Published:Updated:

உலகின் விலையுயர்ந்த 7 உணவுகள்... சாப்பாட்டுப் பிரியர்களே ஒன்றுகூடுங்கள்!

இது கட்டாயம் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய மெனு. உலகின் மிக விலையுயர்ந்த உணவு பதார்த்தங்களின் முழு விபரங்களுடனான மெனு... என்ஜாய்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"நான் எல்லாம் வாழுறதே சாப்பிடறதுக்குத்தான்" எனச் சொல்லும் உணவுப் பிரியரா நீங்கள், எங்கே ஊருக்கு போனாலும் முதலில் உணவகம் தேடி, அந்த ஊரின் ஸ்பெஷாலிட்டி உணவை ருசி பார்க்கும் ரசிகரா? அப்படியானால் இது கட்டாயம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மெனு. உலகின் மிக காஸ்ட்லியான உணவு பதார்த்தங்களின் முழு விபரங்களுடனான மெனு... என்ஜாய்!

ராயல் பிரியாணி

விலை: சுமார் ரூ. 20 ஆயிரம்

இடம்: பாம்பே பர்ரோ உணவகம், துபாய்.

ராயல் பிரியாணி
ராயல் பிரியாணி

பிரியாணியில் 23 காரட் சாப்பிடக் கூடிய தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது. பிரியாணியுடன் காஷ்மீர் ஆட்டு கபாப், பழைய டெல்லி ஆட்டுக்கறி, ராஜ்புத் சிக்கன் கபாப், மொகாலி கோப்தாஸ், மற்றும் மலாய் சிக்கன் ஆகியவையும் வழங்கப்படும்.

லிண்டெத் ஹொவி சாக்லேட் புட்டிங்

விலை: சுமார் ரூ. 25 லட்சத்து 36 ஆயிரம்

இடம்: லிண்டெத் ஹொவி ஹோட்டல், இங்கிலாந்து.

லிண்டெத் ஹொவி சாக்லேட் புட்டிங்
லிண்டெத் ஹொவி சாக்லேட் புட்டிங்

பெல்ஜியம் நாட்டின் சிறந்த வகையான சாக்லேட், விலையுயர்ந்த ஷாம்பெய்ன் ஜெல்லி, காவியர் (caviar), இவற்றோடு தங்க இதழ்கள் சேர்த்து தயாரிக்கப்பட்டது. செர்ரிக்குப் பதிலாக 2 காரட் வைரம் வைத்து அலங்கரிக்கப்பட்டது. 2 வாரங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்தால் மட்டுமே கிடைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டாகோ

விலை: சுமார் ரூ. 18 லட்சத்து 11 ஆயிரம்

இடம்: கிராண்ட் விலாஸ் லாஸ் காபோஸ், மெக்ஸிகோ.

டாகோ
டாகோ

தங்க இதழ்கள் மற்றும் சோளம் கலந்து செய்யப்பட்ட டோர்டில்லா எனப்படும் ஒருவகை பிரட். உலகின் விலையுயர்ந்த ஜப்பானிய கோப் மாட்டிறைச்சி, லாப்ஸ்டர் இறால், பிளாக் ட்ரஃபிள் சீஸ், அல்மாஸ் பெலூகா காவியர் எனும் அரிய வகை மீன் முட்டை (உலகின் மிக விலை உயர்ந்த உணவு பொருள்). இந்த காவியர் மட்டுமே ஒரு கிலோகிராம் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ளது. இதற்கு பயன்படுத்தப்படும் சாஸ் தயாரிக்க மிகவும் அதிக விலையுள்ள மிளகாய், உலகின் விலை உயர்ந்த டக்கீலா மற்றும் உலகின் அதிக விலையுடைய கோபி லுவாக் காபி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

ஸ்டில்ட் ஃபிஷெர்மன் இன்டல்ஜன்ஸ்

விலை: சுமார் ரூ. 10 லட்சத்து 60 ஆயிரம்

இடம்: தி ஃபோர்ட்ரெஸ் ஹோட்டல், இலங்கை

ஸ்டில்ட்  ஃபிஷெர்மன்  இண்டல்ஜன்ஸ்
ஸ்டில்ட் ஃபிஷெர்மன் இண்டல்ஜன்ஸ்

ஸ்ரீலங்காவின் பிரத்யேக மீன்பிடி முறையான ஸ்டில்ட் ஃபிஷ்ஷிங் செய்யும் மீனவர்களின் உருவம் மற்றும் உயர்ரக சாக்லேட் கொண்டு செய்யப்படும் டெஸெர்ட் உணவு இது. உடன் இத்தாலியன் கஸாட்டா எனும் இனிப்பு வகை, ஐரிஷ் பெய்லி கிரீம் எனும் மதுபான வகை மற்றும் மாம்பழம், மாதுளை பழங்களால் தயாரிக்கப்பட்ட கம்போட் எனும் பிரெஞ்சு இனிப்பு ஆகியவை சேர்த்து இந்த டெஸெர்ட் உணவு தயாரிக்கப்படுகிறது. இதன் மீது இறுதி அலங்காரமாக தங்க இதழ்கள் தூவப்படுகின்றன. இவற்றோடு வாடிக்கையாளர் எடுத்துச் செல்ல 80 காரட் நீலக்கல் அலங்காரமாக வைக்கப்படுகிறது.

லூயிஸ் XIII பிட்சா

விலை: சுமார் ரூ. 8 லட்சத்து 79 ஆயிரம்

இடம்: ரெனாட்டோ வயோலா, இத்தாலி

லூயிஸ் XIII பிட்சா
லூயிஸ் XIII பிட்சா

இந்த பிட்சாவிற்கான பிரட் தயாரிக்க மட்டும் 72 மணி நேரம் செலவாகிறது. இந்த பிட்சாவிற்கு ஆர்டர் கொடுத்தால் ஒரு பிட்சா செஃப், ஒரு வைன் (wine) ஸ்பெஷலிஸ்ட் வீட்டிற்கே வந்து சமைத்து பரிமாறுவார்கள். இதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உணவுக்கலன்களும் கொண்டுவரப்படும். இந்த பிட்சா தயாரிக்க உலகின் விலையுயர்ந்த பெலூகா காவியர் மற்றும் வேறு இரு வகையான காவியர்கள் பயன்படுத்தப்படுகின்றன. எருமைப்பாலில் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் மோசரெல்லா சீஸ் மற்றும் வேறு உயர்ரக 7 வகை சீஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆஸ்திரேலியாவின் முர்ரே ஆற்றிலிருந்து எடுக்கப்பட்ட சுவைமிகுந்த பிங்க் உப்பு சேர்க்கப்படுகிறது. இவற்றோடு சிலேண்டோ இறால், மான்டிஸ் இறால் மற்றும் லோப்ஸ்டர் என விலையுயர்ந்த கடல் உணவுகள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இவற்றோடு உயர்ரக மதுபானம் இரண்டும் சேர்த்து பரிமாறப்படுகிறது.

ஃப்ளூர் பர்கர் 5000

விலை: சுமார் ரூ. 3 லட்சத்து 67 ஆயிரம்

இடம்: ஃப்ளூர் ரெஸ்டாரன்ட், லாஸ் வேகாஸ், அமெரிக்கா.

ஃப்ளூர் பர்கர் 5000
ஃப்ளூர் பர்கர் 5000

ப்ரோய்ஷ் ரக ஃபிரெஞ்சு சிறப்பு பன் இந்த பர்கருக்கு பயன்படுத்தப்படுகிறது. உலகின் விலையுயர்ந்த வாக்யூ மாட்டிறைச்சி, பிரத்யேகமாக உணவூட்டப்பட்டு வளர்க்கப்பட்ட வாத்து ஈரல் மற்றும் வாத்து கொழுப்பு மற்றும் விலையுயர்ந்த கருப்பு டிரஃபுல் எனும் பூஞ்சை வகை உணவு ஆகியவை சேர்த்து இந்த பர்கர் தயாரிக்கப்படுகிறது. இதனோடு மிகவும் விலையுயர்ந்த அரியவகை மது வகையான 1995 பெட்ருஸ் சேர்த்து பரிமாறப்படுகிறது.

வின்ஸ்டன் காக்டெய்ல்

விலை: சுமார் ரூ. 8 லட்சத்து 81 ஆயிரம்

இடம்: கிளப் 23, மெல்போர்ன், ஆஸ்திரேலியா.

வின்ஸ்டன் காக்டெய்ல்
வின்ஸ்டன் காக்டெய்ல்

உலகின் மிக விலையுயர்ந்த மதுபானம் என கின்னஸ் சாதனை படைத்தது இந்தப் பானம். வின்ஸ்டன் சர்ச்சில் நினைவாக வின்ஸ்டன் என பெயர்பெற்றது. குளிரூட்டப்பட்ட க்ரே கூஸ் வோட்காவுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கப்பட்டது. இதன் விலைக்குக் காரணம், மிகவும் விலையுயர்ந்த ஒரு காரட் வைரம் உங்கள் கோப்பையின் அடியில் கிடைக்கும். நீங்கள் அருந்தும்போது, 'டைமண்ட் இஸ் ஃபாரெவர்' பாடல் பின்னணியில் லைவ் குழுவினரால் வாசிக்கப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு