``மழையின் சாரலுக்கும் மாலை நேர தேநீருக்கும் நம் அனைவரின் மனம் நாடுவது இளஞ்சூட்டோடு கூடிய இதமான பக்கோடாவைத்தானே? விருந்தினர்களின் வருகையின்போதும், குழந்தைகளின் சிணுங்கலின்போதும் இல்லத்தரசிகளின் மெனுவில் இடம்பெறுவதும் பக்கோடாதான். ஒரு சில பொருள்களை வைத்துக்கொண்டே சுலபமாகத் தயாரித்துவிடக்கூடிய பக்கோடாவால் குடும்பத்தினரையும் உறவினர்களையும் மகிழ்ச்சியடைய செய்ய முடியும். உடலுக்குச் சத்தும் மனத்துக்கு உற்சாகமும் அளிக்கும் சில பக்கோடா வகைகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மனநிறைவு கொள்கிறேன்’’ என்று கூறும் எர்ணாகுளத்தைச் சேர்ந்த சமையற்கலைஞர் இளவரசி வெற்றி வேந்தன், பாலக் பக்கோடா, சோயா பக்கோடா, பாப்கார்ன் பக்கோடா, காளான் பக்கோடா என அழகிய படங்களுடன் வெரைட்டியாக வழங்கி அசத்துகிறார்.

பக்கோடா சுவை பரவட்டும்!

தேவையானவை:

பாசிப்பருப்பு - ஒரு கப்

சின்ன வெங்காயம் - 150 கிராம்

நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 3 (நறுக்கவும்)

கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

சோம்பு - கால் டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - ஒன்று

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து வைக்கவும். பிறகு பாசிப் பருப்பு, உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, சோம்பு சேர்த்து நன்றாகப் பிசிறிக்கொள்ளவும். மாவை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாகக் கிள்ளிப்போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு:

பாசிப்பருப்பை அரைக்கும்போது முற்றிலுமாக தண்ணீரை வடித்தபின் அரைக்கவும். தண்ணீர் பதத்துடன் இருந்தால் எண்ணெய் அதிகமாக இழுக்கும்.

புரதச்சத்துடன் வைட்டமின்கள், கால்சியம், நார்ச்சத்து ஆகியவையும் பாசிப்பருப்பில் நிரம்பியிருக்கின்றன.

தேவையானவை:

பாலக்கீரை - ஒரு கப்

வெங்காயம் - ஒன்று

கடலை மாவு - ஒரு கப்

அரிசி மாவு - 3 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 4 (நறுக்கவும்)

நெய் - ஒரு டீஸ்பூன்

பாலக்கீரையைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தை சிப்ஸ் சீவும் பலகையில் மெலிதாக சீவிக்கொள்ளவும். நெய்யை உருக்கிக்கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பாலக் கீரை, வெங்காயம், உருக்கிய நெய் சேர்த்து நன்றாகப் பிசிறிக்கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து, அதில் பிசிறிய மாவை பக்கோடாக்களாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு:

பாலக்கீரையில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் பக்கோடாவுக்குத் தண்ணீர் தேவைப்படாது, பாலக்கீரையின் நீரே போதுமானது.

ரத்த விருத்தி செய்யும் ஆற்றல் பாலக்கீரைக்கு உண்டு. ரத்தச் சோகையுள்ளவர்கள் பாலக்கீரை உட்கொள்வதால் நிவாரணம் பெற முடியும்.

தேவையானவை:

ஜவ்வரிசி - ஒரு கப்

வேகவைத்த உருளைக்கிழங்கு - ஒன்று (பெரியது)

சர்க்கரை - அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 7 (நறுக்கவும்)

மிளகாய்த்தூள் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:-

முதலில் ஜவ்வரிசியைக் குறைந்தது மூன்று மணி நேரம் ஊறவைத்து, நீரை வடிகட்டி வைத்துக்கொள்ளவும். பின்னர் ஜவ்வரிசியுடன் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, அரிசி மாவு, நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், சர்க்கரை, கொத்தமல்லித்தழை, உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும். பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

இதை தக்காளி சாஸுடன் பரிமாறலாம்.

ஜவ்வரிசியில் அதிக அளவில் கார்போஹைட்ரேட்டும் குறைந்த அளவில் கொழுப்பும் உள்ளது.

தேவையானவை:

கடலை மாவு – 200 கிராம்

வெங்காயம் – 50 கிராம்

முருங்கையிலை – 2 கைப்பிடி அளவு

பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்)

நெய் – ஒரு டீஸ்பூன்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். நெய்யை உருக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கையிலை, சோம்பு, உருக்கிய நெய், உப்பு ஆகியவற்றை சேர்த்து, கடலை மாவையும் சேர்த்து நீர் தெளித்து கையால் நன்றாகக் கலக்கவும். மாவு உதிரியாக இருக்க வேண்டும். தண்ணீர் அதிகம் சேர்க்கக் கூடாது. ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயக் கலவையை உதிரி உதிரியாகப் போடவும். பொன்னிறமாக சிவந்து வரும் வரை பொரித்தெடுக்கவும்.

உடல் வலிகளுக்கு நிவாரணம் அளிக்கும் தன்மை முருங்கைக்கீரைக்கு உண்டு.

தேவையானவை:

பொட்டுக்கடலை மாவு - ஒரு கப்

அரிசி மாவு - முக்கால் கப்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

வெங்காயம் - ஒன்று

பச்சை மிளகாய் - ஒன்று

கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

சோம்பு - கால் டீஸ்பூன்

முந்திரிப்பருப்பு - சிறிதளவு

நெய், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக சீவிக்கொள்ளவும். பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித்தழையைப் பொடி யாக நறுக்கிக்கொள்ளவும். நெய்யைச் சூடாக்கி முந்திரிப்பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் அகலமான பாத்திரத்தில் பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை, சோம்பு, இளஞ்சூடான நெய்யுடன் முந்திரிப்பருப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை நன்றாகக் கலந்துகொள்ளவும். பின்னர் சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். உங்களுக்கு விருப்பமான அளவில் உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். மொறுமொறு பட்டணம் பக்கோடாவைச் சூடாக தேங்காய்ச் சட்னியுடன் சேர்த்துப் பரிமாறலாம்.

பொட்டுக்கடலையில் இருக்கும் புரதங்களும் இதர சத்துகளும் நமது உடலில் நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கின்றன.

தேவையானவை:

சோயா உருண்டைகள் (சோயா சங்ஸ்) - அரை கப்

கடலைப்பருப்பு - அரை கப்

பாசிப்பருப்பு - அரை கப்

சின்ன வெங்காயம் - 100 கிராம் (நறுக்கவும்)

பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)

இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

காய்ந்த மிளகாய் - ஒன்று

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

சோயா உருண்டைகளை வெந்நீரில் பத்து நிமிடங்கள் போட்டுவைத்து, எடுத்து ஆறியபின் மிக்ஸியில் லேசாகப் பொடித்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும், பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை நன்றாக வடித்துக்கொள்ளவும். இரண்டையும் சேர்த்து உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் அகலமான பாத்திரத்தில் பருப்புக் கலவை, சோயா, உப்பு, நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகப் பிசிறிக்கொள்ளவும். இந்த மாவை சூடான எண்ணெயில் பக்கோடாக்களாகப் பொரித்தெடுத்து சூடாகப் பரிமாறவும்.

சோயாவில் நார்ச்சத்து வளமாகக் காணப்படுவதால், ரத்த சர்க்கரையைக் குறைப்பதோடு, எடை இழப்புக்கும் உதவுகிறது.

தேவையானவை:

கடலை மாவு - ஒரு கப்

அரிசி மாவு - 2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

பாப்கார்ன் - ஒரு பாக்கெட்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து ஒருசேர புரட்டிக்கொள்ளவும். பின்னர் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து ஒவ்வொரு பாப்கார்னாக எடுத்து மாவுக் கலவையில் நன்றாக முக்கியெடுத்துப் போட்டு மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்.

மெக்ஸிகோவில் கி.மு 3600-க்கு முந்தைய காலத்தில் தயாரிக்கப்பட்ட பாப்கார்னின் மிச்சம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

தேவையானவை:

கடலை மாவு - ஒரு கப்

அரிசி மாவு - 2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

இஞ்சி - பூண்டு விழுது - கால் டீஸ்பூன்

ஸ்வீட்கார்ன் - ஒரு கப்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், இஞ்சி - பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து ஒருசேர புரட்டிக்கொள்ளவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து இட்லி மாவுப் பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். பின்னர் ஸ்வீட்கார்ன் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து மாவைக் கிள்ளிப் போட்டு மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்.

ஸ்வீட்கார்னில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகள் பார்வை மற்றும் சரும நலம் காக்க உதவும்.

தேவையானவை:

பர்பிள் நிற முட்டைகோஸ் - ஒன்றரை கப் (நீளமாக சீவியது)

மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முட்டைகோஸைச் சுத்தம் செய்து, சிப்ஸ் சீவும் பலகையில் நீளவாக்கில் சீவிக்கொள்ளவும். வெங்காயத்தையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, நறுக்கிய முட்டைகோஸ், வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை, உப்பு, இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். பிறகு லேசாக தண்ணீர் தெளித்து மாவைப் பிசிறிக் கொள்ளவும். பின்னர் சூடான எண்ணெயில் மாவைக் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாகப் பொரித்தெடுக்கவும்.

முட்டைகோஸ் சரும வறட்சியை நீக்கும். சருமத்துக்குப் பொலிவை அளிக்கும்.

தேவையானவை:

காளான் (மஷ்ரூம்) - 100 கிராம்

காளானைச் சுத்தம் செய்து, வெந்நீரில் ஐந்து நிமிடங்கள் போட்டு எடுத்து, நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தையும் நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, காளான், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், புதினா, கொத்தமல்லித்தழை, உப்பு, இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். பின்னர் லேசாக தண்ணீர் தெளித்து மாவைப் பிசிறிக்கொள்ளவும். பிறகு மாவை சூடான எண்ணெயில் பக்கோடாக் களாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

உலகில் 12,000 முதல் 15,000 வகையான காளான்கள் காணப்படுகின்றன.