Published:Updated:

`நாவில் கரையும் காசி அல்வா’ - ஒரிஜினல் செய்முறை தெரிஞ்சுக்கலாம் வாங்க...! #Video

காசி அல்வா செய்வது எப்படி? - சமையல் கலை நிபுணர் ஜானகி அஸாரியா.

halwa
halwa

தேவையான பொருள்கள் : துருவிய வெள்ளைப் பூசணிக்காய்-1கப், சர்க்கரை - 1/2 கப், குங்குமப்பூ - சிறிதளவு ஆரஞ்சு ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை, நெய் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த்தூள்- 1/2 டீ ஸ்பூன், நட்ஸ் (முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை ) - ஒவ்வொன்றும் தலா 1 டீ ஸ்பூன்.

Halwa
Halwa

குறிப்பு : * வெள்ளைப் பூசணிக்காயின் விதைகள் மற்றும் தோலை நீக்கி, துருவி வைத்துக்கொள்ளவும். துருவிய பூசணிக்காயை ஐந்து நிமிடங்கள் மைக்ரோவேவ் அவனில் வேக வைத்துக்கொள்ளவும். மைக்ரோவேவ் இல்லாதவர்கள் பூசணித்துருவலை 7 - 8 நிமிடங்களுக்கு ஆவியில் வைத்தெடுக்கலாம் அல்லது குக்கரில் ஒரு விசில் வரும்வரை வேகவைக்கலாம்.

* முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை ஆகியவற்றை நெய்யில் லேசாக வறுத்துக்கொள்ளவும்.

செய்முறை : கடாய் ஒன்றில், வேகவைத்த பூசணி, குங்குமப்பூ, சர்க்கரை, ஃபுட் கலர் அனைத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். கலவை நன்கு கெட்டியாகும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். சர்க்கரை முழுவதுமாக உருகி, கலவை கெட்டியான பின், அதில் நெய் சேர்த்துக் கிளற வேண்டும். நன்கு கிளறிய பின், கலவையை அடுப்பிலிருந்து இறக்கிவிடலாம். கலவை, பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க வேண்டும் என்பதால் அதில் கூடுதல் கவனம் தேவை.

Janaki Azariah
Janaki Azariah

இறக்கிய பின்னர், அதில் ஏலக்காய்த்தூள், நட்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து கடைசியாக ஒருமுறை கிளறினால், சூடான சுவையான காசி அல்வா ரெடி!

நாவில் கரையும் காசி அல்வா - ஒரிஜினல் செய்முறை இதுதாங்க... #Halwa

Posted by Vikatan EMagazine on Friday, September 20, 2019