பெங்களூரு நகரில் எந்திரன் ரெஸ்டாரன்ட்!

பெங்களூரு நகரின் இந்திரா நகர் பகுதியில் சமீபத்தில் முதல் `ரோபோ’ ரெஸ்டாரன்ட் ஒன்று தொடங்கப்பட்டது. இந்த உணவகத்தில் முழுக்க முழுக்க ரோபோக்களே உணவை வழங்குகிறது. சென்னை, கோவை நகரங்களை அடுத்து பெங்களூருக்கு ரோபோ உணவகத்தைக் கொண்டுசென்றிருப்பதாகச் சொல்கிறார் உரிமையாளர் வெங்கடேஷ் ராஜேந்திரன். இந்திரா நகரின் 100 அடி சாலையில், 50 இருக்கைகள்கொண்ட இந்த ரெஸ்டாரன்ட் டில் இந்தோ ஆசிய உணவு வகைகள் மற்றும் மாக்டெயில்கள் வழங்கப்படுகின்றன.

ஒரு அஷர் மற்றும் ஐந்து பேரர்கள் என மொத்தம் ஆறு ரோபோக்கள் இங்கு பணியாற்றுகின்றன. ஒவ்வொரு டேபிளிலும் டாப்லெட் ஒன்று வைக்கப்பட்டிருக்கும்; அதன் மூலம் வாடிக்கையாளர்கள் பணிக்கும் உணவு வகைகளை ரோபோக்கள் எடுத்து வரும். வாடிக்கையாளர்களிடம் உரையாடக் கூடிய இந்த ரோபோக்கள் பிறந்தநாள் வாழ்த்து மற்றும் சிறப்பு வாழ்த்துகள் பாடும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

“பெங்களூரு நகரில் ஏற்கனவே வித்தியாசமான பல ரெஸ்டாரன்டுகள் உள்ளன என்பதால், ரோபோ ரெஸ்டாரன்டுக்கும் சிறப்பு கவனம் கிடைக்கும்” என்று கூறுகிறார் வெங்கடேஷ் ராஜேந்திரன்.

பூம் பூம் ரோபோ டா!

ஒரு கிலோ டீத்தூள் விலை 50,000 ரூபாய்!

கடந்த 200 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் அசாம் தேயிலைத் தொழில் கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கவுஹாத்தி நகரின் கவுஹாத்தி தேயிலை ஏல மையத்தில் ஒரு கிலோ தேயிலைத் தூள் 50,000 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதுவரை ஏலத்தில் விடப்பட்ட தேயிலையி லேயே அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட தேயிலை இதுதான் என அறிவித்திருக்கிறது ஏல மையம். அசாமின் மனோகரி தேயிலைத் தோட்டம் உற்பக்தி செய்யும் இந்தத் தேயிலை இளம் மொட்டுகளைப் பதப்படுத்தி செய்யப் படுகிறது. `மனோகரி கோல்டு’ என்று அழைக்கப்படும் இந்தத் தேயிலை கடந்த ஆண்டு கிலோ 39,000 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. “பி-126 என்ற தேயிலை வகையின் குளோன் மூலம் இந்தத் தேயிலையை விளைவித்துப் பதப்படுத்தினோம்” என்கிறார் மனோகரி தேயிலைத் தோட்டத்தின் உரிமையாளர் ராஜன் லோகியா. “விடியும்முன்பே இந்தத் தேயிலையைப் பறிக்க வேண்டும். கடந்த ஆண்டு ஐந்து கிலோ மட்டுமே இந்தத் தேயி லையைத் தயாரித்தோம்” என்றும் சொல்கிறார்.

இதுபோன்ற ஸ்பெஷல் தேயிலை அதிக விலைக்கு விற்பதால், இதைப் பயிர் செய்ய பெரும் ஆர்வம் இருக்கிறது. ஆனால், சாமான்யன் பயன்படுத்தும் சாதாரண சிடிசி தேயிலை கடும் விற்பனை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

இது உழைப்பின் சுவை!

புவிசார் குறியீடு பெறும் பழநி பஞ்சாமிர்தம்

பழநி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதமான பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது. தேன், பசும் நெய், வெல்லம், வாழைப்பழம், ஏலக்காய் போன்ற ஐந்து முக்கியப் பொருள் களைக்கொண்டு செய்யப்படும் பழநியின் பஞ்சாமிர்தத்துக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் உள்ளனர். பஞ்சாமிர்தம் நிறைந்த டப்பாக்களை இங்கிலாந்து, அமெரிக்கா என்று கொண்டு செல்வோரும் உண்டு.

பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடான ஜி.ஐ.டேக் வழங்க கடந்த 2016-ம் ஆண்டு பழநி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகம் இந்தியப் புவிசார் ஆணையத்திடம் விண்ணப் பித்திருந்தது. இதை ஏற்றுக்கொண்டு, பழநி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக ஜி.ஐ அமைப்பின் பதிவாளர் சின்னராஜா நாயுடு அறிவித்திருக் கிறார். ஒரு பகுதியில் தயாரிக்கப்படும் பொருள் அங்கே மட்டுமே தயாரிக்கக்கூடிய சிறப்பம்சம் மிகுந்ததாக இருந்தால் மட்டுமே இந்தப் புவிசார் குறியீடு வழங்கப்படும். மதுரை மல்லி, சேலம் மாம்பழம், திருப்பதி லட்டு வரிசையில் இப்போது பழநி பஞ்சாமிர்தமும் சேர்ந்திருக்கிறது. பழனிக்கே பஞ்சாமிர்தம்!

பழநிக்கே பஞ்சாமிர்தம்!

செவாலியே விருது பெற்ற இந்தியாவின் முதல் செஃப்!

இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் அலெக்சாண்டர் சைக்லர், சிறப்பு செவாலியே விருதை ஆகஸ்ட் 15 அன்று இந்திய செஃப் பிரியம் சாட்டர்ஜிக்கு வழங்கினார். 1833-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த செவாலியே விருது வேளாண்மை, வேளாண் தொடர்புள்ள தொழில்கள், உணவுத் தொழிலில் சிறப்பாகப் பணியாற்றுபவர்களுக்கு வழங்கப்படுகிறது. டெல்லியின் குதுப் மினாரை ஒட்டிய ஃப்ரான்செஸ்கோ ரெஸ்டாரன்டில் தலைமை செஃப்பாகப் பணியாற்றிவருபவர் பிரியம் சாட்டர்ஜி. கொல்கொத்தாவில் பிறந்து பயின்ற பிரியம், கடைசி பெஞ்சு மாணவன்தான். 2009-ம் ஆண்டு உறவினர் ஒருவர் உதவியுடன் தமிழகத்தின் சேலம் நகரில் உள்ள மூன்று நட்சத்திர ஓட்டல் ஒன்றில் செஃப் பணி பிரியமுக்குக் கிடைத்தது. இங்கு தினமும் 16 மணி நேரம் சமையலறையில் ‘சாதாரண உணவை’ செய்து மாதம் 3,000 ரூபாய் ஊக்கத்தொகை மட்டுமே சம்பாதித்தார் 20 வயதான பிரியம். 2012-ம் ஆண்டு முதல் ஹைதராபாத் நகரின் பார்க் ஹயாத் ஓட்டலில் கிடைத்த நான்கரை ஆண்டுகள் அனுபவம் தன்னை இந்த நிலைக்கு உயர்த்தி இருப்பதாகக் கருதுகிறார் பிரியம்.

இங்குதான் புகழ்பெற்ற பிரெஞ்சு செஃப் ஜான் கிளாடு ஃபுஜியரை சந்தித்தார் பிரியம். ஃபுஜியரின் வழிகாட்டலில் இந்திய உணவு வகைகளை பிரெஞ்சு உணவு வகைகளுடன் கலந்துசெய்யும் ஃப்யூஷன் உணவு வகைகளின் தேர்ந்தார் பிரியம். “இந்த உலகுக்கு நான் இருப்பதை உணர்த்த விரும்புகிறேன். நிறைய சாதிக்க விரும்புகிறேன்” என்று சொல்கிறார் பிரியம்.

பிரிய வாழ்த்துகள் செவாலியே பிரியம்!

இந்தியாவில் உதித்த பானம் - பன்ச்!

18-ம் நூற்றாண்டில் பாய்மரக் கப்பல்களில் பெரும் பீப்பாய்களில் ஐரோப்பியர் என்ன சுமந்து வந்தார்கள்? கொண்டுவந்த திரவத்தை அடிமைகளுக்கு ஈடாக விற்று, தாங்கள் அமைத்த புதிய காலனிகளுக்கு இந்த அடிமைகளைக்கொண்டு சென்றார்கள். கடல் கடந்து மாதக்கணக்கில் பயணித்து இருண்ட கண்டங்களுக்கு வந்தது `ரம்’! ஐரோப்பியர்களும் அமெரிக்கரும் ரம்மை விற்று அதற்குப் பதில் சர்க்கரை, அடிமைகள் என்று தங்களுக்குப் பிடித்ததைக் கொண்டுசென்றார்கள். பிரெஞ்சுக்காரர்களின் செல்லமாக இருந்த வைன் ஆங்கிலேயர்களை விட்டு இடம்பெயர்ந்தது. ரம் அவர்களின் விருப்பத்துக்குரிய பானமானது.

பார்படாஸ் நகரில் பன்ச் பானம் பிறந்ததாகச் சொல்லப்பட்டாலும், இந்தியாவில் இருந்துதான் பன்ச் ஆங்கிலேயர் கைக்குச் சென்றது என்று சமீபத்தில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். `பாஞ்ச்’ - ஐந்து என்று பன்ச் செய்யப் பயன்படும் ஐந்து பொருள்கள் குறித்துக் கூறப்படுகிறது. டீ, எலுமிச்சை, சர்க்கரை, தண்ணீர், மது (ரம்) - இவற்றின் கலவைதான் பன்ச். கடற்கொள்ளையர், அதிகாரிகள், அடிமைகள், ஆங்கிலேய கப்பல் படை, தோட்ட முதலாளிகள்... இப்படி பன்ச் அனைவரின் பானமாக, மக்கள் பானமாக இந்தியாவில் மாறியது. மதராஸ் நகரின் ஃபர்ஸ்ட் லைன் பீச் என்று சொல்லப்படும் பீச் ரோட்டில் எக்கச்சக்கமான `பன்ச் ஹவுஸ்’கள் இருந்தன. இவை இயங்க ஆங்கிலேய கவர்னரின் லைசன்ஸ் பெற வேண்டும். இந்த பன்ச் ஹவுஸ் வைத்திருந்தவர்கள் பெரும் செல்வந்தர் ஆனார்கள். ஆனால், கொலை, கொள்ளை, திருட்டு என்று இன்றைய பார்களில் நடக்கும் அனைத்தும் 300 ஆண்டுகளுக்கு முன் பன்ச் ஹவுஸ்களில் நடந்தன. உலகின் முதல் காக்டெயில் இந்த பன்ச்தான்!

மதராஸி பன்ச் இதுதானா!