Published:Updated:

அதிகம் வசூலிக்கின்றனவா உணவு ஆப்கள்?

உணவு ஆப்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
உணவு ஆப்கள்

சர்ச்சை

ணவுத்துறையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தவை உணவு ஆப்கள். இருக்கும் இடத்தைத் தேடிவந்து உணவைத் தந்து மகிழ்விப்பதோடு, தள்ளுபடி மழை பொழிந்து வாடிக்கையாளர்களை மகிழ்வித்தன இந்த ஆப்கள். வாடிக்கை யாளர்களுக்கும் உணவு டெலிவரி ஆப்களுக்குமான தேனிலவுக் காலம் முடிவுக்கு வந்து விடும்போலவே தெரிகிறது. தள்ளுபடி மழை முடிவுக்கு வந்து கோடை வெயில் நடைமுறைக்கு வரும் தருணம் இது. பல உணவகங்களில் தள்ளுபடி என்பதே இல்லை. அதுகூடப் பரவாயில்லை, ‘இருந்த இடத்தில் உணவு கிடைக்கிறதே’ என்று திருப்தி அடைந்திருந்த வாடிக்கை யாளர்களுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ஆப்கள் வசூலிக்கும் உணவின் விலை உண்மையான உணவக விலையைவிட 25 முதல் 50 சதவிகிதம்வரை கூடுதலாக இருக்கின்றன என்பதுதான் அது. இதை இந்தத் துறை சார்ந்த நிறுவனம் ஒன்றும் ஆமோதித் துள்ளது.

அதிகம் வசூலிக்கின்றனவா உணவு ஆப்கள்?

சமீர் அரோரா என்ற வாடிக்கையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உணவு டெலிவரி ஆப்களின் வளர்ச்சியினால் வீடுகளில் உணவு தயாரித்து விற்கும் சிறு வணிகர்கள் பலரும் நஷ்டமடையும் அபாயம் உள்ளது’ என்று தெரிவித்திருந்தார். அந்த ட்வீட்டில் பெங்களூரைச் சேர்ந்த ராஜு என்பவர், `உணவு ஆப்களில் தள்ளுபடிகள் கணிசமாகக் குறைந்து வருகின்றன’ என்றும், `ஆப் மூலம் விற்கப்படும் உணவுகளின் விலை உணவகங் களின் விலையைவிட 25 முதல் 50 சதவிகிதம்வரை அதிகமாக உள்ளது’ என்றும் குறிப்பிட்டுள்ளார். ‘அதிகமான விலையோடு சேர்த்து டெலிவரி கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. மீண்டும் வீட்டு உணவே சிறந்தது என்று முடிவெடுக்க வேண்டியுள்ளது’ என்று பதிவிட்டிருந்தார் அவர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

விவாதத்தைத் தொடங்கிய சமீர் அரோராவின் ட்வீட்டுக்கு எதிர் வினையாற்றாத ஸ்விகி நிறுவனம், ராஜுவின் குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டது.

அதில், `உங்கள் கவலையை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதேவேளையில் எங்கள் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையையே பின்பற்றுகிறோம். குறிப்பாக உணவு விலைகளை நிர்ணயிக்கும் உரிமை முழுமையாக உணவகங்களால் தீர்மானிக்கப்படுபவையே. அவற்றை நாங்கள் முடிவு செய்வதில்லை’ என்கிறது அந்தப் பதில் பதிவு.

உணவு ஆப்கள்
உணவு ஆப்கள்

ராஜு விடுவதாக இல்லை. அவர் பல ஆதாரங்களோடு கேள்விகள் பலவற்றை முன்வைத்தார். `உணவின் விலையை உணவகங்களே தீர்மானிக்கின்றன’ என்கிற கருத்தைக் கடுமையாக மறுத்தார். மேலும் `டெலிவரி கட்டணங்களும் பேக்கேஜிங் கட்டணங்களும் மிகவும் அதிகமாக உள்ளன’ என்றும் வாதிட்டார். அவற்றுக் கெல்லாம் ஸ்விகி இனிப்பான வார்த்தை களோடு பவ்யமாகப் பதில் சொன்னாலும், அதில் வேறு புதிய விளக்கங்கள் ஏதும் இல்லை. தொடர்ந்து ஸ்விகி, ‘உணவகங்களே உணவின் விலையை நிர்ணயிக்கின்றன’ என்று சொல்லிவந்தது. ஒருகட்டத்தில், `ஒரே உணவகத்தின் உணவுகளின் விலை நகரின் பல பகுதிகளில் பலவிதமாக மாற்றம் கொள்வது ஏன்?’ என்ற கேள்வியை முன்வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ட்விட்டரில் நடைபெற்ற சூடான இந்த விவாதத்தில் வாடிக்கையாளர்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்தனர். சிலர் சில உணவகங்களின் விலைப் பட்டியலையும் ஸ்விகியின் விலைப்பட்டியலையும் வெளியிட்டு அவற்றில் இருந்த வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டினர். அதற்கும் ஸ்விகி `விலையைப் பொறுத்த வரை அதை உணவகங்களே தீர்மானிக்கின்றன’ என்று கிளிப்பிள்ளை போல் பதில் சொல்லியது.

உணவு ஆப்கள்
உணவு ஆப்கள்

சமீர் அரோராவின் ட்வீட்டில் பதிவிட்டிருந்த புதுச்சேரி ரெஸ்ட்டாரன்ட் அசோசியேஷன் என்னும் ட்விட்டர் ஐ.டி, ஸ்விகியின் பில்லிங் முறையை வெளியிட்டது. அதில் 100 ரூபாய் உணவை வாடிக்கையாளர்களுக்கு 191 ரூபாயில் ஆப்கள் விற்கின்றன. இது உண்மையில் 91 சதவிகித அதிகரிப்பு என்ற கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தது.

இந்தப் பிரச்னை குறித்து தமிழ்நாடு ஹோட்டல் அசோசி யேஷன் செயலர் ஆர். சீனிவாசனி டம் பேசினோம்.

“ஸ்விகி, ஸோமேட்டோ நிறுவனங்கள் தரப்பில் சொல்லப்படுவதன் உண்மைத் தன்மை இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது. காரணம் அவர்கள் ஒவ்வோர் உணவகத் தோடும் தனிப்பட்ட ஒப்பந்தத்தைப் பின்பற்றுகிறார்கள். ஆரம்பத்தில் உணவின் விலையில் 50 சதவிகிதம்வரை அவர்களே ஏற்றுக்கொள்வதாகச் சொல்லி தள்ளுபடி அறிவித்து வாடிக்கை யாளர்களைப் பிடித்தனர். இப்போது உணவகங்களிடம் கமிஷன் கேட்கிறார்கள். சில உணவகங்களில் ரேட்டிங் முறை மூலம் நிபந்தனைகளை அதிகப்படுத்துகிறார்கள். எப்படியானாலும் உணவகங்கள் தரப்பில் சொல்லப்படும் விலை என்பது ஒன்றுதான். அதை நாங்கள் மாற்ற முடியாது. காரணம், உணவகங்களைப் பொறுத்தவரை பாயின்ட் ஆஃப் சேல் என்பது உணவகம்தான். அந்த ஆப்கள் டெலிவரிதான் தருகின்றன. அதற்குக் கட்டணமும் வசூலிக்கின்றன. உணவின் விலையேற்றத்தில் அவர்கள் எங்கள் மீது பழிபோடுவது சரியில்லை” என்றார்.

வீட்டிலிருந்தபடியே உணவைப்பெறுவது ஒரு வசதிதான் என்றாலும், அதற்கான கட்டணம் நியாயமானதாக இருக்கும்வரைதான் மக்கள் அதை ஆதரிப்பார்கள். அதை உணவு டெலிவரி ஆப் நிறுவனங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.