Published:Updated:

பீஃப் உலர்த்தியது வெர்சஸ் பண்ணைக் கோழி... கேரள, கர்நாடக சுற்றுலாத்துறையின் சுவாரஸ்ய போட்டி!

பீஃப் உலர்த்தியது வெர்சஸ் பண்ணைக் கோழி
பீஃப் உலர்த்தியது வெர்சஸ் பண்ணைக் கோழி

கேரள சுற்றுலாத்துறைக்குப் பதிலடி தந்த கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர்.

சமீபகாலமாக, இந்தியாவின் தேசிய மற்றும் மாநில சுற்றுலாத்துறையினர், தங்களின் ஆன்லைன் புரொமோஷன்களில் கூடுதல் கவனம் செலுத்திவருவதைக் காணமுடிகிறது. அந்த வகையில் சமீபத்தில் கேரள சுற்றுலாத்துறை, ஆன்லைனில் ஒரு புரொமோஷனை மேற்கொண்டது. தற்போதைய ட்விட்டர் டிரெண்ட், இந்த புரொமோஷன்தான்!

அப்படியென்ன புரொமோஷன் என்கிறீர்களா? பொங்கல் தினத்தன்று (ஜனவரி 15), கேரள சுற்றுலாத்துறை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், கேரளாவின் ஃபேமஸ் `பீஃப் உலர்த்தியது' உணவு குறித்துப் பதிவிட்டது. அந்தப் பதிவில், `இந்த உணவை ருசிக்க வேண்டியாவது அனைவரும் ஒருமுறை கேரளா வாருங்கள்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. உடன், 'பீஃப் உலர்த்தியது' உணவின் செய்முறையையும் பதிவிட்டிருந்தது. உணவுப் பிரியர்கள் பலரும் இந்த பீஃப் ரெசிப்பிக்கு வரவேற்பு தெரிவித்திருந்த போதிலும், அசைவ உணவு எதிர்ப்பாளர்கள் பலரும் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

Vikatan

அந்த வகையில், பா.ஜ.க-வைச் சேர்ந்த கர்நாடக சுற்றுலாத்துறையின் அமைச்சர் ரவி, தனது ட்விட்டர் பக்கத்தில் கேரள சுற்றுலாத்துறையின் குறிப்பிட்ட அந்த ட்வீட்டை ரீ-ட்வீட் செய்து, அதன் மீதான தன் விமர்சனத்தைப் பதிவிட்டிருந்தார். இது பலரின் மனதைப் புண்படுத்திவிட்டது எனக்கூறிய அவர், தனது அடுத்தடுத்த பதிவுகளில், கர்நாடகாவின் ஃபேமஸ் சைவ உணவுகளின் பெயர்கள், அவற்றின் புகைப்படங்களைப் பதிவிட்டு, `உங்களுக்குள் இருக்கும் சைவப் பிரியரை வெளிக்கொணர, அனைவரும் கர்நாடகா வாருங்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

மோடி, விஜய், கோலி, பிகில் - ட்விட்டர் இந்தியாவின் டாப் 10! #ThisHappened2019

இதைப் பார்த்த கர்நாடக உணவுப் பிரியர்கள், கேரள சுற்றுலாத்துறையின் `பீஃப் உலர்த்தியது'க்குப் போட்டியாக கர்நாடகாவின் ஃபேமஸ் அசைவ டிஷ் வகைகளை அதன் சுற்றுலாத்துறை புரொமோஷனில் பகிருமாறு அமைச்சருக்கு கோரிக்கை வைக்கத் தொடங்கிவிட்டனர்.

நடி கொலி சாரு முடே,
ராகி களிக்கு பெஸ்ட் சைட் டிஷ்!

இந்த நிலையில் நேற்றைய தினம், `நடி கொலி சாரு முடே' என்ற கர்நாடகாவின் ஃபேமஸ் பாரம்பர்ய பண்ணைக் கோழி ரெசிப்பியை, கர்நாடக சுற்றுலாத்துறை சார்பில் தனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அமைச்சர்!

ராகி களிக்கு சைட் டிஷ்ஷாக வைக்கப்படும் இந்த நடி கொலி சாரு முடேவை, பா.ஜ.க-வைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் பகிர்ந்திருப்பது தங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது எனக்கூறி சைவப் பிரியர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து ஆதங்கப்பட்டு வருகிறார்கள். இன்னொரு பக்கம், பலரும் இதைப் பாசிட்டிவ்வாக எடுத்துக்கொண்டு அமைச்சருக்கு ட்விட்டரில் வாழ்த்துச் சொல்லி வருகின்றனர்!

வேற்றுமையில் ஒற்றுமை காண்போமே!
பின் செல்ல