Published:Updated:

அல்வாவுடன் போட்டிபோடும் சிறப்பு கேசரி வகைகள்!

டூயல் கேசரி
பிரீமியம் ஸ்டோரி
News
டூயல் கேசரி

ரெசிப்பிஸ் மற்றும் படங்கள்: இளவரசி வெற்றி வேந்தன்

தொகுப்பு: ஸ்ரீ லோபாமுத்ரா

``நம் தமிழகத்தின் திருமணம் மற்றும் சுப வைபவங்களில் எத்தனையோ இனிப்பு வகைகள் பரிமாறப்பட்டாலும் கேசரிக்கு சிறப்பான இடம் உண்டு. கடைகளில் கிடைக்கும் பல இனிப்புகளை வீட்டில் தயாரிப்பதில் சிரமங்கள் இருக்கும். வீட்டில் எளிதாகவும் விரைவாகவும் சுவையான ஓர் இனிப்பு செய்ய முடியும் என்றால் அது கேசரிதானே!

 இளவரசி வெற்றி வேந்தன்
இளவரசி வெற்றி வேந்தன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒரே ஸ்டைல் கேசரிக்குப் பதிலாக, சற்று வித்தியாசமாக கேசரி தயாரித்து பார்க்கலாம் என்று தொடர் முயற்சி செய்தேன். அதன் பலனாக சில வகை கேசரிகளைத் தயாரித்து அதை குழந்தைகளுக்கும் விருந்தினர் களுக்கும் கொடுத்தேன். அவர்கள் சுவைத்து மகிழ்ந்தார்கள்’’ என்கிறார், Star’s Kitchen முகநூல் பக்கத்தை நிர்வகிக்கும் இளவரசி வெற்றி வேந்தன். அந்த ஸ்பெஷல் கேசரி ரெசிப்பிகள் இதோ உங்களுக்காக. இவை நிச்சயம் அல்வாவோடு போட்டி போடும்!

சிறக்கட்டும் கேசரி தர்பார்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பைனாப்பிள் கேசரி

தேவையானவை:

 • அன்னாசிப்பழத் துண்டுகள் - அரை கப்

 • ரவை - ஒரு கப்

 • சர்க்கரை - 2 கப்

 • நெய் - கால் கப்

 • கேசரி கலர் (மஞ்சள்) - கால் டீஸ்பூன்

 • முந்திரிப்பருப்பு - 6

 • உலர்திராட்சை - 3

 • தண்ணீர் - 3 கப்

 • ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

பைனாப்பிள் கேசரி
பைனாப்பிள் கேசரி

செய்முறை:

அன்னாசிப்பழத்தைத் தோல் நீக்கிப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அதை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து ரவையை வறுத்தெடுத்து வைக்கவும். மீதமுள்ள நெய்யைக் காயவைத்து ஏலக்காய்த்தூள் முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை சேர்த்துத் தாளித்து, 3 கப் தண்ணீர் சேர்க்கவும். அதில் மஞ்சள் கலர் சேர்த்து, தண்ணீர் கொதித்ததும் அன்னாசிப்பழக்கூழ், வறுத்த ரவையைச் சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும். நன்றாகக் கிளறியபின், தீயைக் குறைத்து ஐந்து நிமிடங்கள் நன்கு வேகவிடவும். பின்னர் சர்க்கரையை அதில் சேர்க்கவும். இது சற்று இளகி, மீண்டும் கெட்டிப்படும். அதை நன்கு கிளறிப் பரிமாறவும்.

பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது அன்னாசிப்பழம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாம்பழ கேசரி

தேவையானவை:

 • மாம்பழத் துண்டுகள் - அரை கப்

 • ரவை - ஒரு கப்

 • சர்க்கரை - 2 கப்

 • நெய் - கால் கப்

 • கேசரி பவுடர் (மஞ்சள்) - ஒரு சிட்டிகை

 • முந்திரிப்பருப்பு - 6

 • உலர்திராட்சை - 3

 • ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை

 • தண்ணீர் - 3 கப்

மாம்பழ கேசரி
மாம்பழ கேசரி

செய்முறை:

நன்கு பழுத்த இனிப்பு நிறைந்த மாம்பழத்தைத் தோல், கொட்டை நீக்கித் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து ரவையை வறுத்தெடுத்து வைக்கவும்.

மீதமுள்ள நெய்யைக் காயவைத்து ஏலக்காய்த்தூள் முந்திரிப்பருப்பு, உலர்திராட்சை போட்டு தாளித்து, 3 கப் தண்ணீர் சேர்க்கவும். மஞ்சள் கலர் சேர்த்து, தண்ணீர் கொதித்ததும் மாம்பழக்கூழ், வறுத்த ரவையைச் சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும். நன்றாகக் கிளறியபின், தீயைக் குறைத்து 5 நிமிடங்கள் நன்கு வேகவிடவும். பின்னர் சர்க்கரையைச் சேர்க்கவும். இது சற்று இளகி, மீண்டும் கெட்டிப்படும். அதை நன்கு கிளறிப் பரிமாறவும்.

கி.மு 4000 ஆண்டிலேயே இந்தியாவில் மாம்பழங்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

தண்ணீர்ப்பழ கேசரி

தேவையானவை:

 • ரவை – அரை கப்

 • சர்க்கரை – முக்கால் கப்

 • தண்ணீர்ப்பழச் சாறு

 • (தர்ப்பூசணிச் சாறு) – ஒரு கப்

 • தண்ணீர் - அரை கப்

 • நெய் – 6 டீஸ்பூன்

 • முந்திரி – 8 - 10

 • ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்

 • உலர்திராட்சை - 5 - 7

தண்ணீர்ப்பழ கேசரி
தண்ணீர்ப்பழ கேசரி

செய்முறை:

வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு முந்திரிப்பருப்பு, உலர்திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே நெய் வாணலியில் ரவையை நான்கு நிமிடங்களுக்கு மணம் வரும் வரை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். கடாயில் ஒரு கப் தண்ணீர்ப்பழச் சாறு, அரை கப் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதித்த நீரில் ரவையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கட்டியில்லாமல் கிளறவும். ஐந்து நிமிடங்கள் மூடிவைத்து வேகவிடவும். இப்போது சர்க்கரை சேர்த்துக் கரையும் வரை கிளறவும். மீதமுள்ள நெய் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரி, உலர்திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

தர்ப்பூசணி ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டது.

தேங்காய்ப்பால் கேசரி

தேவையானவை:

 • ரவை – அரை கப்

 • சர்க்கரை – ஒரு கப்

 • கெட்டித் தேங்காய்ப்பால் – ஒன்றரை கப்

 • டூட்டி ஃப்ரூட்டி - 2 டீஸ்பூன்

 • நெய் – 6 டீஸ்பூன்

 • முந்திரி – 8 - 10

 • ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்

 • உலர்திராட்சை - 5 - 7

தேங்காய்ப்பால் கேசரி
தேங்காய்ப்பால் கேசரி

செய்முறை:

வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு முந்திரிப்பருப்பு, உலர்திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே நெய் வாணலியில் ரவையை நான்கு நிமிடங்களுக்கு மணம் வரும் வரை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். வாணலியில் ஒன்றரை கப் தேங்காய்ப்பால் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து ரவையைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கட்டியில்லாமல் கிளறவும். 5 நிமிடங்கள் மூடிவைத்து வேகவிடவும். இப்போது சர்க்கரை சேர்த்துக் கரையும் வரை கிளறவும். மீதமுள்ள நெய் மற்றும் டூட்டி ஃப்ரூட்டி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரி, உலர்திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

ரவையில் 72 சதவிகிதம் கார்போஹைட்ரேட் என்கிற மாவுச்சத்து நிறைந்துள்ளது.

குங்குமப்பூ கேசரி

தேவையானவை:

 • ரவை – அரை கப்

 • குங்குமப்பூ – 2 சிட்டிகை

 • சர்க்கரை - ஒரு கப்

 • பால் - ஒரு கப்

 • தண்ணீர் – அரை கப்

 • நெய் – 6 டீஸ்பூன்

 • முந்திரி – 8 - 10

 • ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்

 • உலர்திராட்சை - 5 - 7

குங்குமப்பூ கேசரி
குங்குமப்பூ கேசரி

செய்முறை:

வெதுவெதுப்பான ஒரு டீஸ்பூன் பாலில் குங்குமப்பூவை அரை மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு முந்திரிப்பருப்பு, உலர்திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே நெய் வாணலியில் ரவையை நான்கு நிமிடங்களுக்கு மணம் வரும்வரை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். வாணலியில் ஒரு கப் பால், அரை கப் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதித்தும் குங்குமப்பூ கரைசலைச் சேர்க்கவும். பின்னர் ரவையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கட்டியில்லாமல் கிளறவும். ஐந்து நிமிடங்கள் மூடி வைத்து வேகவிடவும். இப்போது சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். மீதமுள்ள நெய் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரி, உலர்திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

குங்குமப்பூ தென்மேற்கு ஆசியாவில்தான் தோன்றியது.

கருப்பட்டி கேசரி

தேவையானவை:

 • ரவை – அரை கப்

 • கருப்பட்டி துருவல் – ஒரு கப் (100 - 130 கிராம்)

 • தண்ணீர் – ஒன்றரை கப்

 • நெய் – 6 டீஸ்பூன்

 • முந்திரி – 8 - 10

 • ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்

 • உலர்திராட்சை - 5 - 7

கருப்பட்டி கேசரி
கருப்பட்டி கேசரி

செய்முறை:

வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு முந்திரிப்பருப்பு, உலர்திராட்சையை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே நெய் வாணலியில் ரவையை நான்கு நிமிடங்களுக்கு மணம் வரும் வரை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். வாணலியில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதித்த நீரில் ரவையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கட்டி இல்லாமல் கிளறவும். ஐந்து நிமிடங்கள் மூடி வைத்து வேகவிடவும். இப்போது துருவிய கருப்பட்டி சேர்த்துக் கரையும் வரை கிளறவும். மீதமுள்ள நெய் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரி, உலர்திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

கருப்பக்கட்டி என்ற சொல்லே கருப்பட்டி என மருவியது.

பாதாம் கேசரி

தேவையானவை:

 • ரவை – அரை கப்

 • பாதாம்பருப்பு – 10 - 15

 • சர்க்கரை - ஒரு கப்

 • தண்ணீர் – ஒன்றரை கப்

 • நெய் – 6 டீஸ்பூன்

 • முந்திரி – 8 - 10

 • ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்

 • உலர்திராட்சை - 5 - 7

 • பால் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • தேன் - ஒரு டீஸ்பூன்

பாதாம் கேசரி
பாதாம் கேசரி

செய்முறை:

வெதுவெதுப்பான பாலில் பாதாமை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் பாலில் ஊறிய பாதாம், பால், தேன் மூன்றையும் மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு முந்திரிப்பருப்பு, உலர்திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே நெய் வாணலியில் ரவையை நான்கு நிமிடங்களுக்கு மணம் வரும்வரை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். வாணலியில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதித்த நீரில் பாதாம் விழுது சேர்க்கவும். பின்னர் ரவையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கட்டி இல்லாமல் கிளறவும். ஐந்து நிமிடங்கள் மூடி வைத்து வேகவிடவும். இப்போது சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். மீதமுள்ள நெய் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரி, உலர்திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

பாதாம்பருப்பை `வாதுமை’ என்றும் கூறுவதுண்டு.

மாதுளை கேசரி

தேவையானவை:

 • ரவை – அரை கப்

 • சர்க்கரை – முக்கால் கப்

 • மாதுளைச்சாறு – ஒரு கப்

 • தண்ணீர் - அரை கப்

 • நெய் – 6 டீஸ்பூன்

 • முந்திரி – 8 - 10

 • ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்

 • உலர்திராட்சை - 5 - 7

மாதுளை கேசரி
மாதுளை கேசரி

செய்முறை:

வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு முந்திரிப்பருப்பு, உலர்திராட்சையை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும். அதே நெய் வாணலியில் ரவையை நான்கு நிமிடங்களுக்கு மணம் வரும் வரை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். வாணலியில் ஒரு கப் மாதுளைச்சாறு, அரை கப் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதித்த நீரில் ரவையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கட்டி இல்லாமல் கிளறவும். ஐந்து நிமிடங்கள் மூடி வைத்து வேகவிடவும். இப்போது சர்க்கரை சேர்த்துக் கரையும் வரை கிளறவும். மீதமுள்ள நெய் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரி, உலர்திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

5000 ஆண்டுகளாக இரான், ஆப்கானிஸ்தான், பலுகிஸ்தான் பகுதிகளில் மாதுளை பயிரிடப்பட்டு வருகிறது.

ஆரஞ்சு கேசரி

தேவையானவை:

 • ரவை – அரை கப்

 • சர்க்கரை – முக்கால் கப்

 • ஆரஞ்சுச்சாறு – ஒரு கப்

 • தண்ணீர் - அரை கப்

 • நெய் – 6 டீஸ்பூன்

 • முந்திரி – 8 - 10

 • ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்

 • உலர்திராட்சை - 5 - 7

 • ஆரஞ்சு கலர் கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை

ஆரஞ்சு கேசரி
ஆரஞ்சு கேசரி

செய்முறை:

வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு முந்திரிப்பருப்பு, உலர்திராட்சையை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும். அதே நெய் வாணலியில் ரவையை நான்கு நிமிடங்களுக்கு மணம் வரும் வரை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். வாணலியில் ஒரு கப் ஆரஞ்சுச்சாறு, அரை கப் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் கேசரி பவுடர் சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதித்த நீரில் ரவையைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கட்டி இல்லாமல் கிளறவும். ஐந்து நிமிடங்கள் மூடி வைத்து வேகவிடவும். இப்போது சர்க்கரை சேர்த்துக் கரையும் வரை கிளறவும். மீதமுள்ள நெய் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரி, உலர்திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

ஆரஞ்சுப்பழத்தின் தமிழ்ப் பெயர் `தோடம்பழம்’.

டூயல் கேசரி

தேவையானவை:

 • ரவை – அரை கப்

 • சர்க்கரை – முக்கால் கப்

 • தண்ணீர்ப்பழச் சாறு

 • (தர்ப்பூசணிச் சாறு) – ஒரு கப்

 • தண்ணீர் - அரை கப்

 • நெய் – 6 டீஸ்பூன்

 • முந்திரி – 8 - 10

 • ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்

 • உலர்திராட்சை - 5 - 7

கிவி கேசரிக்கு:

 • ரவை - கால் கப்

 • சர்க்கரை - அரை கப்

 • கிவிப்பழம் - ஒன்று

 • கிரீன் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை

 • நெய் - 4 டீஸ்பூன்

 • தண்ணீர் - ஒரு கப்

டூயல் கேசரி
டூயல் கேசரி

செய்முறை:

வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு முந்திரிப்பருப்பு, உலர்திராட்சையை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். அதே நெய் வாணலியில் ரவையை நான்கு நிமிடங்களுக்கு மணம் வரும்வரை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். வாணலியில் ஒன்றரை கப் தண்ணீர்ப்பழச் சாறு, அரை கப் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதித்த நீரில் ரவையைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கட்டி இல்லாமல் கிளறவும். ஐந்து நிமிடங்கள் மூடி வைத்து வேகவிடவும். இப்போது சர்க்கரை சேர்த்துக் கரையும் வரை கிளறவும். மீதமுள்ள நெய் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரி, உலர்திராட்சை சேர்த்து வைக்கவும்.

கிவி கேசரி செய்யக் கொடுத்துள்ள ரவையை அரை டீஸ்பூன் நெய்யில் தனியே வறுத்து எடுத்துக்கொள்ளவும். கிவியைத் தோல் சீவி நறுக்கி அரைத்துக்கொள்ளவும். வாணலியில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, கொதித்த பின்னர் கிவிக்கூழ், ஃபுட் கலர் சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில்வைத்து கொதித்த நீரில் ரவையைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கட்டி இல்லாமல் கிளறவும். ஐந்து நிமிடங்கள் மூடி வைத்து வேகவிடவும். இப்போது சர்க்கரை சேர்த்துக் கரையும் வரை கிளறவும். நெய் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும்.

இப்போது நமக்கு விருப்பமான, தேவையான அளவு உள்ள பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும். பாத்திரத்தின் உள்பாகம் முழுவதும் நெய் தடவிக்கொள்ளவும். முதலில் பாத்திரத்தை உள்வளைவை ஒட்டி, கிவி கேசரியை ஸ்பூன் உதவியால் சமன் செய்துகொள்ளவும். பின்னர் நடுவில் தண்ணீர்ப்பழக் கேசரியை இடைவெளி இல்லாமல் வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து ஒரு தட்டில் பாத்திரத்தைக் கவனமாகக் கவிழ்க்கவும். கேக் போல் வெட்டிப் பரிமாறவும்.

இதைக் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள்.

கிவி என்ற சொல் பழம், பறவை, நியூசிலாந்து நாடு ஆகிய மூன்றையும் குறிக்கிறது.