குளிர்கிறதா? உங்களை வெதுவெதுப்பூட்ட ஒரு தேநீரால் முடியும்.

அனல் அடிப்பது போல உணர்கிறீர்களா? உங்களை ஜில் செய்ய ஒரு தேநீரால் முடியும்.

சோர்வாக இருக்கிறீர்களா? உங்களை உற்சாகப்படுத்த ஒரே ஒரு தேநீர் போதும்.

உணர்ச்சிவசப்படுகிறீர்களா? உங்களை அமைதிப்படுத்த ஒரே ஒரு தேநீர் போதும்!

ஆம்... எந்தவொரு பருவநிலைக்கும் எந்தவொரு சூழ்நிலைக்கும் பொருத்தமான பானம் தேநீரைத் தவிர வேறென்ன?

ஒரு கப் தேநீர்... ஒரு புத்தகம்... இவற்றோடு ஒரு மழைநாளைக் கழிப்பது எப்படியொரு சுக அனுபவம்!

மூளையைச் சுறுசுறுப்பாக்கும் மந்திரச்சாவியாகவே தேநீரைப் பயன்படுத்துகிறவர்கள் பலர் உண்டு. அதனால்தான், `எதற்குப் பிறகும் தேநீர்' என்கிற வாசகமே உருவாகியிருக்கிறது. வாழ்வின் அத்தனை பொழுதுகளின்போதும் நம்மோடு துணைநிற்கும் தோழன் தேநீர்தானே?

தேநீர் நம் அறிந்த வகைகளைவிட அறியாத வகைகள் ஏராளம். அவற்றை முறையாகத் தயாரிப்பது எப்படி? அறிவோம்... ரசித்து தயாரிப்போம்... ருசித்துப் பருகுவோம்!

பால் சேர்த்து தேநீர் தயாரிக்கும் முறை

தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் டீத்தூள் சேர்த்து நிறம் இறங்கும் வரை மூன்று முதல் நான்கு நிமிடங்கள் கொதிக்கவிடவும். ஏலக்காய், இஞ்சி, உலர்ந்த இலைகள் அல்லது மசாலாப்பொடி போன்ற ஏதேனும் இதர பொருள்கள் இருந்தால் அதையும் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். சர்க்கரை சேர்த்து இரண்டு நிமிடங்கள் தீயைக் குறைத்துவைக்கவும். பின்னர் பால் சேர்த்து பொங்கி வரும் நேரம் இறக்கி வடிகட்டிப் பருகவும்.

இந்த முறையைப் பயன்படுத்தி மசாலா டீ, ஏலக்காய் டீ, இஞ்சி டீ, மும்பை மசாலா சாய், சோம்பு டீ, மல்லி டீ, சுக்கு மல்லி டீ, பட்டை டீ, புதினா டீ, ஹெர்பல் டீ, துளசி டீ, ஆவாரம்பூ டீ, செம்பருத்திப்பூ டீ, ஓமவள்ளி டீ, அரேபிய சஃப்ரானி சாய் ஆகியவற்றைத் தயாரிக்கலாம்.

பிளாக் டீ

பிளாக் டீத்தூள், இரண்டு கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நிறம் மாறும் வரை கொதிக்கவைத்து வடிகட்டிப் பரிமாறவும். சூடாகவோ, ஐஸ்கட்டிகள் போட்டு ஜில்லென்றோ பரிமாறலாம்.

இந்த முறையைப் பயன்படுத்தி லெமன் டீ , சோம்பு டீ, மல்லி டீ, சுக்கு மல்லி டீ, பட்டை டீ, புதினா டீ, ஹெர்பல் டீ, துளசி டீ, ஐஸ்டு மின்ட் டீ, ஐஸ்டு லெமன் டீ, லெமன் அண்டு ஜிஞ்சர் டீ, ஆவாரம்பூ டீ, செம்பருத்திப்பூ டீ, ஓமவள்ளி டீ, சங்குப்பூ டீ ஆகியவற்றைத் தயாரிக்கலாம்.

கிரீன் டீ

மேற்கூறிய முறையைப் பின்பற்றி பிளாக் டீத்தூளுக்குப் பதிலாக கிரீன் டீத்தூள் சேர்த்து செய்யவும். கிரீன் டீத்தூள் பயன்படுத்தி லெமன் டீ, சோம்பு டீ, மல்லி டீ, சுக்கு மல்லி டீ, பட்டை டீ, புதினா டீ, ஹெர்பல் டீ, துளசி டீ, ஐஸ்டு மின்ட் டீ, ஐஸ்டு லெமன் டீ, லெமன் அண்டு ஜிஞ்சர் டீ, ஆவாரம்பூ டீ, செம்பருத்திப்பூ டீ, ஓமவள்ளி டீ, சங்குப்பூ டீ ஆகியவற்றைச் செய்யலாம்.

வொயிட் டீ / ஊலாங் டீ / சைனா டீ

ஒரு கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். நன்கு கொதிவந்ததும் வொயிட் டீ அல்லது ஊலாங் டீ அல்லது சைனா டீ சேர்த்துப் பாத்திரத்தை மூடிவைக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து வடிகட்டி சூடாகப் பரிமாறவும். இவ்வகை டீத்தூள்களை இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்திய பிறகு கழித்துவிடலாம்.

இந்த மூன்று வகை டீத்தூள்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி லெமன் டீ, சோம்பு டீ, மல்லி டீ, சுக்கு மல்லி டீ, பட்டை டீ, புதினா டீ, ஹெர்பல் டீ, துளசி டீ, ஐஸ்டு மின்ட் டீ, ஐஸ்டு லெமன் டீ, லெமன் அண்டு ஜிஞ்சர் டீ, ஆவாரம்பூ டீ, செம்பருத்திப்பூ டீ, ஓமவள்ளி டீ, சங்குப்பூ டீ ஆகியவற்றைத் தயாரிக்கலாம்.

காஷ்மீரி சாய்

பிஸ்தாவைக் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை ஊற்றி அதில் சோடா உப்பு, டீத்தூள் போட்டு தண்ணீர் மூன்றில் ஒரு பங்காக வற்றும் வரை அடுப்பைக் குறைத்துவைக்கவும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி மேலும் அரை கப் குளிர்ந்த நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டவும். பாலுடன் ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிட்டு, வடிகட்டிவைத்துள்ள டீயைச் சேர்த்து மேலே ஃப்ரெஷ் கிரீம் சிறிது சேர்த்து, அரைத்த பிஸ்தாவைச் சிறிதளவு சேர்த்துப் பருகவும்.

அரேபிய கரக் சாய்

தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் டீத்தூள் சேர்த்து நிறம் இறங்கும் வரை மூன்று முதல் நான்கு நிமிடங்கள் கொதிக்கவிடவும். ஏலக்காய், பட்டை சேர்க்கவும். பிறகு, சர்க்கரை சேர்த்து இரண்டு நிமிடங்கள் தீயைக் குறைத்துவைக்கவும். பின்னர் எவாபோரேடேட் மில்க் சேர்த்து பொங்கிவரும்போது இறக்கி வடிகட்டிப் பருகவும்.

ஹைதராபாத் இரானி டீ

அடிகனமான பாத்திரத்தில் ஒரு கப் பால் ஊற்றி, மூன்றில் ஒரு பங்காக வற்றும் வரை அடுப்பைக் குறைத்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர், டீத்தூள், சர்க்கரை மற்றும் மசாலாப் பொடி சேர்த்து முக்கால் பங்காக வற்றும் வரை கொதிக்கவிட்டு வடிகட்டவும். பிறகு சூடான, சுண்டிய பால் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: மேற்கூறிய அனைத்து முறைகளிலும் சர்க்கரை பயன்படுத்தாமலும் செய்யலாம். அல்லது சர்க்கரைக்குப் பதிலாக நாட்டுச்சர்க்கரை, பனங்கற்கண்டு, தேன், கருப்பட்டி பயன்படுத்திக்கொள்ளலாம். இவற்றைப் பால் சேர்க்கும் தேநீரில் சேர்ப்பதாக இருந்தால், அடுப்பிலிருந்து இறக்கிய பிறகே சேர்க்க வேண்டும். இல்லையென்றால் பால் திரிந்து போய்விடும்.