Published:Updated:

உணவு உலகம்: நினைத்தாலே இனிக்கும்!

உணவு
பிரீமியம் ஸ்டோரி
News
உணவு

எஸ்.பூமாப்ரியா

ஐங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை விடவும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளின் விலை உலகின் பெரும்பாலான நகரங்களில் அதிகமாகவே உள்ளது.

உணவு உலகம்: நினைத்தாலே இனிக்கும்!

தாய்ப்பாலைத் தவிர வேறெந்த உணவிலும் மனித உடலுக்குத் தேவையான அத்தனை சத்துகளும் நிறைந்து காணப்படுவதில்லை.

உணவு உலகம்: நினைத்தாலே இனிக்கும்!

3000 ஆண்டுகளைத் தாண்டினாலும்கூட கெட்டுப்போகாத உணவுப்பொருள் தேன் மட்டுமே.

உணவு உலகம்: நினைத்தாலே இனிக்கும்!

உலகில் அதிக அளவு திருடப்பட்ட உணவுப் பொருள் பாலாடைக்கட்டி என்கிற சீஸ்.

உணவு உலகம்: நினைத்தாலே இனிக்கும்!

40 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைக் காட்டிலும், இப்போது சிக்கனில் 266 சதவிகிதம் அதிக கொழுப்பு காணப்படுகிறது.

உணவு உலகம்: நினைத்தாலே இனிக்கும்!

அமெரிக்காவிலுள்ள சியாட்டில் நகரத்தில் 2015-ம் ஆண்டு முதல், மீதமாகும் உணவுப்பொருளை இயற்கை உரமாகப் பயன்படுத்தாமல் குப்பையில் எறிவது சட்டப்படி குற்றம்.

உணவு உலகம்: நினைத்தாலே இனிக்கும்!

பிடித்தமான உணவை நினைத்தாலே போதும்... `டோபமைன்' என்கிற மகிழ்ச்சி அளிக்கிற ஹார்மோன் சுரக்கத் தொடங்கி விடும்.

உணவு உலகம்: நினைத்தாலே இனிக்கும்!

விமானத்தில் அளிக்கப்படும் உணவு சுவை குறைந்து காணப்படுவதற்கு ஓர் அறிவியல் காரணமும் உண்டு. பறக்கும்போது சுவை மற்றும் வாசனையை உணரும் திறன் 20 முதல் 50 சதவிகிதம் வரை குறைந்துவிடுவதுதான்,அந்தக் காரணம்.

உணவு உலகம்: நினைத்தாலே இனிக்கும்!

பனி உலகில் வாழ்கிற எஸ்கிமோக்களும் ரெஃப்ரிஜிரேட்டரைப் பயன்படுத்துகின்றனர். உணவுப்பொருள்கள் பனியில் உறைந்து போகாமல் தடுப்பதற்காகத்தான்!

உணவு உலகம்: நினைத்தாலே இனிக்கும்!
உணவு உலகம்: நினைத்தாலே இனிக்கும்!

உலக அளவில் தனிநபர் இறைச்சிப் பயன்பாடு குறைவாக இருக்கும் நாடு, இந்தியா.