Published:Updated:

வாலன்டைன்’ஸ் டே ரெசிப்பி

நியூசிலாந்து லேம்ப் ரேக்
பிரீமியம் ஸ்டோரி
நியூசிலாந்து லேம்ப் ரேக்

ரெசிப்பிகளை காதலர்களுக்காக ஸ்பெஷலாக அழகுபடுத்தியிருக்கிறார் செஃப் மாரோ ஃபெராரி.

வாலன்டைன்’ஸ் டே ரெசிப்பி

ரெசிப்பிகளை காதலர்களுக்காக ஸ்பெஷலாக அழகுபடுத்தியிருக்கிறார் செஃப் மாரோ ஃபெராரி.

Published:Updated:
நியூசிலாந்து லேம்ப் ரேக்
பிரீமியம் ஸ்டோரி
நியூசிலாந்து லேம்ப் ரேக்

மாதங்கள் பன்னிரண்டு இருந்தாலும், பிப்ரவரி என்றால் கொஞ்சம் ஸ்பெஷல்தான். தன்னுள் மலர்ந்த காதலை வெளிப்படுத்தி மற்றவர்களைவிட வித்தியாசமாகக் கொண்டாட வேண்டும் என்று ஒவ்வொருவரின் மனத்திலும் ‘காதலர் தின’த்துக்கான திட்டம் தீவிரமாக இருக்கும் மாதம் இது. அந்த வரிசையில் காதலர் தினத்துக்கென்று பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பைவ் ஸ்டார் ஹோட்டல் ரெசிப்பிகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சென்னை ஹயாத் ரீஜென்சியின் தலைமை நிர்வாக செஃப் தேவகுமார். இவருடைய ரெசிப்பிகளை காதலர்களுக்காக ஸ்பெஷலாக அழகுபடுத்தியிருக்கிறார் செஃப் மாரோ ஃபெராரி.

தேவகுமார், மாரோ ஃபெராரி
தேவகுமார், மாரோ ஃபெராரி
வாலன்டைன்’ஸ் டே ரெசிப்பி
வாலன்டைன்’ஸ் டே ரெசிப்பி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

க்ரீமி டோஃபு பௌச்சஸ் வித் அஸ்பாரகஸ்

தேவையானவை:

 • இனாரி டோஃபு - 4 துண்டுகள்

 • அஸ்பாரகஸ் - 13 - 15

 • தண்ணீர் செஸ்நட் - 4 துண்டுகள்

 • பசலைக்கீரை - 2 இலைகள்

 • அரிசியிலிருந்து உருவாக்கப்பட்ட ‘சேக் (Sake)’ பானம் - 150 மில்லி

 • எண்ணெய் - தேவையான அளவு

டெம்புரா செய்வதற்கு:

 • டெம்புரா மாவு - 200 கிராம்

 • ஐஸ் தண்ணீர் - தேன் பதத்துக்கு வரும் அளவுக்குத் தேவையானது

 • உப்பு - தேவையான அளவு

மயோ எமல்ஷன்:

 • ஜப்பான் மயோனைஸ் - 200 கிராம்

 • கறுப்பு மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

 • குங்குமப்பூ - 5 இழைகள்

 • துருவிய செட்டர் சீஸ் (Cheddar Cheese) - 2 டேபிள்ஸ்பூன்

 • (இந்தப் பொருள்கள் பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும்)

க்ரீமி டோஃபு பௌச்சஸ் வித் அஸ்பாரகஸ்
க்ரீமி டோஃபு பௌச்சஸ் வித் அஸ்பாரகஸ்

செய்முறை:

டெம்புரா மாவு, உப்பு மற்றும் ஐஸ் தண்ணீர் சேர்த்து நன்கு குழைத்துக்கொள்ளவும். மாயோ எமல்ஷன் பொருள்கள் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றிவிட்டு செஸ்நட் மற்றும் பசலைக்கீரையைத் தனியே வைக்கவும். சுமார் 10 செ.மீ அளவுக்கு அஸ்பாரகஸை நறுக்கி, டெம்புரா மாவில் நனைத்து எண்ணெயில் வறுக்கவும். வறுபட்ட அஸ்பாரகஸை மாயோ கலவையில் புரட்டவும். செஸ்நட்டை, ‘சேக்’ கலவையோடு சேர்த்து எரியூட்டவும். இனாரி டோஃபூவைப் பிரித்து, சிறிய பைகளை உருவாக்கி, அதனுள் தயார் செய்யப்பட்ட செஸ்நட் மற்றும் அஸ்பாரகஸை அடைத்து, மேலே பசலைக்கீரையை வைத்து சூடாகப் பரிமாறலாம்.

பசலைக்கீரையில் இரும்புச்சத்து ஏராளமாக உள்ளது. வைட்டமின்கள் மற்றும் சுண்ணாம்புச்சத்தும் நிறைந்து காணப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டூனா டார்ட்டாரே சூப்

தேவையானவை:

 • டூனா மீன் - 80 கிராம்

 • ஆலிவ் எண்ணெய் - 20 கிராம்

 • எலுமிச்சைச்சாறு - 10 மில்லி

 • உப்பு - தேவையான அளவு

 • பூண்டு - 5 கிராம்

 • பிரியாணி இலை - ஒன்று

 • ஊறவைத்த பொர்லாட்டி பீன்ஸ் - 250 கிராம்

 • கேரட், செலரி மற்றும் வெங்காயம் - 70 கிராம்

 • ரோஸ்மேரி - 10 கிராம்

 • ரோஸ்மேரி எண்ணெய் - 5 மில்லி

 • மிளகுத்தூள் - தேவைக்கேற்ப

 • (இந்தப் பொருள்கள் பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும்)

டூனா டார்ட்டாரே சூப்
டூனா டார்ட்டாரே சூப்

செய்முறை:

வெங்காயம், கேரட் மற்றும் செலரியைப் பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து அதில் பொடியாக நறுக்கிய பொருள்கள், ஊறவைத்த பீன்ஸ், தண்ணீர் மற்றும் பிரியாணி இலை சேர்த்து 75 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேகவைக்கவும். வேகவைத்த இந்த சூப்பை நன்கு கலந்துவிடவும். மேலும் இதனோடு ரோஸ்மேரி எண்ணெயும் சேர்க்கவும்.

டூனா மீனை டார்ட்டாரே அளவுக்கு வெட்டி, அதோடு ஆலிவ் எண்ணெய், எலுமிச்சைச்சாறு, உப்பு மற்றும் பூண்டு சேர்த்துக்கொள்ளவும். ஒரு சூப் பவுலில், சிறிதளவு டூனா மீன் துண்டை வைத்து, அதனுள் சிறியளவு பீன்ஸ் சூப் சேர்க்க வேண்டும். ஆலிவ் எண்ணெய் சேர்த்து, ரோஸ்மேரி, மிளகுத்தூளைத் தூவினால் டூனா டார்ட்டாரே சூப் ரெடி.

ஆலிவ் எண்ணெயில் உள்ள நன்மை தரும் கொழுப்பு, உடலின் கெட்ட கொழுப்புகளைக் குறைத்து, ரத்த சர்க்கரை அளவை இயல்பாக்குகிறது.

லெமன் ரிசோட்டோ வித் நண்டு இறைச்சி

தேவையானவை:

 • சிவப்பு வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

 • வெண்ணெய் - 50 கிராம் + 40 கிராம்

 • சிவப்பு வைன் - 60 கிராம்

 • அர்போரியோ அரிசி - 80 கிராம்

 • ஷாம்பெய்ன் - 50 கிராம்

 • எலுமிச்சைச்சாறு - 20 கிராம்

 • பார்மீசன் சீஸ் - 40 கிராம் (துருவவும்)

 • நண்டு இறைச்சி - 40 கிராம்

 • வேகவைத்த காய்கறிகளின் தண்ணீர் - 50 கிராம்

 • எண்ணெய் - தேவைக்கேற்ப

 • (இந்தப் பொருள்கள் பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும்)

லெமன் ரிசோட்டோ வித் நண்டு இறைச்சி
லெமன் ரிசோட்டோ வித் நண்டு இறைச்சி

செய்முறை:

வெண்ணெயை சூடாக்கி அதில் சிவப்பு வெங்காயத்தைச் சேர்த்து 8 நிமிடங்களுக்கு வறுக்கவும். பிறகு சிவப்பு வைன் சேர்த்து மேலும் வறுக்கவும். சிறிது நேரம் கழித்து தண்ணீர் சேர்த்து இந்தக் கலவையை நன்கு கலந்துவிடவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய், சிறிதளவு ஷாம்பெய்ன் மற்றும் அரிசி சேர்த்து, மிதமான சூட்டில் நான்கு நிமிடங்களுக்குக் கலந்துவிடவும். எலுமிச்சைச்சாறு மற்றும் காய்கறிகளின் தண்ணீர் சேர்த்து 14 நிமிடங்கள் வேகவைக்கவும்.

பிறகு வெண்ணெய் மற்றும் மீதியுள்ள ஷாம்பெய்ன் சேர்த்து நன்கு கலந்துவிடவும். ஒரு தட்டில் தயாரான ரிசோட்டோவை வைத்து அதன்மேல் வேகவைத்த நண்டு இறைச்சி மற்றும் வறுத்த வெங்காயம், துருவிய சீஸ் கொண்டு சூடாகப் பரிமாறலாம்.

வெள்ளை முதல் அடர் மஞ்சள் வரையிலான நிறங்களில் வெண்ணெய் கிடைத்தாலும் அடர் மஞ்சள் நிற வெண்ணெயே அதிகம் விரும்பப்படுகிறது.

நியூசிலாந்து லேம்ப் ரேக்

தேவையானவை:

 • ஆட்டிறைச்சி - 180 கிராம்

 • நறுக்கிய வெங்காயம் - 30 கிராம்

 • சிவப்பு வைன் - 50 கிராம்

 • டரகன் (Tarragon) - 10 கிராம்

 • உருளைக்கிழங்கு - 100 கிராம்

 • வெண்ணெய் - 50 கிராம்

 • மெல்லிய பேங்கோ பிரெட் - 10 கிராம்

 • பேபி கேரட், அஸ்பாரகஸ், மஞ்சள் மற்றும் பச்சை ஜூச்சினி பட்டோனெட் மற்றும் புரொக்கோலி - 20 கிராம்

 • டரகன் சாஸ் - சிறிதளவு

 • உப்பு - தேவையான அளவு

 • (இந்தப் பொருள்கள் பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும்)

நியூசிலாந்து லேம்ப் ரேக்
நியூசிலாந்து லேம்ப் ரேக்

செய்முறை:

உருளைக்கிழங்கின் தோலை சீவி, சிறிய துண்டுகளாக்கி, அதோடு வெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நான்கு நிமிடங்களுக்கு வறுக்கவும். பிறகு சிறிதளவு பேங்கோ பிரெட்டை அதனோடு சேர்த்து வறுத்தெடுத்துக் கொள்ளவும். மற்ற காய்கறிகளை நன்கு சுத்தம் செய்து சிறியதாக நறுக்கி, வேகவைக்கவும்.

வெண்ணெயில் ஆட்டிறைச்சியை வறுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சிவப்பு வைனில் சிறிதளவு வெங்காயத்தைச் சேர்த்து கேரமலைஸ் செய்துகொள்ளவும். அதனோடு டரகன் சேர்க்கவும். இந்தக் கலவையோடு வறுத்த ஆட்டிறைச்சியைக் கலந்து சுமார் நான்கு நிமிடங்களுக்கு வேகவைக்கவும். தயாரான ஆட்டிறைச்சியோடு ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட உருளைக்கிழங்கு சப்பியோஸ், வேகவைத்த காய்கறிகள் மற்றும் டரகன் சாஸ் சேர்த்தால் நியூசிலாந்து லேம்ப் ரேக் தயார்.

உருளைக்கிழங்கில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.

ஸ்ட்ராபெர்ரி கர்பாசியோ

தேவையானவை:

 • கேரமலைஸ்டு இதய வடிவ பேஸ்ட்ரி - 40 கிராம்

 • வெனிலா கஸ்டர்டு - 40 கிராம்

 • ஸ்ட்ராபெர்ரி - 60 கிராம்

 • முட்டை மஞ்சள் கரு - 2

 • பொடித்த சர்க்கரை - 30 கிராம்

 • ரோஸ் எசென்ஸ் - 20 கிராம்

 • பால் - 30 கிராம்

 • புதினா - அலங்கரிக்க

(இந்தப் பொருள்கள் பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும்)

ஸ்ட்ராபெர்ரி கர்பாசியோ
ஸ்ட்ராபெர்ரி கர்பாசியோ

செய்முறை:

இதய வடிவ பஃப் பேஸ்ட்ரி ஷீட்டைத் தயாரித்து, அதனோடு பொடியாக்கப்பட்ட சர்க்கரை சேர்த்து 220 டிகிரி செல்ஷியஸ் சூட்டில் ரொட்டி தயாரிக்கவும். ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டை மஞ்சள் கரு, பொடித்த சர்க்கரை, ரோஸ் எசென்ஸ் மற்றும் பால் சேர்த்து நன்கு அடித்து, திடமான க்ரீம் பதத்துக்கு வேகவைக்கவும்.

ஒரு தட்டில் கேரமலைஸ்டு பேஸ்ட்ரி வைத்து அதன்மேல் தயாரித்த க்ரீம், வெனிலா கஸ்டர்டு சேர்த்து, அதற்கு மேல் ஸ்ட்ராபெர்ரி துண்டுகளைப் பரப்பிவிடவும். பொடியாக்கப்பட்ட சர்க்கரை மற்றும் புதினா இலைகளோடு வித்தியாசமாகப் பரிமாறப்படும் இந்த கர்பாசியோ காதலர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் நிச்சயம் இடம்பெறும்!

சரும வறட்சியைப் போக்கவும், இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்யவும், செல் அழிவைத் தடுக்கவும் ஸ்ட்ராபெர்ரி உதவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism