கேழ்வரகுடன் கம்பு சேர்த்துப் புட்டு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

சப்ஜா விதைகளை ஊறவைத்து பழச்சாற்றுடன் சேர்த்துச் சாப்பிட, குடல் சூடு தணிந்து குளுமையாக இருக்கும்.

பொரியல்களுக்காக கடலைப்பருப்பு, மல்லி (தனியா), மிளகாய் எனச் சேர்த்து மசாலா அரைக்கும்போது, ஒரு ஸ்பூன் கம்பு சேர்த்து வறுத்து அரைத்தால், சுவை கூடும். வாரத்துக்கு இருமுறை அல்லது தினமும்கூட சிறிதளவு சிறுதானியம் சேர்த்துச் சாப்பிட, ஆரோக்கியம் கூடும்.

சாம்பாருக்குப் பருப்பு வேகவைக்கும்போது ஒரு டேபிள்ஸ்பூன் கொள்ளு சேர்த்து வேகவைத்து சாம்பார் வைக்க, உடலில் கொழுப்பு சேராமல் இருக்கும்.

கோதுமையில் பரோட்டா செய்யும்போது ஒரு டேபிள்ஸ்பூன் ஓமம் கலந்து செய்யலாம். சுவையாகவும் எளிதில் ஜீரணமும் ஆகும்.

வெண்டைக்காய், கத்திரிக்காய் காரக்குழம்பு செய்யும்போது ஒரு டேபிள்ஸ்பூன் சீரகப்பொடி சேர்த்தால், குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.

ரசம் வைக்கும்போது கறிவேப்பிலை இல்லையென்றால் சிறிதளவு முருங்கையிலைகளைத் தூவி இறக்க, அது தனிச்சுவையைத் தரும்.

சுண்டைக்காய் குழம்பு செய்யும்போது நல்லெண்ணெய்விட்டு தாளிப்பு செய்தால், சுவையும் மணமும் மனத்தை அள்ளும்.

தேங்காய்க்குப் பதில் வெங்காயத்துடன் பீர்க்கங்காயையும் வதக்கி அரைத்துவிட்டால் குழம்பு கெட்டியாகவும் சுவையுடனும் இருக்கும். இரும்புச்சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து மற்றும் இதர நுண்ணூட்டச் சத்துகளைப் பெறலாம்.

பருப்பு சாம்பாரை சீரகம் தாளித்து இறக்கும் முன்பு சிறிதளவு புதினாவைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து இறக்கினால், சாம்பாரின் சுவை அதிகரிக்கும்.