Published:Updated:

2K kids: பாரம்பர்ய அரிசி ரகங்கள் - தகவல்கள், விளக்கங்கள்!

பாரம்பர்ய அரிசி ரகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
பாரம்பர்ய அரிசி ரகங்கள்

தி.ப.தர்ஷினி தேவ்

2K kids: பாரம்பர்ய அரிசி ரகங்கள் - தகவல்கள், விளக்கங்கள்!

தி.ப.தர்ஷினி தேவ்

Published:Updated:
பாரம்பர்ய அரிசி ரகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
பாரம்பர்ய அரிசி ரகங்கள்

‘பாரம்பர்ய அரிசி ரகங்களைப் பாதுகாக்கணும்’ என்று அடிக்கடி படிக்கிறோம். அதன் அவசியம் என்ன?

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தில் சில மாவட்டங்களில் ‘இந்தியப் பாரம்பர்ய அறிவியல் மையம்’ (Centre for Indian Knowledge Systems - CIKS)’ என்ற தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பாரம்பர்ய நெல் ரகங்களைப் பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவை இந்த நிறுவனத்தின் முக்கியப் பணிகளாகும்.

 கே.பரிமளா
கே.பரிமளா

இந்தத் தொண்டு நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் கே.பரிமளா, பாரம்பர்ய அரிசி ரகங்களைப் பாதுகாத்து வருவது குறித்து நம்மிடம் பேசினார்...

‘`இன்று புழக்கத்தில் உள்ள, பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசிகளையே நாம் அறிவோம். ஆனால், பல வண்ணங்களில் இருந்த நம் பாரம்பர்ய அரிசி ரகங்கள் பற்றி நமக்குத் தெரியாது. பாரம்பர்ய அரிசி ஏன் சிறந்தது என்பதை அறிவதற்கு முன், வெள்ளை அரிசி ஏன் ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல என்று அறிவது அவசியம்.

2K kids: பாரம்பர்ய அரிசி ரகங்கள் - தகவல்கள், விளக்கங்கள்!

மாவைத் தவிர ஒன்றும் இல்லை!

நாவின் சுவைக்கு முக்கியத்துவம் அளித்து, வெள்ளை அரிசியை நாடுகிறோம். பட்டை தீட்டப்பட்ட அந்த வெள்ளை அரிசியில், மாவுச்சத்து தவிர வேறு சத்துகளையோ, மருத்துவ குணங்களையோ எதிர்பார்க்க இயலாது. அது நம் பசியைப் போக்கி, வயிற்றை நிரப்ப மட்டுமே செய்யும்.

உணவு மருந்தாக வேண்டுமா?

புதிய புதிய நோய்களை இன்று நாம் எதிர்கொள்ள நேரிடுகிறது. அவற்றுக்கு ஈடுகொடுக்கும் வகையில், உணவின் மூலம் நம் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்து, ஆரோக்கியத்துடன் வாழ நம் பாரம்பர்ய அரிசி ரகங்கள் கைகொடுக்கும். உடலுக்கு வலிமை அளிக்கும் மாப்பிள்ளை சம்பா, எளிதில் செரிக்கும் கிச்சிலிசம்பா, மணம் மிகுந்த சீரகசம்பா, நீரிழிவு நோய், நோய் எதிர்ப்பு சக்திக்கு காட்டுயானம், பாலூட்டும் தாய்மார்களுக்கு நீலஞ்சம்பா எனப் பல பாரம்பர்ய ரகங்கள் விளைந்த மண் இது.

விவசாயிகள் ஏன் சத்துள்ள பாரம்பர்ய ரகங்களைப் பயிர் செய்ய ஆர்வம்காட்டுவதில்லை?

வீரிய ஒட்டு ரகங்களைப் பயிரிடுவதன் மூலம் குறைந்த காலத்தில் நிறைந்த மகசூல் பெறலாம் என நினைக்கிறார்கள். மகசூல் அதிகரிக்க வெளி இடுபொருள்களான ரசாயன உரங்களையும், பூச்சிக் கொல்லி விஷங்களையும் பயன் படுத்துகிறார்கள். அதுதான் உணவை நஞ்சாக்குகிறது, மண்ணைப் பாழாக்குகிறது. மாறாக, நம் பாரம்பர்ய ரகங்களைப் பயிரிட, இயற்கை இடுபொருள்களான தொழு உரம், மாட்டுச்சாணம், ஆட்டுச்சாணம், இலை, தழை மற்றும் காய்கறிக்கழிவுகளே போதும்.

பாரம்பர்ய அரிசி ஏன் விலை அதிகமாக உள்ளது?

பாரம்பர்ய அரிசி ரகங்களைப் பயிரிடும் நிலங்கள் குறைவாக உள்ளதால், சந்தைக்கு வரும் அவ்வகை அரிசியின் அளவும் குறைவாக உள்ளது. மேலும், ரசாயன உரங்களின் தொடர் பயன்பாட்டால் தன்மையிழந்துபோன நம் நிலங்களில் பாரம்பர்ய ரகங்களுக்குத் தேவையான சத்துகள் குறைவாக உள்ளதால், மகசூலும் குறைவாகவே உள்ளது. இயற்கை உரங்களை அதிக அளவில் பயன்படுத்தி நிலத்தை மீண்டும் வளமாக்கினால், அதிக மகசூல் பெற்று, அரிசியின் விலையையும் குறைக்க இயலும்.

2K kids: பாரம்பர்ய அரிசி ரகங்கள் - தகவல்கள், விளக்கங்கள்!

செய்ய வேண்டியது என்ன?

ரசாயன உரங்களால் உயிர்த்தன்மை குறைந்து போயிருக்கும் நம் மண்ணுக்கு மீண்டும் உயிரூட்ட, இயற்கை இடுபொருள்கள் பெருமளவு தேவை. மண்ணின் இறுக்கத் தன்மையைத் தளர்த்தி, நீர்ப்பிடிப்பு தன்மையை அதிகரிக்க வேண்டும். நமது மண்ணின் நுண்ணுயிர்களையும், சத்து களையும் பெருக்கினால் இயற்கை விவசாயத்தின் மூலம் நிறைந்த மகசூலைப் பெற முடியும்.

குட்டி ஸ்டோரி!

முதுகலைப் பட்டதாரி பெண் ஒருவர், தன் சொந்த வயலில் கடந்த பல வருடங் களாக இயற்கை முறையில் பாரம்பர்ய நெல் ரகங்களைப் பயிர் செய்து வருகிறார். ஆரம்பத்தில், ‘இதெல்லாம் வேலைக்கு ஆகுமா’ என்று அவரை கிண்டல் செய்தனர் கிராம மக்கள். இன்று அந்த கிராமத்தில் பலர் பாரம்பர்ய நெல் ரகங்களுக்கு மாறி வருகின்றனர்.

பல தொண்டு நிறுவனங் களும் விவசாயிகளும் பாரம்பர்ய நெல் ரகங்களைப் பாதுகாப்பதிலும் சந்தைப்படுத்துவதிலும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் முயற்சிக்கு நாம் கைகொடுப்போம், எதிர்கால சந்ததியின் ஆரோக்கியத்துக்காக!”