Published:Updated:

தீபாவளி பட்சணங்கள்!

அதிரசம்
பிரீமியம் ஸ்டோரி
அதிரசம்

வெல்ல ஸ்வீட் இது. பாரம்பர்யமான தீபாவளிக்குக் கட்டாயம் இந்த ஸ்வீட்டை மதுரை, திருநெல்வேலி பக்கங்களில் செய்வார்கள். தலை தீபாவளிக்கு மாப்பிள்ளைக்குக் கட்டாயம் செய்து தருவார்கள்.

தீபாவளி பட்சணங்கள்!

வெல்ல ஸ்வீட் இது. பாரம்பர்யமான தீபாவளிக்குக் கட்டாயம் இந்த ஸ்வீட்டை மதுரை, திருநெல்வேலி பக்கங்களில் செய்வார்கள். தலை தீபாவளிக்கு மாப்பிள்ளைக்குக் கட்டாயம் செய்து தருவார்கள்.

Published:Updated:
அதிரசம்
பிரீமியம் ஸ்டோரி
அதிரசம்
 மெனுராணி செல்லம்
மெனுராணி செல்லம்

1. அதிரசம்

தேவையானவை: அரிசி மாவு - 4 கப் துருவிய வெல்லம் - 4 கப் ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன் தண்ணீர் - 2 கப் நெய் - 2 டீஸ்பூன் வாழையிலை - இரண்டு சதுரங்கள் (அதிரசம் தட்ட). பொரிக்க: எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.

செய்முறை: மாவு தயாரிக்க என்றே தனி அரிசி கிடைக்கும். அந்த அரிசியை நான்கு மணி நேரம் ஊறவைத்து, பின்னர் ஒரு துணியில் பரப்பிக்காயவைக்கவும். வெயிலில் வைக்க வேண்டாம். முக்கால்வாசி காய்ந்தவுடன் மெஷினில் கொடுத்து அதிரசத்துக்கென்று சொல்லி அதை அரைத்துவைத்துக் கொள்ளவும். சலிக்க வேண்டாம்.

வெல்லத்தையும் தண்ணீரையும் கலந்து கரைத்துவைத்துக் கொள்ளவும். சிறிது நேரம் கழித்து வடிகட்டி வெல்லக்கரைசலைக் கொதிக்கவிடவும். கெட்டிக் கம்பிப் பதமாக இருக்க வேண்டும். இதில் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.

அரைத்துவைத்து ரெடியாக உள்ள மாவை ஒரு தாம்பாளத்தில் கொட்டிப் பரப்பி, தயாராக வைத்துள்ள வெல்லப்பாகை அதன் மேல் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கைவிடாமல் கிளறவும். நன்றாக தோசை மாவுப் பதத்துக்கு வந்தவுடன் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். இரண்டு அல்லது மூன்று நாள்கள் கழிந்த பிறகு ஒரு வாழை யிலையில் சிறுசிறு வட்டங்களாகத் தட்டி நெய்யிலோ, எண்ணெய்யிலோ பொரித்தெடுக்கவும்.

அதிரசம்
அதிரசம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குறிப்பு: மாவு ஈரப்பதமாக இருக்க வேண்டும். அதிரசம் மாவு ரெடியானதுமே பொரிக்கக் கூடாது. பாகை கீழே இறக்கி வைத்து, பெரிய தட்டில் கிளற வேண்டும். அடுப்பின் மேல் கிளறக் கூடாது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பாதாம் அல்வா
பாதாம் அல்வா

2. பாதாம் அல்வா

தேவையானவை: பாதாம் - 100 கிராம் பால் - அரை கப் சர்க்கரை - 100 கிராம் குங்குமப்பூ - கால் டீஸ்பூன் நெய் - 100 கிராம்.

செய்முறை: பாதாமை வெந்நீரில் ஊறவைத்து, தோல் நீக்கி பாலில் அரைத்துக்கொள்ளவும். மைய அரைக்க வேண்டாம். அடுப்பில் வாணலியை வைத்து, நெய்விட்டு அரைத்த பாதாம் விழுதுடன் சர்க்கரையைக் கலந்து மிதமான தீயில்வைத்து கிளறவும் (சிலர் சர்க்கரைப்பாகு செய்து கிளறுவார்கள். அவசியமில்லை). சர்க்கரை நன்றாகக் கலந்த பின் நெய்யைச் சூடாக்கி, கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கடாயில் ஒட்டாமல் சுருண்டுவரும்போது இறக்கிவைத்து குங்குமப்பூவைத் தூவிவிடவும். உடனே வேறு பாத்திரத்துக்கு மாற்றவும்.

குறிப்பு: ஏலக்காய், பச்சைக்கற்பூரம் வேண்டாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

3. ஸ்வீட் சோமாஸ்

தேவையானவை - மேல் மாவு தயாரிக்க: மைதா - 2 கப் (சலித்துக்கொள்ளவும்) ரவை - அரை கப் (வெறும் சட்டியில் வறுக்கவும்) பொடித்த சர்க்கரை - கால் கப் நெய் - கால் கப் (சூடாக்கவும்) உப்பு - அரை டீஸ்பூன் சமையல் சோடா - ஒரு சிட்டிகை. பூரணத்துக்கு: பொட்டுக்கடலை - அரை கப் வேர்க்கடலை - அரை கப் கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன் துருவிய கொப்பரை - ஒரு கப் சர்க்கரை - அரை கப் ஏலக்காய்த்தூள் - சிறிதளவு. பொரிக்க: எண்ணெய் - தேவையான அளவு

ஸ்வீட் சோமாஸ்
ஸ்வீட் சோமாஸ்

செய்முறை: ரவையை வெறும் கடாயில் வறுக்கவும். பின்னர் மைதா, சர்க்கரை, உப்பு, சமையல் சோடா, சூடான நெய் இவை அனைத்துடன் கலந்து தண்ணீர்விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். மேல் மாவு தயார்.

பூரணம் செய்யகொடுத்துள்ளவற்றில் கொப்பரையை மட்டும் நெய்யில் வறுத்துக்கொள்ளவும். மற்ற அனைத்தையும் மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். இத்துடன் கொப்பரையையும் கலந்துகொள்ளவும். சிலர் கோவா கலப்பார்கள். தேவைப்பட்டால் கோவா சேர்த்துக் கொள்ளலாம்.

பிசைந்த சோமாஸ் மாவை சிறுசிறு மெல்லிய வட்டங்களாக இட்டு, பின் ரெடியாகவைத்துள்ள பூரணத்தை நடுவில் வைத்து, இரண்டாக அரை வட்ட வடிவில் மடித்து, ஓரத்தை மைதா பேஸ்ட் கொண்டு ஒட்டவைத்து, வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

4. உக்காரை

வெல்ல ஸ்வீட் இது. பாரம்பர்யமான தீபாவளிக்குக் கட்டாயம் இந்த ஸ்வீட்டை மதுரை, திருநெல்வேலி பக்கங்களில் செய்வார்கள். தலை தீபாவளிக்கு மாப்பிள்ளைக்குக் கட்டாயம் செய்து தருவார்கள்.

தேவையானவை: பயத்தம்பருப்பு - 2 கப் கடலைப்பருப்பு - அரை கப் நெய் - அரை கப் ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன் வறுத்த முந்திரி - 50 கிராம். வெல்லப் பாகு செய்ய: வெல்லம் - கால் கிலோ தண்ணீர் - ஒரு கப்.

உக்காரை
உக்காரை

செய்முறை: பருப்புகளை சுமார் 2 மணி நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும். தண்ணீர் விடாமல் மிகவும் மென்மையாக இல்லாமல் சிறிது கொரகொரவென்று அரைக்கவும். வெல்லத்தைச் சிறிதளவு தண்ணீர்விட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அடுப்பில் வெல்லக்கரைசலைக் கொதிக்கவைத்து, பாகு பொங்கு பதத்தில் (கம்பிப்பதம் வேண்டாம்) இருக்கும்போது கீழே இறக்கி வைக்கவும்.

அரைத்த பருப்பு விழுதை அரை கப் நெய்யில் (சூடாக இருக்க வேண்டும்) போட்டு, மெல்லிய தீயில் கைவிடாமல் கிளறவும். பருப்பு நன்றாக வெந்து வாசம் வந்தவுடன் வெல்லப்பாகை விட்டுக்கிளறவும். ஏலக்காய்த்தூள் போட்டு கலந்து நெய்யில் வறுத்த முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்.

குறிப்பு: கையில் ஒட்டாமல் (உசிலி போல்) உதிர் உதிராக இருக்க வேண்டும்.

5. லேகியம்

லேகியம் இல்லாமல் தீபாவளியா? தீபாவளி பட்சணங்களுடன் இந்த லேகியமும் முக்கிய இடம் பெறும். பரம்பரை பரம்பரையாகத் தொடரும் இந்த ரெசிப்பி, நம் பாரம்பர்யத்தைப் பறைசாற்றும்.

தேவையானவை - பொடி செய்ய: சுக்கு - 50 கிராம் மிளகு - 2 டேபிள் ஸ்பூன் அரிசி திப்பிலி - 10 கிராம் சீரகம் - கால் கப் ஓமம் - கால் கப் மல்லி (தனியா) - கால் கப் சோம்பு - அரை டீஸ்பூன். பாகுக்கு: வெல்லம் - கால் கிலோ. கலக்க: நல்லெண்ணெய் அல்லது நெய் - 2 மேஜைக்கரண்டி.

லேகியம்
லேகியம்

செய்முறை: பொடி செய்ய கொடுத்துள்ள அனைத்தை யும் தனித்தனியாக வெறும் கடாயில் மிதமான தீயில் வாசம் வரும்வரை வறுத்துப் பொடித்துக்கொள்ளவும்.

வெல்லத்தைச் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டி ஒரு வாயகன்ற கனமான பாத்திரத்தில் ஊற்றி, கொதிக்கவிடவும். கம்பி பதம் வேண்டாம். நன்றாகப் பாகு வாசனை வந்து மேலே பொங்கி கொதிக்கும்போது பொடித்துவைத்துள்ள பொடியைப் போட்டுக் கிளறவும். சுருள வரும்போது கீழே இறக்கிவைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்துக் கிளறி காற்றுப் புகாத டப்பாவில் போட்டு, ஆறியவுடன் மூடவும். இல்லாவிட்டால் உள்ளே வியர்த்துப் பூஞ்சை காளான் வந்துவிடும்.

குறிப்பு: இந்த லேகியத்தைத் தீபாவளியின்போதுதான் சாப்பிட வேண்டும் என்றில்லை. வயிற்றுவலி, மசக்கை வாந்தி முதலியவற்றுக்கும் மருந்தாகக் கொடுக்கலாம். அப்போது நெய் சேர்க்க வேண்டாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism