Published:Updated:

கொடைக்கானல் மலைப்பூண்டுக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது ஏன்? ஓர் அலசல்

மலைப்பூண்டு
மலைப்பூண்டு

`மலைகளின் இளவரசி' என்று போற்றப்படும் கொடைக்கானலின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல் பதிக்கப்பட்டிருக்கிறது. ஆம், கொடைக்கானல் பகுதியில் விளையும் மலைப்பூண்டுக்கு 'புவிசார் குறியீடு' வழங்கப்பட்டுள்ளது.

பாரம்பர்யமாக விளைவிக்கப்படும் அல்லது தயாரிக்கப்படும் தனித்தன்மை வாய்ந்த ஒரு பொருளுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் ஓர் அங்கீகாரமே புவிசார் குறியீடு. அந்த வகையில் சாம்பல் நிறத்தில், நல்ல காரத்துடன் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

கொடைக்கானல்
கொடைக்கானல்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனுார், பூம்பாறை, பூண்டி, கவுஞ்சி போன்ற இடங்களில் மலைப்பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது. ஆங்கிலேயர் காலம் தொட்டு புகழ்பெற்ற இந்தப் பூண்டுக்குக் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம், அப்பகுதி விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு பொருளுக்குப் புவிசார் குறியீடு கிடைத்தால், சர்வதேச அளவில் வர்த்தகத்துக்கான வாய்ப்பும் விலையும் அதிகரிக்கும். அதன் தரமும் பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாட்டில் சான்றிதழ் பெற்றுவிட்டால், ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் செயல்பட்டு வரும், உலக அறிவுசார் சொத்து நிறுவனத்தில் எளிதாகச் சான்றிதழ் பெற்றுவிடமுடியும். அதன்மூலம் சர்வதேச அளவில் அந்தப் பொருளின் வணிகத்தை மேம்படுத்தலாம்.

புவிசார் குறியீடு பெற வரலாற்றுரீதியாகவும் அறிவியல்ரீதியாகவும் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட அறிக்கைகளைச் சமர்ப்பிக்கவேண்டும். இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரி, வழக்கறிஞர், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் என 7 பேர் கொண்ட குழு அதைச் சரிபார்க்கும். அதன்பிறகு குறிப்பிட்ட அந்தப் பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்குவதில் யாருக்காவது ஆட்சேபம் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள புவிசார் பதிவகத்தின் `ஆன்லைன்' இதழில் அறிவிக்கை வெளியிடப்படும். ஆட்சேபம் இல்லாதபட்சத்தில், புவிசார் குறியீடு பெற தேர்வு செய்யப்படும். முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் ஓராண்டுக்குள் சான்றிதழ் பெறலாம்

மலைப்பூண்டு
மலைப்பூண்டு

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அதை மறுபதிவு செய்யவேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் இதுபோன்ற ஓர் அமைப்பு இருக்கும். அந்த அமைப்பு அந்தந்த நாட்டிலுள்ள பாரம்பர்யப் பொருள்களை ஆய்வுசெய்து, சான்றிதழ் வழங்கி அங்கீகரிக்கும். ஒரு நாட்டில் சான்றிதழ் பெற்றுவிட்டால், ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் செயல்பட்டு வரும், உலக அறிவுசார் சொத்து நிறுவனத்தில் எளிதாகச் சான்றிதழ் பெற்றுவிடமுடியும். அதன்மூலம் சர்வதேச அளவில் அந்தப் பொருளின் வணிகத்தை மேம்படுத்தலாம்.

இப்ப கிரெடிட் கார்டு மாதிரிதான் ஒரு காலத்துல எங்களுக்குப் பூண்டு. அத வெச்சு எதையும் வாங்கிட்டு வந்திடுவோம். ஒரு வருஷம் வரை அதைப் பத்திரப்படுத்தி வெச்சுக்க முடியும்.
விவசாயி ராமநாதன்

பொதுவாக புவிசார் குறியீடு பெற முயற்சி செய்பவர்கள், குறிப்பிட்ட ஒரு பொருளை விளைவிக்கும் விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். தயாரிப்புப் பொருளாக இருந்தால் அந்தப் பொருளைத் தயாரிப்பவர்களின் சங்கத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு பெற கடந்த இரண்டு ஆண்டுகளாக உழைத்தவர்கள், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள்.

மலைப்பூண்டு
மலைப்பூண்டு

அதில் முன்னவராக நின்று அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டிருக்கிறார் பயோடெக்னாலஜி துறைத்தலைவர் உஷா ராஜா நந்தினி. மலைப்பூண்டு விவசாயிகளுக்கென எந்தச் சங்கமும் இல்லை. அதனால் ஒவ்வொரு கிராமமாகச் சென்று விவசாயிகளைச் சந்தித்து, ஒருங்கிணைத்து கூட்டங்களை நடத்தியிருக்கிறார் பேராசிரியர் உஷா ராஜா நந்தினி. அத்துடன் அவர்களை சென்னைக்கு அழைத்துச்சென்று, அதிகாரிகளைச் சந்திக்கவைக்கவும் பெருமுயற்சி எடுத்திருக்கிறார்.

இந்தப் பூண்டையும் மற்ற வகைப் பூண்டுகளையும் அதிகாரிகள்கிட்ட கொடுத்தோம். மத்த பூண்டுகளை எளிதா சாப்பிட முடிஞ்சவங்களால மலைப்பூண்டை ஒரு பல்லுகூட சாப்பிட முடியல. அந்தளவுக்கு காரத்தன்மை அதிகமா இருந்தது.
பேராசிரியர் உஷா ராஜா நந்தினி

''அந்த அம்மா மட்டும் இல்லைனா இந்த அங்கீகாரம் கிடைச்சிருக்காது. இப்ப கிரெடிட் கார்டு மாதிரிதான் ஒரு காலத்துல எங்களுக்குப் பூண்டு. அத வெச்சு எதையும் வாங்கிட்டு வந்திடுவோம். ஒரு வருஷம் வரை அதைப் பத்திரப்படுத்தி வெச்சுக்க முடியும். காலப்போக்குல அதை அழுகிப்போற பொருள்களோட பட்டியல்ல சேர்த்தும் பிற பூண்டு வகைகளை மலைப்பூண்டுனும் சொன்னதாலதான் எங்க பூண்டுக்கு மதிப்பு இல்லாமப்போச்சு. இப்போ கிடைச்சிருக்கிற அங்கீகாரம் எங்களுக்கு பழைய பெருமையை மீட்டுக் கொடுத்துருக்கு. இதனால எட்டுக் கிராமமும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த வெற்றிக்கு உஷா அம்மாவுக்குத்தான் நன்றி சொல்லணும்'' என்கிறார் மன்னவனூரைச் சேர்ந்த ராமநாதன் என்கிற விவசாயி.

கொடைக்கானல்
கொடைக்கானல்

அவர் மட்டுமல்ல, கொடைக்கானலைச் சுற்றியுள்ள ஒட்டுமொத்த மலைக் கிராம மக்களும், மகிழ்ச்சியில் திளைக்கக் காரணமான பேராசிரியர் உஷா ராஜா நந்தினியிடம் பேசினோம். ''எங்க பல்கலைக்கழகத்துக்கு பக்கத்துல இருக்கிற விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில ஏதாவது உதவி பண்ணலாம்னு நினைச்சோம். அப்போ, இந்தப் பகுதியில விளைவிக்கிற பூண்டு ரொம்ப விசேஷமா இருக்கிறதால, அது சம்பந்தமா ஆக்கபூர்வமா ஏதாவது பண்ணலாம்னு முடிவு பண்ணினோம். விவசாயிகளை நேர்ல போய் சந்திச்சோம். அப்போ, அதை விளைவிக்குறதுக்காக, அந்த மக்கள் படுற கஷ்டங்களைப் பார்த்தோம். அதோட ஒப்பிடும்போது, அதுக்கு கிடைக்கிற விலை ரொம்ப குறைவா இருந்தது. புவிசார் குறியீடு மாதிரி அங்கீகாரம் கிடைச்சா இதோட மதிப்பு உயரும்னு முடிவு பண்ணினோம்.

திண்டுக்கல் மாவட்டம் போலூரில் கிடைத்த செப்புப் பட்டயத்துலயும் மலைப்பூண்டு பற்றி தகவல்கள் கிடைச்சது. இந்தப் பூண்டு வடுகப்பட்டி சந்தையிலிருந்து மற்ற மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் ஏற்றுமதி செஞ்ச தகவல்களும் கிடைச்சது. எல்லா புகைப்பட ஆதாரங்களையும் கொடுத்தோம். கிட்டத்தட்ட கடந்த ரெண்டு வருஷமா இதற்கான வேலைகளைச் செஞ்சோம்.

ரெண்டு வருசத்துக்கு முன்னாடி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தைச் சேர்ந்தவங்களோட உதவியோட அதற்கான முயற்சிகளைத் தொடங்கினோம். ஆனா, புவிசார் குறியீட்டைப் பெற ஒரு பொருள் குறைஞ்சது நூறு வருசத்துக்கு குறையாத பாரம்பர்யத்தை கொண்டிருக்கணும்னு அதிகாரிகள் சொன்னாங்க. விவசாயிகள்கிட்ட கேட்கும்போது, பல தலைமுறையா பூண்டு விவசாயம் பண்றதா சொன்னாங்க. ஆனா அது ஆதாரப்பூர்வ தகவலா இல்ல.

உஷா ராஜா நந்தினி
உஷா ராஜா நந்தினி

அதனால, அதுதொடர்பான வரலாற்று ரீதியான தகவல்களைத் தேட ஆரம்பிச்சோம். 1837-ம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்துல இந்தப் பகுதி மக்களோட வாழ்க்கைமுறை, தொழில் பற்றிய தகவல்கள் அடங்கிய புத்தகம் ஒண்ணு கிடைச்சது. அதுல, பூண்டுதான் இந்த மக்களோட முக்கியமான விளைபொருளா இருந்ததா பதிவு பண்ணியிருந்தாங்க. பண்ட மாற்றுமுறையில என்ன பொருள் வாங்கணும்னாலும் பூண்டைக் கொடுத்துதான் வாங்கியிருக்காங்க. வீடு கட்டும்போதுகூட பூண்டை ஓராண்டு சேமிக்கத் தகுந்தமாதிரியே கட்டியிருக்காங்க. அதோட பூண்டுக்கும் இந்தப் பகுதி மக்களுக்கும் இருக்குற தொடர்பு பற்றி ஏராளமான தகவல்கள் கிடைச்சது.

அதேபோல, திண்டுக்கல் மாவட்டம் போலூரில் கிடைத்த செப்புப் பட்டயத்துலயும் மலைப்பூண்டு பற்றி தகவல்கள் கிடைச்சது. இந்தப் பூண்டு வடுகப்பட்டி சந்தையில் இருந்து மற்ற மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் ஏற்றுமதி செஞ்ச தகவல்களும் கிடைச்சது. எல்லா புகைப்பட ஆதாரங்களையும் கொடுத்தோம். கிட்டத்தட்ட கடந்த ரெண்டு வருஷமா இதற்கான வேலைகளைச் செஞ்சோம்'' என்றார்.

விவசாயிகள்
விவசாயிகள்

'மற்ற பூண்டுகளைவிட இதில் என்ன தனிச்சிறப்பு?' எனக் கேட்டோம்.

''மற்ற பூண்டு மாதிரி இல்ல, கொடைக்கானல் மலைப்பூண்டு. ஒருவருசம்கூட இதைப் பத்திரப்படுத்தி வைக்கலாம். அதுதான் இந்தப் பூண்டோட தனிச்சிறப்பு. இந்தப் பூண்டையும் மற்ற வகைப் பூண்டுகளையும் அதிகாரிகள்கிட்ட கொடுத்தோம். மத்த பூண்டுகள எளிதா சாப்பிட முடிஞ்சவங்களால மலைப்பூண்டை ஒரு பல்லுகூட சாப்பிட முடியல. அந்தளவுக்கு காரத்தன்மை அதிகமா இருந்தது, மலைப்பூண்டுல. அந்தக் காரம் வெறும் சுவையோட தொடர்புடையது மட்டுமல்ல, பல்வேறு மருத்துவக் குணங்களோடயும் தொடர்புடையது.

இந்தப் பகுதி மக்கள் என்ன உடல்நலப் பிரச்னை வந்தாலும் டாக்டர்கிட்ட போறதே இல்லை. தலைவலி, வயிற்றுவலினு என்ன பிரச்னை வந்தாலும் பூண்டுதான் இவங்களுக்கான சர்வரோக நிவாரணி. ஒவ்வொரு பிரச்னைக்கும், ஒவ்வொரு ரெசிபி தயார் செஞ்சு பயன்படுத்திட்டு வர்றாங்க. பூண்டுல இருந்து ஒரு லேகியம் தயாரிக்கிறாங்க. கர்ப்பிணிகளுக்கு அது பெரிய மருந்தா இருக்கு. இந்தத் தகவல்களையும் சமர்ப்பிச்சோம். புவிசார் குறியீட்டுக்காக பதிவுசெஞ்ச ஒரு வருசத்துல இந்த அங்கீகாரம் கிடைச்சது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

மலைப்பூண்டு
மலைப்பூண்டு

மலைக்கிராம மக்கள் எல்லோரும் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் போன்பண்ணி வாழ்த்துச் சொல்லிட்டே இருக்காங்க. ரொம்ப மனநிறைவா இருக்கு. இதுல என்னோட உழைப்பு மட்டுமல்ல. எங்க பல்கலைக்கழகப் பேராசியர்கள், துணைவேந்தர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தைச் சேர்ந்தவர்கள்னு பலபேரோட பங்கு இருக்கு'' என்கிறார் பேராசிரியர் உஷா நந்தினி ரோஜா.

அடுத்த கட்டுரைக்கு