ஒரு ‘மக்’கை வைத்துக்கொண்டு அதிகபட்சமாக என்ன செய்துவிட முடியும்... காபி அல்லது தேநீர் பருகலாம். இல்லை யென்றால் சில்லென்று ஜூஸ் அருந்தலாம். அப்படித்தானே?

உங்களிடம் மைக்ரோவேவ் அவனும், கூடவே அதில் பயன்படுத்த பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ‘மக்’(Mug)-ம் இருந்தால் சில நிமிடங்களிலேயே கேக், ஃப்ரைடு ரைஸ், சூப், ஆம்லெட் என்று விதவிதமாகத் தயாரித்துவிடலாம் என்கிறார் கனடாவில் வசிக்கும் சமையற் கலைஞர் ப்ரியா சதீஷ். இவரது கைவண்ணத்தில் உருவான டேஸ்ட்டி & வெரைட்டி ‘மக்’ ரெசிப்பிகள் இதோ!

தேவையானவை:

பீநட் பட்டர் – 3 டேபிள்ஸ்பூன்

சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்

முட்டை – ஒன்று

உலர்திராட்சை – 5 அல்லது 6

பொடியாக நறுக்கிய முந்திரி – சிறிதளவு

செய்முறை:

ஒரு மக்கில் முட்டையை உடைத்துச் சேர்க்கவும். இத்துடன் சர்க்கரையைச் சேர்த்து ஒரு முட்கரண்டியால் கலவையை நன்கு அடித்துக்கொள்ளவும். பிறகு இதனுடன் பீநட் பட்டரையும் சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு இக்கலவையில் பொடியாக நறுக்கிய முந்திரி, உலர் திராட்சையைச் சேர்க்கவும். பின்னர் `மக்’கை மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் வைத்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு:

கலவையை மைக்ரோவேவ் அவனில் வைத்து எடுக்கும் நேரம், நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் ‘மக்கின் அளவைப் பொறுத்தும், நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் பொருள்களின் அளவைப் பொறுத்தும் மாறுபடும். எனவே, அதற்கேற்ப `மக்’கை மைக்ரோவேவ் அவனில் வைக்கும் நேரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும்.

பீநட் பட்டரில் புரதம், மெக்னீசியம், செலினியம், பொட்டாசியம், கால்சியம், செம்பு, இரும்பு, மற்றும் பி வைட்டமின்கள் அடங்கியுள்ளன.

தேவையானவை:

சாதம் – அரை கப்

பொடியாக நறுக்கிய குடமிளகாய் –

2 டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் –

ஒரு டேபிள்ஸ்பூன்

முட்டை – ஒன்று

சோயா சாஸ் – அரை டீஸ்பூன்

வெங்காயப்பொடி, பூண்டுப்பொடி – தலா

கால் டீஸ்பூன்

இத்தாலியன் சீஸனிங் – அரை டீஸ்பூன்

ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகு –

அரை டீஸ்பூன்

செடார் சீஸ் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

மைக்ரோவேவில் வைத்துப்பயன்படுத்தும் `மக்’கில் சமைத்த சாதம், பொடியாக நறுக்கிய குடமிளகாய், வெங்காயத்தாள் ஆகியவற்றைச் சேர்க்கவும். இதை மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும். இதற்கிடையில் ஒரு பவுலில் முட்டையை உடைத்துச் சேர்க்கவும். இதனுடன் சோயா சாஸைச் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும். பின்னர் இதில் வெங்காயப்பொடி, பூண்டுப்பொடி, இத்தாலியன் சீஸனிங், ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.இக்கலவையை `மக்’கில் வைத்திருக்கும் சாதக் கலவையுடன் சேர்த்து நன்கு கிளறிவிடவும். பின்னர் `மக்’கை மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும். பின்னர் `மக்’கில் இருக்கும் சாதக் கலவையின்மேல் செடார் சீஸைத் தூவி மறுபடியும் 30 விநாடிகள் வைத்து எடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.

குடமிளகாயில் வைட்டமின் சி சத்து அதிகமுள்ளது. ஏ, ஈ, பி6 வைட்டமின்களும் இதில் உள்ளதால் உடல்நலத்துக்கு உகந்தது.

தேவையானவை:

தக்காளி ப்யூரி – 4 டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய இஞ்சி – சிறிதளவு

சோள முத்துகள் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்

பூண்டுப்பொடி – சிறிதளவு

சுக்கு – சிறிதளவு

வெஜிடபிள் ஸ்டாக் அல்லது சிக்கன் ஸ்டாக் – அரை கப்

உலர் ஒரிகானோ – ஒரு சிட்டிகை

உலர் பேஸில் இலைகள் – ஒரு சிட்டிகை

உலர் பார்ஸ்லி இலைகள் – ஒரு சிட்டிகை

பர்மேசன் சீஸ் பவுடர் – ஒரு டீஸ்பூன் (பாஸ்தா, பிட்சா, சூப் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் பிரத்யேக சீஸ் பவுடர் இது)

செய்முறை:

பர்மேசன் சீஸ் பவுடரைத் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒரு `மக்’கில் ஒன்றாக எடுத்துக்கொள்ளவும். பின்னர் `மக்’கை மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும். பின்னர் `மக்’கில் இருக்கும் கலவையை நன்கு கலந்துவிட்டு அதில் பர்மேசன் சீஸ் பவுடரைச் சேர்த்து மறுபடியும் மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும். பொரித்த பிரெட் துண்டுகளுடன் பரிமாறவும்.

குறிப்பு: கொதிக்கும் நீரில் தக்காளியைப் போட்டு ஓரிரு நிமிடங்கள் வேகவிட்டு பின்பு அதன் தோலை உரித்து எடுத்துவிட்டு தக்காளி ப்யூரி செய்யலாம். தக்காளியை முக்கிய உணவுப் பொருளாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட பாஸ்தா சாஸையும் பயன்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல் இந்த சூப்பில் வேகவைத்த பாஸ்தாவையும் சேர்க்கலாம்.

தக்காளியின் தாயகம் தென் அமெரிக்கா, நடு அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் தென் பகுதியாகும். குறிப்பாக பெரு, மெக்ஸிகோவில் இருந்து அர்ஜெண்டைனா வரையான பகுதி.

தேவையானவை:

தோல் நீக்கப்பட்டு பொடியாக நறுக்கிய ஆப்பிள் – அரை கப்

பொடித்த வெல்லம் – ஒன்றரை டேபிள்ஸ்பூன் + ஒரு டீஸ்பூன்

பொடித்த லவங்கப்பட்டை – கால் டீஸ்பூன்

வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

காய்ச்சிய பால் - 2 டேபிள்ஸ்பூன்

மைதா - 3 டேபிள்ஸ்பூன்

வெனிலா எசென்ஸ் – கால் டீஸ்பூன்

பேக்கிங் பவுடர் – கால் டீஸ்பூன்

மேப்பிள் சிரப் - அலங்கரிக்க

செய்முறை:

ஒரு `மக்’கில் பொடியாக நறுக்கிய ஆப்பிளைச் சேர்க்கவும். இதனுடன் பொடித்த லவங்கப்பட்டை மற்றும் ஒரு டீஸ்பூன் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து மைக்ரோவேவ் அவனில் 30 விநாடிகள் வைத்து எடுத்து நன்கு கலந்து கொள்ளவும்.பின்னர் இதனுடன் மீதமுள்ள தேவையான எல்லாப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து மறுபடியும் `மக்’கை மைக்ரோவேவ் அவனில் வைத்து ஒரு நிமிடம் கழித்து எடுக்க வும். பின்னர் மேப்பிள் சிரப்பால் அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு:

ஐஸ்க்ரீமுடன் சேர்த்தும் இதைப் பரிமாறலாம்.

ஆப்பிள் முதலில் மத்திய ஆசியாவில்தான் பயிரிடப்பட்டது. இப்போது உலகின் எல்லாவிதமான குளிர்ப்பகுதிகளிலும் வளர்க்கப் படுகிறது.

தேவையானவை:

நடுத்தர அளவிலான வாழைப்பழம் – ஒன்று

முட்டை – ஒன்று

பாதாம் பவுடர் – 4 டேபிள்ஸ்பூன்

சர்க்கரை – ஒன்றரை டேபிள்ஸ்பூன்

சூரியகாந்தி விதைகள் அல்லது பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு - 5 அல்லது 6

செய்முறை:

ஒரு `மக்’கில் வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ளவும். பின்னர் அதை ஒரு முட்கரண்டியின் உதவியோடு கட்டிகள் இல்லாமல் நன்கு மசித்துக்கொள்ளவும். பிறகு இதனுடன் முட்டையைச் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும். பின்பு இதில் பாதாம் பவுடர், சர்க்கரை மற்றும் முந்திரிப்பருப்புத் துண்டுகளைச் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் `மக்’கை மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும். ஐஸ்க்ரீமுடன் பரிமாறவும்.

பழங்காலத்தில் வாழைப்பழம் விரல் நீளமே இருந்திருக்கிறது. அரபு மொழியில் பனானா என்றால் விரல் என்று பொருள். அதனால்தான் இந்தப் பெயர்.

தேவையானவை:

மைதா – 2 டேபிள்ஸ்பூன்

பேக்கிங் பவுடர் – கால் டீஸ்பூன்

சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன் + ஒரு டீஸ்பூன்

கோக்கோ பவுடர் – 2 டீஸ்பூன்

காய்ச்சிய பால் – 2 டேபிள்ஸ்பூன்

வெனிலா எசென்ஸ் – கால் டீஸ்பூன்

எண்ணெய் – முக்கால் டீஸ்பூன்

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

ஒரு `மக்’கில் பாலை எடுத்துக்கொள்ளவும். பின்னர் அதனுடன் எண்ணெய் மற்றும் வெனிலா எசென்ஸைச் சேர்க்கவும். ஒரு முட்கரண்டியால் இக்கலவையை நன்கு கலந்து, இதனுடன் பேக்கிங் பவுடர், சர்க்கரை, கோக்கோ பவுடர் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் `மக்’கை மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும். பின்னர் சூடாகப் பரிமாறவும்

கோக்கோ பயிர் அமெரிக்கப் பிராந்தியத்தின் அடர்த்தியான வெப்ப மண்டலத்தைத் தாயகமாகக் கொண்டது.

தேவையானவை:

இட்லி மாவு – அரை கப்

நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - அரை டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய மஞ்சள் அல்லது சிவப்பு குடமிளகாய் - ஒரு டேபிள்ஸ்பூன்

இட்லி மிளகாய்ப்பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்

துருவிய இஞ்சி - அரை டீஸ்பூன்

செடார் சீஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

ஒரு `மக்’கில் எண்ணெய், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள், குடமிளகாய் மற்றும் இஞ்சித்துருவல் ஆகியவற்றைச் சேர்க்கவும். பின்னர் இதனுடன் இட்லி மாவு மற்றும் தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கலவையை நன்கு கலக்கவும். பின்னர் இதன்மேலே இட்லி மிளகாய்ப்பொடி மற்றும் செடார் சீஸைத் தூவவும். பின்னர் `மக்’கை மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் வைத்து உடனடியாகப் பரிமாறவும்.

குறிப்பு:

மைக்ரோவேவ் அவனின் வெப்பநிலையைப் பொறுத்து உணவானது வேகும் நேரம் அமையும் என்பதால், இட்லி சரியாக வேகவில்லை என்றால் மைக்ரோவேவ் அவனில் இன்னுமொரு 30 விநாடிகள் வைத்திருந்து `மக்’கை எடுக்கவும். அதேபோல பிளெயின் இட்லியை `மக்’கில் தயாரிக்க நினைத்தால் `மக்’கில் சிறிது எண்ணெய் தடவி அதில் ஒரு கரண்டி இட்லி மாவை அதில் ஊற்றவும். அதன் பின்னர் `மக்’கை 40 விநாடிகள் முதல் ஒரு நிமிடம்வரை மைக்ரோவேவ் அவனில் வைத்து எடுக்கவும். அதேபோல மைக்ரோவேவ் அவனில் இருந்து எடுத்தவுடனேயே இட்லியைப் பரிமாறிவிடவும்.

நல்லெண்ணெய் இந்திய மருத்துவ முறைகளில் பல விதங்களில் பயன்படுகிறது. எதிர் ஆக்சிகரணியாகச் செயல்பட்டு ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

தேவையானவை:

ஸ்பகட்டி குச்சிகள் – 10 (சிறிய துண்டுகளாக உடைத்துக்கொள்ளவும்)

தண்ணீர் – அரை கப்

பொடியாக நறுக்கிய குடமிளகாய் –

ஒரு டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் –

அரை டீஸ்பூன்

தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன்

ஹெவி க்ரீம் – ஒரு டீஸ்பூன் (விருப்பமெனில்)

முட்டை – 2 அல்லது 3

செம்மறியாட்டின் பாலிலிருந்து பெறப்படும் (Feta Cheese) அல்லது ஏதேனும் ஒரு துருவிய சீஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

துருவிய சீஸ் – அலங்கரிக்க

செய்முறை:

ஒரு `மக்’கில் உடைத்த ஸ்பகட்டி குச்சிகளை போடவும். அதனுடன் தண்ணீர் சேர்த்து மைக்ரோவேவ் அவனில் இரண்டு நிமிடங்கள் வைத்து எடுக்கவும். பின்னர் ஒரு மூன்று நிமிடங்கள் கழித்து மறுபடியும் `மக்’கை இரண்டு நிமிடங்கள் மைக்ரோவேவ் அவனில் வைக்கவும். அல்லது `மக்’கில் உள்ள ஸ்பகட்டியானது தண்ணீரை முழுமையாக உறிஞ்சும் வரை மைக்ரோவேவ் அவனில் வைத்து எடுக்கவும். பிறகு இதனுடன் மீதமுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும். மறுபடியும் `மக்’கை மைக்ரோவேவ் அவனில் வைத்து ஒன்றரை நிமிடங்கள் கழித்து எடுக்கவும். கலவையின் மேலே துருவிய சீஸ் தூவி சூடாகப் பரிமாறவும்.

காயங்களைக் குணப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும் துத்தநாகம், முட்டையில் உள்ளது.

தேவையானவை:

பிரெட் துண்டுகள் – 2 அல்லது 3 (`மக்’கின் அளவுக்கேற்ப)

வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

முட்டை – ஒன்று

காய்ச்சிய பால் – கால் கப்

லவங்கப்பட்டை – ஒரு சிட்டிகை

மேப்பிள் சிரப் – கால் கப்

உலர்திராட்சை – அலங்கரிக்க

செய்முறை:

பிரெட்களில் வெண்ணெய் தடவி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பவுலில் முட்டையை உடைத்துச் சேர்க்கவும். இத்துடன் பால், பொடித்த லவங்கப்பட்டை, பாதியளவு மேப்பிள் சிரப் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் ஒரு ‘மக்’கில் வெண்ணெய் தடவிய பிரெட் துண்டுகளை எடுத்துக்கொள்ளவும். அதன் மீது கலந்துவைத்திருக்கும் முட்டைக் கலவையை ஊற்றி நன்கு கிளறிவிடவும். பிறகு ‘மக்’கை மைக்ரோவேவ் அவனில் ஒன்றரை நிமிடங்கள் வைத்து எடுக்கவும். இதன்மேல் திராட்சைகளைத் தூவி அதன் மீத் மீதமுள்ள மேப்பிள் சிரப்பை ஊற்றி அலங்கரிக்கவும். உடனே பரிமாறவும்.

குறிப்பு:

பழத்துண்டுகள், சாக்கோ சிப்ஸ் மற்றும் ஐஸ்க்ரீம் போன்றவற்றால் அலங்கரித்தும் இதைப் பரிமாறலாம்.

அதிக அளவு வெண்ணெய் பயன்படுத்துவோர் பட்டியலில் பிரான்ஸ் மக்கள் முதலிடம் பெறுகிறார்கள்.

தேவையானவை:

எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

சீரகம் – அரை டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

பொடியாக நறுக்கிய இஞ்சி – அரை டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – அரை டீஸ்பூன் முதல் ஒரு டீஸ்பூன் வரை

பொடியாக நறுக்கிய வெங்காயம் –

2 டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய தக்காளி –

ஒரு டேபிள்ஸ்பூன்

வறுத்த சேமியா – அரை கப்

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – அரை கப்

கொத்தமல்லி – அலங்கரிக்க

செய்முறை:

ஒரு `மக்’கில் எண்ணெய், உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். பின்னர் இதை மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும். பின்பு இதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சேர்க்கவும். பின்னர் இதை மைக்ரோவேவ் அவனில் 30 விநாடிகள் வரை வைத்து எடுக்கவும். இதனுடன் வறுத்த சேமியா, தேவையான தண்ணீர் மற்றும் தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். கலவையை நன்கு கலந்து மறுபடியும் இதை மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் வைத்து வெளியே எடுக்கவும். பின்னர் `மக்’கைச் சில நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு மேலே கொத்தமல்லி தூவி, சட்னியுடன் பரிமாறவும்.

100 கிராம் சேமியாவில் 331 கலோரி ஆற்றல் கிடைக்கும். இதில் கால்சியமும் இரும்புச்சத்தும் ஓரளவு காணப்படுகிறது.