Published:Updated:

சாப்பிடத் தெரியுமா? - பரோட்டா - #HowtoEat

பரோட்டா
பிரீமியம் ஸ்டோரி
News
பரோட்டா

#Lifestyle

வித்யா

பிரியாணிக்கு அடுத்து மக்கள் விரும்பி சாப்பிடறது பரோட்டா சால்னா. பொரிச்ச பரோட்டா, பஞ்சு பரோட்டா, காயின் பரோட்டா, பன் பரோட்டா, மலபார் பரோட்டான்னு ஏகப்பட்ட வெரைட்டி இருந்தாலும், பரோட்டாவின் சுவையை ஒருபடி மேல தூக்கிவிடறது சால்னாதான். பரோட்டா சாப்பிடறதுக்குன்னு விதிமுறைகள் இருக்கு.

ரூல் நம்பர் 1: பரோட்டாவை கல்லிலிருந்து சூடா எடுத்து மூன்று நான்கு பரோட்டாக்களை ஒண்ணு மேல ஒண்ணா அடுக்கி, சைட்ல ரெண்டு தட்டு, லைட்டா சுழற்றி, இன்னும் ரெண்டு தட்டு, அப்படியே துணிய கல்லுல துவைக்கிற மாதிரி நாலு அடி. அப்படியே லேயர் லேயரா பிரிஞ்சு நிக்கணும்.

சாப்பிடத் தெரியுமா? - பரோட்டா - #HowtoEat

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சாப்பிடத் தெரியுமா? - பரோட்டா - #HowtoEat

ரூல் நம்பர் 2: பரோட்டாவை, கிழிச்சோ/நொறுக்கியோ ரெண்டு கரண்டி சால்னாவை மேலாக விளாவி விட்டு, இரண்டு மூணு நிமிஷம் ஊற வெச்சு சாப்பிட்டா ஆஹா... ஆஹா! `நான் டீசன்ஸி பார்க்கிற ஆளு. இப்படி பிச்சுப்போடறதெல்லாம் சரிபட்டு வராது'ன்னு நினைச்சீங்கன்னா, பரோட்டாவோட மட்டன் சுக்காவோ, சிக்கன் ரோஸ்ட்டோ சொல்லிடுங்க. பரோட்டாவை கொஞ்சம் பிச்சு, அதுல கொஞ்சம் சுக்கா/ரோஸ்ட்டை அள்ளி, சால்னால ரெண்டு முக்கு முக்கி உள்ளே தள்ளுங்க. சால்னாலதான் பாதி சூட்சுமம் இருக்கு. மிளகாய்த்தூளை கரைச்சு கொதிக்க வெச்சு சால்னான்னு ஊத்தறவங்களுக்கெல்லாம் கருட புராணத்தின்படி `கபீம்குபாம்'தான். மிதமான திக்னெஸ்ல தேங்காய் அரைச்சுவிட்டு சோம்பும் பட்டையும் மணக்கும் சால்னாக்கள் தேவாமிர்தம்.

மதுரை, விருதுநகர் எனத் தென் தமிழகம் சால்னா தலைநகரங்கள் ️ ஆகையால், சிறந்த சால்னாவாக இருப்பின் இரண்டு பரோட்டக்களை எக்ஸ்ட்ராவாக உள்ளே தள்ளுவதில் தப்பேதுமில்லை. உங்க கெப்பாசிட்டிக்கு ஏத்த மாதிரி ரெண்டு பரோட்டாவோ, நாலு பரோட்டாவோ சாப்பிட்டு ஆப்- பாயில் ஒண்ணை உள்ளே தள்ளிருங்க. திவ்யமான அனுபவமா இருக்கும்.