Published:Updated:

தேநீர்... உலகத்தில் அதிகம் அருந்தப்படும் பானம்!

தேநீர்
பிரீமியம் ஸ்டோரி
தேநீர்

கிச்சன் பேஸிக்ஸ்

தேநீர்... உலகத்தில் அதிகம் அருந்தப்படும் பானம்!

கிச்சன் பேஸிக்ஸ்

Published:Updated:
தேநீர்
பிரீமியம் ஸ்டோரி
தேநீர்

ண்ணீருக்கு அடுத்தபடியாக உலகத்தில் அதிகம் அருந்தப்படும் பானம் `டீ’ என்கிற தேநீர்தான். ஏழை - பணக்காரன் என்று பாரபட்சம் பாராமல் அனைவருக்கும் மத்தியில் டீ மிகவும் பிரசித்திபெற்ற பானம். காபிக்கு 3000 ஆண்டுகள் முன்னதாகவே டீ கண்டுபிடிக்கப்பட்டது வரலாறு. கி.மு 2700-ல் `தி டிவைன் ஃபார்மர்’ (The Divine Farmer) என்றழைக்கப்படும் சீன மன்னன் `ஷேன் நுங்’ (Shen Nung) என்பவரால் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது தேயிலை.

இன்று டீக்கடை இல்லாத தெருவே கிடையாது. உலகம் முழுவதும் அலுவலகங்களில் நேரத்துக்கு டீ அருந்துவது பழக்கம். வெளியே செல்லும்போது களைத்துவிட்டோம் என்றால், ஒரு டீக்கடையில் இளைப்பாறிவிட்டுச் செல்வதும் வழக்கம். குளிர்ப்பிரதேசத்தில் அல்லது `சோ’ என்று மழை கொட்டும்போது சுடச்சுட டீ அருந்தும் அனுபவமே தனி சுகம்தான். வடமாநிலங்களில் பலருக்கு சாஸர்களில் தேநீரை ஊற்றி உறிஞ்சும் பழக்கம் உண்டு. இதுவும் ஒரு தனி அனுபவம்தான். கேரள மாநிலத்தின் தேநீர்க் கோப்பைகள் உலகப் பிரசித்திபெற்றவை.

`டீ’ எனப்படும் தேநீரின் வரலாறு, அதன் ரகங்கள் மற்றும் வகைகளை முதலில் காணலாம். பிறகு, பல வகை தேநீர்களை வீட்டிலேயே சுவையாகச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
தேயிலை முதலில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை சீனர்கள் மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே அறிந்திருந்தனர்.

தேயிலையின் வரலாறு

தேயிலை முதலில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை சீனர்கள் மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே அறிந்திருந்தனர். பின் சீனாவிலிருந்து ஜப்பானுக்குப் பரவியது. ஜப்பானிலிருந்து டச்சுக்காரர்கள் வழியாக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் தேயிலை அறிமுகமானது. 1840-50-களில் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வரவழைக்கப்பட்ட தேயிலை இலங்கையில் சோதனை முயற்சியாகப் பயிரிடப்பட்டது. அதன்பிறகு, தென்கிழக்காசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தேயிலை பரவியது.

தேநீர்
தேநீர்

உலகில் மிகப் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், தேயிலை நுகர்வு நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் தேயிலைத் தொழில் 200 ஆண்டுகள் பழைமையானது. அசாம் காடுகளில்தான் பெரும் பாலும் தேயிலை விளைந்தது. தரம், மணம், சுவை ஆகியவற்றில் வேறுபட்ட தேயிலை வகைகள் இப்போதும் இந்தப் பகுதியில் பயிர் செய்யப்படுகின்றன. அஸ்ஸாமுக்கு அடுத்து டார்ஜிலிங், நீலகிரி ஆகியவையும் தேயிலை விளையும் சிறப்புப் பகுதிகளே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மருத்துவ குணங்கள்

தேயிலை ஆரோக்கியத்துக்கு நன்மை செய்யக்கூடியது. தேநீர் பருகுவதால் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படுகிறது. கிரீன் டீ மூலம் சில வகைப் புற்றுநோய்கள், அல்சீமர் பிரச்னை மற்றும் இதயநோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவதாகப் பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எடைக் குறைப்புக்கும் தேயிலை உதவுகிறது.

தேநீரில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், குறைவான கொழுப்பு அளவு ஆகியவற்றால் இதயநோய்கள் தடுக்கப்படுகின்றன. தேயிலையில் உள்ள சத்துகள் பல் ஈறுகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இதில் உள்ள ஃபுளோரைடு, பற்கள் சொத்தையாகாமல் தடுக்கிறது. பிளாக் டீ பருகுவது இதயம் மற்றும் ஈரல் நோய்களைத் தடுப்பதாக சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மொத்தத்தில், நீண்டநாள் வாழத் தேயிலை துணைபுரிவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

தேயிலை பயிர் செய்யப்படும் நிலப் பரப்பைப் பொறுத்து தேநீருக்குத் தனிக் குணங்கள் அமைகின்றன.

தேயிலை வகைகள்

தேயிலை பயிர் செய்யப்படும் நிலப் பரப்பைப் பொறுத்து தேநீருக்குத் தனிக் குணங்கள் அமைகின்றன. அஸ்ஸாம், இலங்கை டீ திடமானதாகவும் (ஸ்ட்ராங்), டார்ஜிலிங், நீலகிரி வகைகள் மிதமான (மைல்டு) உயர்ரகம் எனவும் மதிப்பிடப்படுகின்றன.

பதப்படுத்தப்படும் முறையைப் பொறுத்து, அவை நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை வொயிட் டீ, கிரீன் டீ, ஊலாங் டீ, பிளாக் டீ. இந்தியாவில் நாம் பொதுவாகப் பயன்படுத்துவது பிளாக் டீ. பிளாக் டீயைப் பாலுடன் கலந்து அருந்தும் வழக்கம் இங்கிலாந்திலும் இந்தியாவிலும்தான் அதிகம் உள்ளது.

தேநீர்
தேநீர்

ஊலாங் டீ, கிரீன் டீ, வொயிட் டீ, பிளாக் டீ... இந்த நான்கு டீ வகைகளும் ஒரே செடியிலிருந்தே பறிக்கப்படுகின்றன. இவற்றைப் பதப்படுத்தப்படும் முறைதான் வித்தியாசப்படுகின்றன. பறித்த தேயிலைகளை இயந்திரத்தில் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் உலரவைத்தால் பிளாக் டீ கிடைக்கும். இது உடனடியாக சில நொடிகளில் வெந்து தயாராகிவிடும். அதனால் இதன் உற்பத்தி அதிகம்.

பறித்த தேயிலைகளை நிழலில் உலரவைத்தே கிரீன் டீ பெறப்படுகிறது. இதற்கு நேரம் ஆகும்; இடமும் நிறைய தேவைப்படும். அதனால் பிளாக் டீயுடன் ஒப்பிடும்போது கிரீன் டீயின் உற்பத்தி குறைவு; விலையும் அதிகம்.

தேயிலையின் மொட்டுகளைப் பறித்து முழுமையாக நிழலில் உலர வைத்தால், அதுவே வொயிட் டீ உற்பத்திமுறை. வொயிட் டீயே மிகவும் விலை உயர்ந்த தேயிலை வகை.

பாதி நிழலில் உலர வைத்து பிறகு, இயந்திரத்தில் உலரவைத்து ஊலாங் டீயை உற்பத்தி செய்யலாம்.

தேநீர்
தேநீர்

உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் வெறும் காய்ச்சிய நீராக (பிளாக் டீ ) மட்டுமே தேயிலை அருந்தப்படுகிறது. நம் நாட்டில்தான் பாலுடன் சேர்த்த டீ, இஞ்சி டீ, ஏலக்காய் டீ, லெமன் டீ, காஷ்மீர் ஸ்பெஷல் பாதாம் பிஸ்தா டீ, அரேபியன் சஃப்ரானி சாய் என வெரைட்டியாக ருசிக்கப்படுகிறது. உலகம் முழுவதுமுள்ள உணவு ரசனைக்குத் தேநீர் வகைகள் மிக முக்கியமான சான்று!

உலகப் புகழ்பெற்ற தேநீர் வகைகளை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி? அடுத்த இதழில் பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism