Published:Updated:

சாப்பிடத் தெரியுமா? - ஆனியன் ரவா தோசை - #HowtoEat

ஆனியன் ரவா தோசை
பிரீமியம் ஸ்டோரி
News
ஆனியன் ரவா தோசை

#Lifestyle

வித்யா

சைவ ஹோட்டல்களில் என் சாய்ஸ் ஆனியன் ரவா தோசைதான். நாலைந்தாக மடிக்கப்பட்டு கண்ணு கண்ணா பூத்திருக்கும் கோல்டன் பிரவுன் தோசையைப் பார்க்கும்போதே கொண்டா கொண்டாங்கும். ரவா தோசைக்குச் சரியான சைடிஷ் கார சட்னி தான். மொறுமொறுவென விருக்கும் தோசையை உடைத்து, அதை ஸ்பூனாகப் பாவித்து காரச்சட்னியை அதில் அள்ளி உள்ளே தள்ளினால் ஆஹா... ரெண்டு விள்ளலுக்கு கார சட்னியோடு என்றால் மூன்றாவது விள்ளல் கமகம சாம்பாரோடு.

சாப்பிடத் தெரியுமா? - ஆனியன் ரவா தோசை - #HowtoEat

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆனியன் ரவாவுக்கென சில பிரத்யேக அம்சங்கள் உண்டு. பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயம், சின்னதா சுருக்குன்னு ஃபீல் பண்ண வைக்கிற சைஸுக்கு பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கிழிச்சுபோட்ட கறி வேப்பிலை கடலை எண்ணெயில கொஞ்சம் மிளகு, கொஞ்சம் சீரகம் தாளிச்சு, இந்த வெங்காயத்தைப் போட்டு அப்படி இப்படின்னு ரெண்டே ரெண்டு பெரட்டு. ரொம்ப வதக்கிட்டா தோசைல தீஞ்சிரும். இதை அப்படியே மாவுல கலக்கி, புகை வர்ற அளவுக்கு சூடாருக்க கல்லுல ஊத்தி, மிதமான தீயில வேக விடணும்.

சாப்பிடத் தெரியுமா? - ஆனியன் ரவா தோசை - #HowtoEat

ரவா தோசை ஊத்த கரண்டி செட்டாகாது. ஒரு மீடியம் சைஸ் டம்ளரோ, டபராவோ சரியாருக்கும். நீர்க்க கரைச்ச மாவை ஒவ்வொரு தடவையும் கலக்கி விடணும். நல்லா கலக்கி எடுத்து, கல்லுல வெளிலருந்து வட்டம் போட்டு, உள்ளுக்கு ஊத்தணும். உடனே எண்ணெய் ஊத்திடாம அரை வேக்காடா இருக்கும்போது தாராளமா எண்ணெய் காட்டி, மொறுமொறுவென ஆனதும் ரெண்டா மடிச்சு சட்னியோட உள்ள தள்ளணும். ஆர்டர் பண்ணும்போது மறக்காம ரோஸ்ட்டா வேணும்னு சொல்லிடுங்க.