Published:Updated:

`இட்லி முதல் வெஜ் புலாவ்வரை..!' - இஸ்ரோ வெளியிட்ட விண்வெளி வீரர்களின் உணவுப்பட்டியல்

விண்வெளி வீரர்களின் உணவுப்பட்டியல்
விண்வெளி வீரர்களின் உணவுப்பட்டியல்

ககன்யானில் பயணிக்கும் விண்வெளி வீரர்களின் உணவுப்பட்டியல்..!

விண்வெளித் துறையில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா, 2008-ல் சந்திராயன்-1 ஐ விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தி பல சாதனைகளைப் புரிந்தது. அதைத் தொடர்ந்து பல விண்வெளி ஆய்வுகளை மேற்கொண்டு வரும் இஸ்ரோ 2021-ல் முதல்முறையாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.

இஸ்ரோ
இஸ்ரோ

இந்த ககன்யான் திட்டத்துக்காக சுமார் 15 கோடி ரூபாய் இந்திய விண்வெளித் துறையால் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டத்துக்காக விண்வெளிப் பயணம் மேற்கொள்ள இஸ்ரோ 4 வீரர்களை பலகட்ட திறனாய்வுகளுக்குப் பின் தேர்வு செய்துள்ளது.

`இனி அமெரிக்க GPS வேண்டாம்... இந்தியாவின் NavIC ரெடி!' இஸ்ரோ அதிரடி

இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணம் என்பதால் இஸ்ரோ இந்த விஷயத்தில் மிகவும் கவனமாகச் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல ஆங்கிலச் செய்தி நிறுவனமான (ANI) தனது ட்விட்டர் பக்கத்தில் ககன்யானில் பயணிக்கும் விண்வெளி வீரர்களுக்கு இஸ்ரோ தரப்பில் திட்டமிட்டுள்ள உணவுப்பட்டியலை வெளியிட்டது. அந்தப் பட்டியலில் எக் ரோல், வெஜ் ரோல், மூங் தால் அல்வா, வெஜ் புலாவ் மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பர்ய உணவான இட்லியும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

விண்வெளி வீரர்கள்
விண்வெளி வீரர்கள்

இந்த உணவுப் பட்டியலை மைசூரில் உள்ள பாதுகாப்பு உணவு ஆய்வு மையம் தயாரித்துள்ளது. விண்வெளி வீரர்களுக்கு உணவுப் பதார்த்தங்களை சூடுசெய்து சாப்பிட ஹீட்டரையும் விண்வெளி ஏவுகணையில் வைத்து அனுப்பப்பட உள்ளது. மேலும், பால் மற்றும் பழச்சாறுகளும் ககன்யான் வீரர்களுக்காக ஏவுகணையில் அனுப்பி வைக்கப்படவும் உள்ளன. தேர்வு செய்யப்பட்ட உணவு வகைகள் பல்வேறு ஆய்வுகளுக்கும் சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு வீரர்களுக்கு விண்வெளியில் உண்ண உகந்தவை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஏவுகணையில் ஜீரோ கிராவிட்டி நிலவும் என்பதால் மனிதக் கழிவுகளை முறைப்படி அகற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவாம்.

விண்வெளி வீரர்கள்
விண்வெளி வீரர்கள்

விண்வெளிக்குச் செல்லும் உணவுகளின் பட்டியலில் நம் ஊரின் இட்லியும் இடம்பெற்றிருப்பது ஒரு வகையில் நமக்கும் பெருமைதான்!

அடுத்த கட்டுரைக்கு