பிரீமியம் ஸ்டோரி

ம் தமிழ்ச் சமூகத்தின் பாரம்பர்ய காய் வகைகளில் ஒன்று மஞ்சள் பூசணி. பெரும்பாலும் மஞ்சள் பூசணியை வைத்து சாம்பார், பொரியல் செய்வதுதான் நம்முடைய தொன்றுதொட்ட வழக்கம். ஆனால், மஞ்சள் பூசணியில் சூப், பாஸ்தா, கேக், புட்டிங், ஸ்மூத்தி, பிங்கர்ஸ் என்று டிரெண்டி உணவுகளைச் செய்து காட்டியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஹேமலதா. இனி உங்கள் வீட்டுச் சமையலறையிலும் பூசணி உணவுகள் கமகமக்கட்டும்.

மஞ்சள் பூசணியில் மாடர்ன்
உணவுகள்
மஞ்சள் பூசணியில் மாடர்ன்
உணவுகள்

பூசணி சூப்

தேவையானவை:

பூசணித்துண்டுகள் - ஒரு கப்

நறுக்கிய வெங்காயம் – ஒன்று

இஞ்சி - ஒரு துண்டு

நறுக்கிய கேரட் - கால் கப்

உப்பு, மிளகுத்தூள், எண்ணெய் - தேவையான அளவு

மஞ்சள் பூசணியில் மாடர்ன்
உணவுகள்

செய்முறை:

ஒரு வாணலியில் தேவையான எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி சேர்த்து வதக்கவும், அதனுடன் நறுக்கிய கேரட், பூசணித்துண்டுகள் சேர்த்து வதக்கி தேவையான தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். கலவை நன்கு வெந்தவுடன் கீழே இறக்கி சிறிது சூடு ஆறிய பிறகு விழுதாக அரைக்கவும். அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காய்கறிகளை அளவில் பெரிதாக உற்பத்தி செய்வது உலக மெங்கும் பரவலாகியுள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடம் பூசணிக்கே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பூசணி பாஸ்தா

தேவையானவை:

வேகவைத்த பாஸ்தா – ஒன்றரை கப்

வேகவைத்து அரைத்த பூசணிக்காய் - அரை கப்

பூண்டு - 4 பற்கள் (நறுக்கவும்)

காய்ச்சிய பால் – அரை கப்

மைதா - 2 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய குடமிளகாய் - அரை கப்

வெண்ணெய் – அரை கப்

மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

மஞ்சள் பூசணியில் மாடர்ன்
உணவுகள்

செய்முறை

ஒரு வாணலியில் வெண்ணெய்விட்டு சூடாக்கி அதில் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். பின்பு அதில் மைதா சேர்த்துக் கிளறவும். பிறகு பால் ஊற்றி கிளறவும். கலவை வொயிட் சாஸ் பதத்துக்கு வந்ததும் அதனுடன் வேகவைத்த பாஸ்தா, அரைத்த பூசணிக்காய் விழுது, மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். கடைசியாக, பொடியாக நறுக்கிய குடமிளகாய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

வியக்கவைக்கும் பிரமாண்ட பூசணிகளைப் பார்த்திருக்கிறீர்களா... இதுபோன்ற சூப்பர் சைஸ் காய்கறி களின் எடையையும் அளவையும் தீர்மானிப்பவை மரபணுக்களே.

பூசணி கேக்

தேவையானவை:

வேகவைத்து அரைத்த பூசணிக்காய் - அரை கப்

முட்டை - 2

மைதா - ஒரு கப்

சர்க்கரை - ஒரு கப்

வெண்ணெய் - 200 கிராம்

பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்

பேக்கிங் சோடா – அரை டீஸ்பூன்

வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்

மஞ்சள் பூசணியில் மாடர்ன்
உணவுகள்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரையைச் சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு அதில் முட்டையை உடைத்து சேர்க்கவும். இதில் பூசணிக்காய் விழுதையும் சேர்த்து கலவையை நன்கு கலந்து வைக்கவும். பின்னர் இதில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ஆகியவற்றைச் சலித்துசேர்க்கவும். பிறகு, அதில் வெனிலா எசென்ஸ் சேர்த்துக் கிளறவும். இறுதியாகக் கலவையை ஓவனில் 180 டிகிரி செல்சியஸில் 40 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். பூசணி கேக் ரெடி.

1970-ம் ஆண்டிலிருந்தே பிரமாண்ட காய்கறிகளுக்கான போட்டிகள் பல நாடுகளில் நடைபெறுகின்றன. பெரிய பூசணிகளுக்கான பிரதான போட்டி நியூயார்க் பொட்டானிக்கல் கார்டனில் நடைபெறுகிறது.

பூசணிக் கூட்டு

தேவையானவை:

துவரம்பருப்பு - ஒரு கப்

சீரகம் – அரை டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

நறுக்கிய வெங்காயம் – ஒன்று

நறுக்கிய தக்காளி - 2

எண்ணெய், கடுகு – ஒரு டீஸ்பூன்

நறுக்கிய பச்சை மிளகாய் – 2

பூசணித்துண்டுகள் - 2 கப்

நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

மஞ்சள் பூசணியில் மாடர்ன்
உணவுகள்

செய்முறை:

துவரம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் நான்கு விசில் வரும்வரை வேகவிட்டு எடுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, கடுகு தாளிக்கவும். பின்னர் இதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கிய பூசணி மற்றும் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் இக்கலவையில் சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். கலவை வெந்ததும், வேகவைத்த பருப்புக் கலவையைச் சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லி தூவி இறக்கவும்.

1996-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு போட்டியில் 450 கிலோவுக்கும் அதிக எடைகொண்ட பெரிய பூசணிக்காய் பங்கேற்றது.

பூசணி டிலைட்

தேவையானவை:

பூசணிக்காய் - 300 கிராம்

சர்க்கரை - 250 கிராம்

கண்டன்ஸ்டு மில்க் - 5 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய முந்திரி - 30 கிராம்

மஞ்சள் பூசணியில் மாடர்ன்
உணவுகள்

செய்முறை:

பூசணிக்காயைப் பெரிய துண்டுகளாக வெட்டி அதில் சர்க்கரையை சேர்த்து நான்கு முதல் ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு அதை ஓவனில் 160 டிகிரி செல்சியஸில் 50 முதல் 60 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும். கலவை நன்கு ஆறியவுடன் அதில் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து முந்திரி தூவிப் பரிமாறவும்.

2005-ம் ஆண்டுக்கான பூசணி போட்டியில் வூல்ஃப் என்ற விவசாயி உற்பத்தி செய்த 638 கிலோ எடையுள்ள பூசணிக்காய் வெற்றி பெற்றது.

பூசணி புட்டிங்

தேவையானவை:

வேகவைத்து அரைத்த பூசணி - அரை கப்

அகர் அகர் – ஒரு டீஸ்பூன்

சர்க்கரை - 6 டீஸ்பூன்

பால் – அரை கப்

வெனிலா எசென்ஸ் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள் பூசணியில் மாடர்ன்
உணவுகள்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பிறகு அதில் சர்க்கரை மற்றும் வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் அகர் அகர் சேர்த்துக் கலக்கவும். கடைசியாக அரைத்த பூசணிக்காயையும் சேர்த்துக் கலந்து ஒரு கொதிவந்தவுடன் இறக்கவும். கலவை நன்கு ஆறியவுடன் ஒரு சிறிய பவுலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்று பரிமாறவும்.

2016-ம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற பூசணிக்காய் போட்டியில் விவசாயி ஸ்னைடர் வளர்த்த 1,027 கிலோ எடையுள்ள மெகா பூசணி அனைவரையும் ஆச்சர்யத்தில் தள்ளியது.

பூசணி தர்பூசணி ஸ்மூத்தி

தேவையானவை:

வேகவைத்து மசித்த பூசணி - அரை கப்

தர்பூசணித் துண்டுகள் – அரை கப்

தேன் – 2 டீஸ்பூன்

மஞ்சள் பூசணியில் மாடர்ன்
உணவுகள்

செய்முறை:

வேகவைத்து மசித்த பூசணியுடன் தர்பூசணித் துண்டுகள் மற்றும் தேன் சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும். ஸ்மூத்தி ரெடி. விருப்பமெனில் ஐஸ்கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும்.

பூசணிக்காய், தர்பூசணி குடும்பத்தைச் சேர்ந்தது என்பதால், அதை உருவத்தில் பெரிதாக வளர்ப்பது எளிது.

பூசணி சாதம்

தேவையானவை:

துருவிய பூசணிக்காய் – ஒரு கப்

வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்)

பச்சை மிளகாய் – 4 (நறுக்கவும்)

மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்

இஞ்சி – ஒரு துண்டு (நறுக்கவும்)

பூண்டு – 5 பற்கள் (நறுக்கவும்)

கரம் மசாலாத்தூள் – ஒன்றரை டீஸ்பூன்

வடித்த சாதம் – 2 கப்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

மஞ்சள் பூசணியில் மாடர்ன்
உணவுகள்

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் பூசணித்துருவலைச் சேர்த்து வதக்கவும். பூசணித்துருவல் நன்கு வதங்கியதும் தேவையான உப்பு மற்றும் மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் வடித்த சாதத்தை இதனுடன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

சராசரியாக பூசணிக்காய் வளர 100 நாள்கள் எடுத்துக்கொள்ளும். வழக்கமானதைவிட பெரிய அளவு வளர்வதற்கு இன்னும் அதிக காலம் பிடிக்கும்.

பூசணி பிங்கர்ஸ்

தேவையானவை

நீளவாக்கில் நறுக்கிய பூசணித்துண்டுகள் –

200 கிராம்

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – பொரிப்பதற்கு

ஒரிகானோ – அரை டீஸ்பூன்

சோள மாவு – அரை கப்

மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்

பிரெட் தூள் – அரை கப்

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் பூசணியில் மாடர்ன்
உணவுகள்

செய்முறை:

பூசணித்துண்டுகளுடன் தேவையான உப்பு, ஒரிகானோ சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். சோள மாவுடன் சிறிதளவு உப்பு மற்றும் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், தண்ணீர் சேர்த்துக்கலந்து பஜ்ஜி மாவுப் பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். பின்னர் ஊறவைத்த பூசணித்துண்டுகளை இக்கலவையில் தோய்த்தெடுத்து பிரெட் தூளில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

அதிக எடைகொண்ட பூசணிக் காயைச் செடியின் காம்புகள் தாங்காது. அதனால் பராமரிப்பின்போது கவன மாகக் கையாள வேண்டும்.

பூசணி அல்வா

தேவையானவை:

துருவிய பூசணிக்காய் – 2 கப்

சர்க்கரை – ஒன்று முதல் ஒன்றரை கப்

ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்

காய்ச்சிய பால் – முக்கால் கப்

நெய் – அரை கப்

நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு மற்றும் உலர் திராட்சை – சிறிதளவு

மஞ்சள் பூசணியில் மாடர்ன்
உணவுகள்

செய்முறை:

ஒரு வாணலியில் கொஞ்சம் நெய் ஊற்றிச் சூடாக்கி அதில் பூசணித்துருவலைச் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் இதனுடன் காய்ச்சிய பாலைச் சேர்த்து பூசணித்துருவலை பாலில் நன்கு வேகவிடவும். பால் சுண்டி வரும்போது ஏலக்காய்த்தூள், சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். அவ்வப்போது நெய் சேர்த்துச் சேர்த்துக் கலவையைக் கிளறவும். கலவையானது அல்வா பதத்துக்கு சுருண்டு வந்தவுடன் முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.

பூசணிக்காய் பெரிதாக வளர்வதற்கு ஏதேனும் ஊசி போட்டால், அது விரைவில் அழுகிவிடும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு