Published:Updated:

2K kids: சுடச்சுட காலிஃபிளவர் சில்லி... தள்ளுவண்டி முருகேசன் கில்லி!

தள்ளுவண்டி முருகேசன்
பிரீமியம் ஸ்டோரி
News
தள்ளுவண்டி முருகேசன்

மூ.சுபானு

ஈரோடு மாநகரத்துல வ.உ.சி பூங்கா ரொம்ப ஃபேமஸ். அதுக்கு எதிர்ப்புறம் இருக்கு, `மகாலட்சுமி காலிஃபிளவர் சில்லி கடை'. அந்தப் பக்கம் போனாலே, ‘எங்க இங்க வராம போயிரு பாப்போம்’னு சவால் விட்டு நம்மைக் கூப்பிடும், அந்தத் தள்ளுவண்டிக் கடையிலயிருந்து வர்ற மசாலா மணம்.

கடைக்காரர் மசாலா ஒரு கை, காலிஃபிளவர் ஒரு கைனு எடுத்துப் போட்டுப் புரட்டும்போது, கண்களும் அங்கேயே அரஸ்ட் ஆகிடும். சூடான கடலை எண்ணெய் வாசம் வர, புரட்டி வெச்ச காலிஃபிளவரை எடுத்து, அப்படியே அந்த எண்ணெயில தூவிவிட்டா, எண்ணெய் அருவித் தண்ணி மாதிரி பொங்கி காலிஃபிளவர் வெந்து வர, கறிவேப்பிலையை மேல தூவி... அந்தச் சில்லி எப்போ நம்ம ப்ளேட்டுக்கு வரும்னு ஏக்கமே வந்துடும். அதை அப்படியே சுடச்சுட எடுத்துச் சாப் பிட்டா... நாக்குக்கும் நாசிக்கும் திருப்தியோ திருப்தி!

‘`ஆறு வருஷமா இந்தத் தள்ளுவண்டிக் கடைக்கு நான் ரெகுலர் கஸ்டமருங்க. இவங்க மசாலாதான் காரணம். இவங்களே அதை வீட்டில் தயாரிப்பாங்களாம்’’னு ஒரு அக்கா கஸ்டமர் ரெவ்யூ சொல்ல, ‘`நான் பக்கத்து கம்பெனியில வேலைபார்க்கிறேன். இங்க வந்து காலிஃபிளவர் சில்லி சாப்பிடலைன்னா அந்த நாள் எனக்கு முடியாது’’னு சொன்னார் ஒரு அண்ணா.

2K kids: சுடச்சுட காலிஃபிளவர் சில்லி... தள்ளுவண்டி முருகேசன் கில்லி!
2K kids: சுடச்சுட காலிஃபிளவர் சில்லி... தள்ளுவண்டி முருகேசன் கில்லி!
2K kids: சுடச்சுட காலிஃபிளவர் சில்லி... தள்ளுவண்டி முருகேசன் கில்லி!
2K kids: சுடச்சுட காலிஃபிளவர் சில்லி... தள்ளுவண்டி முருகேசன் கில்லி!
2K kids: சுடச்சுட காலிஃபிளவர் சில்லி... தள்ளுவண்டி முருகேசன் கில்லி!

‘`என் பேரு முருகேசன். பத்து வருஷமா இங்க இந்தக் கடையை நடத்திட்டு வர்றேன்...’’னு பேச ஆரம்பிச்சாரு ஓனர் அண்ணன். ‘`எனக்கு மூணு பிள்ளைங்க. அவங்களுக்காகத்தான் இந்த ஓட்டம். காலையில 5 மணிக்கு பக்கத்துல இருக்குற மார்க்கெட்டுக்குப் போய் காலிஃபிளவர் வாங் கிட்டு வருவேன். மனைவி மகாலட்சுமியோட சேர்ந்து அதையெல்லாம் வெட்டி சுத்தம் செய்யவே மதியம் ஆகிடும். அதுக்கு அப்புறம் பாத்திரம் எல்லாத்தையும் கழுவி எடுத்து வியாபாரத்துக்குத் தயாராவோம். சாயங்காலம் அஞ்சு மணி போல, வெட்டி சுத்தம் பண்ணி வெச்ச காலிஃபிளவரை எல்லாம் ரெண்டு முறை தண்ணியில கழுவி எடுப்போம். கடலை எண்ணெய்தான் பயன்படுத்துவோம். செயற்கை சுவையூட்டி, நிறமூட்டினு எதுவும் இல்லாம மசாலாவை இயற்கையான முறையில வீட்டுலதான் தயார் செய்வோம். அதுதான் ருசிக்கு முக்கிய காரணம்’’னு சொல்லிட்டு, சூடான எண்ணெய் சட்டியில காலிஃபிளவரை தூவினாரு முருகேசன்.

தள்ளுவண்டிக் கடை டேஸ்ட்டு... பெஸ்ட்டு!