Published:Updated:

கிட்ஸ் ஸ்பெஷல் - ஸ்மைலி ஸ்நாக்ஸ்

தொகுப்பு: ஸ்ரீ லோபாமுத்ரா

பிரீமியம் ஸ்டோரி

``இளம் வயது முதலே சமையல்மீது அதிக ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வம் திருமணத்துக்குப் பிறகு இன்னும் விரிவடைந்தது. கணவர் கொடுத்த ஊக்கம் என் ஆர்வத்தை வெகுவாக வளர்த்தது. எனக்கு வெளிமாநில, வெளிநாட்டு உணவுகளை அறிந்து சமைப்பதில் பிரியம் உண்டு. அந்த வகையில் சீனா, இத்தாலி, திபெத், ஜப்பான், பர்மா, பாகிஸ்தான், தாய்லாந்து, நேபாளம், சிங்கப்பூர் போன்ற நாடுகளின் உணவு முறைகளைத் தயாரித்து குடும்பத்தினருக்குக் கொடுத்தபோது நல்ல பாராட்டு கிடைத்தது.

ஸ்மைலி ஸ்நாக்ஸ்
ஸ்மைலி ஸ்நாக்ஸ்
   இளவரசி வெற்றி வேந்தன்
இளவரசி வெற்றி வேந்தன்

குழந்தைகள் விரும்பும் துரித உணவுகளை வீட்டிலேயே சில புதுமைகளுடன் தயார் செய்து கொடுப்பது வழக்கம். அவற்றில் ஒன்றான குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ‘ஸ்மைலிஸ்’ செய்முறையை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி’’ என்கிற இளவரசி வெற்றி வேந்தன், `Star’s Kitchen’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் சமையல் முறைகளைப் பகிர்ந்துவருகிறார்.

ஒவ்வொரு வீட்டிலும் ஸ்மைலிஸ் பூக்கட்டும்!

ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங் - 1

ஸ்மைலிஸ்

தேவையானவை:

  • உருளைக்கிழங்கு - 2 கப் (வேகவைத்து, தோலுரித்து துருவியது)

  • பிரெட் க்ரம்ஸ் - ஒரு கப்

  • மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

  • அரிசி மாவு - அரை கப்

  • கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

ஸ்மைலிஸ்
ஸ்மைலிஸ்
ஸ்மைலிஸ்
ஸ்மைலிஸ்

துருவிய உருளைக்கிழங்கு, பிரெட் க்ரம்ஸ், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும். அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். பின்னர், பட்டர் பேப்பர் அல்லது ட்ரேயில் அரிசி மாவைப் பரவலாகத் தூவிக்கொள்ளவும். உருளைக்கிழங்கு கலவையைப் பரப்பி வைக்கவும்.

ஸ்மைலிஸ்
ஸ்மைலிஸ்

குக்கீஸ் கட்டர் அல்லது வாட்டர் பாட்டில் மூடியின் உதவியுடன் வட்ட வடிவ அச்சுகளாக எடுத்துக்கொள்ளவும். ஸ்ட்ரா வைத்து கண்கள் போல் செய்துகொள்ளவும். ஸ்பூன் உதவியுடன் வாய் போல் செய்துகொள்ளவும். பின்னர் மீண்டும் அரிசி மாவில் நன்கு புரட்டியெடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங் - 2

ஸ்டார் ஸ்மைலிஸ்

தேவையானவை:

  • உருளைக்கிழங்கு - 2 கப் (வேகவைத்து, தோலுரித்து துருவியது)

  • பிரெட் க்ரம்ஸ் - ஒரு கப்

  • மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

  • அரிசி மாவு - அரை கப்

  • கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

ஸ்டார் ஸ்மைலிஸ்
ஸ்டார் ஸ்மைலிஸ்
ஸ்டார் ஸ்மைலிஸ்
ஸ்டார் ஸ்மைலிஸ்

துருவிய உருளைக்கிழங்கு, பிரெட் க்ரம்ஸ், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும். அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். பின்னர், பட்டர் பேப்பர் அல்லது ட்ரேயில் அரிசி மாவைப் பரவலாகத் தூவிக்கொள்ளவும். உருளைக்கிழங்கு கலவையைப் பரப்பி வைக்கவும்.

ஸ்டார் ஸ்மைலிஸ்
ஸ்டார் ஸ்மைலிஸ்

ஸ்டார் வடிவ குக்கீஸ் கட்டர் உதவியுடன் ஸ்டார் வடிவ அச்சுகளாக எடுத்துக்கொள்ளவும். ஸ்ட்ரா வைத்து கண்கள் போல் செய்துகொள்ளவும். ஸ்பூன் உதவியுடன் வாய் போல் செய்து கொள்ளவும். பின்னர், மீண்டும் அரிசி மாவில் நன்கு புரட்டியெடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங் - 3

ஃப்ளவர் ஸ்மைலிஸ்

தேவையானவை

  • உருளைக்கிழங்கு - 2 கப் (வேகவைத்து, தோலுரித்து துருவியது)

  • பிரெட் க்ரம்ஸ் - ஒரு கப்

  • மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

  • அரிசி மாவு - அரை கப்

  • கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

ஃப்ளவர் ஸ்மைலிஸ்
ஃப்ளவர் ஸ்மைலிஸ்
ஃப்ளவர் ஸ்மைலிஸ்
ஃப்ளவர் ஸ்மைலிஸ்

துருவிய உருளைக்கிழங்கு, பிரெட் க்ரம்ஸ், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும். அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். பின்னர், பட்டர் பேப்பர் அல்லது ட்ரேயில் அரிசி மாவைப் பரவலாகத் தூவிக்கொள்ளவும். உருளைக்கிழங்கு கலவையைப் பரப்பி வைக்கவும்.

ஃப்ளவர் ஸ்மைலிஸ்
ஃப்ளவர் ஸ்மைலிஸ்

ஃப்ளவர் வடிவ குக்கீஸ் கட்டர் உதவியுடன் ஃப்ளவர் வடிவ அச்சுகளாக எடுத்துக்கொள்ளவும் ஸ்ட்ரா வைத்து கண்கள் போல் செய்துகொள்ளவும். ஸ்பூன் உதவியுடன் வாய் போல் செய்து கொள்ளவும். பின்னர், மீண்டும் அரிசி மாவில் நன்கு புரட்டியெடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங் - 4

ஹார்ட் ஸ்மைலிஸ்

தேவையானவை:

  • உருளைக்கிழங்கு - 2 கப் (வேகவைத்து, தோலுரித்து துருவியது)

  • பிரெட் க்ரம்ஸ் - ஒரு கப்

  • மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

  • அரிசி மாவு - அரை கப்

  • கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

ஹார்ட் ஸ்மைலிஸ்
ஹார்ட் ஸ்மைலிஸ்
ஹார்ட் ஸ்மைலிஸ்
ஹார்ட் ஸ்மைலிஸ்

துருவிய உருளைக்கிழங்கு, பிரெட் க்ரம்ஸ், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும்., அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். பின்னர், பட்டர் பேப்பர் அல்லது ட்ரேயில் அரிசி மாவைப் பரவலாகத் தூவிக்கொள்ளவும். உருளைக்கிழங்கு கலவையைப் பரப்பி வைக்கவும்.

ஹார்ட் ஸ்மைலிஸ்
ஹார்ட் ஸ்மைலிஸ்

ஹார்ட் வடிவ குக்கீஸ் கட்டர் உதவியுடன் ஹார்ட் வடிவ அச்சுகளாக எடுத்துக்கொள்ளவும். ஸ்ட்ரா வைத்து கண்கள் போல் செய்துகொள்ளவும். ஸ்பூன் உதவியுடன் வாய் போல் செய்து கொள்ளவும். பின்னர், மீண்டும் அரிசி மாவில் நன்கு புரட்டியெடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங் - 5

ரெயின் டிராப் ஸ்மைலிஸ்

தேவையானவை:

  • உருளைக்கிழங்கு - 2 கப் (வேகவைத்து, தோலுரித்து துருவியது)

  • பிரெட் க்ரம்ஸ் - ஒரு கப்

  • மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

  • அரிசி மாவு - அரை கப்

  • கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

ரெயின் டிராப் ஸ்மைலிஸ்
ரெயின் டிராப் ஸ்மைலிஸ்
ரெயின் டிராப் ஸ்மைலிஸ்
ரெயின் டிராப் ஸ்மைலிஸ்

துருவிய உருளைக்கிழங்கு, பிரெட் க்ரம்ஸ், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும். அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். பின்னர், பட்டர் பேப்பர் அல்லது ட்ரேயில் அரிசி மாவைப் பரவலாகத் தூவிக்கொள்ளவும். உருளைக்கிழங்கு கலவையைப் பரப்பி வைக்கவும்.

ரெயின் டிராப் ஸ்மைலிஸ்
ரெயின் டிராப் ஸ்மைலிஸ்

ரெயின் டிராப் வடிவ குக்கீஸ் கட்டர் உதவியுடன் ரெயின் டிராப் வடிவ அச்சுகளாக எடுத்துக்கொள்ளவும். ஸ்ட்ரா வைத்து கண்கள் போல் செய்துகொள்ளவும். ஸ்பூன் உதவியுடன் வாய் போல் செய்துகொள்ளவும். பின்னர் மீண்டும் அரிசி மாவில் நன்கு புரட்டியெடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு