Election bannerElection banner
Published:Updated:

``இனி வீட்டு முறை உணவுகளும் ஆன்லைனில்...!" - ஸ்விக்கியின் புதிய ஐடியா

உணவு
உணவு

தற்போது ஸ்விக்கி நிறுவனம் வீட்டு முறை உணவுகளையும் தங்களது ஆன்லைன் புட் டெலிவெரியில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது.

ந்த ஆண்ட்ராய்டு யுகத்தில் ஷாப்பிங் முதல் சாப்பாடுவரை எல்லாமே ஆன்லைனிலேயே என்றான பிறகு ஆன்லைனில் வியாபாரம் செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே செல்கிறது. குறிப்பாக ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உணவு
உணவு

வேலைக்குச் சென்று இரவு களைத்துத் திரும்பும் கணவன் மனைவிக்கும் வாடகை அறைகளில் தங்கி பணிக்குச் சென்று கொண்டிருக்கும் இளைஞர்களுக்கும் இந்த ஆன்லைன் உணவுகள் பெரிய ஆறுதல் என்றே கூறலாம்.

வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் இவற்றுக்கு மவுசு கூடி வரும் வேளையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற ஆன்லைன் உணவு நிறுவனங்களும் தங்களுக்குள் போட்டி போட்டு புதுப்புது உத்திகளை வியாபாரத்தில் கையாண்டு வருகின்றன.

விவேக் சுந்தர்
விவேக் சுந்தர்

அந்த வகையில் தற்போது ஸ்விக்கி நிறுவனம் வீட்டு முறை உணவுகளையும் தங்களது ஆன்லைன் புட் டெலிவெரியில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது. இது பற்றி அந்த நிறுவனத்தின் தலைமைச் செயலர் விவேக் சுந்தர் கூறும்போது, ``எங்கள் உணவு டெலிவெரியில் இதுவரை ஹோட்டல்களில் சமைத்த உணவுகளை மட்டுமே விற்பனை செய்து வருகிறோம்.

சீரகச் சம்பாவா... பாசுமதியா... பிரியாணிக்கு எது பெஸ்ட்?

ஆனால் நிறைய மக்கள் தங்கள் வீட்டை, குடும்பத்தைப் பிரிந்துவந்து பல மைல்களுக்கு அப்பால் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். வீட்டுச் சாப்பாட்டை மிஸ் செய்கிறார்கள். அவர்கள் இழக்கும் வீட்டு உணவின் ருசியைக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளோம்.

ஸ்விக்கி
ஸ்விக்கி

இனி எங்கள் ஆன்லைன் டெலிவெரியில் வீட்டில் செய்யும் உணவுகளையும் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம். பெரிய அளவில் உருவாக உள்ள இந்தத் திட்டத்தினை முதலில் சிறிய அளவில் சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் சோதனை செய்து பார்க்க உள்ளோம்.

இதற்கு எங்களுக்கு வீட்டிலேயே சமைக்கும் செஃப்கள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் எங்கள் நிறுவனத்துடன் இணைய அதற்கான உரிமம் மற்றும் பதிவு இருந்தால் மட்டும் போதும்" என்றார்.

உணவு
உணவு

ஏற்கெனவே சிறிய அளவிலான நிறுவனங்கள் வீட்டில் செய்யும் உணவுகளை டெலிவெரி செய்துவரும் நிலையில் ஸ்விக்கி போன்ற பெரிய நிறுவனம் இதைக் கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு