Published:Updated:

சினிமா பார்த்தேன்... சமையலில் எக்ஸ்பர்ட் ஆனேன்!

உணவே என் ஹீரோ
பிரீமியம் ஸ்டோரி
News
உணவே என் ஹீரோ

உணவே என் ஹீரோ

சரியான அளவில் தரமான பொருள்களைக் கொண்டு பக்குவமாகச் சமைப்பது என்பது மிகப்பெரிய பொறுப்பு. அந்த உணவைப் பார்த்ததும் சாப்பிடத் தூண்டும் அளவுக்கு அலங்கரிப்பது சமைப்பதைவிட சவாலான விஷயம். ஆனால், விதவிதமான உணவு வகைகளைச் சமைத்து, அதை அழகாக அலங்கரித்து, புகைப்படமும் எடுப்பதில் வல்லவர் அம்பிகா செல்வம். பல்வேறு விளம்பரங்களில் தோன்றும் சுண்டியிழுக்கும் வண்ண வண்ண உணவுகளை அலங்கரித்த அம்பிகாவோடு ஓர் உரையாடல்...

சினிமா பார்த்தேன்... சமையலில்  எக்ஸ்பர்ட் ஆனேன்!

சமையற்கலையில் உங்களுக்கு இன்ஸ்பிரேஷன் யார்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சிறு வயதிலிருந்தே எனக்கு மிகவும் பிடித்த ஒரே விஷயம் ‘சாப்பாடு’. ஆனால், சமையல் பற்றி எதுவும் தெரியாது. 2008-ம் ஆண்டு, என் திருமண நாள் நெருங்க நெருங்க, தமிழ்நாட்டு அம்மாக்களைப் போலவே என்னுடைய அம்மாவும் சமைக்கக் கற்றுக் கொள்ளும்படி என்னை வலியுறுத்தினார். அப்போது தான் முதன்முதலில் சமையலறைப் பக்கம் சென்றேன். பொதுவான உணவுகளை மட்டுமே சமைத்துக்கொண்டிருந்த எனக்குச் சமையல்மீது அதிக ஆர்வம் வருவதற்கு முக்கியமான காரணம் 2009-ம் ஆண்டு வெளியான‘ஜூலி அண்டு ஜூலியா’ திரைப்படமும், 2010-ம் ஆண்டு நடத்தப்பட்ட ‘மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா’ போட்டியும் தான். இவைதாம் என்னுடைய இன்ஸ்பிரேஷன். அதன்பிறகு கடைகளில் காய்கறிகளைப் பார்த்தாலே புத்துணர்வு கிடைத்தது. இதுவே என்னை தினமும் சமையலறைப் பக்கம் அழைத்துச் சென்றது.

உணவு வகைகளில் உங்கள் ஃபேவரைட் எது?

`பேக்கிங்’ எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் ஏராளமான வெரைட்டிகளை முயற்சி செய்து பார்த்திருக்கிறேன். கேக், குக்கீஸ், பைஸ் (Pies), பீட்சா, பிரெட், பன் என எல்லாவற்றிலும் வித்தியாசமான ரெசிப்பிகளை உருவாக்கியிருக்கிறேன்.

தென்கிழக்கு ஆசிய உணவு வகைகள்மீதும் அபார பிரியம் உண்டு. குறிப்பாக... தாய்லாந்து மற்றும் மலேசிய உணவு வகைகள் என்னுடைய ஃபேவரைட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

எந்த உணவு வகை மிகவும் சவாலானது?

பேக்கிங்தான் மிகவும் சவாலான விஷயம். மற்ற உணவு வகைகளில் ஓரிரு பொருள்களைத் தவற விட்டால்கூட அதைச் சரிசெய்து விட முடியும். பேக்கிங்கில் அதுபோன்ற ரிப்பேர் வேலைகள் எதுவும் செய்ய முடியாது. சரியான அளவில் அனைத்துப் பொருள் களும் இருந்தால் மட்டுமே டேஸ்ட்டி அவுட்புட் கிடைக்கும். இதில் அறிவியலும் சம்பந்தப்பட்டிருக் கிறது. ஆரம்பத்தில் பேக்கிங் சிரமமாக இருந்தாலும், தொடர்ந்து முயற்சி செய்தால் நிச்சயம் எக்ஸ்பர்ட் ஆகலாம்.

கேக்
கேக்

உணவுப் புகைப்படக்கலை மற்றும் உணவு வலைப்பதிவு மீதான ஆர்வம் எப்படி வந்தது?

வேலைக்குச் சென்றுகொண்டே தினம் தினம் புதுப்புது உணவுகளைச் செய்து பார்த்துக் கொண்டிருந் தேன். நான் செய்த உணவு வகைகளைப் புகைப்படம் எடுத்து அம்மாவுக்கு அனுப்பு வேன். அம்மாவின் ஃபீட்பேக்தான் உணவுப் புகைப்படங்கள் மீதான ஆர்வத்தைத் தூண்டியது. ஒரு சமையல் புத்தகம் எழுதவும் அம்மா என்னை வலியுறுத்தினார். ஆரம்பத் தில் இதை நகைச்சுவையாக நினைத்துச் சிரித்தேன். ஆனால், என் அம்மா மிகவும் தெளிவாக இருந்தார். என்னால் முடியும் என அவர்தான் என்னை ஊக்கப் படுத்தினார். அதன் பிறகுதான் 2011-ல் ‘பிளாக்’ எழுத முடிவு செய்தேன்.

சினிமா பார்த்தேன்... சமையலில்  எக்ஸ்பர்ட் ஆனேன்!

உணவு போட்டோ கிராபியில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

உணவு போட்டோ கிராபி யில் உணவுதானே ஹீரோ? அந்த ஹீரோவை அழகாகவும் தெளிவாகவும் காட்டுவதற்கு, உணவின் நிறத்துக்கேற்ற டேபிள், அதைச் சுற்றியுள்ள பொருள்கள் என எல்லா வற்றையும் மனத்தில் கொண்டு போட்டோ எடுக்க வேண்டும். ஆரம்பத்தில் கேமரா பற்றிக் கற்றுக் கொள்வதே எனக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. அதோடு, எனக்குச் செயற்கை ஒளி பிடிக்காது. சூரிய ஒளியில் மட்டும்தான் படம் எடுப்பேன். அதனால், சூரியனின் வருகைக்காகக் காத்திருப்பேன். சூரியன் மறைந்தால் என் பணி முடிந்துவிடும். இப்போது கமர்ஷியல் விளம்பரத்துக் காக செயற்கை ஒளியில் ஷூட் செய்தாலும், என்னுடைய பர்சனல் சாய்ஸ் எப்போதுமே இயற்கை ஒளிதான்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஐ.டி ஊழியர் டு உணவு ஸ்டைலிஸ்ட். இந்தப் பயணம் எப்படி இருக்கிறது?

ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே தான் பிளாக் எழுதினேன். 2014-ல் என் அம்மாவை இழந்தேன். அம்மாவின் இழப்புதான் என்னை ரெசிப்பி புத்தகங்கள் எழுதத் தூண்டியது. அவருடைய ஆசையும் அதுதான். அதுவரை பொழுதுபோக்குக்காக எழுதிய ரெசிப்பிகள் அனைத்தையும் முழு மனதோடு மிகவும் தீவிரமாக எழுதத் தொடங்கினேன்.

சினிமா பார்த்தேன்... சமையலில்  எக்ஸ்பர்ட் ஆனேன்!

எழுத்து வடிவத்தைப் புகைப்பட வடிவத்துக்குக் கொண்டுவர நினைத்துக் கற்றுக்கொண்டதுதான் ஃபுட் ஸ்டைலிங். நாம் செய்யும் உணவை அழகாகக் காட்சிப்படுத்தி னால் மட்டுமே அதன் உண்மைத்த ன்மையை எடுத்துச் செல்ல முடியும். இந்த எண்ணம்தான் ஃபுட் ஸ்டைலிங் மீதான ஆர்வத்தை வளர்த்தது. அதன் தொடர்ச்சியாக நான் செய்யும் உணவு வகைகளை பிளாகில் பதிவதோடு, அதை அழகாக வடிவமைத்து ஸ்டைலிங் கும் செய்யத் தொடங்கினேன்.

ஆரம்பத்தில் சில புகைப்படங் களைப் பார்த்து அதை அப்படியே உருவாக்க முயற்சி செய்தேன். அதிலுள்ள நுணுக்கமான விஷயங் களை ஆராய்ந்தேன். தவறுகளைத் திருத்திக்கொண்டேன். பிறகு, நான் பதிவிடும் உணவு பற்றிய தகவல்களோடு கதை களையும் இணைத்தேன். அந்தக் கதையில் உணவு செய்வதற்கான காரணம், நினைவுகள், தனித்துவம், உள்ளிட்ட விஷயங்களைச் சேர்த்தேன்.

சினிமா பார்த்தேன்... சமையலில்  எக்ஸ்பர்ட் ஆனேன்!

ஒருகட்டத்தில் உணவா... ஐ.டி நிறுவனமா என்று கேள்வி எழுந்த போது, கார்ப்பரேட் வேலை எனக்கு மிகவும் பிடித்திருந்தாலும், உணவு மீதான ஆசையால் முழுநேரமும் உணவோடு செலவிட முடிவெடுத்து வேலையை விட்டு விட்டேன். இப்போது ஏராளமான பிராண்டுகளோடு இணைந்து உணவு ஸ்டைலிங் செய்து கொண்டிருக்கிறேன்.

ஃபுட் ஸ்டைலிங்கில் ஏற்படும் பொதுவான தவறுகள் என்ன?

நம் ஹீரோவான உணவைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை யென்றால் ஸ்டைலிங் தவறாகப் போவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. நாம் என்ன உணவை எப்படி பிரசன்ட் செய்து போட்டோ எடுக்கப்போகிறோம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

சினிமா பார்த்தேன்... சமையலில்  எக்ஸ்பர்ட் ஆனேன்!

உதாரணத்துக்குக் காய்கறி சாலட் ஸ்டைலிங் செய்வதற்கு ஃபிரெஷ் காய்கறிகள் அவசியம். முதலில் அவற்றைச் சீரான அளவில் வெட்ட வேண்டும். அவற்றின்மேல் வைக்க வேண்டிய இலைகள் மிகவும் ஃபிரெஷ்ஷாக இருக்க வேண்டும். அப்போதுதான் அழகுக்காக அதன்மேல் சேர்க்கப்படும் டியூ டிராப்ஸ் புத்துணர்வை அளிக்கும். அப்படியில்லாமல் வாடிப் போயிருந்தால் நிச்சயம் நல்ல அவுட்புட் கிடைக்காது.

உணவு போட்டோகிராபியில் உணவைக் காத்திருக்க வைக்கவே கூடாது. உணவு தயாரித்தவுடனே படங்கள் எடுத்துவிட வேண்டும். இல்லையென்றால், அதன் முழுமைத் தன்மை மறைந்துவிடும். உணவின் நிறம், உணவு வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தின் நிறம், பிளேஸ்மென்ட் போன்றவற்றையும் சரிபார்க்க வேண்டும்.

சினிமா பார்த்தேன்... சமையலில்  எக்ஸ்பர்ட் ஆனேன்!

அம்பிகாவின் சக்சஸ் ஃபார்முலா என்ன?

எந்த வேலையாக இருந்தாலும், அதை ரசித்து முழு மனதோடு செய்தாலே போதும்... அதன் வெளிப்பாடு நிச்சயம் அந்த வேலையிலேயே பிரதிபலிக்கும். என்ஜாய் செய்து பண்ணும்போது லாங் ஜர்னிகூட போர் அடிக்காது!

உணவு போட்டோகிராபியில் உணவைக் காத்திருக்க வைக்கவே கூடாது!