Published:Updated:

குழந்தைகள் விரும்பும் க்ரிஸ்பி சாக்கோ டிலைட்... செய்துகாட்டுகிறார் `பப்லு' பிரித்விராஜ்!

சாக்கோ டிலைட்
சாக்கோ டிலைட்

தன்னுடைய செல்ல மகனுக்கு 'க்ரிஸ்பி சாக்கோ டிலைட்' செய்துகொடுத்து அசத்திய 'பப்லு' பிரித்விராஜ், அதன் செய்முறையை நமக்கும் இங்கு பகிர்கிறார். ''மதர்ஸ் டேக்கு, இந்த செம்ம ஈஸி, டேஸ்ட்டி ஸ்நாக்கை குட்டீஸே செய்துகொடுத்து அம்மாவை அசத்தலாம்'' என்கிறார் பிரித்வி.

"வாழ்க்கையில எதைச் செய்தாலும், அதை விரும்பி, ரசித்து வித்தியாசமா செய்யுறது என் வழக்கம். நான் விரும்பிச் செய்யும் விஷயங்களில் சமையலும் ஒன்று.

ஒரு க்ரியேட்டர் ஒரு வேலையைச் செய்யும்போது முழுக் கவனமும் அதில் இருக்கும். அந்த வேலையைக் கச்சிதமா செய்து முடித்ததும் அது தரும் மகிழ்வு பேரானந்தமா இருக்கும். அந்தப் பேரானந்தம் சமையலிலும் கிடைக்கும்" என்ற பிரித்விராஜ்,

Actor Prithviraj(Babloo) With His Son
Actor Prithviraj(Babloo) With His Son
instagram

"இந்த லாக்டௌன் நாள்களில், நினைத்த நேரத்தில் விதவிதமான உணவுகளைச் சமைத்துக் கொடுத்து என் குடும்பத்தினரை அசத்திவருகிறேன். அந்த வகையில், அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய சிம்பிளான சில பொருள்களை வைத்து ஒரு டேஸ்டியான 'டிஷ்' செய்துகாட்டப்போகிறேன்.

வீட்டிலேயே அடைபட்டிருக்கும் உங்கள் குழந்தைகளை இந்த 'க்ரிஸ்பி சாக்கோ டிலைட்' கட்டாயம் மகிழ்விக்கும். அதேபோல, மதர்ஸ் டே சர்ப்ரைஸா குட்டீஸும் இதைச்செய்து அம்மாவை 'வாவ்' சொல்ல வைக்கலாம்" என்பவர், க்ரிஸ்பி சாக்கோ டிலைட்டின் செய்முறையை ஸ்டெப் பை ஸ்டெப்பாக விளக்குகிறார்...

1. பிரெட்டை எடுத்துக்கொள்ளவும்.

Bread Slices
Bread Slices
freepik

2. சாக்லேட்டைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

Actor Prithviraj(Babloo)
Actor Prithviraj(Babloo)

3. சாக்லெட் துண்டுகளை பிரெட்டின் ஒரு ஓரத்தில் மட்டும் தூவவும்.

Chopped Chocolate
Chopped Chocolate

4. பிரெட்டின் மற்றொரு ஓரத்தை, சாக்லேட் தூவிய பகுதியை மூடியவாறு முக்கோண வடிவில் மடித்துக்கொள்ளவும்.

Fold the Bread
Fold the Bread

5. கூர்மையான விளிம்புடைய ஒரு டம்ளரை எடுத்துக்கொள்ளவும்.

Actor Prithviraj(Babloo)
Actor Prithviraj(Babloo)

6. அதை, மடித்து வைத்த பிரெட்டின் மீது வைத்து நன்கு அழுத்தம் கொடுக்கவும்.

Cut the bread into shape using  a tumbler.
Cut the bread into shape using a tumbler.

7. தற்போது பிரெட் அரைவட்ட வடிவில் துண்டாகி இருக்கும்.

Half Circle Bread
Half Circle Bread

8. அடுப்பைப் பற்றவைத்து, தோசை தவாவை வைக்கவும்.

Actor Prithviraj(Babloo)
Actor Prithviraj(Babloo)

9. சூடான தவாவில் தேவையான அளவு எண்ணெய் விடவும்.

Actor Prithviraj(Babloo)
Actor Prithviraj(Babloo)

10. தயாரித்து வைத்த பிரெட்டை தவாவில் வைத்து, பொன்னிறமாக மாறும்வரை அப்படியே விடவும்.

Actor Prithviraj(Babloo)
Actor Prithviraj(Babloo)

11. பிரெட்டை திருப்பிப் போட்டு அடுத்த பக்கத்தையும் பொன்னிறமாக விடவும்.

Roasted Choco Bread
Roasted Choco Bread

12. சாக்லேட் துண்டுகள் உருகி, பிரெட்டும் பொன்னிறமாகிவிடும்.

Actor Prithviraj(Babloo)
Actor Prithviraj(Babloo)

13. தயாரான பிரெட்டை எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.

Crispy Choco Delight
Crispy Choco Delight
வெட்டிவேர், புதினா, மாதுளை... எளிய, இனிய கோடைக்கால பானகங்கள், பானியங்கள் தயாரிப்பு முறைகள்

14. இந்த க்ரிஸ்பி சாக்கோ டிலைட்டை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.

Actor Prithviraj(Babloo) with his Son
Actor Prithviraj(Babloo) with his Son
லாக்டவுன் நாள்களில் இந்த `ரெடி டு குக்' அயிட்டங்களைத் தயாரித்து வைத்துக்கொள்ளுங்கள்! #StayHome
அடுத்த கட்டுரைக்கு