Published:Updated:

2K kids: கோடை வெயிலுக்கு குளுகுளு கூழ்!

கூழ்
பிரீமியம் ஸ்டோரி
கூழ்

ச. அகல்யா

2K kids: கோடை வெயிலுக்கு குளுகுளு கூழ்!

ச. அகல்யா

Published:Updated:
கூழ்
பிரீமியம் ஸ்டோரி
கூழ்

திருவாரூர் - நாகப்பட்டினம் மெயின் ரோட்டில், ஒரு சின்ன தள்ளுவண்டியில் கோடை வெயிலுக்குக் குளுகுளு கூழ் விற்றுக்கொண்டிருந்த சரவணனிடம் கொஞ்சம் பேசலாமா?!

அறிமுகம்

‘`திருவாரூர் மாவட்டம் கிடாரம்கொண்டான் ஆலடி மாரியம்மன் கோயில் தெருவுல எங்க வீடு இருக்கு. நான் கூழ் கடை ஆரம்பிச்சு ஏழு வருஷம் ஆகுது. கம்பங்கூழ், கேப்பைக் கூழ், மோர் மூணும் நம்ம கடையில கிடைக்கும்.

2K kids: கோடை வெயிலுக்கு குளுகுளு கூழ்!

முதலீடு இதுதான்!

ஒரு நாளைக்கு கம்பங்கூழ் செய்யுறதுக்கு நாலு படி மாவும், கேப்பைக்கூழ் செய்யுறதுக்கு மூணு படி மாவும் தேவைப்படும். மாவைக் கடையில வாங்க மாட்டேன். கம்பு, கேழ்வரகை வாங்கிட்டு வந்து அரைப்பேன். கம்பை நல்லா வறுத்துட்டு, தூசி, கல் எல்லாத்தையும் எடுத் துட்டு, அப்புறம் அரைப்பேன். கேழ்வரகை நல்லா வெயில்ல காய வெச்சிட்டு, அதையும் தூசி, கல்லு இல்லாம சுத்தம் பண்ணிட்டு அரைச்சுகிட்டு வருவேன். மாவை நல்லா ஆற விடுவேன்.

கூழ் காய்ச்சுவது எப்படி?

கம்பு மாவு நாலு படி, கேழ் வரகு மாவு மூன்றரை படி எடுத்து, தனித்தனி பாத்திரத்துல தண்ணி ஊத்தி ஊறவிடணும். அரை மணிநேரம் ஊறினாலே போதும். மாவு ஊறுற நேரத்துல அடுப்புல தண்ணியையும் காய வெக்கணும். கம்புக்கு ஒன்றரை குடம் தண்ணி, கேழ்வரகுக்கு ஒரு குடம் தண்ணின்னு தனித்தனி பானையில கொதிக்கவிடணும். ரெண்டுமே நல்லா கொதிச்சவுடனே, ஊறவெச்ச ரெண்டு மாவையும் எடுத்து அததுக்குனு கொதிக்க வெச்ச தண்ணியில சேர்த்து, கையோட கிண்டணும். இல்லைன்னா மாவு கட்டி கட்டியாயிடும். அப் புறம், கைப்பிடி உப்பு சேர்க்கணும். நல்லா வெந்து, கொதிச்சு பானை முழுசா கூழ் வந்த உடனே அடுப்புல இருந்து பானை களை கீழ இறக்கணும்.

இப்படி முதல் நாள் சாயங்காலமே கூழ் காய்ச்சி வேடு கட்டி வெச்சிடுவோம். மறுநாள் காலையில அது மேல ஆடை படிஞ்சிருக்கும். மேலாக்குல அதை நீக்கிட்டு உப்பு போட்டு நல்லா கையால கரைச்சு கடைக்கு எடுத்துகிட்டு வருவேன். ரெண்டு கூழுக்குமே இதே செய்முறைதான்.

சைடிஷ் வகைகள்...

கூழுக்குத் தொட்டுக்க, துவையல்தான். வயசானவங்க துவையல்தான் கேப்பாங்க. இளவட்டு பசங்கதான் வத்தல் கேப்பாங்க. மிளகாய் வத்தல், கொத்தவரங்காய் வத்தல், கலர் வத்தல்னு இருக்கும். இதோட மாங்காய், புளி, மிளகாய், கருவாடு வகை யறாவும் இருக்கும்.

துவையல் செய்முறை சொல்றேன் கேக் குறீங்களா... கறிவேப்பிலை, பட்டமிளகாய் (காய்ந்த மிளகாய்), புளி, பூண்டு, உப்பு... இதெல்லாம்தான் தேவை. முதல்ல பட்ட மிளகாயை எண்ணெயில வறுத்துட்டு, அப்புறம் கறிவேப்பிலையும் சேர்த்து வதக்கி ஆறுனதுக்கு அப்புறம் பூண்டு, புளி, உப்பு சேர்த்து அரைக்கணும். இது மட்டுமல்லாம புதினா துவையல், மல்லித்துவையலும் உண்டு.

வருமானம்...

எத்தனை மணிக்குக் கடையை போடு றேனோ அதைப் பொறுத்துத்தான் கடை ஓடும். காலையில 7 மணிக்கு வந்தா, மதியம் 12 மணி, 1 மணிக்கு எல்லாம் கூழை வித்துட்டுப் போய்டுவேன். ஒருவேளை லேட்டா வந்தா 3 மணி வரைக்கும் ஆயிடும். ஒரு நாளைக்கு 1,000 ரூபாய்வரை வருமானம் பார்க்கலாம்.

காலேஜ் பக்கத்துல இருக்குறதுனால பிள்ளைங்க எல்லாரும் வந்து குடிப்பாங்க. அப்புறம் வேளாங்கண்ணி திருவிழா, இல்ல காலேஜ்ல ஏதாவது பரீட்சை, விழானு நடந்தா கூட்டம் வரும். அப்போவெல்லாம் ரெண்டு, மூணு படி எக்ஸ்ட்ரா போட்டு காய்ச்சுவேன். வருமானமும் 2,000 ரூபாய்வரை கிடைக்கும். ஒரு சொம்பு கூழ் 15 ரூபாய். அதுவே டம்ள ருன்னா 10 ரூபாய். பார்சல் கூழ் 20 ரூபாய். கொரோனா வால கடைக்கு இப்ப லீவு.

2K kids: கோடை வெயிலுக்கு குளுகுளு கூழ்!

கஸ்டமர் சாய்ஸ்...

இந்தக் கூழை எப்படிக் குடிக்கணும்னா, கம்பங்கூழ் ஒரு கப், கேழ்வரகுக் கூழ் ஒரு கப், அரை கப் மோர் இது எல்லாத்தையும் நல்லா கலந்து, நறுக்குன சின்ன வெங்காயம் சேர்த்துக் குடிக்கணும். சிலர் பேர் மோர் மிக்ஸ் பண்ணாம குடிப்பாங்க. சிலர் வெங்காயம் போடாம குடிப்பாங்க.

வீடு... அழகான கூடு!

வீட்டுல மனைவியும், எங்க ளோட மூணு பொண்ணுங் களும் இருக்காங்க. ரெண்டு பொண்ணுங்க காலேஜ் முடிச்சிட்டு வேலைக்குப் போறாங்க. ஒரு பொண்ணு காலேஜ் படிக்கிறாங்க. இந்த நாலு பேரும் இல்லைன்னா நான் இல்ல. கூழு காய்ச்சுறதுல இருந்து, தள்ளுவண்டியில எல்லா பொருளையும் எடுத்து வெச்சு என்னை அனுப்புற வரைக்கும் எனக்கு பலமா இருக்குற மகராசிங்க அவங்க.

மனைவி, பிள்ளைகளை மதிச்சு அவங்க ஆசைகளுக்கும் கனவுகளுக்கும் மரியாதை கொடுக்குறவன் வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும்.’’