Published:Updated:

`மீன் சட்டி' உணவகம்: மண்சட்டியில் கொடுவா மீன் குழம்பு; சுவையான ரசம் - சென்னைவாசிகளுக்கு ட்ரீட்

மீன் சட்டி உணவகம்

இறுதியாக இந்த பேக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்வீட் பீடா வேற ரகம். பாதம், முந்திரி, குல்கந்த், கல்கண்டு என ரிச் லுக் தரும் இந்த ஸ்வீட் பீடாவை பார்க்கும்போதே, நாவில் எச்சில் ஊறுகிறது... `மீன் சட்டி' உணவகத்தில் என்ன ஸ்பெஷல்?

`மீன் சட்டி' உணவகம்: மண்சட்டியில் கொடுவா மீன் குழம்பு; சுவையான ரசம் - சென்னைவாசிகளுக்கு ட்ரீட்

இறுதியாக இந்த பேக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்வீட் பீடா வேற ரகம். பாதம், முந்திரி, குல்கந்த், கல்கண்டு என ரிச் லுக் தரும் இந்த ஸ்வீட் பீடாவை பார்க்கும்போதே, நாவில் எச்சில் ஊறுகிறது... `மீன் சட்டி' உணவகத்தில் என்ன ஸ்பெஷல்?

Published:Updated:
மீன் சட்டி உணவகம்
அசைவப் பிரியர்கள் அனைவரின் ஃபேவரைட் லிஸ்டிலும் மீன் குழம்புக்கு எப்போதுமே தனி இடமுண்டு! அதுவும் கிராமப்புறங்களில், மண்சட்டியில் வைக்கப்படும் மீன் குழம்புக்கென்று ஒரு தனி ருசி உண்டு. சென்னையில் வசிக்கும் பெரும்பாலானவர்களின் வீடுகளில் மண்சட்டியில் மீன் குழம்பு வைக்கப்படுவதில்லை. இங்கிருக்கும் சில உணவகங்களில் ருசியான மீன் குழம்பு கிடைத்தாலும், அவையும் மண்சட்டியில் வைக்கப்பட்டதாக இருப்பதில்லை. ஆனால் சென்னையிலுள்ள ஒரு உணவகத்தில், மண்சட்டியில் மீன் குழம்பு வைத்து, அதை மண்சட்டியிலேயே ஆன்லைன் டெலிவரியும் செய்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம்! இதைச் செய்துவருவது ஈக்காட்டுத்தாங்கலில் இருக்கும் `மீன் சட்டி' உணவகம்தான்!

நேற்று (ஏப்ரல் 21) மீன் சட்டியின் க்ளவுட் கிச்சன் மற்றும் Experience Store, ஈக்காட்டுத்தாங்கலிலுள்ள அம்பாள் நகரில் திறக்கப்பட்டிருக்கிறது. கேரள உணவகமான `கப்பா சக்கா கந்தாரி'யின் நிறுவனரும், இந்தியாவின் முக்கியமான சமையல் கலைஞர்களில் ஒருவருமான ரெஜி மேத்யூ-வும், நீயா நானா கோபிநாத்தும் இணைந்து மீன் சட்டியின் இந்த க்ளவுட் கிச்சனை திறந்துவைத்தனர்.

மீன் சட்டி திறப்பு விழா
மீன் சட்டி திறப்பு விழா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீன் சட்டியின் நிறுவனர்களான அரவிந்த் சுரேஷும், ரிச்சி ரிச்சர்டும் இந்த உணவகம் குறித்து உற்சாகத்துடன் நம்மிடம் பேசினார்கள். ``நாங்க இரண்டு பேரும் கல்லூரி நண்பர்கள். கல்லூரி முடிந்ததும் என்ன செய்யுறதுன்னு தெரியாம இருந்த சமயத்துல, ஒரு பெரிய பர்கர் நிறுவனத்தோட ஃப்ரான்சைஸ் எடுத்து நடத்தலாம்னு முடிவு பண்ணினோம். ஆனால், அந்த நிறுவனத்தோடு டீலுக்கு ரூ.40 லட்சம் செலவாகும்னு சொன்னாங்க. பர்கர் விற்கிறதுக்கு 40 லட்சம் ரூபாயா... அப்படினு யோசிச்சுட்டுருந்தபோதுதான் நாமலே இது மாதிரி பிராண்ட உருவாக்கி, அதை ஏன் ஃப்ரான்சைஸா மாத்தக்கூடாதுனு நினைச்சோம். அப்படி வந்ததுதான் இந்த மீன் சட்டி ஐடியா'' என்கிறார்கள் புன்னகையுடன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`ஏன் மற்ற அசைவ உணவுகளை விட்டுட்டு மீன தேர்ந்தெடுத்தீங்க?' என்ற கேள்விக்கு, ``என்னோட அம்மா நல்லா மீன் குழம்பு வைப்பாங்க. எங்க வீட்டுக்கு வர எல்லோருமே எங்க அம்மாகிட்ட, `நீங்க வைக்கிற மீன் குழம்பு சூப்பரா இருக்கு... ஏன் இதை விற்பனை செய்யக்கூடாது'னு கேட்பாங்க. அப்ப எல்லாம் நாங்க அதைப் பெரிசா எடுத்துக்கல... ஆனா, நம்மலே ஒரு உணவு தயாரிப்பில் ஈடுபடணும்ங்கிற முடிவு எடுத்ததுக்கு அப்புறம், அம்மாவோடு ரெசிப்பியான மண்சட்டி மீன் குழம்பையே விற்கலாம்ங்கிற முடிவுக்கு வந்தோம்'' என்கிறார் அரவிந்த் சுரேஷ்.

ரிச்சி ரிச்சர்ட், அரவிந்த் சுரேஷ்
ரிச்சி ரிச்சர்ட், அரவிந்த் சுரேஷ்

`என்னென்ன மீன் வெரைட்டி யூஸ் பண்றீங்க... என்னென்ன விற்பனை பண்றீங்கனு கொஞ்சம் சொல்லுங்களேன்?' என்று நாம் கேட்க, ``நாங்க கொடுவா மீன் மட்டும்தான் சமைக்குறோம். எங்ககிட்ட ஒரே ஒரு ஃபேமிலி பேக் மட்டும்தான் கிடைக்கும். ஒரு ஃபேமிலி பேக்குக்கு, ஒரு கிலோ கொடுவா மீன் ஒதுக்கிடுவோம். அந்த பேக்கில்... கொடுவா மீனின் தலை உட்பட மூன்று, நான்கு மீன் துண்டுகளுடன் மண்சட்டியில் வைத்த மீன் குழம்பு, ஆறு வறுத்த மீன் துண்டுகள், 500 மில்லி லிட்டர் ரசம், ஒன்றரை கிலோ சாதம், நான்கு ஸ்வீட் பீடாக்கள் ஆகியவை இருக்கும். மீன் குழம்பை மண்சட்டியிலேயே பேக் பண்ணி அனுப்புவோம். அந்தக் குழம்ப ஊத்திக்க கொட்டாங்குச்சியில் செஞ்ச ஒரு கரண்டியும் உள்ள இருக்கும். முடிந்த அளவுக்கு ப்ளாஸ்டிக்கை தவிர்த்துவிட்டு, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருள்கள வெச்சு பேக் பண்றோம். ஒரு ஃபேமிலி பேக்கை மூன்றிலிருந்து நான்கு பேர் வரை சாப்பிடலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாங்க கடந்த ஆறு மாசமா இந்த பிசினஸ் செய்யுறோம். இதுவரைக்கும் 5,000-த்துக்கும் அதிகமான ஃபேமிலி பேக்குகளை விற்பனை பண்ணியிருக்கோம். இதுக்கு முன்னாடி க்ளவுட் கிச்சன்ல தயார் பண்ணி, ஆன்லைன் ஆர்டர்களுக்கு மட்டும் டெலிவரி பண்ணிட்டிருந்தோம். இப்போதான் க்ளவுட் கிச்சனோட சேர்த்து, Experience Store-ரையும் ஓப்பன் பண்ணியிருக்கோம். இது க்ளவுட் கிச்சனா மட்டுமே இருந்திறக்கூடாது, அதே சமயம் சாதாரண உணவகமாகவும் இருக்கக்கூடாதுனு நினைச்சோம். ஆன்லைனிலும் நேரிலும் ஒரே அனுபவத்தை தருவதால் இதை `எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்' என்கிறோம். ஆன்லைனில் ஆர்டர் பண்ண தெரியாதவர்களுக்காகத்தான் இந்த உணவகம் திறந்திருக்கிறோம். அவங்க நேர்ல வந்த சாப்பிடும்போது, ஆன்லைன்ல எப்படி ஆர்டர் பண்ணனும்கிறதையும் கற்றுக் கொடுப்போம். மத்தபடி நாங்க ஆன்லைன் டெலிவரிலதான் அதிகமா கவனம் செலுத்துறோம்'' என்றவர்களிடம் எந்த ஆப்ல ஆர்டர் பண்ணலாம்னு கேட்டோம்.

மீன் சட்டி
மீன் சட்டி

அதற்கு, ``எங்களோடு இணையதளமான Meensatti.com -ல் ஆர்டர் பண்ணலாம். அடுத்த நாள் வேணும்னா, முதல் நாள் ராத்திரி 11 மணிக்குள்ள எங்க வெப்சைட்ல ஆர்டர் பண்ணலாம். சென்னை சுற்றுவட்டாரத்தில் 30 கி.மீ தொலைவிலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கு நாங்களே டெலிவரி செய்கிறோம். ஒருவேளை உடனடியா வேணும்னா சொமேட்டோ, ஸ்விகியிலும் ஆர்டர் பண்ணலாம். பக்காவா பேக் பண்ணி சூடா வீட்டுக்கு அனுப்பிடுவோம்'' என்றார்கள்.

Meen satti
Meen satti

`ஏன் வேறெந்த அசைவ உணவையும் ட்ரை பண்ணல?' என்ற கேள்விக்கு, ``கொடுவா மீன் குழம்பு நல்லா வருது. நல்லா வர விஷயத்த மட்டும் ஒழுங்கா பண்ணுவோமேனுதான். இதுக்கான டிமாண்டும் அதிகமா இருக்கு, அதுனால இதை மட்டும் சரியா பண்ணனும்னு நினைக்கிறோம். எதிர்காலத்துல வேற மீன் வெரைட்டி பண்றதுக்கான வாய்ப்புகளும் இருக்கிறது. இப்போதைக்குப் பல கிளைகள் ஆரம்பித்து, இந்த மீன் சட்டி ஃபேமிலி பேக்க உலகம் முழுக்க கொண்டு சேர்க்கணும் அப்படிங்கிறதுதான் ஆசை. நம்மூர் பிரியாணி எப்படி உலகம் முழுக்க பிரபலமானதோ, அதேமாதிரி மீன் குழம்பையும் உலகம் முழுவதும் பிரபலப்படுத்துவோம்'' என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் அரவிந்தும், ரிச்சி ரிச்சர்டும்.

சென்னையில் இயங்கும் Kiss Flow நிறுவனத்தின் சி.இ.ஓ சுரேஷ் சம்பந்தத்தின் மகன் தான் அரவிந்த் சுரேஷ். இது தொடர்பாக நம்மிடம் பேசிய சுரேஷ் சம்பந்தம், ``இது முழுக்க முழுக்க இந்த இரு இளைஞர்களின் முயற்சிதான். இந்த மீன் சட்டியின் நோக்கம் என்னவென்றால், டோமினோஸ் போன்ற ஒரு கம்பெனி உலகம் முழுக்க டப்பாவில் போட்டு பீட்சாவை விற்பது போல, நம் தமிழ்நாட்டின் மீன் குழம்பை ஒரு பிரண்டாக மாற்றி, அதை உலகம் முழுக்க கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான்'' என்றார்.

சுரேஷ் சம்பந்தம்
சுரேஷ் சம்பந்தம்

`மீன் சட்டி' ஃபேமிலி பேக்கின் சுவை எப்படி?

பேட்டி முடிந்தவுடன் நம் கையில் ஒரு மீன் சட்டி ஃபேமிலி பேக்கை கொடுத்து, `சாப்பிட்டு பார்த்துட்டு சொல்லுங்க' என்றார்கள். மண்சட்டியில் பேக் செய்யப்பட்டிருந்த அந்த மீன் குழம்பின் நிறமே நமக்குப் பசியைத் தூண்டியது. சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளியை வதக்கி, அதில் மாங்காவையும் சேர்த்து வைக்கப்பட்டிருந்த மீன் குழம்பைச் சாதத்தில் பிசைந்து சாப்பிடும்போது நாவில் நல்ல சுவை நிற்கிறது. புளி தூக்கலாக இருப்பது மீன் குழம்பின் ஹைலைட்! மீன் துண்டுகளோடு, மீன் தலையும் சேர்த்து குழம்பில் போடப்பட்டிருப்பதால், சுவை அடுத்தகட்டத்துக்குச் செல்கிறது.

மீன் குழம்புக்கு நிகரான சுவையில் ரசமும் பிரமாதமாகவே இருக்கிறது. வறுத்த மீன் துண்டுகள் வீட்டில் செய்வது போல ஒரு நார்மலான நல்ல சுவையில் இருக்கின்றன. ஒரு ஃபுல் மீல்ஸுக்கான மெனுவில், கெட்டித் தயிர் மட்டும் மிஸ்ஸிங்! இறுதியாக இந்த பேக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்வீட் பீடா வேற ரகம். பாதம், முந்திரி, குல்கந்த், கல்கண்டு என ரிச் லுக் தரும் இந்த ஸ்வீட் பீடாவை பார்க்கும்போதே, நாவில் எச்சில் ஊறுகிறது. அதை வாயில் போட்டு மெல்லும்போது, மனநிறைவுடன் ஒரு ஹெவன்லி ஃபீல் நமக்குக் கிடைப்பது நிச்சயம்!

இந்த மீன் சாப்பாட்டை நேற்றிரவு சாப்பிட்ட நமக்கு, அடுத்த நாளான இன்று வயிற்றுக்கு எந்தப் பிரச்னையும் வரவில்லை. அந்த வகையில் ஒரு தரமான, நல்ல மீன் விருந்து சாப்பிட நினைக்கும் சென்னைவாசிகளுக்கு `மீன் சட்டி'யின் இந்த ஃபேமிலி பேக் ஒரு MUST TRY!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism