற்றலாம்.

இட்லியின் சில அவதாரங்கள்: புளிக்க வைக்கப்படாத மாவில் ‘டோக்ளா’ (குஜராத்), புளிக்கச் செய்து கள் சேர்த்து, சிறிது இனிப்புடன் ‘வட்டப்பம்’ (கேரளம்), ‘சன்னாஸ்’ (மங்களூரு).

தேவையானவை:

ஜவ்வரிசி - கால் கப்

இட்லி அரிசி - 2 கப்

உளுத்தம்பருப்பு - அரை கப்

ஆமணக்கு விதை – இரண்டு அல்லது மூன்று (ஆமணக்கு விதை கிடைக்கவில்லையென்றால் கால் டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்க்கலாம்.)

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஜவ்வரிசி, இட்லி அரிசி இரண்டையும் தனித்தனியாக ஊறவைக்கவும். உளுந்தையும் ஆமணக்கு விதையையும் ஒன்றாக ஊறவைக்கவும். ஆரு மணி நேரம் ஊறிய பின்னர் ஜவ்வரிசி, இட்லி அரிசி, இரண்டையும் ஒன்றாகச்சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பின்பு உளுத்தம்பருப்பு, ஆமணக்கு கலவையை அரைத்துக்கொள்ளவும். பின்னர் எல்லா மாவையும் ஒன்றாகச் சேர்த்து உப்புப் போட்டு நன்கு கலந்து வைக்கவும். மாவு எட்டு மணி நேரம் புளித்த பின்பு மாவை இட்லிகளாக ஊற்றவும்.

குறிப்பு:

ஆமணக்கு விதை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். ஆமணக்கு விதை கிடைக்கவில்லையெனில் அரைத்த எல்லா மாவையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கும்போது கால் டீஸ்பூன் விளக்கெண்ணெயைச் சேர்த்துக் கலக்கவும்.

அரிசியை அரைக்கும்போது சிறிது அவல் சேர்த்தால், இட்லி பூப்போன்று இருக்கும். உளுந்து அரைக்கும்போது அதிகப்படியான தண்ணீர் ஊற்றக் கூடாது.

தேவையானவை:

அவல் - அரை கப்

ஜவ்வரிசி - அரை கப்

இட்லி அரிசி - ஒரு கப்

உளுத்தம்பருப்பு - கால் கப்

வெந்தயம் - கால் டீஸ்பூன்

எண்ணெய் அல்லது நெய் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அவல், ஜவ்வரிசி இரண்டையும் நன்கு கழுவி தனித்தனியாக ஊற வைக்கவும். பின்னர் அரிசியைத் தனியாகவும் வெந்தயம், உளுந்து இரண்டையும் தனியாகவும் ஊறவைக்கவும். ஒரு மணி நேரம் ஊறிய பின்பு ஊறவைத்த அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மைய அரைக்கவும். பின்பு உப்பு சேர்த்து கலக்கி மாவை எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும். பின்னர் சிறிய கிண்ணங்களில் எண்ணெய் அல்லது நெய் தடவி, அவற்றில் மாவை முக்கால் கிண்ணம் அளவுக்கு ஊற்றவும். பின்னர் அவற்றை இட்லிப்பாத்திரத்தில் வைத்து 10-ல் இருந்து 12 நிமிடங்கள்வரை வேகவிட்டு எடுக்கவும். சூடு ஆறிய பின்பு சிறிய கரண்டி உதவியோடு கிண்ணங்களில் இருக்கும் இட்லிகளை எடுத்துப் பரிமாறவும்.

குக்கர் இட்லியைவிட, இட்லித் தட்டில் துணி விரித்து ஆவியில் வேகவைக்கும் இட்லியின் சுவை சிறப்பு!

தேவையானவை:

பனீர் - 150 கிராம்

கடலை மாவு - அரை கப்

ரவை - அரை கப்

தயிர் - ஒரு கப்

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 10

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

பச்சைப்பட்டாணி – 10 அல்லது 15 (எண்ணிக்கையில்)

கடுகு உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

கடலை மாவு, ரவை இரண்டையும் தயிர், உப்பு சேர்த்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். பின்பு இதனுடன் பனீரை துருவி சேர்த்துக்கொள்ளவும். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், கொத்தமல்லி மற்றும் பச்சைப்பட்டாணி சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இதைத் தயாரித்துவைத்துள்ள மாவில் போட்டு நன்றாகக் கலக்கவும். இட்லித் தட்டில் எண்ணெய் அல்லது நெய் தடவி மாவை இட்லிகளாக ஊற்றி 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுத்தால் சுவையான பனீர் இட்லி தயார்.

குறிப்பு:

விருப்பப்பட்டால் பச்சைப்பட்டாணியைத் தவிர மற்ற காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

தினம் இரு வேளை இட்லி சாப்பிடுபவர்கள், அதில் ஒரு வேளைக்கு அரிசிக்குப் பதில், சிறுதானியங்களை உளுந்துடன் சேர்த்து அரைத்து ஊட்டச்சத்து இட்லியாக்கலாம்.

தேவையானவை:

அவல் - ஒரு கப்

பச்சரிசி - ஒரு கப்

இட்லி அரிசி - ஒரு கப்

தயிர் - ஒரு கப்

உளுத்தம்பருப்பு - கால் கப்

வெந்தயம் - கால் டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அவலை தயிருடன் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பச்சரிசி, இட்லி அரிசியை ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். உளுத்தம்பருப்பு, வெந்தயம் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு ஊறவைத்துள்ள அவலையும் தயிரையும் ஒன்றாக அரைக்கவும். ஊறவைத்த அரிசியைத் தனியாக அரைக்கவும். ஊறவைத்த உளுத்தம்பருப்பு, வெந்தயத்தை ஒன்றாக அரைக்கவும். அரைத்த அனைத்தையும் ஒன்றின்பின் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலக்காமல் அப்படியே வைக்கவும். இரவு முழுவதும் அப்படியே ஊறவிட்டு பின்பு காலையில் இதனுடன் உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து இட்லி ஊற்றுவதுபோல் ஊற்றவும்.

ஓர் இட்லியில் 85 கலோரிகள் உள்ளது. இதில் சராசரியாக 2 கிராம் புரதம், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் அடங்கியுள்ளது.