Published:Updated:

நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்! - உணவுப் புகைப்படக் கலைஞர் மீரா ஃபாத்திமா

உணவு ஸ்டைல்
பிரீமியம் ஸ்டோரி
உணவு ஸ்டைல்

படமும் ருசிக்கும்

நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்! - உணவுப் புகைப்படக் கலைஞர் மீரா ஃபாத்திமா

படமும் ருசிக்கும்

Published:Updated:
உணவு ஸ்டைல்
பிரீமியம் ஸ்டோரி
உணவு ஸ்டைல்

போட்டோகிராபியின்மேல் இருந்த தீராக் காதலால், பல் மருத்துவத்துறையைவிட்டு முழுநேர உணவு ஸ்டைலிஸ்ட் மற்றும் போட்டோகிராபராக வாழ்ந்துகொண்டிருக்கிறார், கேரளாவில் பிறந்து சவுதி அரேபியாவில் செட்டிலாகியிருக்கும் டாக்டர் மீரா ஃபாத்திமா. பொதுவாக, ஃபுட் போட்டோகிராபி துறையில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்த நிலையில், பெண்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் நிறைந்த சவுதியில் முதன்மை உணவு ஸ்டைலிஸ்ட் மற்றும் போட்டோகிராபராக வலம்வந்து கொண்டிருக்கும் ‘எ பிகினர்ஸ் லென்ஸ் (A Beginners Lens)’ நிறுவனத்தின் உரிமையாளர் ஃபாத்திமாவோடு உரையாடினோம்.

 உணவுப் புகைப்படக் கலைஞர் மீரா ஃபாத்திமா
உணவுப் புகைப்படக் கலைஞர் மீரா ஃபாத்திமா

ஃபுட் போட்டோகிராபியை ஏன் தேர்ந்தெடுத் தீர்கள்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போட்டோகிராபி துறைக்கு நான் வந்தது ஒரு விபத்துதான். அடிப்படையில் நான் பல் மருத்துவர். மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணமாகி சவுதிக்கு இடம்பெயர்ந்தபோது இங்கு எனக்கேற்ற வேலை கிடைக்கவில்லை. முழு நேரமும் வீட்டிலேயே இருந்தேன். அந்த நேரத்தில்தான் என் கணவரும், என் அப்பாவும் எனக்காக ஒரு புரொஃபஷனல் கேமராவை வாங்கிக் கொடுத்தார்கள். சிறு வயதிலிருந்தே எனக்கு போட்டோகிராபி ஆர்வம் இருந்தது. ஆனால், அதற்கான முயற்சி எடுக்கவில்லை. அதனால், கேமரா கைக்கு வரும்வரை அதை எப்படிப் பிடிக்க வேண்டும் என்பதுகூட எனக்குத் தெரியாது. பிறகு வெவ்வேறு இணைய தளங்களில் கற்றுக்கொண்டு பல்வேறுவிதமான பயிற்சிகள் மேற்கொண்டேன். இப்போது கேமரா இல்லாமல் நானில்லை!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘எ பிகினர்ஸ் லென்ஸ்’ பிறந்தது எப்படி?

நான் சமைக்கும் உணவுகளைப் புகைப்படம் எடுத்து என் நண்பர்களுக்கு அனுப்புவது வழக்கம். அதைப் பார்த்த என் நண்பர்கள் இருவர் என்னை இன்ஸ்டா கிராம் பக்கம் ஆரம்பிக்கச் சொன்னார்கள். அப்போதுதான் ‘எ பிகினர்ஸ் லென்ஸ்’ பிறந்தது. எதுவுமே இல்லாமல் இருந்த வளுக்கு எல்லாமே கிடைத்த உணர்வு. அதன்பிறகு உணவுப் புகைப்படக்கலை என் வாழ்வின் ஓர் அங்கமாகவே மாறியது.

நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்! - உணவுப் புகைப்படக் கலைஞர் மீரா ஃபாத்திமா

நாம் சரியான பாதையில்தான் பயணிக்கிறோமா என்பதே தெரியாமல் நாள்களை நகர்த்திக்கொண்டிருந்தேன். என் புகைப்படங்களுக்கு மக்களிடமிருந்து கிடைத்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் மட்டுமே அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல என்னைத் தூண்டியது. அதைத் தொடர்ந்து ஏராளமான ஹோட்டல்கள், உணவு பிளாகர்களோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது.

சவுதியில் உங்கள் பயணம் பற்றி...

சவுதியில் இருப்பதால் ஏராளமான வரையறைகளை எதிர்கொண்டேன். ஓர் இல்லத்தரசியாக வீட்டிலிருந்தபடி வேலை செய்ய முடியுமென்றால், அது சமைத்து வைத்த உணவுகளைப் புகைப்படம் எடுப்பது மட்டுமாகவே இருந்தது. அந்த நேரத்தில் உணவு அலங்காரம் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. பொழுதுபோக்குக்காக ஆரம்பித்தது, நாளடைவில் என்னுடைய துறையாக மாறியது.

நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்! - உணவுப் புகைப்படக் கலைஞர் மீரா ஃபாத்திமா

சென்ற ஆண்டு விடுமுறைக்காகக் கொச்சி வந்தேன். அப்போது, உணவு போட்டோகிராபி மற்றும் ஸ்டைலிங் சம்பந்தமாக ஒரு வொர்க்‌ஷாப் நடத்தினோம். அங்கு ஏராளமான திறமையாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஒரு மாதத்தை என்னால் மறக்கவே முடியாதது.

இந்தியாவில் நம் திறமைகளை வெளிப்படுத்த ஏகப்பட்ட தளங்கள் இருக்கின்றன. அவற்றை மக்கள் சரியான வழியில் பயன்படுத்திக்கொண்டால் போதும். சவுதியில் அப்படியல்ல... பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு. இந்த நிலையில், சவுதியில் ஓர் உணவு பிளாகரோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகே என்னுடைய பணி உலக அளவில் சென்றடைந்தது.

என்னைச் சிறந்த பல் மருத்துவராகப் பார்க்கவே என் குடும்பத்தினர் ஆசைப்பட்டனர். அவர்களுக்கு நான் கேமராவை சுமந்துகொண்டு ஹோட்டல் ஹோட்டலாகச் சென்று புகைப்படம் எடுப்பதில் சிறிதளவும் உடன்பாடில்லை.

உங்கள் இன்ஸ்பிரேஷன் யார்?

ஆரம்பத்தில் என்னுடைய க்ளிக்குகள் அனைத்தும் சாதாரண புகைப்படங்களாகவே இருந்தன; மிகவும் மோசம் என்றுகூட சொல்லலாம்! பிறகுதான் வெவ்வேறு தளங்களைப் பார்த்து, உணவை அலங்கரிக்க வும், அதை சரியாகப் படமெடுக்கவும் கற்றுக்கொண்டேன். என்னுடைய குரு, ஆசான் எல்லாமே இன்டர்நெட்தான். குறிப்பாக எம்.எஸ்.அகர்வால், தி பைட் ஷாட்ஸ் உள்ளிட்ட புகைப்படக்காரர்களே என்னுடைய மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன்.

நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்! - உணவுப் புகைப்படக் கலைஞர் மீரா ஃபாத்திமா

நீங்கள் சந்தித்த சவால்கள்?

என்னைச் சிறந்த பல் மருத்துவராகப் பார்க்கவே என் குடும்பத்தினர் ஆசைப்பட்டனர். அவர்களுக்கு நான் கேமராவை சுமந்துகொண்டு ஹோட்டல் ஹோட்டலாகச் சென்று புகைப்படம் எடுப்பதில் சிறிதளவும் உடன்பாடில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பிறகே அவர்கள் சம்மதித்தனர். மேலும், ஒரு பெண்ணாக இந்தச் சமூகம் என்னைப் பார்த்த பார்வையும், அதைக் கடந்து வந்த பாதையும் கசப்பானவை.

என்னுடைய இந்தச் சவால்களை முறியடிக்க உறுதுணையாக இருந்தது என் குடும்பம் மட்டுமே. அதிலும், என் கணவரும் என் தங்கையும் என்னுடைய இரு மிகப் பெரிய தூண்கள். கஷ்டத்திலும் நஷ்டத்திலும் தோள்கொடுத்து என்னை முன்னேற வைப்பதில் அவர்களுக்கு அதிக ஆர்வம்.

நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்! - உணவுப் புகைப்படக் கலைஞர் மீரா ஃபாத்திமா

சமீபத்தில்தான் எனக்குக் குழந்தை பிறந்தது. அவளைப் பார்த்துக்கொள்ள வேண்டுமே. அதனால், ஏராளமான வாய்ப்புகளைப் புறக்கணித்துள்ளேன். இதுபோன்ற குடும்ப அளவிலான சவால்களையே இப்போது சந்தித்து வருகிறேன். நாம் செய்யும் வேலையில் முழு நம்பிக்கை இருந்தாலே போதும்... வெற்றி நிச்சயம்!

போட்டோகிராபியில் உங்களுடைய தனித்தன்மை என்ன?

செயற்கை ஒளிகளைப் பயன்படுத்தாமல், இயற்கை ஒளியில் புகைப்படம் எடுப்பதே என்னுடைய தனித்தன்மை. என் வாடிக்கை யாளர்களும் அதையே விரும்புகின்றனர்.

நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்! - உணவுப் புகைப்படக் கலைஞர் மீரா ஃபாத்திமா

வருங்காலத் திட்டம்..?

ஃபுட் போட்டோகிராபி வொர்க்‌ஷாப்கள் நிறைய நடத்த வேண்டும் என்பதே என் குறிக்கோள். ஆரம்பநிலையில் இருக்கும் புகைப்படக் கலைஞர்களுக்கு என்னாலான உதவிகளைச் செய்வேன்.

எது சரியான உணவுப் புகைப்படம்?

ஓர் உணவுப் புகைப்படத்தைப் பார்த்ததும் சாப்பிடத் தூண்ட வேண்டும். அதுவே சரியான புகைப்படம். அப்படிப் புகைப்படம் எடுப்பது சாதாரண விஷயமல்ல. சரியான ஒளி, ஒளியின் திசை, சரியான பதத்தில் உணவு, உணவின் நிறம், மெருகேற்றும் பின்னணிப் பொருள்கள், நிறங்கள், தட்டின் நிறம், அதைச் சுற்றியுள்ள பொருள்கள் என அனைத்தும் ஒன்றிணைந்தால் மட்டுமே சரியான புகைப்படங்கள் கிடைக்கும். முக்கியமாக நிறங்கள் பற்றிய அறிவு போட்டோகிராபியில் மிகவும் முக்கியம்.

எங்கு சென்றாலும் அங்கு பார்க்கிற பொருள்களை கவனித்து, வித்தியாசமான பொருள்களைச் சேமிக்கும் பழக்கம் அவசியம். இதை ஒரு பொழுதுபோக்காகவே செய்யலாம். கறுப்பு, வெள்ளைத் தட்டுகள் மற்றும் கிண்ணங்கள், சில கட்லெரி பொருள்கள் போன்றவை உணவுப் புகைப்படக் கலைஞரிடம் அவசியம் இருக்க வேண்டியவை.