Published:Updated:

ருசியான சைனீஸ் வெஜ் ஹக்கா நூடுல்ஸ்! கற்றுத் தருகிறார் செஃப் ஜானகி அஸாரியா #Video

Veg Hakka Noodles
Veg Hakka Noodles ( pixabay )

''அடுப்பை பெரிய தீயில் வைத்து, காய்கறிகளை வேகமாக வதக்க வேண்டும். சிம்மில் வேக வைத்தால்...''

கொரோனா பயம் நம் ஊரில் இருக்கிற சைனீஸ் உணவுப் பிரியர்களையும் விட்டுவைக்கவில்லை. குழந்தைகள் நூடுல்ஸ் சுவைக்கு அடம்பிடிக்க, சைனீஸ் உணவு வழியாக குழந்தைகளுக்கு கொரோனா வந்துவிடுமோ என்று அம்மாக்கள் மறுத்துவருகிறார்கள். சைனீஸ் உணவகங்களிலும் கூட்டமே இல்லை என்கின்றன தகவல்கள். இதற்கு ஆதாரங்கள் இல்லையென்றாலும் பலர் இப்படியான தகவல்களை வாட்ஸ்அப்பில் பரப்பி வருகின்றனர். இந்தக் கலவர நிலவரத்தை சற்றே ஒதுக்கிவிட்டு, வீட்டிலேயே சைனீஸ் நூடுல்ஸ் எப்படிச் செய்யலாம் என்று தெரிந்துகொள்ளலாம். இதற்காக, வெஜ் ஹக்கா நூடுல்ஸ் செய்ய கற்றுத்தருகிறார், ஜானகி அஸாரியா.

ஜானகி அஸாரியா
ஜானகி அஸாரியா

வெஜ் ஹக்கா நூடுல்ஸ்

தேவையானவை:

ஹக்கா நூடுல்ஸ் - ஒரு பாக்கெட் (கடைகளில் கிடைக்கும்)

நீளவாக்கில் நறுக்கிய முட்டைக்கோஸ், கேரட், குடமிளகாய் - தலா ஒரு கப்

ஸ்பிரிங் ஆனியன் - 5

டொமெட்டோ கெச்சப் - ஒரு டேபிள்ஸ்பூன்

வினிகர் - ஒரு டீஸ்பூன்

சோயா சாஸ்- ஒரு டீஸ்பூன்

ரீஃபைண்ட் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்

பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டேபிள்டீஸ்பூன்

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

ஹை ஹீட்டில் வைத்து வதக்கினால்தான் காய்கறிகளின் மொறுமொறுப்புத்தன்மை அப்படியே இருக்கும். நூடுல்ஸின் ருசியே இதில்தான் அடங்கியிருக்கிறது!

செய்முறை:

Veg Hakka Noodles
Veg Hakka Noodles

* நன்கு கொதிக்கிற நீரில் சிறிதளவு உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விடுங்கள். பிறகு, ஹக்கா நூடுல்ஸைப் போட்டு வேக வைத்து தனியே வையுங்கள்.

* ஸ்பிரிங் ஆனியனின் இலைகளைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். மீதமுள்ள காம்புப் பகுதியை நீள நீளமாக கட் பண்ணி வையுங்கள்.

* அகலமான வாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும், பொடியாக நறுக்கிய பூண்டைப் போட்டு வதக்குங்கள். பிறகு, ஸ்பிரிங் ஆனியனின் காம்புப் பகுதிகளைப் போட்டு வதக்குங்கள். பூண்டும் ஸ்பிரிங் ஆனியனும் லேசாக வதங்கும்போதே, மூன்று வகை காய்கறிகளையும் போட்டு வதக்க ஆரம்பியுங்கள்.

* வெஜிடபிள் ஹக்கா நூடுல்ஸ் செய்யும்போது, அடுப்பை பெரிய தீயில் வைத்து, காய்கறிகளை வேகமாக வதக்க வேண்டும். சிம்மில் வேக வைத்தால், காய்கறிகள் முழுதாக வெந்து குழைந்ததுபோல ஆகிவிடும். நூடுல்ஸின் ருசியும் போய்விடும். ஹை ஹீட்டில் வைத்து வதக்கினால்தான் காய்கறிகளில் மொறுமொறுப்புத்தன்மை இருக்கும். நூடுல்ஸின் ருசியே இதில்தான் அடங்கியிருக்கிறது.

* இப்போது, தேவையான உப்பை சேர்ந்து, காய்கறிகளை வதக்க வேண்டும்.

* வதங்கிய காய்கறிக் கலவையுடன் டொமெட்டோ கெச்சப், சோயா சாஸ், சில்லி சாஸ், வினிகர், மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறிவிடுங்கள். சாஸ், கெச்சப், வினிகர் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கும்போதே, காய்கறிகள் தேவையான அளவுக்கு வெந்துவிடும்.

Veg Hakka Noodles
Veg Hakka Noodles
pixabay
`லில்லிபுட்' குலோப் ஜாமூன்...இது தீபாவளி ஸ்பெஷல்! #DiwaliSweets

* இதனுடன் வெந்த நூடுல்ஸ், பொடியாக நறுக்கிவைத்துள்ள ஸ்பிரிங் ஆனியன் இலைகளில் ஒரு கைப்பிடியளவு என இரண்டையும் சேர்த்து, சைனீஸ் உணவகங்களில் ஒரே நேரத்தில் இரண்டு மரக்கரண்டிகளால் நூடுல்ஸைப் புரட்டுவதைப்போல நன்கு கிளறுங்கள். நூடுல்ஸும் காய்கறிகளும் ஒன்றுடன் ஒன்று நன்றாகக் கலந்ததும், சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன் இலைகளைத்தூவி, அடுப்பிலிருந்து இறக்குங்கள்.

* சைனீஸ் ரெஸ்ட்டாரன்ட் ஸ்டைலில் வெஜ் ஹக்கா நூடுல்ஸ் ரெடி. அதேபோல், ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் பரிமாறவும் வேண்டுமல்லவா... ஒரு பெரிய கண்ணாடிக் கிண்ணத்தில் சூடான நூடுல்ஸைக் கொட்டி, மேலே மீதமுள்ள ஸ்பிரிங் ஆனியன் இலைகளைத் தூவி, சுடச்சுட பரிமாறுங்கள்.

'நோ ரெஸ்ட்டாரன்ட். வீட்டிலேயே சைனீஸ் நூடுல்ஸ்' - கற்றுத் தருகிறார் சமையல் கலை நிபுணர் ஜானகி அஸாரியா #ChineseFood #FoodRecipes

Posted by Vikatan EMagazine on Tuesday, February 18, 2020

நூடுல்ஸை வேகவைத்தும், காய்கறிகளை நறுக்கியும் வைத்துக்கொண்டால், குழந்தைகள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்த 5 நிமிடங்களில் இந்த நூடுல்ஸைச் செய்து கொடுத்துவிடலாம். குழந்தைகள், வீட்டிலேயே சைனீஸ் நூடுல்ஸ் ருசிக்கலாம். அம்மாக்களும் கொரோனா பயமில்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.

`மோஹன்தால்' இனிப்பு - மைசூர்பாகின் தங்கையைத் தெரியுமா? #DiwaliSweets
அடுத்த கட்டுரைக்கு