பொதுவாக குழந்தைகளைத் திருப்திப்படுத்துவதற்காக அம்மாக்கள் விதவிதமாக சமைக்க மெனக்கெடுவது வழக்கம். ஆனால், க்யூட் சுட்டி செஃப் வினுஷாவோ டேஸ்ட்டியான, ரிச்சான உணவு வகைகளை அம்மாக்களுக்காக இங்கே பரிந்துரைத்திருக்கிறார். அம்மாக்களுக்காகச் சமைக்க ரெடியா?

பிரெட் அல்வா

தேவை: ஓரம் நீக்கப்பட்ட பிரெட் - 5, சர்க்கரை - 75 கிராம், முந்திரிப்பருப்பு மற்றும் உலர் திராட்சை - 15, நெய் - 30 கிராம், தண்ணீர் - ஒரு கப்.

செய்முறை: தவா ஒன்றில் சிறிது நெய்விட்டு சூடாக்கி அதில் பிரெட்டுகளைப் போட்டு டோஸ்ட் செய்து எடுத்துக்கொள்ளவும். முந்திரிப்பருப்பு மற்றும் உலர் திராட்சையை சிறிது நெய்யில் வறுத்து அதையும் தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும். கடாயில் தண்ணீர்விட்டு, அதில் சர்க்கரையைச் சேர்த்துச் சூடாக்கவும். பிறகு சர்க்கரை நன்கு கரைந்தவுடன், அதில் பிரெட்டை ஒன்றன்பின் ஒன்றாகப் போடவும். பிரெட்டை நீர் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி, ஒருகட்டத்துக்கு மேல் பிரெட் கரைந்து கூழ் போல ஆகிவிடும். பின்னர் இதில் கொஞ்சம் கொஞ்சமாக நெய்யைச் சேர்த்து கலவையைக் கிளறிக்கொண்டே இருந்தால் அல்வாவுக்கான பதம் வந்துவிடும். பின்னர் அல்வாவைக் கீழே இறக்கி, வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு மற்றும் உலர் திராட்சையைச் சேர்த்துப் பரிமாறவும்.

முள்ளங்கி மசாலா சப்பாத்தி

தேவை: கோதுமை மாவு - 500 கிராம், துருவிய முள்ளங்கி - 200 கிராம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - அரை கப், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 50 மில்லி, தண்ணீர் - அரை டம்ளர், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: கோதுமை மாவுடன் துருவிவைத்துள்ள முள்ளங்கி, இஞ்சி - பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, சிறிது எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். பின்னர் இதனுடன் தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். மாவை உருண்டைகளாக்கி சப்பாத்திகளாகத் தேய்க்கவும். தோசைக்கல்லில் நெய் அல்லது எண்ணெய்விட்டு சூடாக்கி சப்பாத்திகளைச் சுட்டெடுக்கவும்.

குறிப்பு: இந்த முள்ளங்கி மசாலா சப்பாத்தியுடன் தயிர் தொட்டுச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

உருளைக்கிழங்கு லாலிபாப்

தேவை: வேகவைத்த உருளைக்கிழங்கு - 2, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒன்று, பிரெட் தூள் - அரை கப், கொத்தமல்லி - அரை கப், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - அரை டீஸ்பூன், மைதா - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மைதாவுடன் தேவையான தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை மசித்து, அதில் நறுக்கிவைத்துள்ள வெங்காயத்தைச் சேர்த்துக் கிளறவும். இத்துடன் இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி, உப்பு, எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து கிளறவும். கலவையை நன்கு கிளறிய பிறகு, அதை சிறிய சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஒவ்வோர் உருண்டையையும் மைதா பேஸ்ட்டில் தோய்த்தெடுத்து உடனடியாக பிரெட் தூளில் புரட்டி, அப்படியே அதை எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பொரித்த ஒவ்வோர் உருண்டையிலும் பல் குச்சி ஒன்றை செருகி உருளைக்கிழங்கு லாலிபாப்பைப் பரிமாறவும்.

பிரெட் மசாலா டோஸ்ட்

தேவை: கடுகு - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒன்று, நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று, நறுக்கிய குடமிளகாய் – ஒன்று (தேவையெனில்), நறுக்கிய தக்காளி – ஒன்று, வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - அரை கப், பிரெட் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி அதில் கடுகு தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய், தக்காளி, உப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும். அவை நன்கு வதங்கியவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் போன்றவற்றை சேர்த்து வதக்கவும். உருளையில் மசாலா நன்கு இறங்கியபின், கொத்தமல்லி சேர்த்துப் புரட்டி இறக்கிவிடவும். பானில் பிரெட்டை டோஸ்ட் செய்து எடுத்துக்கொள்ளவும். இரண்டு டோஸ்ட் செய்த பிரெட்டு களுக்கு இடையில் மசாலாவை வைத்துச் சேர்த்தால் பிரெட் மசாலா டோஸ்ட் ரெடி!

சமோசா

தேவை: மைதா - 150 கிராம், தண்ணீர் - கால் கப், எண்ணெய் - 30 மில்லி, பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - அரை கப், மைதா பேஸ்ட் - சமோசா எண்ணிக்கைக்கேற்ப, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவுடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர், சிறிது எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்திற்குப் பிசைந்து 20 நிமிடங்களுக்கு அப்படியே மூடி வைத்துவிடவும். பின்னர் மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சிறிய உருண்டைகளாக உருட்டி அவற்றை சப்பாத்தி போல தேய்த்துக்கொள்ளவும். பானைச் சூடாக்கி அதில் செய்துவைத்துள்ள சப்பாத்தியைப்போட்டு அதன் இருபுறமும் 30 விநாடிகளுக்குச் சூடாக்கி எடுக்கவும்.(சாப்பாத்தியை அதிகநேரம் பானில் சுட்டெடுக்கக் கூடாது)

ஒரு பவுலில் பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து நன்கு கலந்தால் மசாலா ரெடி.

இப்போது செய்துவைத்துள்ள சப்பாத்தியை முக்கோண மாக சமோசா வடிவில் மடித்துக்கொள்ளவும். அதற்குள் சிறிதளவு மசாலாக் கலவையை கவனமாக வைக்கவும். பின்னர் சமோசாவின் ஓரங்களை மைதா பேஸ்ட் கொண்டு கவனமாக ஒட்டவும். இதை சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால் மொறுமொறு சமோசா ரெடி.

இளநீர் பாயசம்

தேவை: இளநீர் - 2 (ஒரு கப் தண்ணீர்), இளநீரிலுள்ள தேங்காய் வழுக்கை – அரை கப் + அரை கப் (நறுக்கியது), ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன் (தேவைப்பட்டால்), கண்டன்ஸ்டு மில்க் அல்லது நாட்டுச்சர்க்கரை அல்லது பொடித்த - வெல்லம் தேவைக்கேற்ப.

செய்முறை: அரை கப் இளநீர் மற்றும் அரை கப் இளநீரிலுள்ள தேங்காயைச் சேர்த்து நன்கு அரைக்கவும். பிறகு இதனுடன் தேவைக்கேற்ப இனிப்பைச் சேர்த்துக் கலக்கவும். பின்னர் இதில் மீதமுள்ள இளநீர் மற்றும் மீதமுள்ள நறுக்கிய தேங்காயைச் சேர்த்துக் கலந்தால் இளநீர் பாயசம் ரெடி.

குறிப்பு: ஏலக்காய்த்தூள் சேர்க்க விரும்பினால், இறுதி யாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

ஐஸ்க்ரீம் சண்டே

தேவை: ஒன்றிரண்டாக உடைத்த ஓரியோ பிஸ்கட் - 3, கிட்கேட் சாக்லேட் - 3, ஜெம்ஸ் மிட்டாய் - 10, பிரவுனி கேக் - 1 (விருப்பமெனில்), வெனிலா ஐஸ்க்ரீம் ஸ்கூப் - 3.

செய்முறை: ஓரியோ பிஸ்கட்டோடு, கிட்கேட் சாக்லேட், ஜெம்ஸ் மிட்டாய், பிரவுனி கேக் ஆகியவற்றை நன்கு கலந்துகொள்ளவும். பின்னர் இவற்றின் மீது, மூன்று ஸ்கூப் வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்து அதன்மேலே சாக்லேட் டாப்பிங்ஸ் வைத்தால் ஐஸ்க்ரீம் சண்டே ரெடி.

தேங்காய் உருண்டை

தேவை: உலர் தேங்காய்த்துருவல் - ஒன்றரை கப் + புரட்டுவதற்குத் தேவையான அளவு, கண்டன்ஸ்டு மில்க் - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை: உலர் தேங்காய்த்துருவலோடு கண்டன்ஸ்டு மில்க், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து உருண்டை களாகப் பிடிக்கவும். இதன்மீது, பாதாம்பருப்பு அல்லது முந்திரிப்பருப்பு சேர்த்து டாப்பிங் போல செய்து கொள்ளலாம். தயாரித்த இந்த உருண்டைகளை, புரட்டுவதற்காக எடுத்துவைத்துள்ள தேங்காய்த் துருவலில் புரட்டி யெடுத்தால் தேங்காய் உருண்டைகள் தயார்!

பட்டர் சிக்கன்

தேவை: தண்ணீர் - 2 கப், பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி - 2, பிரியாணி இலை – ஒன்று, லவங்கப்பட்டை – ஒன்று, கிராம்பு - 2, இஞ்சி - பூண்டு விழுது - 3 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு - 6, எலும்பு நீக்கிய கோழிக்கறி - தேவையான அளவு, எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன், கடுகு எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: கடாயில் தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பிரியாணி இலை, லவங்கப்பட்டை, கிராம்பு, முந்திரிப்பருப்பு, ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து கலவையை வேகவிடவும். பின்னர் இதை அப்படியே, அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்துச் சூடாக்கி அரைத்த வற்றை இதில் சேர்த்துக் கிளறி அடுப்பை சிம்மில் வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில், கோழிக்கறி மற்றும் எலுமிச்சைச்சாறு, தயிர், இஞ்சி - பூண்டு விழுது மற்றும் தேவையான உப்பு சேர்த்துக் கிளறி மூடி வைத்துவிடவும். வேறொரு பாத்திரத்தில் கடுகு எண்ணெய் ஊற்றி அதனுடன் மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். பின்னர் இதனுடன் தயாரித்து வைத்துள்ள கறி, எலுமிச்சைச்சாறு, இஞ்சி - பூண்டு விழுது, தயிர்க்கலவையைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் மசாலாவில் ஊறவைத்த சிக்கனைப் பொரித்தெடுக்கவும். பொரித்த சிக்கனைக் குறைவான தீயில் கொதித்துக்கொண்டிருக்கும் கிரேவியில் சேர்த்துக் கிளறி உப்பு சரிபார்த்து இறக்கினால் பட்டர் சிக்கன் ரெடி!

குறிப்பு: விரும்பினால் இறுதியாக ஃப்ரெஷ் க்ரீம் மற்றும் கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கவும்.

தால் பால் கறி

தேவை: சிவப்பு மிளகாய் - 4, கறிவேப்பிலை - தேவையான அளவு, சோம்பு - அரை டீஸ்பூன், 30 நிமிடங்கள் நீரில் ஊறவைத்த துவரம்பருப்பு - அரை கப், நறுக்கிய வெங்காயம் - 2, தக்காளி - 2, புளித்தண்ணீர் - ஒரு கப், மல்லித்தூள் - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், தண்ணீர் - கால் கப், துருவிய தேங்காய் - அரை கப், வெங்காயம் – ஒன்று, சோம்பு - ஒன்று டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை, சிறிதளவு சோம்பு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். இதில், ஊறவைத்து தண்ணீர் வடித்த துவரம்பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறி பேஸ்ட் போலத் தயாரிக்கவும். பின்னர் இதை அப்படியே சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். அடுத்ததாக, தேங்காய், வெங்காயம், சோம்பு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி, அதில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, சீரகம் ஆகியவற்றை வதக்கவும். பிறகு இதில் புளித்தண்ணீர், தேவையான உப்பு, மல்லித்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை நன்கு கொதித்து சற்று கெட்டிப்பதத்துக்கு வந்தவுடன் செய்து வைத்திருக்கும் உருண்டைகளை இதில் சேர்க்கவும்.

உருண்டைகளைச் சேர்த்த பிறகு, கலவையைக் கிளற கூடாது. எனவே உருண்டையைச் சேர்க்கும் முன்பே கலவையில் உள்ள உப்பின் அளவைச் சரிபார்த்துக் கொள்ளவும். உருண்டை களைச் சேர்த்தபிறகு அப்படியே சில நிமிடங்களுக்குக் கலவையை சிம்மில் வைக்கவும். உருண்டைகள் நன்கு வெந்தவுடன் அதில் தேங்காய் விழுதைச் சேர்த்து கிளறி இறக்கிவிடவும். தால் பால் கறி தயார்!

ஜவ்வரிசி வடை

தேவை: ஜவ்வரிசி - ஒரு கப், உருளைக்கிழங்கு – 4 முதல் 5 (தோலுரித்து, வேகவைத்து மசித்து எடுத்துக்கொள்ளவும்), பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, வேர்க்கடலை (ஒன்றிரண்டாக உடைத்தது) – அரை கப், உப்பு, எண்ணெய் தேவையான அளவு, கொத்தமல்லி - சிறிது.

செய்முறை: ஜவ்வரிசியைக் கொஞ்சம் தண்ணீர்விட்டு கால் மணி நேரம் ஊறவைத்து தண்ணீரைக் கீழே ஊற்றி விடவும். மீண்டும் ஜவ்வரிசி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி அதை ஆறு மணி நேரம் ஊறவைத்து பின்னர் தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெயைத் தவிர கொடுத்துள்ள மீதி அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி கலவையை வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தேங்காய்ச் சட்னி அல்லது வேர்க்கடலைச் சட்னியுடன் பரிமாறவும்.