Published:Updated:

கிச்சன் கைடு

கிச்சன் கைடு
பிரீமியம் ஸ்டோரி
கிச்சன் கைடு

சாம்பார், ரசம், கூட்டு போன்றவற்றைத் தயாரித்து முடித்து தாளிக்கும்போது கடுகு வெடித்துச் சிதறும் எஸ்.ராஜகுமாரி

கிச்சன் கைடு

சாம்பார், ரசம், கூட்டு போன்றவற்றைத் தயாரித்து முடித்து தாளிக்கும்போது கடுகு வெடித்துச் சிதறும் எஸ்.ராஜகுமாரி

Published:Updated:
கிச்சன் கைடு
பிரீமியம் ஸ்டோரி
கிச்சன் கைடு

ண்ணெய் பாட்டில்கள், எண்ணெய் கேன்கள் ஆகியவற்றின் வெளிப்புறம் எண்ணெய் வழிந்து, நாம் எடுக்கும்போது கைவழுக்கி எண்ணெய் சிந்தக்கூடும். பழைய சாக்ஸ்களை சுத்தம் செய்து வைத்துக்கொண்டு எண்ணெய் பாட்டில்கள், கேன்களின் வெளிப்புறம் சுற்றிவைத்தால் இதைத் தவிர்க்கலாம்.

கிச்சன் கைடு

க்காளி, வெங்காயம் மற்றும் பிற காய்களை வதக்கி சூடாக வாணலியில் இருந்து இறக்கியதும், அவசரமாக அரைக்க நேரிடும் நேரத்தில், மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கும்போது ஜார் சூடாகிவிடும். இதைத் தவிர்க்க காய்களுடன் சிறிய ஐஸ்கட்டிகள் (அ) ஐஸ் வாட்டர் சேர்த்து அரைக்கவும். குருமா, சட்னி போன்றவற்றுக்கு அரைக்கும்போது இந்த முறை பயனளிக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சாம்பார், ரசம், கூட்டு போன்றவற்றைத் தயாரித்து முடித்து தாளிக்கும்போது கடுகு வெடித்துச் சிதறும். இதைத் தவிர்க்க வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு சிறிது மஞ்சள்தூள் போட்டு பிறகு கடுகு தாளித்தால், கடுகு வெடித்துச் சிதறாது. கடுகுடன் காய்ந்த மிளகாய், சீரகம் போன்றவையும் சேர்க்கலாம்.

கிச்சன் கைடு

காம்பு நீளமாக, திக்காக உள்ள வாழைக்காய், சுரைக்காய் போன்றவற்றைப் பாதி நறுக்கிவிட்டு மீதியை வைக்கும்போது நறுக்கிய பகுதி நிறம் மாறி நீர் கசிய ஆரம்பிக்கும். இதைத் தவிர்க்க மீதியுள்ள பகுதியை லேசாக எண்ணெய் தடவி அலுமினியம் ஃபாயில் எடுத்துச் சுற்றி ரப்பர் பேண்டு போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும். காம்புப் பகுதியையும் அலுமினியம் ஃபாயில் சுற்றி வைத்தால், அழுகாமல் நாம் வெட்டிவிட்டு வைத்த மீதிக்காய் புத்தம் புதிதாக இருக்கும்.

ஜாம், ஊறுகாய், பாட்டில்களின் மூடியைத் திறக்க கடினமாக இருந்தால், கையுறை (கிளவுஸ்) அணிந்துகொண்டு திறந்தால் எளிதாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  • ஃப்ரிட்ஜில் சில நேரம் துர்நாற்றம் வரும்; சில நேரம் அடுப்பங்கரையில் ஈக்கள் மொய்க்கும். இவற்றைத் தவிர்க்க ஒரு எலுமிச்சைப்பழத்தை இரண்டாக நறுக்கி ஒவ்வொரு பகுதியிலும் இரண்டு கிராம்பை குத்திவிடவும். ஒரு பகுதியை ஃப்ரிட்ஜில் வைத்தால் துர்நாற்றம் ஏற்படாது; மறுபகுதியை அடுப்பங்கரையில் வைத்தால் ஈக்கள் மொய்க்காது.

  • எலுமிச்சைப்பழங்கள் அதிகமாக இருந்தால், ஒவ்வொரு பழத்தையும் தனித்தனியாக டிஷ்யூ பேப்பரால் சுற்றி எல்லாவற்றையும் சேர்த்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் எலுமிச்சைப்பழங்கள் நீண்ட நாள்கள் கெடாமல் இருக்கும்.

கிச்சன் கைடு
  • கத்திரிக்காயை நறுக்கியதும் கைகளில் ஏற்படும் கறையைப் போக்க உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி கைகளில் தேய்த்தால் கறையும் மறையும்; கைகளும் மிருதுவாகும்.

  • ஒரு காற்றுப்புகாத டப்பாவில் டிஷ்யூ பேப்பரை வைத்து சிறிதளவு அரிசி போட்டு, அதன் மேலே வேறு ஒரு டிஷ்யூ பேப்பரைப் போட்டு பிஸ்கட்டுகளை அடுக்கிவைத்தால் பிஸ்கட்டுகள் நமுக்காது.

  • கிரேவி தயாரிக்கும்போது தக்காளியுடன் சிறிதளவு பீட்ருட்டையும் சேர்த்து அரைத்து, கொதிக்கும் கிரேவியில் ஊற்றினால் கிரேவி பார்ப்பதற்கு கலர்ஃபுல் ஆகவும், கூடுதல் சுவையுடனும் இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism