பாரம்பர்ய உணவுப் பழக்கங்களைப் புறந்தள்ளிவிட்டு, நம்மில் பலரும் இன்றைய அவசர உலகத்துக்கேற்றவாறு உணவுப் பழக்கத்துக்கு மாறிக்கொண்டோம். இவை மாறிவரும் சூழலுக்கேற்ப நோய்களின் தாக்கத்தை அதிகரிக்கிறது. எனவே, நாம் இயற்கை நிற உணவுகளோடு வாழப் பழகிக்கொள்வதே சிறந்தது. இதைக் கருத்தில்கொண்டு சமையற்கலைஞர் எஸ்.சாந்தி, இந்த இதழ் 32 பக்க இணைப்பில் 30 வகை இயற்கை நிற உணவு வகைகளைத் தயாரித்து வழங்குகிறார்.

தேவை:

பாலக்கீரை - ஒரு கட்டு பச்சை மிளகாய் - 3 புதினா - 2 கைப்பிடி அளவு பச்சரிசி - 4 கப் உளுந்து - முக்கால் கப் பொட்டுக்கடலை - ஒரு கைப்பிடி அளவு வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் உப்பு, நீர் - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

பச்சரிசியைக் கழுவி உலர்த்தவும். உளுந்தை வெறும் வாணலியில் வறுக்கவும். இவற்றுடன் பொட்டுக்கடலையைச் சேர்த்து மெஷினில் கொடுத்து மாவாக அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்த மாவில் உப்பு, நீர், சீரகம், பெருங்காயத்தூள், வெண்ணெய் சேர்த்து நன்கு கையால் பிசறி கலந்துவிடவும். பிறகு சுத்தம் செய்த பாலக்கீரை, புதினா, பச்சை மிளகாய், நீர் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு மையாக அரைக்கவும் (கொரகொரப்பாக இருந்தால் வடிகட்டிவிடவும்). இந்தச் சாற்றை மாவில் சேர்த்து முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும். மாவை நாழியில் போட்டு சூடான எண்ணெயில் முறுக்குகளாகப் பிழிந்து எடுக்கவும்.

பயன்:

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்கோப்பாக வைக்க உதவும். புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கும். எலும்பு அடர்த்திக்கு உதவும். ரத்த சோகையை தடுக்கும். ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளதால் கர்ப்பிணிகள் சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ, கனிமச் சத்துகள் அதிகம் உள்ளன.