Published:Updated:

ஆஹா... ஆதென்டிக் ருசி!

கேரளா உணவுத் திருவிழா
பிரீமியம் ஸ்டோரி
கேரளா உணவுத் திருவிழா

கேரளா உணவுத் திருவிழா

ஆஹா... ஆதென்டிக் ருசி!

கேரளா உணவுத் திருவிழா

Published:Updated:
கேரளா உணவுத் திருவிழா
பிரீமியம் ஸ்டோரி
கேரளா உணவுத் திருவிழா

சென்னையில் `ஆதென்டிக் கேரளா உணவுத் திருவிழா’ என்றதும் சற்றும் யோசிக்காமல் ராயப்பேட்டையில் உள்ள ரெஜென்டா சென்ட்ரல் டெக்கான் ஹோட்டலுக்கு விரைந்தோம். ஒரு மணி நேரத்தில் 108 உணவு வகைகளைச் சமைத்து பல விருதுகளைக் குவித்திருக்கும் கேரளாவைச் சேர்ந்த செஃப் சரஸ்வதி விஸ்வநாதன் கைப்பக்குவத்தில் சமைக்கப்பட்ட ஏராளமான சைவ உணவு வகைகள் அங்கு வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.

ஆஹா... ஆதென்டிக் ருசி!

மெடிமிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஏ.வி.அனூப், சரஸ்வதிக்கு `சமையல் கலையரசி’ என்னும் பட்டம் வழங்கினார். அதைத் தொடர்ந்து டெக்கான் ஹோட்டலின் பொதுமேலாளர் கௌரி ஷங்கர் முன்னிலையில் கேரள உணவுத் திருவிழா கோலாகலமாக ஆரம்பமானது. சுடச்சுடத் தரப்பட்ட பச்சைப்பட்டாணி தேங்காய் சூப்பை சுவைத்துக்கொண்டே செஃப் சரஸ்வதியிடம் உரையாடினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சமையல்மீது உங்களுக்கு எப்போது ஆர்வம் வந்தது?

``என் சமையல் பயணம் ஆறு வயதிலேயே தொடங்கியது. பாரம்பர்ய சைவ உணவு வகைகள் செய்வதில் என் அம்மாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அப்பாவுக்கும் சமையல்மீது அதிக ஆர்வம் இருந்தது. உணவகத்தில் கிடைக்கும் வெவ்வேறு வகை உணவுகளை வீட்டில் செய்துபார்ப்பார். அந்த நேரத்தில் அவர்கள் எனக்கும் சிறிய வேலைகளை ஒதுக்குவார்கள். நானும் முழு ஆர்வத்தோடு அனைத்தையும் செய்வேன். இப்படி அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டது ஏராளம்.

ஆஹா... ஆதென்டிக் ருசி!

`சமையலுக்கு முழுமையான திட்டம் இருந்தாலே பாதி சமையல் ரெடி!’ என்று அப்பா எப்போதும் சொல்வார். அதைத்தான் இன்று வரை பின்பற்றி வருகிறேன். நாளடைவில் பாரம்பர்ய உணவுகளோடு, என் தனிப்பட்ட ரெசிப்பிகளையும் உருவாக்க ஆரம்பித்தேன். இப்படித்தான் என் சமையல் பயணம் தொடங்கியது” என்று கூறிக்கொண்டே தேங்காய்ப்பால் கஞ்சி, தக்காளி பச்சடியைப் பரிமாறினார் சரஸ்வதி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேரளா உணவுத் திருவிழாவின் சிறப்பம்சம் என்ன?

``இங்கே, ஆதென்டிக் கேரளா உணவு வகை களோடு, என்னுடைய தனிப்பட்ட ஃப்யூஷன் உணவு வகைகளையும் இணைத்திருக்கிறேன். கேரளா `சத்யா’வில் இடம்பெறும் காளன், ஓலன், அவியல் என அனைத்தும் இங்கும் உண்டு. இவற்றின் பாரம்பர்யத் தன்மை மாறாமல், வெவ்வேறு காய்கறிகளை உபயோகப்படுத்தி புதுவிதமான முயற்சி செய்திருக்கிறேன். இப்படி முதன்மை உணவு முதல் டெசர்ட் வரை அனைத்திலும் பாரம்பர்யத்தோடு புதுமையும் நிறைந்திருக்கும்” என்று அவர் கூறியதும் மாங்காய் மோர்க்குழம்பு, சக்க தோரன், பப்பாளி ஓலன், கருணைக்கிழங்கு காளன் ஆகியவற்றை தட்டில் நிறைத்தோம். ஆஹா... உண்மையிலேயே ஆதென்டிக் ருசிதான்!

ஆஹா... ஆதென்டிக் ருசி!

வித்தியாசமான கேக் வகைகளுக்கான இன்ஸ்பிரெஷன் என்ன?

``சமையலுக்கென்று எங்கேயும் வகுப்புக் கெல்லாம் நான் செல்லவில்லை. அனைத்தும் சுயமாகக் கற்றுக்கொண்டவை. அந்த வகையில், முட்டை இல்லா கேக் வகைகளைச் செய்யத் தொடங்கினேன். கேரளா திருச்சூரில் நான் மட்டும்தான் இந்த கேக் வகைகளைச் செய்துவருகிறேன். எனக்கு கேக் என்றால் தனி ஆர்வம். சந்தையில் எப்போதும் கிடைக்கும் வகைகளைத் தவிர்த்து, தாமரைப்பூ கேக், மைசூர்பாக் கேக், சோன்பப்டி கேக், சத்துமாவு கேக், அசோகா அல்வா கேக், பாலாடை பாயசம் கேக் போன்ற வித்தியாசமான கேக்குகளைச் செய்துவருகிறேன். இவற்றுக்காகப் பரிசுகளும் பெற்றிருக்கிறேன்.

 உணவுத் திருவிழாவில்...
உணவுத் திருவிழாவில்...

சமையலில் சந்தித்த சவால்கள் என்னென்ன?

பிசினஸில் ஒரு பெண் இறங்கிவிட்டால், ஆண்களைவிட ஏராளமான சவால்களைச் சந்திக்கவேண்டியிருக்கும். என் கணவர், இரண்டு மகன்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்கள்தாம் என் அத்தனை சோதனைக் காலங்களிலும் எனக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள். பல தடைகளைத் தாண்டி, இப்போது சொந்தமாக கேரளாவில் ஒரு ரெஸ்டாரன்ட் திறந்திருக்கிறோம்.

``பிரதமன் மற்றும் பாயசம்தாம். பொதுவாகவே, வாழைப்பழம், பருப்பு அல்லது பலாப்பழம் போன்றவற்றை உபயோகித்துதான் பிரதமன் செய்வார்கள். ஆனால், நான் மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களை உபயோகித்துள்ளேன். அதேபோல மாம்பழத்தில் பாலாடை பாயசம் செய்திருக்கிறேன்” என்று சரஸ்வதி சொன்னதுதான் தாமதம்... பிரதமன் மற்றும் பாயசம் இரண்டையும் கோப்பையில் ஊற்றிச் சுவைத்துக்கொண்டே விடைபெற்றோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism