Published:Updated:

கிறிஸ்துமஸ்க்கு வீட்டிலேயே செய்து சாப்பிட ஹெல்தி எக்லெஸ் மஃபின் ரெசிப்பி! #FoodTips #Video

`இந்த மஃபினில், கொஞ்சம்கூட கலோரி அபாயம் கிடையாது!’

எக்லெஸ் மஃபின்
எக்லெஸ் மஃபின்

கிறிஸ்துமஸ் என்றாலே நம்மில் பலருக்கும் கேக், குக்கீஸ், மஃபின்ஸ் போன்றவை ஞாபகத்துக்கு வரும். ஆனால், இவை எல்லாமே மைதா, வெண்ணெய், சர்க்கரை என ஹை - ஃபேட் உணவுப்பொருள்களால செய்யப்படுவதால், உடம்புக்கு ஏதாவது பிரச்னை வருமோ என்ற பயமும் கூடவே வரும். அதனாலயே பலர் இவற்றைத் தவிர்ப்பதுண்டு.

எக்லெஸ் மஃபின்
எக்லெஸ் மஃபின்

இந்த கிறிஸ்துமஸுக்கு அந்தக் கவலையே வேண்டாம் மக்களே..! வீட்டிலேயே ஹெல்தியா செய்து சாப்பிட, எக்லெஸ் மஃபின் ரெசிப்பியைப் பரிந்துரைக்கிறார், சமையல் கலைஞர் ஜானகி அஸாரியா.

தேவையானவை :

கோதுமை மாவு - ஒரு கப், வெல்லத்தூள் - முக்கால் கப், பால் - முக்கால் கப், ஒரு கப் தயிர், கால் கப்-சூரியகாந்தி எண்ணெய், கால் கப்-சாக்கோ சிப்ஸ், கால் கப்-வெனிலா எசென்ஸ், ஒரு டீஸ்பூன்- பேக்கிங் சோடா, அரை டீஸ்பூன்-பேக்கிங் பவுடர், ஒரு டீஸ்பூன்-கான்ஃப்ளார் அல்லது வெனிலா, கஸ்டர்ட் பவுடர்- 2 டேபிள்ஸ்பூன், வினிகர்- ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு

இந்த கிறிஸ்துமஸுக்கு வீட்டிலேயே செய்து சாப்பிட ஹெல்த்தி எக்லெஸ் மஃபின் ரெசிப்பி! #Recipe #MuffinRecipe

Posted by Vikatan EMagazine on Monday, December 23, 2019

மஃபின் கலவை தயாரிக்க:

கண்ணாடி பவுல் - ஒன்று, மஃபின் ட்ரே - ஒன்று

கப் கேக் பேக் செய்ய:

பேப்பர் கப்ஸ் (பேப்பர் கப்ஸ் இல்லாதவர்கள், ட்ரேயில் எண்ணெய் தேய்த்து - பிரஷ் மூலம் அதைச் சுத்தப்படுத்தி, கப் உதவியின்றி அப்படியே பயன்படுத்தலாம்.

செய்முறை:

கோதுமை மாவு மற்றும் கான்ஃபளாரைச் சேர்த்து, அவற்றை நன்கு சலித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். கண்ணாடி பவுலில் தயிர், பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடரைச் சேர்த்து, நன்கு கலக்கி, ஐந்து நிமிடங்களுக்கு அப்படியே வைத்துவிடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து, தயிரிலிருந்து நன்கு நுரை வந்துவிடும். அதன்பின், அதில் சூரியகாந்தி எண்ணெய், வெனிலா எசென்ஸ் மற்றும் வெல்லத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இதற்கு, எலெக்ட்ரிக் பிளெண்டர் வைத்திருப்பவர்கள், அதையே பயன்படுத்தலாம். இல்லாதவர்கள், விஸ்க் (Whisk) பயன்படுத்தவும். நன்கு கலந்தபிறகு, வினிகர் மற்றும் உப்பைச் சேர்த்துக்கொள்ளவும்.

ஜானகி அஸாரியா
ஜானகி அஸாரியா

இப்போது, சலித்துவைத்துள்ள கோதுமை மாவு - கார்ன் ஃபளாரை கொஞ்சம் கொஞ்சமாக அதில் சேர்த்துக்கொண்டே வரவும். இடையிடையே, மாவின் திடத்தன்மைக்கு ஏற்ப கொஞ்சம் கொஞ்சமாகப் பால் சேர்க்க வேண்டும். இந்த மாவுக் கலவை, ரொம்பவும் திரவமாகவும் இருக்கக்கூடாது; ரொம்பவும் திடமாகவும் இருக்கக்கூடாது. அப்படியொரு நிலைக்கு வரும்வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கலவை தயாரானவுடன், சாக்கோ சிப்ஸில் பாதியை இதில் சேர்த்து லேசாகக் கிளறிக்கொள்ளவும். அவ்வளவுதான்... ஹெல்த்தி மஃபினுக்கான கலவை தயார்.

10 நிமிடங்களில் தேங்காய்ப்பால் புலாவ்... செய்வது எப்படி?! #FoodTips #Video

கலவையை, மஃபின் ட்ரேயில் ஊற்றவும். கலவை `பேக்' ஆகும்போது பொங்கிவரும் என்பதால், ட்ரே ஒவ்வொன்றிலும் முக்கால் அளவுக்குக் கலவையை ஊற்றினால் போதுமானது. இப்போது, மீதமுள்ள சாக்கோ சிப்ஸை, ட்ரேயிலுள்ள கலவைமீது தூவிக்கொள்ளவும். ட்ரேயை அப்படியே மைக்ரோவேவ் அவனில் வைத்து, அதிகபட்சமாக 15 - 20 நிமிடங்களுக்கு பேக் செய்து எடுத்தால், ஹெல்த்தி எக்லெஸ் மஃபின் ரெடி. ட்ரேயை வைப்பதற்கு முன் மைக்ரோவேவ் அவனை, கட்டாயம் ப்ரீ ஹீட் செய்திருக்க வேண்டும். பத்து நிமிடங்கள் 180 டிகிரியில் அவன் `ஆன்' செய்த நிலையில் இருந்திருந்தால்தான், ப்ரீ ஹீட் வெப்பநிலைக்கு அது வந்திருக்கும். ஆகவே, நேர அளவுகளில் கவனமாக இருக்கவும். வெளியில் எடுத்து பத்து நிமிடங்கள் கழித்து, மஃபினைப் பரிமாறவும்.

எக்லெஸ் மஃபின்
எக்லெஸ் மஃபின்

நன்மைகள்:

* இந்த மஃபினில், கொஞ்சம்கூட கலோரி அபாயம் கிடையாது!

* மைதா, வெண்ணெய், வெள்ளைச் சர்க்கரை போன்றவற்றையெல்லாம் உபயோகப்படுத்தாதால், இது முழுக்க முழுக்க ஆரோக்கியமான உணவாக இருக்கும்.