Published:Updated:

"ராயர் மெஸ்ஸுனு ஏன் பேர் வந்துச்சு?"- 90 வருட மெஸ்ஸின் சுவையான சரித்திரம்

"ஜெயகாந்தன், பிரபஞ்சன் தொடங்கி எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா என எழுத்தாளர்கள் பலர் எங்க ரெகுலர் வாடிக்கையாளர்கள்."

ராயர் மெஸ்
ராயர் மெஸ்

"மாற்றம் ஒன்றுதான் மாறாதது"ன்னு சொல்லி தினம்தினம் மாறிட்டு வர்ற இந்த உலகத்துல, கிட்டத்தட்ட 90 வருஷங்களா ஓர் உணவகம் தங்களோட உணவு மெனுவக்கூட மாற்றாம நான்காவது தலைமுறையை நோக்கி வெற்றி நடைபோட்டுட்டு இருக்காங்கன்னா, அது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்தாங்க.

ராயர் மெஸ்
ராயர் மெஸ்
10 நிமிடங்களில் தேங்காய்ப்பால் புலாவ்... செய்வது எப்படி?! #FoodTips #Video

"பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை"னு  சொல்வாங்க. அது மாதிரி சென்னை, மயிலாப்பூர்ல இருக்குற ராயர் மெஸ்ஸுக்கும் அறிமுகம் தேவையில்லைங்க. 

எந்தவொரு விஷயமா இருந்தாலும், அது சாதாரணமா வெற்றி அடைஞ்சிடுறது இல்ல.  அந்த வெற்றிக்குப் பின்னாடி நிறைய பேரோட உழைப்பும் கஷ்டமும் மறைஞ்சிருக்கும். அது மாதிரி ராயர்'ஸ் மெஸ்ஸுங்கிற இந்த குட்டி சாம்ராஜ்ஜியம் வாடிக்கையாளர்களோட மனசுல கொடிகட்டிப் பறக்குறதுக்கான காரணங்களைப் பார்த்துடலாமா...

90-வருடங்களா உணவு மெனுகூட மாறலன்னு சென்னேன்ல, உணவோட சுவையும் தரமும்கூட மாறலைங்கிறதுதான் ஹைலைட்! இட்லி, வடை, பொங்கல், காபி இவை மட்டும்தான் இந்த உணவகத்தோட ரெகுலர் மெனு.

ராயர் மெஸ்
ராயர் மெஸ்

என்னாது... இட்லி, வடை, பொங்கலா..? நான் இதையெல்லாம் தொட்டுக்கூட பார்க்க மாட்டேன்னு சொல்றவங்களா நீங்க? ஒரு முறை வந்து இங்க சாப்டீங்கன்னா இட்லி, வடைக்கு ஃபேனாவே மாறிடுவீங்க! ஓவர் பில்டப்லாம் இல்லீங்க. உண்மையத்தான் சொல்றேன். அந்த ருசிக்குக் காரணம், இங்க சமைக்கிறவங்களோட கைப்பக்குவமும் பரிமாறுறவங்களோட உபசரிப்பும்தான்.

சாதாரணமாவே... ஒரு ஹோட்டல்ல சமைக்கிறதுக்கு, பரிமாறுறதுக்கு, பில் போடுறதுக்குன்னு தனித்தனியா ஆட்கள் இருப்பாங்க. ஆனால், ராயர்'ஸ் மெஸ்ல இவை எல்லாத்துக்குமே இரண்டு பேர்தாங்க. அவங்க இரண்டு பேரும் அண்ணன்-தம்பி.  இந்த மெஸ்ஸுக்கு அவங்கதான் முதலாளிகள்.  

குமார், மோகன்
குமார், மோகன்
``உணவகங்களுக்கு இனி எங்கள் ஹைஜீன் ரேட்டிங் முக்கியம்!" - உணவுப் பாதுகாப்புத் துறை அறிவிப்பு

இவங்க ஏன் சமைக்குறதுக்கு யாரையும் வேலைக்கு வைக்கல தெரியுமா? இந்த உணவகத்துக்குனே தனி ருசி இருக்காம். அது வெளியில் இருந்து சமைக்க வரவங்களுக்கு வராதாம்.  அதனால்தான் உணவகத்த விரிவுபடுத்தாம, தங்களால முடிஞ்ச அளவுக்கு மட்டும் உணவு தயார் செஞ்சி, தாங்களே வாடிக்கையாளர்களை கவனிச்சிட்டு இருக்காங்க. இப்போ, சமையல் எல்லாம் இந்த உணவகத்தோட உரிமையாளர் குமார்தான். இவரோட தாத்தா 1930-களில் தொடங்கியது இந்த மெஸ்.

அப்போதிலிருந்தே இந்த மெஸ் ரொம்பப் பிரபலம். சினிமா, அரசியல், இலக்கியத் துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் நிறைய பேர் இங்கே வாடிக்கையாளர்கள்.

மோகன்
மோகன்

பிரபலங்கள் எல்லாம் வர்றாங்கன்னா கண்டிப்பா பெரிய உணவகமாதான் இருக்கும்னு நினைச்சீங்கன்னா அதுதான் இல்ல. அதிகபட்சமா பதினைந்து பேர்தான் இங்கு அமர்ந்து சாப்பிடலாம். நிறைய பேர் வெயிட் பண்ணி கூட சாப்பிட்டுட்டு போவாங்க. அப்படி என்னதான் இருக்கு இந்த மெஸ்ல? வாங்க அதோட உரிமையாளர் மோகனிடமே கேட்டுவிடலாம்.

"எங்களுக்கு பூர்விகம் கர்நாடகம்.  எங்க தாத்தா 70 வருஷம் முன்னாடி மெட்ராஸுக்கு வந்து இந்தக் கடையை ஆரம்பிச்சார். கர்நாடகாவிலிருந்து வந்தவங்களை ராயர்னுதான் சொல்வாங்க. அதனால, 'ராயர்ஸ் கஃபே’ங்கிற பேர்லயே ஹோட்டல் ஆரம்பிச்சிருக்கார். கஃபே-ன்னு சொல்றீங்க. ஆனா, மெஸ்னு இருக்கேன்னு உங்களுக்கு சந்தேகம் வரலாம்.  

ராயர் மெஸ்
ராயர் மெஸ்

ஜெயகாந்தன், பிரபஞ்சன் தொடங்கி எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதானு எழுத்தாளர்கள் பலர் எங்க ரெகுலர் வாடிக்கையாளர்கள். சோ, விவேக், ஜீவன் மாதிரி நிறைய சினிமா பிரபலங்களும் இங்க ரெகுலரா வந்து சாப்பிடுவாங்க.

"எங்க மெஸ்ல வந்து சாப்பிடுறவங்க, அவங்க வீட்டுல சாப்பிடுற மாதிரி உணரணும். அதனாலதான் வேலைக்குக்கூட யாரையுமே வெச்சுக்காம நாங்களே எல்லா வேலைகளையும் செய்றோம்.  நிறைய ஹோட்டல் உரிமையாளர்கள் எங்கிட்ட வந்து, 'உங்க மெஸ் பேர மட்டும் எங்க ஹோட்டலுக்கு வச்சிக்கிறோம். அதுக்காக எவ்வளவு பணம் வேணும்னாலும் தரோம்'ன்னு சொன்னாங்க. ஆனா நாங்க ஒத்துக்கல. எங்களுக்கு பணம் முக்கியம் இல்ல. வாடிக்கையாளர்களோட மனநிறைவுதான் முக்கியம்" என்றார் மோகன்.

ராயர் மெஸ்
ராயர் மெஸ்

பணத்தை மட்டுமே பிரதானமாகக் கருதி வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தைக்கூட ஒரு பொருட்டாக நினைக்காமல், பல உணவகங்கள் இயங்கிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், 'ராயர் மெஸ்' போன்ற உணவகங்கள் நிச்சயம் கொண்டாடப்பட வேண்டியவைதான்.