Published:Updated:

10 நிமிடங்களில் தேங்காய்ப்பால் புலாவ்... செய்வது எப்படி?! #FoodTips #Video

10 நிமிடங்களில் செய்யக்கூடிய அசத்தல் ரெசிப்பி. அதுவும் கிச்சனில் உள்ள எளிமையான பொருள்களை வைத்தே.

தேங்காய்ப்பால் புலாவ்
தேங்காய்ப்பால் புலாவ்

ங்களுக்கு ஒரு டாஸ்க். வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே ஏதாவது வெரைட்டி ரைஸ் செய்ய வேண்டும். அதுவும் பத்தே நிமிடங்களுக்குள். என்ன செய்வீர்கள்?

தேங்காய்ப்பால் புலாவ்
தேங்காய்ப்பால் புலாவ்

'ரொம்ப கஷ்டமான டாஸ்க்கா இருக்கே. 10 நிமிஷத்துல வெரைட்டி ரைஸ் எல்லாம் செய்ய முடியாது. வேணும்னா உப்புமாவ வெரைட்டியா செஞ்சு காட்டட்டுமா' என்கிறீர்களா? உங்களுக்குத் `தேங்காய்ப்பால் புலாவ்' ரெசிப்பி பற்றிச் சொல்ல வேண்டும். பத்தே நிமிடங்களில் செய்யக்கூடிய அசத்தல் ரெசிப்பி. அதுவும் கிச்சனில் உள்ள எளிமையான பொருள்களை வைத்தே. எப்படி என்று பார்த்துவிடலாமா?

இலைக்குப் பதில் பிளாஸ்டிக் கவரில் தோசை! - காவலரிடம் சவால்விட்ட ஃபாஸ்ட் ஃபுட் ஓனருக்கு சிக்கல்

தேங்காய்ப்பால் புலாவ் செய்வதற்குத் தேவையான பொருள்கள்:

அரிசி - ஒரு கப், நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கப், மெலிதாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று, பூண்டு - 3 பற்கள், பச்சைமிளகாய் - 5, தேங்காய்ப்பால் - ஒரு கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.

தேங்காய்ப்பால் புலாவ்
தேங்காய்ப்பால் புலாவ்

செய்முறை:

முதலில் சிறிது தண்ணீர் சேர்த்து கொத்தமல்லித்தழை, பூண்டு, பச்சைமிளகாயை நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். அரிசியை ஊறவைக்கவும்.

குக்கரில் சிறிது எண்ணெய் விட்டுச் சூடானதும், நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்து வைத்திருக்கும் கொத்தமல்லித்தழை - மிளகாய் கலவையைச் சேர்த்து வதக்கவும். பின்னர் ஊறவைத்திருக்கும் அரிசியையும் அதனுடன் சேர்த்துக் கிளறவும். சில விநாடிகள் கழித்துத் தேங்காய்ப்பாலை விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரை மூடி வேகவைக்கவும். இரண்டு விசில் வந்ததும் திறந்தால்... சுவையான தேங்காய்ப்பால் புலாவ் ரெடி! இதனுடன் வெள்ளரிக்காய் அல்லது வெங்காயப் பச்சடி பரிமாறலாம்.

தேங்காய்ப்பால் புலாவ் செய்வதற்கு ஈசியாக இருக்கிறதா? இனிமேல் அவசரத்துக்கு உப்புமா செய்வதை விட்டுவிட்டு இந்த வெரைட்டி ரைஸை செய்து பாருங்கள். பிறகு இதற்கு ரசிகராகவே மாறிவிடுவீர்கள்!