Published:Updated:

புதுக்கோட்டை முட்டை மாஸ், தஞ்சாவூர் மட்டன் கேசரி.. தமிழகத்தின் சில சிக்னேச்சர் உணவு வகைகள்!

முட்டை மாஸ்
Listicle
முட்டை மாஸ்

பாரம்பர்ய நாட்டுக்கோழி குழம்பு முதல் இன்றைய வடகறி வரை, தென்னிந்தியாவின் உணவு வகைகளுக்கு நிகர் வேறெதுவும் இல்லை. அதிலும், பல வித்தியாச உணவுகளின் பிறப்பிடம் தமிழகம்தான். அந்த வகையில் தமிழ்நாட்டின் சில சிக்நேச்சர் உணவு வகைகளைப் பார்க்கலாம்...


1
தஞ்சாவூர் மட்டன் கேசரி மாஸ்

தஞ்சாவூர் மட்டன் கேசரி மாஸ்:

தலையாட்டி பொம்மை, பெரிய கோயில், வீணை உற்பத்தி, ஓவியம் போன்றவற்றுக்குப் பிரசித்திபெற்ற தஞ்சாவூரில், ஏராளமான பாரம்பர்ய உணவுகளும் ஃபேமஸ். பதினைந்தாம் நூற்றாண்டில், சோழர்கள் ஆட்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பாண்டியர்கள் மற்றும் மராத்தியர்கள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை மராத்தியர்கள் தங்கள் ஆட்சியை இங்கு தொடர்ந்தனர். இன்றும் தஞ்சாவூரில், மராத்திய வம்சாவளிகள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் அறிமுகப்படுத்திய சில உணவு வகைகளில் `மட்டன் கேசரி மாஸ்' பெரும்பாலானவர்களின் ஃபேவரிட். ஆட்டுத் தொடைப் பகுதியை நன்கு வேகவைத்து, மசித்து, அதோடு குங்குமப்பூ, இஞ்சிப் பூண்டு சோம்பு விழுது மற்றும் மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் மட்டன் கேசரி மாஸ் ரெடி. இறுதியில் மொறுமொறுப்பிற்காகக் கசகசாவைச் சேர்த்துக்கொள்கிறார்கள்.

இதுபோன்ற பல மராத்திய உணவுகள் தஞ்சையைச் சுற்றி சுவைக்கலாம். இனிப்பு வகைகளில் `சந்திரகலா' இங்கு மிகவும் பிரபலம். அதோடு, நாற்றங்காய் நன்னாரி சர்பத், பால் சர்பத், சுருள் அப்பம் போன்றவையும் மிஸ் செய்துவிடாதீர்கள்.


2
திண்டுக்கல் ஜிலேபி

திண்டுக்கல் ஜிலேபி:

சீரகச் சம்பா அரிசியில் தயாராகும் மண் மணம் மாறாத `பிரியாணிக்கு' மட்டுமல்ல, ஸ்பெஷல் ஜீராவில் நன்கு ஊறிய ஜிலேபிக்கும் திண்டுக்கல் ஃபேமஸ் பாஸ். உளுந்து மற்றும் அரிசி மட்டுமே இந்த ஜிலேபி செய்வதற்குத் தேவையானப் பொருள்கள். சரியான பதத்துக்கு ஜிலேபி மாவைத் தயார் செய்து, சுடச்சுட எண்ணெய்யில் பொரித்து எடுத்து, நெய் கலந்த சர்க்கரை பாகில் ஊறவைத்து எடுத்தால் திண்டுக்கல் ஸ்பெஷல் ஜிலேபி ரெடி. முழுக்க முழுக்க இயற்கைப் பொருள்களைக்கொண்டு மட்டுமே தாயாராகும் இந்த ஜிலேபிக்கு உலகமெங்கிலுமிருந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

விதவிதமான பூட்டு மட்டுமல்ல வித்தியாசமான பல உணவு வகைகளும் இங்குண்டு. காரசாரமான `நத்தம்' முட்டைக் கறி, ஊறவைத்த செட் பரோட்டா, கறி இட்லி போன்றவை பாரம்பர்ய மணம் மாறாமல் இங்கு கிடைக்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

3
சேலம் எசென்ஸ் தோசை

சேலம் எசென்ஸ் தோசை:

`சேலம்' என்றாலே மாம்பழம்தான் நினைவுக்கு வரும். ஆனால், இங்கு பல வித்தியாச உணவு வகைகளும் கிடைக்கும். அந்த வகையில், `எசென்ஸ்' தோசை இங்கு மிகவும் ஃபேமஸ். வெங்காயம், இஞ்சிப் பூண்டு விழுது மற்றும் மல்லித் தூள் முதலியவற்றை எண்ணெய்யில் தாளித்து, அதில் ஆட்டுக்கறி மற்றும் தண்ணீர் சேர்த்துச் சிறப்பு எசென்ஸ் ஒன்றைத் தயார் செய்துகொள்கின்றனர்.

பிறகு, பிரத்யேகமாக தயாரிக்கப்படும் மசாலாப் பொருள்களை, செய்துவைத்திருந்த எசென்ஸோடு கலந்துகொள்கின்றனர். இதைத் தோசையோடு இணைத்தால், `எசென்ஸ் தோசை' ரெடி. மேலும் இங்கு, தட்டு வடை செட், கொள்ளுக் குழம்பு, நாட்டுக்கோழி ரோஸ்ட் போன்றவையும் ருசித்து மகிழலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


4
புதுக்கோட்டை முட்டை மாஸ்

புதுக்கோட்டை முட்டை மாஸ்:

வேகவைத்த முட்டைத் துண்டுகளோடு, எண்ணெய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய்த் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் சைவ குருமா அல்லது அசைவ சால்னா போன்றவற்றை ஒன்றாய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கினால், சுவையான முட்டை மாஸ் தயார். எளிதில் தயாராகக்கூடிய இந்த முட்டை மாஸ், கோதுமை பரோட்டாவுக்கு பக்கா காம்போ. சில ஆண்டுகளுக்கு முன்பு, தொழிலாளர்களுக்குப் பெரும்பாலும் பரிமாறப்பட்ட இந்த முட்டை மாஸ், தற்போது புதுக்கோட்டையின் அடையாள உணவாகவே மாறியிருக்கிறது. மேலும், இங்கு சென்றால் இடியாப்பம்-பாயா சுவைப்பதற்கும் தவறவிடாதீர்கள்.

இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் ஏராளமான சிக்நேச்சர் உணவு வகைகள் உள்ளன. அந்த வகையில் உங்க ஊர் ஸ்பெஷாலிட்டி என்ன? 


தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism